இனவெறி புத்த சாமியார்களைத் தலையில் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் சிங்கள நாடு இன்று திவாலாகிக் கொண்டிருக்கிறது.

மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை வலுவாகக் கட்டமைப்பதை விட்டுவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் போரில் இராணுவத்திற்குப் பெருமளவு நிதியைச் செலவு செய்ததன் விளைவு, இன்று அமைதியற்ற வாழ்வோடு போராடுகிறார்கள் மக்கள். இது இலங்கை!

மதவெறிச் சாமியார்களை வைத்துக் கொண்டு இராமன் கோயில், கிருஷ்ணன் கோயில், இராமானுஜர் சிலை என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

பார்ப்பனர், உயர்ஜாதியர் தவிர்த்த இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவக் கல்விகளை நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுகளால் சிதைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு. நாட்டின் சொத்துகளை அம்பானி, அதானிகளுக்கு வாரி வாரிக் கொடுக்கும் மோடி அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுகளின் விலையேற்றத்தை வாரி வாரிக் கொடுக்கிறது மக்களுக்கு. இது இந்திய ஒன்றியம்!

மாநிலத்தின் உள்கட்டமைப்புகளைப் பலப்படுத்துகிறார் முதல்வர் ஸ்டானின். மக்களின் - நாட்டின் வளர்ச்சி குறித்த சிந்தனை, அதற்கானத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டு அரசியந்திரங்களை முடுக்கி விட்டிருக்கிறார் அவர்.

கல்விக்கும், மருத்துவம், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுப்போம் என்று சொல்லும் ஸ்டாலின் உறங்குவது கொஞ்சம், உழைப்பது அதிகம். இது தமிழ்நாடு!

இலங்கையிலும், இந்தியாவிலும் சாமியார்களின் ஆதிக்கம்.

தமிழ்நாட்டில் பெரியாரின் ஆட்சி, அவ்வளவுதான்!