கொப்புகளால்
அலங்கரிக்கப்பட்ட கொம்பு
நீண்ட வாலோடும்
திமிர்த்துத் திரியும் காளையானேன்
இறக்கையிருந்தும் பறக்கவியலாது
ஒடுங்கிக்கிடந்த கறிக்கோழியாக
அவதரித்ததற்குப் பின்
சிறிது நேரம் கழிய
பாவப்பட்டவர்கள்
பின்தொடர்ந்து வர
தேவனின் கைகளில் தவழும்
ஆட்டுக்குட்டியானேன்

ஆடு மாடு கோழிகளை ருசித்திராத
ஞாயிற்றுக்கிழமையின்
இரவில்...
0

இனி நான் தனியன்
சுருட்டப்படாத காலத்தின்
அடையாளங்களோடு
விரிந்து கிடந்த படுக்கை
சிதறிக்கிடந்த சிகரெட் துண்டுகள்
காலி மதுக்குப்பிகள்
இருப்பை நெடிவீசி நிச்சயித்தன
கைரேகைகளின் அழுத்தம் தாளாது
நசிந்துகிடந்தன ரம்மி சீட்டுகள்
சூழலுக்கேற்ற ராகங்கள்
அலைபேசியில் கசிந்துகொண்டிருக்க
நிகழவிருக்கும் அறை நண்பனின்
திருமண உரையாடலின் நீட்சியில்
மது நாவை தடிமனாக்க
பிதற்றத் துவங்கினான்
தேற்றுதல்களை செவிகொள்ளாது
இவ்வறையில்
இனி நான் தனியனென.

Pin It