mk stalin 192திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பெறுப்பேற்றப் பின், குறுகியக் காலத்தில் முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கானப் பல அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார், அனைவரும் பாராட்டும் வண்ணம்.

செப்டம்பர் 7ஆம் நாள் சட்டமன்றத்தில் 110ஆம் விதியின் கீழ், புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார் நம் முதலமைச்சர்.

அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்கள், அவர்கள் பணி தொடர்பானப் பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டர்.

இதனால், இனி பவானிசாகர் சென்று பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை தவிர்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி அரசுப் பணியாளர்கள் பயிற்சி பெறுவதற்கானக் காலதாமதம் தவிர்க்கப்பட்டு அவர்களுக்கு, உரியக் காலத்தில் தகுதிக்கானப் பயிற்சி மற்றும் பதவி உயர்வு பெறுவதும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து, அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அடிப்படைப் பயிற்சிகளை வழங்கவும் அரசு கூறியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கார்களிலேயே சுற்றிக் கையாட்டிச் செல்பவராக இல்லாமல், பேருந்திலும் ஏறி மக்களுடன் உரையாடிக் குறைகளைக் கேட்டறிபவராக இருக்கிறார் முதல்வர்.

சுருக்கமாகச் சொன்னால் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக மட்டும் இருக்கவில்லை.

எல்லா முதலமைச்சர்களுக்கும் எடுத்துக் காட்டாகவும், முதன்மை யானவராகவும் இருந்து வருகிறார்.

அவரைப் பார்த்து உலகம் வியக்கிறது, இப்படி ஒரு முதல்வரா என்று.

ஆம்! திராவிடத்தின் சொத்து, திராவிடத்தால் உருவான விழுது அவர்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It