gutka scam

கடந்த 2016ஆம் ஆண்டு குட்கா வியாபாரி மாதவராவுக்குச் சொந்தமான கிடங்கிலிருந்து, வருமான வரிச் சோதனையில் சிக்கிய டைரி ஆதாரங்கள் மிக வலுவானவையாகக் கருதப்படுகின்றன.

ஓர் அமைச்சர், இரண்டு டி.ஜி.பி.கள், இரண்டு இணை ஆணையர்கள், இரண்டு உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், சென்னை மாநகராட்சி உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் என்று ஒரு பெரிய பட்டியலில் லஞ்சம் வாங்கியவர்கள் வருகிறார்கள், அந்த டைரியில்.

குட்கா போன்ற கொடும் போதைப் பொருள்கள் வடநாட்டிலிருந்து மாநிலங்கள் தாண்டி தமிழ்நாட்டுக்கு வருகின்றன. எனவே இதில் மத்திய - மாநில அதிகாரிகளும் வருகிறார்கள்.

இதனை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்று தி.மு.கழகச் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

தி-.மு.கழகத்தின் வலுவான அசைக்க முடியாத ஆதாரங்களினால், ஏப்ரல் 26 அன்று குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கச் சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.

இப்பொழுது அ.தி.மு.க. பிரபலங்களும் அதிகாரிகளும் குற்றவாளி கூண்டுக்குள் வருகிறார்கள்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல்வர் எடப்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேர்மையாகப் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது! ஏனெனில் இது 40 கோடிக்கும் அதிகமான குட்கா போதை ஊழல்.                                    

Pin It