இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த 09.05.2013 அன்று வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, தேர்வின் முடிவு என்னவாக இருக்குமோ என பயந்து கொண்டு, ஆங்காங்கு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதை விடக்கொடுமை, நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த, பேருந்து நடத்துனரின் மகளான, சிந்துஜா என்பவர், 1200க்கு 1063 மதிப்பெண்கள் பெற்றும்கூட, தனக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காதே என்ற ஏக்கத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதே போன்று, கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக் கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா என்பவர், 929 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையிலும், மேற்படிப்புக்கு அது போதாது என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்பெல்லாம், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தான் விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருந்தது. இன்றைக்கு, உயர் மதிப்பெண்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும் புதியப் போக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வாண்டு பன்னி ரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் காரணமாக இதுவரை தமிழகமெங்கும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவை வெறும் எண்ணிக்கையல்ல, இளைய தலைமுறை யினரின் தன்னம்பிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறிகளும் ஆகும்.

பணம் படைத்தவர்களுக்கே வசதிகளும், வாய்ப்புகளும் கிடைக்குமாறு வடிவமைக்கப் பட்டுள்ள இன்றைய உலகமயப் பொருளியல் உலகில், மிகுந்த பொருளியல் அழுத்தத்துடன் வாழ்கின்ற அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சம் கொள்வதன் காரணமாக, பிள்ளை களை நல்ல கல்வி பெற்று, நிறைய பணம் சம் பாதிக்க வேண்டுமென விரும்புகின்றனர். மக்களி டம் முதலாளியத்தால் உருவாக்கப்பட்டுள்ள மிகை நுகர்வுக் கருத்தியல், இதை ஊக்குவித்து வளர்த்துக் கொண்டுள்ளது.

இதன் விளைவாக, தமது பிள்ளைகளின் கல்வி குறித்து எச்சரிக்கையுடன் செயல்படு வதாக நினைத்துக் கொண்டு, பிள்ளைகளை கல்வியின் பெயரால் பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் வாட்டி வதைக்கின்றனர்.

முன்பு சாராயம் விற்ற பலர், இன்றைக்கு கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றனர் என தமிழகத்தில் ஒரு வேடிக்கையான கூற்று அவ்வப்போது சொல்லப்படுவ துண்டு. உண்மையில், சாராயம் எப்படி உழைக்கும் மக்களை அடிமையாக வைத்திருக்கிறதோ, அதே போன்று தான் இன்றையக் கல்வி முறை உழைக்கின்ற அடிமை களை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.

முதலாளிய மேற்கத்திய நாடு களின் பாணியிலான மெக்கா லேக் கல்வி முறை, தனிமனித ஆற்றல், ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்துகின்ற கல்வி முறை யாக இல்லாமல், வெறும் சொல் வதைக் கேட்கும் ‘கிளிப் பிள் ளை’களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அறிவை ஈட்டவே கல்வி என்ற பொதுநிலையை மாற்றியமைத்த, உலகமயப் பொருளியல் சூழல், பணம் ஈட்டவே கல்வி என்ற நிலையை உருவாக்கியதோடு, கல்வியையே பெரும் வணிக மாகவும் மாற்றியமைத்தது.

மதிப்பெண்கள் ஈட்டுவதே இலக்கென வடிவமைக்கப்பட் டுள்ள இந்த ‘நவீன’க் கல்வி முறை, இயந்திரங்களை உருவாக்கும் பொறியியலாளர்களைவிட, இயந்திரங்களை இயக்கத் தெரிந்த பணியாளர்களைத் தான் அதிகம் உருவாக்கியது. உலகமயப் பன் னாட்டு பெரு நிறுவனங்களுக் கும், இந்திய முதலாளிய நிறு வனங்களுக்கும் அது தான் தேவையாகவும் உள்ளது. பாடத் திட்டங்களும் அவ்வாறே வடிவ மைக்கப்படுகின்றன.

பொதுத்தேர்வுகள் தான் தமது எதிர்காலத்தையே தீர்மானிக் கின்றன என்ற உளவியலை உரு வாக்கும் ஊடகங்கள், பொதுத் தேர்வுக் குறிப்புகள் வழங்குகி றோம் என்ற பெயரில், தமது இலாபத்திற்காக புதிய சந்தை யையே உருவாக்குகின்றனர்.

இன்னொருபுறத்தில், இக் கல்விமுறை உருவாக்குகின்ற ‘பணியாளர்கள்’, சுயசிந்தனை, தன்னம்பிக்கை போன்ற நல் லொழுக்கங்களுடன் உருவா காமல், நுகர்வியப் பண்பாட்டிற் கும், யாரை மிதித்தாவது முன்னே றிச் செல் என்ற மன நிலையுடன் வாழுகின்ற தன்னல வெறியுட னும் தான் வளர்த்தெடுக்கப் படுகின்றனர். மேலும், தம் தாய் மொழியையே வெறுக்கும் மன நிலைக்கும், ஆங்கில வழிக் கல்வி முறை மாணவர்களை இட்டுச் செல்கிறது. இதையே தான் பெற்றோர்களும் விரும்புகின் றனர். இதன் காரணமாகத்தான், தம் சொந்த பிள்ளையின் மீது கல்வி நிறுவனங்கள் கல்வியின் பெயரால் ஆதிக்கம் செலுத்து வதைக் கூட, பெற்றோர்கள் பெரிதும் வரவேற்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்தப் பிள்ளையின் மதிப் பெண்ணோடு தனது பிள்ளை யின் மதிப்பெண்ணை ஒப்பிட்டு சுட்டிக்காட்டி, விரட்டிக் கொண்டே இருக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களே அதிகம். அதற்கென +2வில் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் மதிப் பெண் பட்டறைகளில் தமது பிள்ளைகளை விடும் பெற்றோ ரும் ஏராளம். இது மாணவர்கள் எந்நேரமும் ஒருவகை மன அழுத்தத்திலேயே வைத்திருக்கிறது.

மாணவர்களிடம் பொதிந் துள்ள பன்முக ஆற்றல்களைக் கண்டறிந்து வளர்ப்பதை விட மதிப்பெண் என்ற ஒற்றை இலக்கு நோக்கி விரட்டுவதே இன்றைய பள்ளிமுறை. இது தட்டையான மனிதர்களை, தன்னலவெறி யர்களை மட்டுமே உருவாக்கும்.

இது போன்ற நடவடிக்கை களால், கல்வி தவிர்த்த தனித் திறன்களை வளர்த்துக் கொள் ளும் உரிமை, விளையாடும் உரிமை போன்றவை மறுக்கப் பட்டு, அவற்றை ஈகம் செய்து தான் மதிப்பெண் ஈட்ட வேண்டும் என்ற நிலையில் படிக்கும் மாணவர்கள், தேர்ச்சியில் ஈடு பாடு கொள்வதோடு மட்டு மின்றி அதிக வெறியும் கொள் கின்றனர். இது தான் அவர்களை, தேர்வில் தோல்வியோ, மதிப் பெண் குறைவோ ஏற்படும் போது தற்கொலைச் செய்து கொள் ளுகின்ற மனநிலைக்கு எளிதில் தள்ளிச் செல்கிறது.

அதனால் தான், ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் நாமக்கல் மாவட்டம், மாணவர் தற்கொலையிலும் முதலிடத்தில் இருக்கிறது. சென்னையில் இவ்வாண்டு, தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே, மாணவர் தற் கொலைகள் வெறும் தன்னம்பிக்கையற்ற செயல்களாக மட்டும் பார்க்க வேண்டியவையல்ல. கல்வி முறையும், சமூகமும் செய்யும் கொலைகளாகவே அவை பார்க் கப்பட வேண்டும்.

ஆங்கில வழிக் கல்விமுறை, தமிழக மாணவர்களிடம் தோற்றுவித்துள்ள அயன்மை, அவர்கள் தமது பாடத்திட்டத்திலிருந்து பெற்ற முழு அறிவையும், முழுவதுமாக வெளிப்படுத்த அனுமதிப்ப தில்லை என்பதையும் நாம் இவ் விடத்தில் கவனிக்க வேண்டும். தமிழக அரசு, ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளை திறப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இவ்விடத்தில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தனி மனித அறிவு, தனித்திறன், பன்முக ஆளுமை போன்றவற்றை மேம்படுத்தும் வகையிலான கல்வி முறை, தாய் மொழியில் வழங்கப் பட்டால், இது போன்ற தற் கொலைகளை எளிதில் தடுக்க முடியும். மதிப்பெண்களைத் தாண்டி, நல்லொழுக்கமும், மாணவர்களின் ஆற்றலுமே அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும்.

Pin It