மார்ச் திங்கள் முதலாம் நாள் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள்.
தமிழ்நாட்டின் முதல்வரும், தி.மு. கழகத்தின் தலைவருமான அவர்தான் 'திராவிட மாடல்' அரசை விரல்நீட்டிக் காட்டி காவிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தவர்.
தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்திய அவரின் அரசை 'மக்கள் விரோத அரசு - தேசவிரோத அரசு' என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவே பேசுகிறார் என்றால், அவரிடம் அச்சம் தெரிகிறது.
பணத்தை வாரி இறைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிப் பல ஆட்சிகளைக் கவிழ்த்து, பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கும் காவிகளால் தமிழ்நாட்டில் கால்வைக்கக் கூட முடியவில்லை!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தலைவர் மு.க.ஸ்டாலின், மொத்தத்தில் திராவிட வித்து இருக்கும்வரை தமிழ்நாட்டில் காவிக் கொடி ஏறாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
'குன்று காப்போம்' என்று கத்தினாலும், 'அரோகரா' என்று காவடி தூக்கினாலும், 'வேல்வேல்' என்று வேலைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்க முடியாது சங்கிகளால். காரணம் திராவிடச் சித்தாந்தமும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறன்மிக்க ஆட்சியும்தான்.
'இந்தி முகமூடிக்குப் பின்னால் சமஸ்கிருதம் இருக்கிறது' 'ஒரு நொடிபோதும் வரியை நிறுத்த' என்று நெஞ்சுயர்த்தி, தன்மானத்துடன் பேசும் எங்கள் முதல்வரே, உங்களை வாழ்த்துகிறது தமிழ்நாடு!
'செயற்கரிய செய்வர் பெரியார்' என்பதற்கு நீங்கள். 'இவன் தந்தை என்நோற்றான் கொல்' எனும் சொல்லுக்கும் நீங்களே!
இமையத்தில் புலி பதித்த சோழனாக, தமிழ்நாட்டின் முதல்வராக, தலைவராக, பொதுவுடைமைத் தோழர் ஜோசப் ஸ்டாலினைக் கண்முன் நிறுத்தும் மு.க.ஸ்டாலின் அவர்களே!
'திராவிட இயக்கத் தமிழர் பேரவை' 'கருஞ்சட்டைத் தமிழர்'களாக நாங்கள் உங்கள் பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்,
வாழ்க நீங்கள், வாழ்க நீவீர் சிறந்தும், நிறைந்தும்!
- கருஞ்சட்டைத் தமிழர்