தொண்ணூறு தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 18, மற்றும் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்தி, அக்டோபர் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. பா.ஜ.கவில் இருந்து மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நட்டா, ஆதித்யநாத் உள்ளிட்ட 40 பேர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார்கள்.

ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், ஷேக் அப்துல்லா, மீர்சா அலிபெய்க் இவர்களுடன் அன்றைய ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரின் சிஷ்யரும், ஜனசங்க் கட்சித் தலைவருமான சியாமா பிரசாத் முகர்ஜியும் சேர்ந்து 1949 மே மாதம் முதல் அக்டோபர் வரை விவாதித்து எடுக்கப்பட்ட முடிவின்படி அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ அரசியல் நிர்ணய சபை 17-10-1949 அன்று ஏற்றுக் கொண்டது.

1947 முதல் 1950 வரை நேருவின் அமைச்சரவையில் இருந்த ( ஆர்எஸ்எஸ் பிரதிநிதியான) முகர்ஜியும் சேர்ந்துதான் 370 ஆம் பிரிவை ஏற்றுப் பரிந்துரைத்தார்.

இப்பொழுது அதே ஆர்எஸ்எஸ் வழிவந்த மோடியும், அமித்ஷாவும் 370ஆம் பிரிவைத் திரும்பப் பெற்றுக் கொண்டு காஷ்மீரை 3 ஆகப் பிரித்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ்

இரட்டை வேடம் இங்கே கலைந்து விட்டது. ஜம்மு- காஷ்மீர் மக்களின் உரிமையை மீறிய இந்தச் செயலால் ஆறாக் கோபத்தில், துயரத்தில் இருக்கிறார்கள் அந்த மக்கள்.

அதனால் ஜம்மு-காஷ்மீரின் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நாமும் பார்ப்போம் தேர்தல் முடிவை, அக்டோபர் 4 அன்று!

- கருஞ்சட்டைத் தமிழர்