கல்வியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு. ஆசிரியர் தகுதி தேர்வு TN TET 2026 இல் தகுதி மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசால் குறைத்ததால், ஆயிரக்கணக்கான பட்டியலின SCA/SC/ST பிரிவினர் வெற்றி பெற்றுள்ளனர். பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிபாதுகாப்பு, பதவி உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளன.

mk stalin 5046 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE Act) இன் படி, அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் தமிழ்நாட்டில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) நவம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு அரசு ஆணை எண் 181 இன்படி அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 150 வினாக்கள் 150, மதிப்பெண்கள், 1.30 மணி நேரம். அனைத்து பிரிவினருக்கும் SCA/SC/ST உட்பட அனைவருக்கும் 60% மேல் (90 மதிப்பெண்கள் மேல்) தகுதி மதிப்பெண்களாக அறிவித்தது. அந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கை தான். தாள் I - 0.56, தாள் II - 0.17 , மீண்டும் TN TET துணைத் தேர்வு அதே ஆண்டில் தேர்வு 3. 00 மணி நேரம் தாள் I -3.73 , தாள் II - 2.43 சதவீதம் மட்டுமே தகுதி பெற்று, அடுத்து நியமன தேர்வே இல்லாமல் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டது. அதில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளானது பட்டியலின பிரிவினரே. SCA/SC/ST இட ஒதுக்கீடு இருந்தும் தகுதி மதிப்பெண்கள் 60% என்பதால் யாரும் இடம் பெற இயலவில்லை என்பதை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக SCA 3% உள் இடஒதுக்கீட்டில் தகுதி பெற்றவர்கள் 'ஜீரோ'. இன்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு, சமூக நீதி திராவிட மாடல் அரசு, மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் அது ஹீரோவாக மாற்றியுள்ளது, மகிழ்ச்சியைத் தருகிறது.

TN TET அதிமுக ஆட்சியில் 2012 இல் SCA/SC/ST 60% (90 மதிப்பெண்கள்), 2013 இல் 55% (85 மதிப்பெண்கள்), திமுக ஆட்சியில் 2025 இல் 40% (60 மதிப்பெண்கள்).

TN TET அதிமுக ஆட்சியில் 2012 இல் BC/MBC/BCM 60% (90 மதிப்பெண்கள்) திமுக ஆட்சியில் 2025 ல் 55% (75 மதிப்பெண்கள்).

கடந்த 15 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருந்தது.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் TN TET ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண்கள் குறைத்தது குறித்தத் தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பேராசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்று அரசாணை வெளியிட்ட சமூகழக சமூகநீதி திராவிட மாடல் அரசுக்கும், திமு கழகத்திற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 திராவிட மாடல் சமூகநீதி முதல்வருக்கு என்றென்றும் தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பு உறுதுணையாக, ஆதரவாக இருப்போம்!

செ.ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு பெஸ்ட் கூட்டமைப்பு.