தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், மார்க்சிய ஆய்வாளர் ரான் ரைடனவருடன் கலந்துரை யாடும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. திருச்சி அய்க்கப் அரங்கில் 08.11.2011 அன்று மாலை நடந்த இக்கலந்துரையாடலில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்சி தமிழுணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் தொடக்கமாக, கல்பாக்கம் தோழர் டி.வி.நடராசன், ரான் ரைடனவர் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார். ரான் ரைடனவர் வட அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய போதும், அதனையெல்லாம் துறந்து  விட்டு வட அமெரிக்காவின் அட்டூழியங்களைத் தயங்காமல் தட்டிக் கேட்டவர் என்றும் எடுத்துரைத்தார். எழுத்துப்பணி மட்டுமல்லாது, கியூபாவிற்குச் சென்று அங்கு எட்டு ஆண்டுகள் தங்கி உழவர் பண்ணைகளில் நேரடியாக வேலை பார்த்தவர் ரான் என்பதையும், இது குறித்து அவர் எழுதிய ‘கியூபா: செயல்படும் புரட்சி’ என்ற நூலையும் அறிமுகப்படுத்தினார் தோழர் டி.வி. நடராசன்.

‘கியூபாவில் சோசலிசம் - இன்றைய நிலைமை கள்’, ‘பாட்டாளி வர்க்க சர்வத்தேசியத்தின் எதிர்காலம்’ ஆகிய இரு தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல் பிரிக்கப்பட்டிருந்தது.

‘கியூபாவில் சோசலிசம் - இன்றைய நிலைமைகள்’ என்ற தலைப்பில் தோழா ரான் ரைடனவர் பேசினார். ரான் பேச்சின் சாரத்தை, அவ்வபோது தோழர் கி.வெங்கட்ராமன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.

“கியூபப் புரட்சிக்குப் பின் தான் கியூபா உண்மையில் பல சவால்களை சந்தித்தது. அரசு சார்பில் உழவர் பண்ணைகள் அமைக்கப்பட்டு, அதில் மக்கள் ஆர்வத்துடன் உழைத்தனர். அனைவருக்கும் இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் அளிக்கப்பட்டன.

 அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளால் பொருளியல் முற்றுகைக்கு உள்ளாகி உள்ள சூழலிலும் கூட, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் கியூப மண்ணில் இன்றும் நிறுத்தி வைக்கப்படவில்லை. கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் தலைமையிலான குழு நாட்டை வழிநடத்திச் செல்கிறது. இக்குழுவில் அரிதாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லாத மக்கள் பிரதிநிதிகளும் இடம் பிடிப்பார்கள். ஊடகத்துறை, கட்சி மற்றும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. கருத்துச் சுதந்திரமற்ற சோசலிசமே அங்கு நிலவுகிறது.

புரட்சிக்குப் பின்னான பிடல் காஸ்த்ரோவின் கியூப அரசைக் கவிழ்க்க வேண்டுமென, வட அமெரிக்க அரசு தொடர்ச்சியான சதிச் செயல்களை அரங்கேற்றி வருகிறது. இதுவரை 610 முறை பிடல் காஸ்த்ரோ நாங்கள் வைத்த குறிக்குத் தப்பியிருக்கிறார் என அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பு வெளிப்படையாகவே அறிவித் துள்ளது. வட அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ. ஏ.வில் சம்பளம் பெற்றுக் கொண்டு, கியூப நாட்டுக்காக உழைத்தவர்களைப் பற்றி நான் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறேன். அந்தள விற்கு அம்மக்கள் நாட்டுப் பற்றுடன் விளங்கினர்.

வட அமெரிக்காவின் இரா ணுவ நெருக்கடிகள் கியூப மக்களை ஒன்றும் செய்து விட வில்லை எனினும், பொருளியல் நெருக்கடிகள்தான் மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. அமெரிக்கா வின் பொருளாதார முற்றுகை, கியூப மக்களை ரசியா, சீனா போன்ற நாடுகளின் கீழேயே தொடர்ந்து இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. தொடக்க கட்டத் தில், சோவியத் ரசியா வின் உதவிகள் கியூபாவிற்கு பெரும் நன்மைகளை விளைவித்து வந்த போதிலும், சோவியத் ரசியா வீழ்த்தப்பட்டப் பிறகு சவால் கள் கடுமையாயின.

தொடர்ச்சியான நெருக்கடி களின் காரணமாகவே, வேறு வழியின்றி 1993இல் அமெரிக்க டாலரை கியூபா ஏற்றுக் கொள்ளும் அவல நிலையும் வந்து சேர்ந்தது. முதலாளித்துவ சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெற்றன. தனியார் நிறு வனங்கள் முளைத்தன. இராணு வத்தினர் தனியார் வேளாண் பண்ணைகளில் உழவுப் பணி களில் ஈடுபட்டனர்.

மக்கள் தமது சொத்துகளை விற்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, தற்போது மக்கள் தமது சொத்துகளை தமக்குள் விற்றுக் கொள்கின்றனர். பல சிறு முதலாளிய நிறுவனங்களும் வளர்ந்தன. இவற்றின் விளை வால், மக்களிடையே அறவே இல்லாமலிருந்த நுகர்வியப் பண்பாடு வேர்விடத் தொடங் கியது. குற்றச் செயல்கள் அதிகரித்தன எனினும், இங்கு காணப்படுவதைப் போல அபாயக ரமான நிலைமையை அது அடையவில்லை.

ஆனால், 2000க்குப் பின் இந்நிலைமை மாறத் தொடங் கியது. வெனிசுவேலா, ஈக்வதார் போன்ற நாடுகள் சோசலிசத் தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொ டர்ந்து அமெரிக்கா, உலகை நிரந்தர போர்ப் பகுதியாகவே அறிவித்து விட்டது. வால் ஸ்ட்டிரீட் தெருக்களில் அமெ ரிக்க இளைஞர்கள் வட அமெரிக்காவை எதிர்த்து மட்டு மின்றி, முதலாளியத்தை எதிர்த் தும் உரத்துக் கேள்விகள் எழுப்புகிறார்கள். அவர்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்!” என்று பேசி னார்.

 எளிய ஆங்கிலத்தில் நகைச் சுவைக் கலந்து பேசிய ரான் ரைடனவரின் பேச்சாற்றலும், பேசும் போதான அவரது மெய்ப்பாடும்(உடல் மொழியும்) தோழர்களை கவர்ந்திழுத்தது. பேச்சின் முடிவில், தோழர் களின் சந்தேகங்களுக்கு விடை யளித்து கூட்டத்தினரை மேலும் உற்சாகப்படுத்தினார்.

 வட அமெரிக்காவில் பிறந்த உங்களுக்கு கியூபா மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்றொரு தோழர் கேள்வி யெழுப்பினார். அதற்கு புன் முறுவல் பூத்த ரான், ‘புரட்சி என்பது அன்பின் அதி உயர்ந்த வெளிப்பாடு. மக்களை நேசிப் பதால் தான் நாம் புரட்சி யாளர்களாக இருக்கிறோம் என்ற சே குவேராவின் வரிகள் தம்மை கியூபாவின் பாலும், மார்க்சியத்தின் பாலும் கவர்ந் திழுத்தன’ என்றார்.

அதன் பின் நடந்த இரண்டாம் அமர்வைத் தொ டக்கி வைத்து தோழர் பெ.மணியரசன் பேசினார்.

“உலக நாடுகளின் பாட்டாளிகள் அனைவரும் ஒன்று பட வேண்டும் என வலியு றுத்தும் பாட்டாளி வர்க்க சர்வத்தேசியம் என்ற கோட் பாடு தேவையானது. எனினும், இன்றைக்கு அது நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கின்றது. உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்க கம்யூனிச அரசுகள் அந்தந்த நாட்டின் நலன்களை கணக்கில் கொண்டு மட்டுமே செயல்படுகின்றன. பாட்டாளி வர்க்க சர்வத்தேசியம் என்ற கோட்பாட்டை இந்நாடுகள் மதிப்பதில்லை.

பாசிச இட்லருடன், சோவி யத் தலைவர் ஜே.வி. ஸ்டாலின் இருநாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமித்துக் கொள்ள மாட்டோம் என உடன் படிக்கை செய்து கொண் டனர். அதன் பின்னர் போலந்தை ஹிட்லர் ஆக்கிர மித்த போதும், தனது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக ஸ்டாலின் அதைக் கண்டுகொள்ள வில்லை. தடுக்க முன்வர வில்லை.

உலகத்தில் புதிதாகத் தோன்றி வளர்ந்து வரும் இளம் பருவ சோசலிச நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஸ்டாலினுக்கு இருந்ததை நாம் புரிந்து கொள்வோம்.

இங்கு நான் குறிப்பிட விரும்புவது அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தை செயல்படுத்த முடிய வில்லை என்பதுதான்.

மாவோ தலைமையிலான செஞ்சீனம் 1949ஆம் ஆண்டு திபெத் நாட்டை ஆக்கிர மித்தது. இன்று வரை திபெத் சீனாவின் ஒரு பகுதியாகத் தான் இருக்கிறது. 1960களில் இந்தியா வுடன் சீனாவுக்கு எல்லைச் சிக்கலை ஒட்டி போர் மூளும் நிலை வந்த பிறகு தான், சீனா இந்தியாவை தரகு முதலாளிய அரசு என வரையறுத்தது. அதற்கு முன்புவரை புரட்சிகர சனநாயக அரசு எனக் கூறியது.

  பாகிஸ்தானை தரகு முதலாளிய அரசு என்று ஏன் சீனா அழைக்கிறது ஏன் அவ்வாறு சீனா அழைக்கவில்லை?

1970களின் தொடக்கத்தில் இலங்கையிலேயே சிங்கள இடதுசாரி ஜே.வி.பி யினர் புரட்சியில் ஈடுபட்ட போது, இந்தியாவும் சீனாவும் இணைந்து தானே அவர்களை ஒடுக்கின. அப்போது செஞ் சீனம் மாவோவின் தலைமையில்தான் இயங்கியது.

ஈழத்தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவழிப்புப் போருக்கு ஆதரவாக கியூபா, நிகரகுவா உள்ளிட்ட இலத்தீன் அமெ ரிக்க ஆல்பா கூட்டமைப்பு நாடுகள் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தன.

இவ்வாறு வரலாறு நெடு கிலும், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற இலட் சியத்தை நினைவில் கொள் ளாமல் ஒவ்வொரு பாட்டாளி வர்க்க அரசும் தனது நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டே செயல்பட்டு வரும் நிலையில், பாட்டாளி வர்க்க சர்வத்தேசியக் கோட்பாடு நடைமுறைச் சாத்தியமானது தானா? பாட்டாளி வர்க்க சர்வத்தேசியத்தை காக்கத் தமது சொந்த நாட்டு மக்களை நாம் காவுக் கொடுக்கத் தான் வேண்டுமா?” என்று பேசினார்.

பாட்டாளி வர்க்க சர்வத் தேசியம் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். ஆனால் அதை உடனடியாக செயல் படுத்த முடியாது. உலகெங்கும் இறையாண்மையுள்ள தேச அரசுகள் உருவாகி, அவற்றில் கணிசமான நாடுகள் சோசலிசப் பாதைக்கு வரும்போதே அது நடை முறையாகும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என த.தே.பொ.க. கருதுகிறது என்று தோழர் பெ.ம எடுத்துக் காட்டினார்.

தோழர் பெ.ம.வின் பேச்சை உள்வாங்கிய ரான் ரைடனவர், “இச்சிக்கல் குறித்து முழு விவாதத்தில் ஈடுபடுமளவுக்கு நான் அணியமாகவில்லை. இது பற்றி சிந்திக்கிறேன். ஆனால், கியூபா, நிகரகுவா உள்ளிட்ட ஆல்பா நாடுகள் ஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது துரதிர்ஷ்ட மானதுதான். போராட்டங் களின் வழி வந்த இந்நாட்டு அரசத் தலைவர்களுக்கு, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்த பல செய்திகள் தெரிந் திருக்க வில்லை.

ஆல்பா நாடுகளின் இந்நிலைப்பாட்டை எதிர்த்து நான் எழுதிய கட்டுரைகள் அங்கு பலராலும் விமர்சிக்கப்பட்டன. அதன் பிறகு தான், பலரும் தமிழீழ விடுதலைப் போ ராட்டம் குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இவ் விவாதங்களைத் தமிழர்களும் தொடர்ந்து நடத்த வேண்டும். பேரினவாதத்திற்கு பலியா கியுள்ள சிங்களப் பாட்டாளி களுக்கும் மதம், இனம், மொழி சார்ந்த வெறி இருக்கத்தானே செய்கின்றன? அது தானே அவர்களை இயக்குகின்றது.

முதலில் பாட்டாளி வர்க்க சர்வத்தேசியம் தேவை என்ற உணர்வு பாட்டாளிகளுக்கு எழ வேண்டும். ஆட்சியில் உள்ள கம்யூனிச அரசுகள், உழைக்கும் மக்களை பாட்டாளி வர்க்க உணர்வுடன் நன்குப் பயிற்று விக்க வேண்டும். அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல் வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளில் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அங்கெல்லாம் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டையும், உணர்வையும் வளர்த்தெடுக்கும் பயிற்சிகள் ஏதுமில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏனைய முதலாளித்துவக் கட்சி களைப் போலவே, நாடாளு மன்றத்தில் பங்கேற்று சீரழிந்து கிடக்கின்றன. 1968இல் மாணவர்கள் தொடங்கிய புரட்சியை பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி காட்டிக் கொடுத்துத்தன் சொந்தப் பாட்டாளி மக்களுக்கு எதிராகப் பெரும் துரோகம் இழைத்தது. இவ்வாறு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளால் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் சாத்தியமாகுமா எனத் தெரிய வில்லை” என்றார்.

தோழர் ரான்ரைடனவருடன் மேலும் பல கேள்விகள் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டனர், அங்கிருந்த தோழர்கள். நிறைவில், புரட்சியாளர் பிடல் காஸ்த்ரோ கையொப்பமிட்ட - என்ற புத்த கத்தை த.தே.பொ.க.விற்கு அன்பளிப்பாக தோழர் பெ.மணியரசனிடம் வழங்கிய ரான் ரைடனவர், இக்கலந்துரையாடல் மிகவும் மகிழ்ச்சி தந்தது என உற்சாகத்துடன் கூறினார்!

Pin It