தமிழ் ஓர் ஆணாதிக்க மொழி என்னும் கருத்து அறுபதாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் பெரியாரியவாதிகள் கூறி வரும் அடுத்த மாயாவாதக் கருத்தாகும். பெண்ணடிமைத்தனத் துக்கு அடிப்படையாக விளங்கும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கொளுத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்தப் பரப்புரையைப் பெரியார் தொடங்கி பல பகுத்தறிவுவாதிகளும் இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

2002 திசம்பரில் ஜெயலலிதா சென்னைக் கடற் கரை கண்ணகி சிலையை அகற்றிய போது அதனை சோவும் ஆதரித்தார், கி.வீரமணியும் ஆதரித்தார்.

திரை நடிகை குஷ்பு 2005 செப்டம்பரில் இந்தியா டுடே, தமிழ் முரசு இதழ்களில் கற்பு குறித்துக் கருத்துக் கூறி தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தியபோது இந்து ராம், துக்ளக் சோ போன்ற பார்ப்பன சக்திகளும், திராவிடர் கழகம் போன்ற திராவிட சக்திகளும், சி.பி.ஐ.எம். போன்ற கம்யூனிஸ்டு சக்திகளும் குஷ்புவின் கருத்துரிமைக்கு ஒன்றாகக் குரல் கொடுத்தன. வழக்கம் போல் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கியங்களை வம்புக்கு இழுத்தார்கள். அடிமைப் பட்ட தமிழின் உரிமைக்கு என்றும் குரல் கொடுக்காதவர்கள் குஷ்புவின் கருத்துரிமை காக்கப் புறப்பட்டது வேடிக்கைதான்.

பெண்ணியம் குறித்த எந்தச் சிக்கல் என்றாலும் அடிபடுவது தமிழ் இலக்கியங்களே. அப்போது எல்லாம் ஆங்கில இலக்கியங்கள் பற்றி எவரும் மூச்சு விடுவதில்லை. அப்படியானால் பெண்ணியம் காக்கும் ஆயுதங்களா ஆங்கில இலக்கியங்கள்? ஆராய்வோம்.

ஆங்கில இலக்கியங்கள் பேசுவது பெண்ணியமா என்ற ஆய்வுக்குள் புகுமுன் பழம்பெரும் இலக்கியமான ஆதியாகமம் (Genesis) பெண்கள் பற்றி என்ன சொல்கிறது எனப் பார்ப்போம். இயேசுவுக்குத் தலைவன் இறை வன், ஒரு பெண்ணுக்குத் தலைவன் அவள் கணவன்; இல்லமே பெண்ணின் இருப்பிடம்; தேவா லயத்தில் பேசுவது பெண் களுக்குத் தலைக்குனிவாகும், ஏதும் ஐயமிருப்பின் தங்கள் கணவனிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்களாக; மனைவிமாரே! நீங்கள் உங்களைக் கடவுளிடம் ஒப்படைத்துக் கொள்வது போன் றே உங்கள் கணவரிடமும் ஒப் படைத்துக் கொள்ளுங்கள்; வாழ்நாள் முழுதும் கண வனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியவளே பெண்; ஒரு பெண் ஆணைப் பெற்றால் ஒரு கிழமையும், பெண்ணைப் பெற் றால் இரு கிழமையும் தீட்டடை கிறாள்; நீண்ட கூந்தல் வைத்துக் கொள்ளும் ஆணும், குட்டைக் கூந்தல் வைத்துக் கொள்ளும் பெண்ணும் வெட்கங் கெட்டவர் கள்; ஒரு பெண் எதையும் கீழ்ப் படிதலுடன் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, ஆணுக்கு எதையும் கற்றுத் தர முயலக் கூடாது. இப்படி ஆணாதிக் கத்துக்கு முதல் எடுத்துக்காட் டாகிறது ஆதியாகமம்.

தமிழ் மொழி போன்றே ஆங்கிலத்திலும் காலாகாலமாகச் சொல்லப்பட்டு வரும் ஆணா திக்கப் பழமொழிகளுக்குக் குறை வில்லை. பழமொழி அகராதி களே ஆங்கிலத்தில் பல உண்டு. அந்த அகராதிகளிலிருந்து சில பழமொழிகளைப் பார்த்தால் உங்களுக்குத் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் வேறுபாடே தெரியாது. உங்கள் பார்வைக்குச் சில பழமொழிகள்: A widow is a boat without a rudder – விதவை ஒரு துடுப்பில்லாப் படகு; A woman c o n c e a l s w h a t s h e k n o w s n o t– பெண் தனக்குத் தெரியாததையே இரகசியம் காப்பாள்; To fear is womanish – அஞ்சுவதே பெண்மை; Trust not a woman when she weeps – அழும் பெண்ணை நம்பாதே; A woman is to be from her house three times: when she is christened, married and buried – ஒரு பெண் 3 காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறலாம்: திருமுழுக்காடு, திருமணம், இறப்பு; A woman’s answer is never to seek - தையல் சொல் கேளேல்; A woman, a dog, and a walnut tree, the more you beat them the better they be – பெண், நாய், பாதாங்கொட்டை– மூன்றும் அடிக்க அடிக்கத்தான் சிறக்கும்; He who follows his wife’s advice will never see the face of god – மனைவி சொல் கேட்பவன் என்றும் கடவுள் முகம் காணான்; When an ass climbs a ladder, we may find
wisdom in a woman – கழுதை ஏணி ஏறினால் பெண்ணிடம் அறிவைக் காணலாம்.

பழமொழிகள் போன்றே தமிழில் காலாகாலமாகச் சொல் லப்பட்டு வரும் பாட்டி கதைகள் உண்டு அல்லவா? அது போன்றே மேலை நாடுகளிலும் கிறித்து பிறப்பதற்கு முன்பு தொடங்கிச் சிறுவர்களுக்குச் சொல்வதற்கென்று பல கதைகள் உருவாகத் தொடங்கின. அந்தக் கதைகளை ஃபேரி டேல்ஸ் (fairy tales) என்பார்கள். இந்தக் கதைகளில் தேவதைகளும் சூனியக்காரிகளும் மூட நம்பிக்கைகளும் நிறைய உண்டு. குறிப்பாக ஆணாதிக்கத்துக்குக் குறைவே இருக்காது. இந்தக் கதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

உறங்கும் அழகி (Sleeping Beauty) – ஒரு ஊரில் ஒரு ராஜா, ராணி. ராணிக்குத் தவளை ஒன்று சொன்ன வாக்குப் படி அழகான பெண் குழந்தை பிறக்கிறாள். அவளுக்குத் திரு முழுக்கு நடத்தும் போது பிரையன் ரோஸ் எனப் பெயரிடுகின்றனர். அப்போது எல்லா தேவதைகளும் வந் திருந்து குழந்தையை வாழ்த் தினர். அவ்விழாவுக்கு ஒரு தேவதைக்கு மட்டும் அழைப்பு செல்லவில்லை. அவள் சினத் துடன் விழாவுக்கு வருகிறாள். பிரைன் ரோஸ் 15 வயதை அடையும் போது அவளுக்கு நூற்பு ஊசி குத்தி வாழ் நாளெல்லாம் அவள் உறங்கக் கடவது என சபிக்கிறாள். ஆனால் இன்னொரு தேவதை வந்து நூறாண்டு கழித்து ஓர் இளவரசன் அவளுக்கு முத்தம் கொடுக்க அவள் விழித்துக் கொள்வாள் என சாப விமோ சனம் தருகிறாள். சாபத்துக்கேற்ப சரியாக 15 வயதில் ஊசி குத்தி உறங்கத் தொடங்குகிறாள் ரோஸ். நூறாண்டு கழித்து சாமிங் என்னும் இளவரசன் வந்து அவளை முத்தமிட அவள் விழித்துக் கொள்கிறாள், அவனையே மணந்து கொண்டு பெரு வாழ்வு வாழ்கிறாள்.

இதே போன்றதுதான் சின் டெர்லா என்னும் பாட்டி கதையும். ஒரு குடும்பத்தில் அதிகம் உழைத்து உழன்று கொண்டிருக்கும் ஏழைப் பெண் சின்டெர்லா ஓர் அழகான இள வரசனின் கடைக்கண் பார்வை பட்டு அவனை மணக்கும் பேறு பெற்றுச் சீரும் சிறப்புடன் வாழத் தொடங்குவதைச் சொல்லும் இந்த ஆணாதிக்கக் கதை அனைவரும் அறிந்ததே. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்தார் வால் டிஸ்னி. இன்றும் ஆலிவுட்டில் இதனை மீண்டும் திரைப்படத்தில் படைக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர்.

இது போன்ற பல ஃபேரி டேல் கதைகளை உலகெங்கும் உள்ள ஆங்கிலப் பள்ளி மாணவர்கள் பயின்று வரு கிறார்கள். பெண்களை வெறும் அழகுப் பதுமைகளாகச் சித்திரிக்கும் இந்தக் கதைகள் பிஞ்சு உள்ளங்களைக் கெடுத்து விடுமாதலால் இவற்றை பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டுமெனப் பெண் ணியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் மிகச் சில பள்ளிக்கூடங்களில் இந்தப் பாட்டி கதைகளுக்குத் தடை விதித்து வருகிறார்கள். காரணம் பெண்ணிய நோக்கன்று. இந்தக் கதைகளில் இடம்பெறும் சூனியக்காரி முதலிய செய்திகள் கிறித்துவக் கருத்தியலுக்கு எதிரானவை எனக் கருதும் சில கிறித்துவ அடிப்படைவாதிகளின் எதிர்ப்பே இந்தத் தடைக்குக் காரணம்! நம் தமிழ்க் குழந்தை களுக்கு இத்தகைய கதைகள் பயிற்றுவிக்கப்படுவது பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை.

பழங்கால இலக்கியங்கள் இப்படி என்றால், அடுத்து வந்த ஆங்கில இலக்கியங்களின் தரம் என்ன?

கால அடிப்படையில் பழங்கால ஆங்கிலம் (Old English), மையக்கால ஆங்கிலம் (Middle English), புதுமக்கால ஆங்கிலம் (Modern English) என 3 வகை ஆங்கிலங்கள் உண்டு. பாட்டி கதைகளும் புராணிகக் கதை களும் பழங்கால ஆங்கிலத்தைச் சேர்ந்தவை. நாம் இப்போது மையக்கால ஆங்கில இலக்கியத் துக்குள் நுழைகிறோம்.

ஜெஃப்ரி சாசர் (1343 – 1400) மையக் காலங்களின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர் எனக் கருதப்படுபவர், ஆங்கில இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர். புகழ் பொங்கும் இல்லம் (House of Fame), நல்ல பெண்ணின் பெருமை (Legend of Good Women) போன்ற பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பிரெஞ்சு, இலத்தீன் ஆதிக்கச் சூழலில் ஒரு வட்டார மொழி என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மையக்கால ஆங்கிலத்துக்குப் பெரும் இலக்கியத் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவர் சாசர்.

சாசர் செய்யுள் நடையிலும், உரைநடையிலும் எழுதிய கேன்டர்பரி கதைகள் (Canterbury Tales) அவரது பெரும் படைப்பாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் சவுத்வாக் என்னும் இடத்திலிருந்து கேன்டர்பரி கதீட்ரல் என்னும் திருத்தலம் நோக்கிச் செல்லும் திருப் பயணிகள் பயணக் களைப்பு தெரியாமல் இருக்க ஆளுக் கொரு கதை சொல்லத் தொடங்குகின்றனர். இந்தக் கதைகளின் தொகுப்பே கேன் டர்பரி கதைகள் எனப்படுகின்றன. அவற்றை இன்றும் அனைவரும் விரும்பிப் படித்து வருகின்றனர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்தியா போன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டிருந்த நாடுகளிலும் உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் இந்தக் கதைகளைப் பயின்று வருகிறார்கள்.

இந்தக் கதைகள் பல பிற் போக்கானவை. இவற்றில் பெண்ணடிமைத்தனக் கருத்து களுக்குப் பஞ்சமில்லை. காட் டாக, எழுத்தர் சொன்ன கதை (The Clerk’s Tale) என்ற கதையைப் பார்ப்போம்.

இத்தாலியில் விசோ மலை அடிவாரத்தில் சலூசோ என்ற ஊரை வால்டர் என்னும் சிற் றரசன் ஆண்டு வந்தான். அவன் தனக்கு அடக்க ஒடுக்கமான பெண்தான் மனைவியாக வேண் டும் என விரும்பினான். அதற்கேற்றார் போல் ஜனிகுலா என்னும் ஏழைத் தகப்பனின் மகளாகிய கிரிசெல்டே என்னும் பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். வால்டர் அவளிடம் சொல்கிறான்: “நீ ஏழைப் பெண் என்பதில் எனக்கு எந்த வருத் தமும் இல்லை, ஆனால் நீ கணவன் சொல் மீறாத மனைவி யாக எனக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் எனது எதிர்பார்ப்பு.” கிரி செல்டேயும் இதனை ஏற்றுக் கொள்கிறாள். அவர்கள் திருமணம் நடைபெறுகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இப்போது அவளின் பதிபக்தியைச் சோதித் தறிய விரும்புகிறான் வால்டர். இது பெண் குழந்தை என்பதால் நமது வம்சம் தழைக்க உதவாது, எனவே இவளைக் கொன்று விடலாம் என கிரிசெல்டேவிடம் கூறுகிறான். அவளும் கணவன் பேச்சை அப்படியே மதித்து இதற்கு மனமுவந்து சம்மதிக் கிறாள். சிறிது நாள் கழித்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்ததும் மீண்டும் அவளது அடக்க ஒடுக்கத்துக்குச் சோதனை வைக்கிறான் வால்டர். இந்தக் குழந்தையிடம் உங்கள் குடும்பத்தின் தாழ்ந்த குலக் குருதி கலந்துள்ளது, எனவே இவனையும் கொல்ல விரும்புகிறேன் எனக் கூறு கிறான். இந்தக் கொலைக்கு இப் போதும் பொறுமையுடன் இசைகிறாள் கிரிசெல்டே. ஆனால் உள்ளபடியே வால்டர் அந்தக் குழந்தைகளைக் கொல் லாமல் அவர்களைத் தொலை தூரத்தில் வாழ்ந்து வரும் தன் தங்கையிடம் ஒப்படைத்து விட்டான். பன்னிரெண்டு ஆண்டுகள் கழிகிறது. இப் போதும் வால்டர் தனது மன¬வி தனக்குக் கட்டுப்பட்டவள்தானா என ஐயங்கொள்கிறான். அவ ளை மணமுறிவு செய்வதாகக் கூறுகிறான். அவள் தந்தை கொடுத்த வரதட்சணையையும் திருப்பிக் கொடுத்து அவளது பிறந்த வீட்டுக்கே அவளை அனுப்பி வைக்கிறான். அப் போதுங்கூட கிரிசெல்டே தனது கணவனின் ஆணையைப் புன் முறுவலுடன் ஏற்றுக் கொள் கிறாள். வால்டர் இன்னொரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்து தான் மணமுடிக்க இருக்கும் பெண்ணை கிரிசெல்டேக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். இந்நிலையிலும் கிரிசெல்டே அந்த மணப்பெண்ணிடம் இனிமையாகப் பேசுகிறாள். இப்போது கடைசியாகத் தனது மனைவியின் பதிபக்தியை உணர்ந்து கொள்கிறான் வால்டர். குழந்தைகளைக் கொன்றது, திருமண ஏற்பாடு எல்லாமே நாடகம் எனக் கூறி கிரி செல்டேவைக் கட்டி அணைக் கிறான் வால்டர். இருவரும் தங்கள் இரு குழந்தைகளுடன் மனமகிழ்ச்சியுடன் வாழத் தொடங்குவதாக முடிகிறது கதை.

இப்படி ஆணாதிக்கமும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த படைப்புகளைப் படைத்தவரே சாசர் என்ற போதிலும் அவரது ஆங்கில இலக்கியப் பங்க ளிப்பைப் பூரிப்புடன் போற்று கிறது ஆங்கில உலகம். மையக் கால ஆங்கிலம் தொடர்ந்து புதுமக்கால ஆங்கிலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியருக்கு வருவோம்.

 (தொடரும்)

Pin It