mk stalin 220சமூக நீதி என்றால் திராவிடம், திராவிடம் என்றால் சமூக நீதி, அது மக்களுக்கானது என்பதை அடுத்தடுத்து நிலை நாட்டி வருகிறார் பெரியாரின் பேரன் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ரஷ்யாவை சோசலிச நாடாக ஆக்கியதில் லெனினுக்கு அடுத்து வருபவர் ஸ்டாலின்.

சோசலிசம் என்பதில் சமூக நீதி அடங்கும். தமிழ்நாட்டைச் சமூக நீதி என்ற சோசலிச பாதைக்குக் கொண்டு செல்கிறார் இங்குள்ள ஸ்டாலின். மகனை அறிந்து பெயர் சூட்டினாரே தலைவர் கலைஞர் , என்ன தொலை நோக்குப் பார்வை!

சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிந்த பெண் விடுதலை, ஏற்றத் தாழ்வற்ற சமத்துவம், பகுத்தறிவு கல்வி, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, பணி உயர்வு உள்ளிட்ட சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் சமூகநீதி இருக்கிறதா, அது காப்பாற்றப் படுகிறதா என்பது குறித்து மிகத் துல்லியமாகச் சிந்தித்த முதலமைச்சர், 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழு'வை அமைத்து அறிவித்துள்ளார்.

அக்குழுவின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிட இயக்கத் தலைமுறைக்குச் சொந்தக்காரர்.

 ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் சமூக நீதியை சமரச மற்றக் கொள்கையாகக் கொண்டு பேசிப் போராடி வருபவர், மிக நேர்மையாளர். அவரைக் கண்டெடுத்துப் பொறுப்பைக் கொடுத்துள்ளார் முதல்வர்.

இவரோடு தனவேல் ஐ.ஏ.எஸ், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், முனைவர் இராஜேந்திரன், கோ.கருணாநிதி, டாக்டர் சாந்தி ஆகிய தகுதி வாய்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமித்துள்ளார் முதல்வர்.

உதயசூரியனின் எழுச்சி நாயகன், எதிர்காலத் திராவிடத்தின் தலைமகன் முதல்வர் ஸ்டாலின் அவர்களை ஊர் பாராட்டும், நாடு பாராட்டும், உலக வரலாறும் அவருக்கு இடம் கொடுக்கும்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It