தமிழர் வாழ்வு, தமிழர் பண்பாடு, தமிழரின் வளர்ச்சி என தமிழ் சார்ந்த அனைத்தையும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கி அழித்தொழிப்பதுதான் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசின் முழுமுதற் கொள்கை என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை அரசியல் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாடுகளையும், முடிவுகளையும் எடுத்துவந்த காங்கிரசு மெய்ப்பிக்கப்பட்டு அரசு, தற்போது கையில் எடுத்திருப்பது நாட்டின் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றான குடிமைப் பணித் தேர்வு.(சிவில் சர்வீஸ் தேர்வு)

தேர்வு முறையில் மாற்றங்கள்

“தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, குடிமைப் பணித் தேர்வுகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், பேராசிரியருமான அருண் எஸ். நிகாவேகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நடப்பாண்டில் இருந்தே புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன” என்று போகிறபோக்கில் ஒரு செய்திக் குறிப்பை வெளி யிட்டு இருக்கிறது குடிமைப் பணித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

குடிமைப் பணித் தேர்வுகள் முதல்கட்டத் தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப் படுகின் றன. புதிய மாற்றங்களின் படி, முதல்கட்டத் தேர்வில் விருப்பப் பாடங்களைக் குறைத்து, பொது அறிவு மற்றும் பொதுப் பாடங் களுக்கு முக்கியத்துவம் தரப்படு கிறது.

முதல்கட்டத் தேர்வு எழுது வோரில் குறைந்த பட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றி ருந்தால் மட்டுமே, அந்தப் பிராந் திய மொழியில் முக்கியத் தேர்வை எழுத முடியும். ஆனால், இந்த விதிமுறை இந்தி அல்லது ஆங்கி லத்துக்குப் பொருந்தாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே போல, பட்டப்படிப்பில் படித்த மொழியில் மட்டுமே முக்கியத் தேர்வை எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதோடு, பட்டப் படிப்பில் தமிழ் இலக் கியம் படித்திருந்தால் மட்டுமே, முக்கியத் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாட மாக எடுத்துப் படிக்க முடியும். இப்படியாக, குடிமைப் பணித் தேர்வு முறை மாற்றங்கள், தமிழ் மட்டு மல் லாமல், இந்தியாவின் பிராந்திய மொழிகள் அனைத் திற்கும் எதிரானதாக இருக்கிறது.

விரைவில் தமிழ் நீக்கப்படும்

பட்டப் படிப்பில் தமிழ் வழி யில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே முக்கியத் தேர்வை எழுத முடியும். இதனால் 25 பேர் என்ற குறைந்த பட்ச எண்ணிக்கையை ஒரு போதும் அடையவே முடியாது. எனவே ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் தமிழ் மாணவர்க ளுக்கு ஏற்படும்.

ஒன்றிரண்டு வருடங்களை இப்படியாகக் கடத்திவிட்டு, திடீரென ‘தமிழ் மொழியில் தேர்வெழுத மாண வர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே விருப்பப்பாட பட்டி யலில் இருந்து தமிழ் நீக்கப்படு கிறது’ என மத்திய அரசு அறிவிப் பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் இலக்கியமும் சிவில் சர்வீஸ் தேர்வும்

அதேபோல, தமிழ் மொழியில் தேர்வெழுதும் பெரும் பாலா னோர் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்தே எழுதுகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கும் சமூக பொறுப்புடைமைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. காரணம், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பின்னாட்களில் சமூக பொறுப் புணர்வு மிக்க அதிகாரி களாக வலம் வருவதைப் பார்க்க முடி கிறது. உதாரணமாக, தமிழ் நாட்டில் தற்போது அரசுத் துறைச் செயலாளர்களாகப் பணியில் இருக்கும் இறையன்பு, அமுதா, உதயச்சந்திரன், கூலித் தொழிலாளியின் மகனாக இருந் தாலும், தமிழ் வழியில் தேர் வெழுதி, வெற்றி பெற்று, தற் போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் நந்த குமார் ஆகியோர் தமிழ் இலக்கி யத்தைத் தெரிவு செய்தவர்கள்.

தற்போது பீகார் மாநிலத்தில் பணியில் இருக்கும் ராஜராஜ சோழன் என்ற அதிகாரி, தமிழ் வழியில் தேர்வெழுதி, பொது அறிவுப் பாடத்தில் பெற்ற 440 என்ற மதிப்பெண்ணை, அதற்குப் பிறகு இந்தியாவிலேயே யாரா லும் (இந்தியில் தேர்வெழுதும் எந்தக் கொம்பனாலும்) நெருங்கக் கூட முடியவில்லை. சீனிவாசன் என்பவர் தமிழில் தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே தரவரி சைப் பட்டியலில் 140க்குள்ளாக வந்து, தற்போது ஹரியானாவில் பணியில் இருக்கிறார். இவர் களைப் போலவே, மகாராஷ் டிராவில் சேவியர் ஐ.பி.எஸ்., தினகரன் ஐ.ஆர்.எஸ்., பஞ்சாபில் செழியன் ஐ.பி.எஸ்., அசாமில் ஹபீப் ஐ.பி.எஸ்., பீகாரில் செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., ஒடிசா வில் பூவேந்திரன் ஐ.ஏ.எஸ் என தமிழ் வழியிலும், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எழுதியும் இந்தியா முழுக்க எண்ணற்ற அதிகாரிகள் கொடிநாட்டி வருகி றார்கள். இதையெல்லாம் ஒடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புதிய விதிமுறைகளை, மாநில மொழிகளுக்கெதிராக வடிவ மைத்திருக்கிறது இந்திய அரசு.

தமிழ்மாணவர்களுக்கு இரண்டாவது பேரிடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வு (இந்த ஆண்டிலிருந்து மாநில குடிமைப் பணித் தேர்வு எனப் பெயர் மாற்றப்படுகிறது)க் கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் மொழி தவிர பெரிதாக வேறு எந்த வேறுபாடும் இல்லை.

ஆனால், டி.என்.பி. எஸ்.சியின் குரூப் 1 தேர்வை தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சராச ரியாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதும் அதே நேரத்தில், யு.பி. எஸ்.சியின் சிவில் சர்வீஸ் தேர் வை சுமார் 25 ஆயிரம் பேர் மட் டுமே எழுதுகின்றனர். காரணம், சிவில் சர்வீஸ் முதல்கட்டத் தேர்வை இந்தி அல்லது ஆங்கி லத்தில் மட்டுமே எழுத முடியும் என்பதால்தான். இப்போது முக்கியத் தேர்விலும் இந்தித் திணிப்பு அரங்கேறிவிட்டதால், இனி இந்த 25 ஆயிரம் என்ற எண்ணிக்கை கட்டெறும்பாய்த் தேயும்.

அனைத்திலும் விதிமீறல்

விதிமுறை மாற்ற முடிவை எடுத்ததில் அரசியலமைப்புச் சட்டம், சிறந்த ஆட்சிக்கான அம்சங்கள், பகுத்தறிந்து பார்ப் பது என அனைத்தையும் மீறி இருக்கிறது மத்திய அரசு. நடுவண் அரசின் முடிவுகளில் அனைத்து மாநில மொழி களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆட்சி மொழி ஆணையத்தின் பரிந்துரை மீறப்பட்டிருக்கிறது. பொறுப் புடைமை (accountabi lity), வெளிப்படைத் தன்மை (trans parency), சமூக சமத்துவம் (social equality), ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive growth), அனைவரின் பங்களிப்பு (partici pation) என சிறந்த ஆட்சிக்கான அம்சங்களில் எதுவும் பின் பற்றப்படவில்லை.

அதேபோல, புதிய விதிகளில், 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கை குறித்து in the interest of maintai ning standard and quality of the examination என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 25 பேருக்கு மேல் தேர்வு எழுதி னால்தான் தேர்வின் தரம் பேணப்படும் என்பது எந்த வகை யிலும் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லை.

இந்திக்கு ஆதரவாய் வடக்கு

குடிமைப் பணித் தேர்வின் பழைய விதிமுறைகளின் படி, முதல் கட்டத் தேர்வில் ஆங் கிலம் என்பது வெறும் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்கும். அதில் பெறும் மதிப்பெண் முக்கி யத் தேர்வுக்கு எடுத்துக் கொள் ளப்பட மாட்டாது. ஆனால், புதிய விதிமுறைப்படி முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலத்தில் பெறும் மதிப்பெண் முக்கியத் தேர்விலும் பரிசீலனைக்கு எடுத் துக் கொள்ளப்படும். இந்த ஒரு விதிமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பிரித்விராஜ் சவுகான். ஆனால் தமிழகம் மட்டுமல்லாமல், பாதிக்கப் படவுள்ள மற்ற மாநில மொழி சார்பாகவும் இது வரை வலுவான எதிர்ப்புக் குரல் எழவில்லை. இதன் மூலம் வடக் கில் கோலோச்சும் கட்சிகள், மாநிலமொழியைக் காட்டிலும் இந்திக்கே வக்காலத்து வாங்கு கின்றன என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதி இல்லை

கடந்த 2006ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக யு.பி.எஸ்.சியின் வாரிய உறுப்பி னராக அங்கம் வகித்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி. அவருக்குப் பிறகு அந்தப் பதவி காலியாக வைக் கப்பட்டு இருப்பதால், இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பக்கூட வாரியத்திற்குள் வாய்ப்பில்லை.

தமிழக அரசின் மவுனம்

குடிமைப் பணியைப் பொறுத் தவரை, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகள் அகில இந்திய சேவை யாகவும், ஐ.ஆர்.எஸ் பணிகள் மத்திய சேவையாகவும் வரைய றுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அகில இந்திய சேவையில் செய் யப்படும் மாற்றங்கள் குறித்து மாநில அரசுகளிடம் எழுத்து மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன் படி, இந்த சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறை மாற்றம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய அரசின் விருப்பப்படி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தது தமிழக அரசு. அதேபோல, IIT-JE E தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, குஜராத்தியிலும் எழுதலாம் என விதிமுறை தளர்த்தப்பட்ட போது, தமிழில் எழுதும் வாய்ப்பு குறித்து தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, குடி மைப் பணித் தேர்வு முறை மாற்றத்திற்கும் தமிழக அரசு ஓசையில்லாமல் ஒப்புதல் அளித்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

நாசகார காங்கிரசும் நாதாரி சாமிகளும்

குடிமைப் பணி தேர்வு விதி முறை மாற்றம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்தார் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் நாராயணசாமி. அதில் “காலத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது” என சுருக்கமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. காங்கிரசுக் கட்சி தேசிய இன மொழிகளை ஒடுக்கும் கட்சி; வெறுப்பு அரசியலில் தோய்ந் துள்ள கட்சி என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

Pin It