பள்ளிகளில் ஜாதிக் கயிறு, மத அடையாளங்களை மாணவர்கள் அணிய அனுமதி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம்.govt orders to remove caste symbolsபள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதிக் கலவரங்கள் தாக்குதல்கள் நடந்ததை ஒட்டி திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் அமைத்த குழு அளித்த முக்கிய பரிந்துரைகளில் இது ஒன்றாகும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படுத்தும் என்று அறிவித்திருப்பதையும் பாராட்டி வரவேற்க வேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் முதல் எதிர்ப்பு பாஜக தலைவர் நயினாரிடம் இருந்து வந்திருக்கிறது."ஜாதி மத அடையாளங்கள் தமிழர் மரபு என்றும் பாரம்பரியம் என்றும் அதில் கை வைக்க அனுமதிக்க மாட்டோம்" என்றும் மிரட்டுகிறார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே தமிழரின் அடையாளம், ஜாதியும் மதமும் அல்ல. ஆரிய பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் திணிக்கப்பட்ட அடிமைச் சின்னங்களை தமிழர் மரபு என்று பாஜக கொண்டாடலாம் ஆனால் தமிழ் இன உணர்வாளர்கள் ஒருபோதும் அதை ஏற்க மாட்டார்கள். மாணவர்களிடம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். பூணூல், உச்சிக் குடுமி அடையாளங்களுடன் பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களைக் கற்பிக்கும் குருகுலங்கள் மட்டுமே இந்த நாட்டில் இருந்தன.இதற்கு மாற்றாக அனைத்து சமூகப் பிரிவு மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து ஒரே பாட நூலை படிக்கும் பள்ளிக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியில் மெக்காலே என்ற அதிகாரி தான். பார்ப்பனியத்தின் மத அடையாளங்களையும் பாகுபாடுகளையும் ஒழிக்க வந்த பள்ளிக்கல்வி முறையில் ஜாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் மீண்டும் திணிப்பது பள்ளிக்கல்வி நோக்கத்திற்கே எதிரானதாகும். மிரட்டலுக்கு பணிந்து விடாமல் பள்ளிக் கல்வி அமைச்சர் உறுதியோடு இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்." 

(குறிப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அதற்குப் பிறகு விபூதி, குங்குமம் அணியலாம்; ஜாதிக்கயிறு மட்டுமே தடை செய்யப்படுகிறது என்று விளக்கமளித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதாலோ என்னவோ அமைச்சர் இப்படி ஒரு மறுஅறிவிப்பை வெளியிட்டிருப்பார் போல் தெரிகிறது. )

விடுதலை இராசேந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.