தீபாவளி திருவிழா இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி கொண்டாடக் கூறப்படும் காரணங்கள் வேறுபடுகின்றன. தென் மாநிலங்களில் நரகாசூரனை வதம் செய்த காரணத்தால் தான் தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது என கூறுகின்றனர். இந்தியா முழுதும் கூறப்படும் வேறு பல காரணங்கள்.
திருப்பாற்கடலை அமிர்தம் பெறுவதற்கு கடைந்தபொழுது தோன்றியவர் லட்சுமி. இவர் செல்வத்தைத் தரும் தேவி. விஷ்ணுவின் சக்தியாக அமைந்தவர். திருப்பாற்கடலில் இருந்து லட்சுமி தோன்றிய நாள் தீபாவளி என்று கூறுவர்.
பாண்டவர்கள் பாரத யுத்தத்தில் வெற்றி பெற்று மீண்டும் அஸ்தினாபுரம் சென்ற நாள் தீபாவளி என்று கூறுவர்.
அரசர் விக்கிரமாதித்தன் முடி சூடிய நாள் தீபாவளி என்பர். சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் முக்தி அடைந்த நாள், தீபாவளி என்று சமணர்கள் கொண்டாடுகின்றார்கள்.
சீக்கியர்களின் கடைசி குருவான, குரு கோவிந்த சிங், அவுரங்கசீப் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளி என்பர்.
இதற்கு முந்திய சீக்கிய குருவான ஹர்கோபிந்த் சிங் அவர்கள் ஜஹாங்கீர் மன்னனுடைய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள் தீபாவளியாக் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர்.
கி.பி. 1577ல் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினம் தீபாவளி என சீக்கியர்கள் கருதுகின்றனர். இவ்வாறு பல காரணங்களுக்காக சீக்கிய மதத்தவர்களும் தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபாவளிக்காக சீக்கியர்களின் பொற்கோவில் ஒவ்வொரு ஆண்டும் விளக்குகளால் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது.
வட இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளியை ராமர் வனவாசத்தில் இருந்து மீண்டும் அயோத்திக்கு திரும்பிய நாளாகக் கொண்டாடி அதையே புது வருடப்பிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
எனவே தீபாவளி என்பது பார்ப்பனர்களின் கற்பிதம். வரலாறு அல்ல! பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள் என்கவுண்டர் செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல்.
- விடுதலை இராசேந்திரன்