சிங்கள கேலிச் சித்திரக்கலைஞர் ஹசந்தா விஜேநாயக என்பவர் தமிழநாடு முதலமைச்சர் ஜெயல்லிதாவையும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் மிகக் கேவலமாகச் சித்திரிக்கும் படமொன்றை வரைந்திருக்கிறார். “லக்பீம” என்ற இதழின் ஞாயிறு பதிப்பில் வெளியான இந்த கேலிச்சித்திரத்தின் நகல்கள் கொழும்பு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

உயர் பதவிகள் வகிக்கும் இவ்விருவரையும் இழிவுபடுத்துவது ஒரு புறமிருக்க இந்த சித்திரம் பெண்மையையும், குறிப்பாக தமிழ்ப் பெண்களையும் கேவலப்படுத்துகிறது. இச்செயல் கடிமையாக கண்டிக்கத்தக்கது. வக்கரித்துப்போன சிங்களர் சிந்தையில் தமிழ்ப் பெண் என்றால் அவளது பிறப்புறுப்புத்தான் கவனம் பெறுகிறது. காலங் காலாமாக சிங்களர் தாக்குதல் தமிழப் பெண்ணின் பிறப்புறுப்பு மீதுதான்.

“இலங்கை பாதுகாப்புப் படைகள் சிறுபான்மை இனப் பெண்களை (தமிழ்ப் பெண்களை) சித்திரவதை செய்யும் முறையானது ஒடுக்கப்படும் இனப் பெண்களுக்கு எதிரான சித்திரவதை முறை என்பது தெளிவு. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு தமிழ்ப் பெண் பாதுகாபுப் படை அல்லது காவல் துறையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தமிழ்ப் பெண் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்”
(மெக்கொனெல் தியார்தே, பாலியல் வல்லுறவுக்கு எதிரான பெண்கள் அமைப்பு, 1.04.2001.ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 57 வது கூட்டத்தில் பேசியது)
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது ஈழத் தமிழ் இன அழிப்புப் போரே என்பதை உறுதி செய்ய அந்த மண்ணில் சிதைக்கப்பட்ட பெண்ணுறுப்புக்களின் எண்ணிக்கையொன்றே போதுமானது.

வக்கிரம் பிடித்த சிங்களர் சிரத்தையில் ஊறிப் போன இத்தகைய தாக்குதலில் வடிவம் காலநிலைக்கேற்ப மாறுபட்டு வன்முறை தீவிரமடைந்து வந்ததின் விளைவுதான் இன்று இந்த வெட்கக் கேடான கேலிச் சித்திரமாக உருவெடுத்துள்ளது.
சிங்களர் வக்கிரப் புத்தியில் இன்றைக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு தெரிகிறார்? அதவது ஈழத்தமிழ் இன அழிப்புப் போரில் ஆயுதங்களும் ஆலோசனைகளும் பல நூறு கோடிப் பணமும் தந்து இலங்கை அரசுக்கு உதவிய இந்தியப் பிரதமர் எவ்வாறு தெரிகிறார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா? அது மட்டுமல்ல – இலங்கை அரசுக்கு இந்திய அரசு மீது எவ்வித மரியாதையோ பயமோ கிடையாது என்பதற்கும் இதுவே சான்று அல்லவா?

தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு ஜெயலலிதா சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றி, பிற நாடுகளையும் அவ்வாறே செய்ய வலியுறுத்த வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மறுத்ததோடு, இந்தியாவில் எங்கும் இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கக்கூடாது என்றார்.

அண்மையில், தமிழ்நாட்டில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ் நாட்டரசு அனுமதி பெறமால் பயிற்சி எடுக்க வந்திருந்த கால்பந்தாட்டக் குழுவைத் திருப்பி அனுப்பினார்.

சிங்கள வக்கிர சிந்தனை ஜெயல்லிதாவை இழிவுபடுத்த இவைதான் காரணம், ஆனால் இலங்கையில் சிங்கள அரசு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை சித்திரவதை செய்து கொன்றது ; நூற்றுக்கனக்கான ஈழத்தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் சொல்லொணாச் சித்திரவதைக்கும் ஆட்படுத்தி பிறப்புறுப்பைச் சிதைத்துக் கொன்றது ; தமிழ் இளைஞர்களையும் சிறுவர்களையும் படுகொலை செய்து தமிழ் இனத்தை அழித்தது. இவற்றுக்கெல்லாம் அடையாள எதிர்ப்பாக மட்டுமே தமிழ்நாடு அரசின் முன்னர் குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கவில்லை என்பதற்காக, சிங்கள வக்கிரம் அவரையும் ஜெயலலிதாவையும் இவ்வாறு கேவலமாக சித்திரித்துள்ளது.

சிங்களர் வக்கிரம் இன்று புதிதாய்த் தோன்றிவிடவில்லை; 1948 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் நடந்த போது அதிகாரம் கைக்கு வந்தவுடன் சிங்களர் ஈழத்தமிழர் அழிப்பைத் தொடங்கிவிட்டனர். ஒரு தமிழர் விரொத சட்டத்தை இயற்றுவது, அதற்கு அமைதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஈழத்தமிழரைக் கொல்வது, தமிழ்ப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவது என கடந்த 60 ஆண்டுக்காலத்தில் நெடுக இக்கொடுமை தொடர்ந்துள்ளது கண்கூடு.

நான்கு குழந்தைகள் பெற்ற 35 வயதான கோணேஸ்வரியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு அவரது பிறப்புறுப்பில் வெடிவைத்துத் தகர்த்தது இதே சிங்கள வக்கிரம் தான். விஜதா என்ற இளம் பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியை அடைத்து அவளைச் சித்திரவதை செய்தது இதே சிங்கள வக்கிரம்தான். எண்ணற்ற இளம் பெண் போராளிகளை கூட்டு வன்புணர்ச்சிக்குப்பின் பிறப்புறப்பை சிதைத்து கொன்றது. இந்த சிங்கள் வக்கிரம்தான். நிறைமாத கர்ப்பிணியைக் கூட்டு வன்புணர்ச்சிக்குபின் வயிறு கிழித்து குழந்தையை எடுத்து சுவரிள் மோதிக் கொன்றது இந்த சிங்கள வக்கிரம்தான்.

“ராஜபட்சேவின் குழந்தை எங்கள் வசம் வந்தால்கூட, அவர் மனைவி, எங்கள் வசம் வந்தால்கூட, அவர்களைப் பாதுகாப்பாக கெளரவமாக நாங்கள் ஒப்படைப்போமே அல்லது. எங்தவித ஊறும் அவமதிப்பும் நிகழ்விட மாட்டோம்” என்கிறார் பல தோழர்களையும் சொந்தங்களையும் பறிகொடுத்து ஆறாத் துயரில் கொதித்துக் குமுறும் ஈழத் தமிழ்க் கவிஞர் காசி.ஆனந்தன். சிங்களர் வக்கிரம் ஈழத்தமிழர் பண்பைக் குலைத்து விடவில்லை.

விடுதலைப் புலிகள் பிராசாரப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கதியை – நிர்வாணமாக்கப்பட்ட கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் அவர் இறந்த கிடக்கும் காட்சியை – நாம் கண்டோம். சேனல்-4 தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான பின்பு “ஹெட்லைன்ஸ் டுடே” தொலைக்காட்சியில் (ஆகஸ்டு 2011) தமிழ்ப் பெண்கள் சித்திரவதை குறித்து கோத்தபய ராஜபக்சேவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது உயிர் பிழைத்து வந்த தமிழ்வாணி என்ற பெண்ணைக் காட்டி, “இவள் அழகாகத்தானே இருக்கிறாள்? இவளை யாரும் வன்புணர்ச்சி செய்தார்களா? என்று அவர் பதில் சொல்கிறார்.

விடுதலைப் போராளிகளை ஒழித்துக் கட்டுவதில் வல்லுனரான ரோஹன் குணரத்ன, போர்க் குற்றங்கள் குறித்தும் இன அழிப்புக் குறித்தும் சாட்சி அளிக்க வந்த இளம் பெண்ணைப் பார்த்து இதே போன்ற கேள்விகளைத்தான் எழுப்பினர்.

ஆக இலங்கை அதிபர் தொடங்கி, இராணுவத்தினர், காவல்துறையினர், அரசு உயர் பதவி வகிப்பவர், செய்தியாளர் என சிங்களர் இனம் கொடூரமும் வக்கிரமும் கொண்ட, மனிதத் தன்மையற்ற இனம் என்பது வெளிப்படை. சிங்களர் அனைவருக்கும் உள்ள ஒரே குறிக்கோள் தமிழினத்தை சுவடின்றி அழித்து இலங்கையை சிங்கள தேசமாக்குவது. எனவே தமிழ்ப் பெண்களின் பிறப்புறுப்பு மீது அவர்களது கவனம் குவிந்துள்ளது. செயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதால் அவர்களால் வெறும் கேலிச்சித்திரம் தான் வரைய முடிந்துள்ளது. வல்லமை கொண்ட சிங்கள வக்கிரங்களின் பிடியில் சிக்கிய ஈழத் தமிழ்ப் பெண்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமல்ல.

Pin It