இட்லரோடு இருந்த கோயபல்சைக் ‘கோணிப்புளுகன்’ என்று மட்டும்தான் சொன்னார்கள். அதையும் தாண்டி போகிற இடமெல்லாம் வாயால் வடைசுடுவதில் மகா வல்லவர் என்ற பட்டத்தையே பெற்றுவிட்டார் பிரதமர் மோடி.

கடந்த பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிரதமரிடம் 37, 000 ஆயிரம் கோடி நிதி கேட்டார் நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

modi lies 321இதோ வருகிறேன் என்று நந்தனம் பொதுக்கூட்டத்திற்கு வந்து, தி.மு.கவினர் நிறைய கொள்ளையடித்து வைத்திருக்கிறார்கள். விடமாட்டேன், அவைகளைப் பிடுங்கி மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் போகிறேன் என்றார் மோடி.

அதுக்கு இது பதிலில்லையே..?

ஒருவேளை வெளிநாட்டுக் கருப்புப் பணத்தை ப் பிடுங்கி மக்கள் கணக்கில் எல்லாம் 15 லட்சம் போட்டாரே, அப்படித்தானோ என்னவோ!

அவர் சுட்ட இந்த வடையில் உப்பு கொஞ்சம் தூக்கலாகக் கூடிவிட்டது!

நாட்டு மக்கள் எல்லோரும் என் குடும்பம் என்றும் சொன்னார் பிரதமர்.

அப்படியானால் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக, பாலியல் வயப்படுத்திக் கொலை, கொள்ளை, வன்முறைகள் நடந்த போது நீங்கள் ஏன் அங்கு போகவில்லை? இதற்கு அவர் சுட்ட வடையைக் காணவில்லை, காக்கா தூக்கிக் கொண்டுப் போய்விட்டது.

நான் தமிழ் மக்களுக்கு நிதி கொடுத்து உதவி செய்திருக்கிறேன் என்று சுட்டார் ஒரு வடையை மோடி அவர்கள்.

உடனே தமிழ்நாடு முதலமைச்சர், வெள்ளப் பாதிப்புக்கே ஒரு ரூபாய் கூட நீங்கள் கொடுக்க வில்லையே. இப்போது மாநில அரசு மூலமாக இல்லாமல், நீங்கள் எங்கே உதவி செய்தீர்கள், என்னென்ன உதவியைச் செய்தீர்கள் என்று சுளீரெனக் கேட்டு விட்டார். இந்த வடையும் நாறிப் போய்விட்டது.

மோடியிடம் பயிற்சி பெற்றவர் தமிழக ஆளுநர். பெயர் ஆர். என்.ரவி. ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் மற்றும் ஜி.யூ.போப் இருவரும் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர்கள் என்று சுட்டாரே இரண்டு வடைகள். குருவை மிஞ்சிய சிஷ்யடு!

பொதுத்தேர்தல் வருவதற்குள் இன்னும் நிறைய வடைகளைச் சுட்டுத் தள்ளுவார்கள்!

கவலை வேண்டாம். அவைகளை எல்லாம் நம் தி.மு.கழகத் தோழர்கள் “மோடி சுட்ட வடை... மோடி சுட்டவடை” என்று மக்களிடம் கொடுத்து விடுவார்கள், காசு வாங்காமல்!

கருஞ்சட்டைத் தமிழர்

Pin It