செல்லம் கொடுத்து 

செல்லையும் கொடுத்து 

வளர்த்த மகள் 

படிதாண்டிப் போனாள் 

தொடர்பு எல்லைக்கு அப்பால் 

 

 

மூத்த மகன் மேலத்தெருவில் 

இளைய மகன் கீழத்தெருவில் 

பெற்றோர் நடுத்தெருவில்! 

-ஆங்கரைபைரவி 

 

புதுவெள்ளம் பாய்கையில் 

போனதெங்கே...? 

உன் படித்துறையும் 

என் படித்துறையும். 

-கவிஞர் இளங்குமரன் 

 

மின் மயானம் 

நாகரிக வளர்ச்சி 

இருப்பினும் 

சுற்றித்தான் 

போக வேண்டியிருக்கிறது 

சில பிணங்கள் 

- த. சுரேஷ்ராஜன்