கடந்த இருபது ஆண்டுகளில் தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் உரை நிகழ்த்தாத மாவீரர் நாள் 26.11.2009. தான். தமிழீழ மண்ணில் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்படாத மாவீரர் நாளும் இதுதான். உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. நிலவும் நெருக்கடியின் ஆழத்தை இது எடுத்துக் கூறியது.

ஆயினும் உலகெங்கும் பரவிக்கிடக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும். தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களும் பெரும் எண்ணிக்கையில் உணர்ச்சிப் பெருக்கோடு இந்த மாவீரர் நாளைக் கொண்டாடினார்கள். நிகழ்ந்துவிட்ட மனிதப் பேரவலத்தை எண்ணி விம்மி, வெடித்தாலும் அடுத்து நடக்க வேண்டியது என்ன, அதில் தமது பணி என்ன என்பதை ஒவ்வொருவரும் திட்டமிடும் செயலூக்க நாளாகவும் இம் மாவீரர் நாள் அமைந்தது.
 
தலைவர் பிரபாகரன் நேரில் தோன்றி உரை நிகழ்த்த முடியாத சூழல் நிலவுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இரண்டு மாவீரர் நாள் உரைகள் இணையங்களில் உலா வந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளிவந்தது. இதில் எந்தத் தனிப்பட்டப் பொறுப்பாளர் பெயரும் இடம்பெறவில்லை. எழுத்து வடிவில் மட்டுமே வெளியானது.
 
நிகழ்ந்து விட்டப் பேரழிவிற்கு இந்தியா எந்த அளவுக்குப் பொறுப்பு என்பதை இவ்வறிக்கை தெளிவுபடப் பேசவில்லை என்றாலும், தமிழீழ தேசியத்தலைவர் வே. பிரபாகரன் தலைமையில், மாவீரர்கள் காட்டிய பாதையில் தமிழீழத் தனியரசு நிறுவுவதற்கான தங்களது போராட்டம் தொடரும் என்று உறுதிபடக்கூறியது.
 
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் என்பவர் பெயரால் ஒலிவடிவிலும், வரி வடிவிலும் இன்னொரு மாவீரர் நாள் உரை வந்தது. கூர்ந்து கவனிப்பவர்கள் இக்குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே இது செம்மாந்த புலிகளின் குரல் அல்ல என்பதைப் புரிந்துகொண்டனர்.

காட்டுப்பகுதிக்குள் இருந்து உரையாற்றுவதாக ராம் சொல்லிக் கொண்டார் . அதனை உண்மையென நம்பவைக்கும் நோக்கில் அவர் பேசும்போது ஒரு குருவி கத்துவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீரான இடைவெளியில், ஒரே விதமாகவும், ஒரே அளவிலும் அவ்வொலி கேட்டதுதான் இவர்களது ‘திறமைக் குறைவை’ வெளிக்காட்டி விட்டது.

ஒருவேளை ராம் சிங்கள இராμஷீத்தின் பிடியில் இருக்கக்கூடும். சிங்கள அரசின் வரைவை உரை என்ற பெயரில் அவர் படித்திருக்கக்கூடும். பிரபாகரன் மரணம் அடைந்தார் என்றும், கடைசி நேரத்தில் தன்னிடம் தலைமையை ஒப்படைத்துச் சென்றார் என்றும் ராம் கூறிக்கொண்டார். அவரது பேச்சில் ஓரிடத்தில் கூட இராசபட்சே பற்றிய குறிப்பு இல்லை.

இவையெல்லாம் ‘மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட பாட்டு’ என்பதை அம்பலப்படுத்தி விட்டன. முகாம் மக்களின் நல்வாழ்வுக்கு பணம் அனுப்புங்கள் என்று புலம் பெயர் தமிழர் களிடம் வேண்டுகோள் வைத்தார். வீரர் நாள் உரையில் எந்தக் காலத்திலும் இவ்வாறு பிரபாகரன் வேண்டுகோள் விட்டதில்லை. மக்கள் தாங்களாகவே வாரி வழங்கினர். புலிகள் அவற்றைத் திரட்டி அமைப்பில் சேர்த்தனர்.

ராம் பேச்சைக் கவனித்தால், தமிழீழச்சிக்கலை இந்திய - சிங்கள உளவு அமைப்புகள் எவ்வாறு திரிக்க முயல்கின்றன என்பது புரியும். அவர் ஈழத் தமிழர் களை “சிறுபான்மை இனத்தினர் “ என்று குறிப்பிட்டார். தமிழீழச் சிக்கலை சிறுபான்மை இனச்சிக்கலாகக் காட்டுகிறார். முள்வேலி முகாமுக்குள் முடக்கப் பட்டிருக்கும் தமிழர்களின் அவலங்களை எடுத்துக்கூறி, இதனைத்தீர்க்க சிங்கள அரசு முன் வந்தால் “எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் அணியமாக இருப்பதாக” அறிவித்தார்.

இந்திய அரசு எப்போதும் ஈழத் தமிழர்களை இனச் சிறுபான்மையினர் (Ethnic Minorities) என்றே வரையறுத்து வருகிறது. இலங்கையின் தமிழ் முஸ்லீம்களையும், வேறு சில மதமக்களையும், இவ்வாறே அழைக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்னமேயே ‘பிரபாகரனுக்கு பிந்திய நிலைமைகள் (Post .Pirabakaran scenerios) என்று பேசிய இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘இந்து’ ராம், எம்.கே.நாராயணன் போன்றவர்கள் தமிழீழச்சிக்கலை ‘இனச்சிறுபான்மையினர் சிக்கல்’ என்றே விவாதித்தனர். கடந்த 4.12.2009 அன்று ஈழச்சிக்கல் பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் அவ்வாறே கூறினார். இன்று இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர் தலில் போட்டியிடும் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் ‘தமிழ்ச் சிறுபான்மையினர்’ (Tamil Minorities) என்றே பேசுகிறார்.
 
இலங்கைத் தீவில் எண்ணிக்கை அளவில் தமிழீழ மக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள் என்பது உண்மையே. தனி அரசு நடத்தி, தனித்தன்மையோடு வாழ்ந்த ஈழத்தமிழினத்தை, அதனுடன் தொடர்பற்ற சிங்கள இனத்துடன் தன்னுடைய நிர்வாக வசதிக்காக வெள்ளை ஏகாதிபத்தியம் ஒரே ஆட்சியில் கட்டிப்போட்டதால் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டது தமிழினம். ஆனால் அதைவைத்து ஈழத்தமிழர் பிரச்சினை என்பது இனச்சிறுபான்மையினர் சிக்கல் என்று கருதிவிடக்கூடாது.
 
மேலோட்டமாகப் பார்த்தால் இதன் ஆழம் புரியாது. உலகச் சட்டங்களின் பின்னணியில் புரிந்து கொண்டால்தான் இனச்சிறுபான்மையினர் என்று இவர்கள் தமிழர்களைச் சுட்டுவதன் உள் நோக்கம் தெளிவாகும்.
 
Ethnic Community என்றால் குடிவழி இன மக்களைக் குறிக்கும். சில மரபுச் தொடர்ச்சியைக் கொண்ட ஒரு மக்கள் சமூகத்தைத்தான் ‘குடிவழி இனம்’ என்று அழைப்பர். குடிவழி இனமும் தேசிய இனமும் ஒன்றல்ல. தேசிய இனம் என்பது வரலாற்று வளர்ச்சியின் விளைவு. பொதுமொழி, வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட வரலாற்று தாயகம், தனித்தப் பண்பாடு, தனித்த வரலாறு கொண்டு தனி அரசு அமைத்து நிலைத்து வாழும் அல்லது வாழ்ந்த சமூகம்தான் தேசிய இனம் ஆகும்.

தேசிய இனத்திற்குதான் தன்னுரிமை (Right to Self. determination) உண்டு என உலகச் சட்டங்கள் கூறுகின்றன. இது தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்ளும் உரிமை. ஓர் ஆட்சிப்பகுதியில் இத்தேசிய இனம் எண்ணிக்கையில் சிறுபான்மையா அல்லது பெரும்பான்மையா என்ற கேள்வியே எழாது. சிறுபான்மையோ பெரும்பான்மையோ அது தனித்த தேசிய இனம் என்றால் தனக்கான தனி அரசை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு.

மாறாக குடிவழி இனம் என்றோ சிறுபான்மை மக்கள் என்றோ குறிக்கப்பட்டால் அம்மக்கள் அரசுரிமைக்குப் பொருத்தமானவர்கள் அல்லர். அதிகாரப்பகிர்வு, பண்பாட்டு அங்கீகாரம் ஆகியவற்றை மட்டுமே அம்மக்கள் கோர முடியும். எடுத்துக்காட்டாக வட அமெரிக்காவில் (அதாவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில்) கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குடிவழி மரபுத் தொடர்ச்சி உள்ள மக்கள். இவர்கள் அமெரிக்க நாடு முழுவதும் பரவி வாழ்கிறார்கள். ஆயினும் இவர்களுக்கென்று வரலாற்று வழிவந்த தனித்த தாயகம் ஏதும் வட அமெரிக்காவுக்குள் இல்லை.

எனவே இம்மக்களுக்கு தேசியத் தன்னுரிமை கிடையாது. தனி அரசுரிமை கோர முடியாது. தங்களது பண்பாட்டுக்கு அங்கீகாரம், ஆட்சி- வேலை- கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றில் தங்களுக்கான பங்கு அல்லது ஒதுக்கீடு ஆகியவற்றை மட்டுமே கோரலாம்.

இவ்வாறான குடிவழி இனச் சிறுபான்மையினராக ஈழத் தமிழர்களைக் குறிக்கும் சூழ்ச்சியே அரங்கேறி வருகிறது. ‘இலங்கைத் தீவில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள். இங்கு வாழும் மக்கள் அனைவரும் இலங்கையர் தான். நமக்குள் மொழி, மத வேறுபாடுகள் இருந்தாலும் நாம் ஒரு மக்கள்தாம்’ என்று சிங்கள இன வெறியன் ஃபாசிஸ்ட் இராசபட்சே கூறுவதன் உள்நோக்கம் இதுதான். அதற்கேற்றாற்போல் தமிழீழத் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றி அதனைக் கலப்பினத் தாயகமாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழீழ மண்ணில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் ஆகியவற்றை அழிப்பது, வருங்காலத் தலைமுறையினருக்கு வரலாற்றைத் திரித்துக்கூறி “மகாவம்ச” இருட்டுக்குள் அழைத்துச் செல்வது என்ற இனப் பண்பாட்டு அழிப்பை (Structural Genocide) நடத்தி வருகிறது இராசபட்சே அரசு. இன்றைய உலகச் சட்டங்கள் குடிவழி இனச் சிறுபான்மையினரை ‘ஒருமக்கள்’ (A People) என அதாவது ஒரு தேசிய இனம் என்பதாக ஏற்றுக்கொள்வதில்லை.

மாவீரர் நாள் அன்று ராம் வழியாக ஈழத் தமிழர்களை ‘சிறுபான்மை மக்கள்’ என்று குறித்ததன் மூலம் விடுதலைப் புலிகளே தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு விட்டார்கள். “விட்டுக்கொடுப்புகளுக்கு” தயாராகி விட்டார்கள் என்று காட்டுவதற்கு இந்திய - சிங்கள உளவு அமைப்புகள் முயல்கின்றன.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தங்கள் நிலைபாட்டிற்கு இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன. 2010 சனவரியில் நடக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழர் கட்சிகளின் சார்பில் என்ன நிலை எடுப்பது, யாரை ஆதரிப்பது என்பன குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இக்கட்சிகள் ஒருமித்த நிலை எடுக்க முடியாமலும் போகலாம். சிவாஜிலிங்கம் தனி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் தமிழீழத் தனியரசேத் தீர்வு என வலியுறுத்துகிறார்.

மகிந்த இராசபட்சே- சரத்பொன்சேகா போட்டி உறுதியான ஒன்று. சிங்கள இடதுசாரிகள் சார்பில் விக்ரமபாகு கருணரத்னே நிறுத்தப்படுகிறார். இச்சூழலில் இராசபட்சே, பொன்சேகா இருவரில் ஒருவர் தான் வெற்றி பெற வாய்ப்புண்டு. இருவரில் யார் வென்றாலும் அவர் பக்கம் இருந்துகொண்டு காய் நகர்த்துவதையே இந்தியா விரும்பும்.

அதே நேரம் இந்த இருவரில் யாருக்கும் தமிழர் வாக்கு கிடைக்காது. ஒரு வேளை தமிழர்கள் வாக்களிப்பிலேயே கலந்து கொள்ளாமல் தேர்தலைப் புறக்கணித்து விட்டால் உலக அரங்கில் தமிழீழப் பிரச்சினைக்குப் புத்துயிர்ப்பு கிடைத்துவிடும். ஏனெனில் 2009, ஆகஸ்டில் நடந்த யாழ்ப்பாண நகர்மன்றத் தேர்தலில் 20% வாக்குகளே பதிவாயின. 80% தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். புலிகள் துப்பாக்கி முனையில் மக்களைத் தடுத்து விட்டனர் என்று இப்போது பொய் சொல்ல முடியாது. இதே நிலை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வந்துவிடக் கூடாது என இந்தியா அஞ்சுகிறது.

தமிழர்கள் கணிசமாக வாக்களிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இலங்கையின் தேர்தல் அரசியலுக்குத் திரும்பி விட்டார்கள் என்று காட்ட வேண்டும் என இந்திய ஏகாதிபத்தியம் விரும்புகிறது. தேர்தல் அறிக்கையை அணியப்படுத்தும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதன் சில கூறுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. தேசியத் தன்னுரிமை (National Self determination) என்ற கோட்பாட்டையே தனி அரசு அமைக்கும் உரிமை என்பதிலிருந்து பிரித்து, உயிரற்றதாக திரித்து முன் வைக்கும் முயற்சிகள் அவ்வறிக்கையில் தெரிகின்றன.

மாமேதை லெனின் காலத்திலிருந்தே தன்னுரிமை என்பதை, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ((Right to self - determination with the right to Seceede) என்று தெளிவுபடுத்திச் சொல்வது வழமையாக இருக்கின்றது. தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) என்பதிலேயே தனி அரசு அமைக்கும் உரிமையும் உண்டு என்றாலும், இது திரிபு அடைந்துவிடாமல் இருக்க மேற்கொள்ளும் முயற்சியே பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை என்று விரிவாகச் சொல்வது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசைப் பார்த்து “தமிழர்களின் தேசியத் தன்னுரிமையை ஏற்றுக்கொண்டால் பிரிந்துபோகும் கோரிக்கை எழாது. இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு நேராமலேயே தன்னுரிமையை ஏற்கலாம். இலங்கையின் அரசமைப்பு உள் தன்னுரிமையை (Internal Self- determination) உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்பட்டால் இதனைச் சாதிக்கலாம் “ என்று கூறுகின்றனர்.

புகழ்பெற்ற உலகச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே ஆண்டன் பாலசிங்கம் சொன்னதுதான் உள் தன்னுரிமை (Internal Self- determination) என்று கூட்டமைப்பினர் வாதிடலாம். ஆனால் எந்த ஒரு முன்மொழிவும் அல்லது நிலைப்பாடும் அது முன் வைக்கப்படும் சூழலைப் பொருத்தே அமைகிறது. அன்று சிங்களப் படையைத் தோற்கடித்து, தமிழீழத்தின் 80 விழுக்காட்டுப் பரப்பை மீட்டு, நிழல் அரசுக் கட்டமைப்பை நிறுவிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் உலக சமூகத்தின் முன் அமைதி முயற்சிக்கான தமது இணக்கத்தைக் காட்ட முன்வைக்கப்பட்டது தான் உள்தன்னுரிமை என்ற நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தையில் உரிய பயனை அளிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் அதனை மீண்டும் பொதுவான முறையில் வலியுறுத்திச் சொல்வதை புலிகள் கைவிட்டனர்.

மாறாக 2003 அக்டோபர் 31 அன்று இடைக்கால தன்னாட்சி ஆணையம் (Internal Sel f- Governing Authority) என்ற குறிப்பான மாற்றுத் திட்டத்தை முன் வைத்தனர் . இது முன் வைக்கப்பட்டதும் குறிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான். இதனைத் ‘தமிழர் கண்ணோட்டம்’ தெளிவுப்படுத்திக் கூறியது.

சிங்கள அரசோடு படை வலுவில் சமநிலை, இலங்கை தீவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பெரும் பகுதியில் நிர்வாகம் நடத்தி வரும் மெ.நிலை, தமிழீழ மக்களின் பேராதரவு என்ற புறநிலை - போன்ற சாதகமான கூறுகளில் ஊன்றி நின்று விடுதலைப் புலிகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.

சிங்கள அரசியலில் தீவிர இனவெறி. ச.திக. ‍ சந்திரிகா ஆகியோரிடையே இனவெறியில் ஏற்பட்டுவரும் இணக்கப்போக்கு, ஈழத்தில் தலையெடுக்கும் இசுலாமியப் பிரச்சினை, நேரடியாக. படைவகையி. தலையிடுவது என்ற இந்திய அரசின் புதிய அணுகு முறை, அமெரிக்க வல்லரசின் அச்சுறுத்தல்கள் ஆகிய பாதகமான நிலைமைகளை எதி. இந்தியாவும், சீனாவும் மட்டுமன்று, உலக வல்லரசுகளெல்லாம் ஒன்றுகூடி படை நடத்தி தமிழீழத்தில் பேரழிவைத் திணித்தன. அதன் எதிர்வினையாக இன்று தமிழினத்தின் எதிர்ப்பும் உலகு தழுவியதாக மாறி வருகிறது. புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பேரெழுச்சி கொண்டு தமிழீழ விடுதலையின் இன்றியமையாமையை உணர்த்தி வருகின்றனர். இப்போராட்டங்களில் இளையோர் ஈடுபாடு தீர்மானகரமானதாக வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போராட்டங்கள், இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை அந்தந்த நாட்டு அரசுகளை அசைக்கத் கொ.ளு. வகையில் தமிழீழ தொடங்கி உள்ளன. விடுதலைப்புலிகள் இடைக்கால நிர்வாகம் குறித்த தங்களது முன்மொழிவுகளை முன் வைத்துள்ளனர். . . (காண்க: இடைக்கால நிர்வாகம்: விடுதலைப் புலிகளின்  முன்மொழிவு - கி. வெங்கட்ராமன் - தமிழர் கண்ணோட்டம் , நவ- 2003).

இந்த முன் மொழிவிலும் மக்கள் ஏற்பிசைவு பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - அதாவது தனி அரசு அமைக்கும் முடிவை- வலியுறுத்திக் கொண்டேதான் இடைக்கால ஏற்பாடாக இந்தத் திட்டத்தை முன் மொழிந்தனர் விடுதலைப்புலிகள்.

வலுவான நிலையில் இருந்து கொண்டு புலிகள் பேசியதை, இன்று மூச்சுமுட்ட முடக்கப்பட்டச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்களும் பேசுவது, அதுவும் ஈழத்தமிழர் சிக்கலைத் தீர்ப்பதற்கான இறுதியான சட்ட ஏற்பாடாகச் சொல்வது கழுத்தறுப்பு வேலையே தவிர வேறன்று.தோல்வி மனப்பான்மையைத் தமிழர்கள் மீது திணித்து, இனிமேல் போராட முடியாது என்ற மனநிலையை உருவாக்கி, சிங்களர்களுக்குக் கீழ் இரண்டாந்தரக் குடிகளாகத் தமிழர்களைத் தாழ்த்தும் சூது இதில் உள்ளது. உண்மையில் அவநம்பிக்கை கொள்ள ஏதுமில்லை. நிரந்தரமான தோல்விக்குள் தமிழினம் புதையுண்டு போய்விடவில்லை. வரலாறு காணாத பேரிழப்பும், பெரும் சோகமும் தமிழர்களுக்கு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் முள்ளி வாய்க்காலோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. உற்று நோக்கினால் தமிழின வரலாற்றில் புதிய அத்தியாயம் வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பது புலனாகும். இன்னொருபுறம் சீனா, இந்தியா ஆகியவற்றின் அதிகாரப் போட்டிக்களமாக இலங்கைத் தீவு மாறிவருகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது கையடக்கமான கூட்டாளியாக இந்தியாவை வைத்துக் கொள்ள அமெரிக்க வல்லரசு விரும்புகிறது. சீனா வலுப்பட்டு வருவதைத் தடுக்கவும் அது விரும்புகிறது. அதற்கேற்ப இலங்கையில் காய் நகர்த்தலில் அமெரிக்கா ஈடுபடுகிறது. சீனா சிங்களத்தோடு கைகோப்பதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியா தமிழர்களைக் காட்டி அழுத்தங்கள் கொடுத்து தனது செல்வாக்கு மண்டலத்தில் சிங்களத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் உத்தியைக் கடைப் பிடிக்கிறது. அதற்கேற்ப சிற்சில சலுகைகளைத் தமிழர்களுக்குத் தருமாறு வலியுறுத்துகிறது.

இந்தியாவின் பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டு உணர்வுக்கும் மதிப்பளிப்பதாகக் காட்டிக் கொள்ள இந்த உத்தி இந்திய ஏகாதிபத்தியத்திற்கு உதவும். இந்த உலக வல்லாதிக்கப் போட்டியைப் பயங்கரவாத எதிர்ப்பு என்ற முழக்கத்தின் கீழ் தனக்குச் சாதகமாக சிங்கள ஆட்சி பயன் படுத்திக்கொண்டது. ஆனால் அதே வேகத்தில் அந்த உத்தி இனி பயன்தராது.

இன்னொருபுறம் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை வலுப்படுவது, ஆப்கானிஸ்தானில் மீண்டும் பேரழிவுப் போரைத் திணிக்கும் அமெரிக்காவின் முயற்சி, அப்போரில் அமெரிக்காவுடன் விருப்பக் கூட்டாளியாக இந்தியா இணையும் நிலை போன்றவையும் புதிய புவி அரசியல் நிலைமைகளைத் தோற்றுவித்து வருகின்றன. எப்போதும் புவி அரசியல் ஒரே நிலையில் நீடிக்காது; மாறிக் கொண்டே இருக்கும்.

இவற்றினூடாக சரியான உத்தி வகுத்தால் தமிழீழச் சிக்கலை உலக அரங்கில் சாதகமான நிலைக்கு உயர்த்த முடியும். இன்றைய நிலையில் களத்தில் புலிகள் இல்லை. எனவே முதன்மைப் போராட்ட சக்தியாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். ஆயினும் புலித்தலைமை உரிய நேரத்தில் களத்தில் வெளிப்பட்டே தீரும்.

இன்னொருபுறம் சிங்களம் போர்ப் பொருளாதாரப் பயனாளி களின் சண்டைக்களமாக மாறி சிங்கள அரசியல் பிளவுபட்டுச் சிதறும். எனவே எல்லாம் முடிந்துவிட்டது என்ற தோல்வி மனப்பான்மையில் சிங்களத்திற்குக் கீழ்ப்படும் அடிமை நிலையை ஏற்க வேண்டியதில்லை.

நார்வேயில் வாழும் ஈழத் தமிழர்கள் 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தங்கள் உறுதிபாட்டைத் தெரிவிக்கும் கருத்து வாக்குப்பதிவு நடத்தி உள்ளனர். இதில் மிகப் பெரும்பாலோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். பிரான்சிலும், கனடாவிலும் இது போன்ற வாக்கெடுப்பு நடந்து, அவற்றில் மிகப்பெரும்பாலோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும். இது, 1976 மே 14-ஆம் நாள் வட்டுக்கோட்டை தொகுதி பண்ணாகம் என்ற ஊரில் நடைபெற்ற தமிழர் ஐக்கியக்கூட்டணி மாநாட்டில் ஆரவாரமான பேராதரவோடு நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகும். .தன்னுரிமையின் (சுய நி.ணய உரிமை) அடி.படையி. ஒரு சுத.திர, இறைமையு.ள, மத.சா.ப.ற, சோசலிச. தமிழீழ அரசை மீ.வி.து புனரை.பு செ.வது. என்று அ.தீ. மான. அறிவி.தது.

இத்தீர்மானத்தைத் தேர்தல் மூலம் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி இப்போதைய தலைமுறையினர் மறு உறுதி செய்வது சிறப்பானது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிறகும் ஈழத் தமிழர்கள் தமிழீழத் தனி அரசு என்ற தமது இலட்சியத்தை இறுகப் பற்றி நிற்பது, அதுவும் புலம் பெயர் இளையோர் உறுதிப்பட்டு நிற்பது இந்திய - சிங்கள இனவெறிக் கூட்டணிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதனால்தான் பொருத்த மில்லாத சூழலில் உள் தன்னுரிமை பேசி, தனி அரசு கோரிக்கையைக் கைவிடச் செய்ய ஆள் பிடிக்கிறது இந்த இனவெறிக் கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டணியினர் சிலர் இதற்கு ஆளாவது வருத்தம் அளிக்கிறது.

நாம் ஏற்கெனவே கூறியதுபோல் முள்ளி வாய்க்காலோடு வரலாறு முடிந்து விடவில்லை. புலிகள் ஆயுதத்தை மவுனித்திருக்கிறார்கள். முற்றாக அழித்து விடவில்லை. தமது கட்டமைப்புகளை அவர்கள் சீரமைத்து வருகிறார்கள். புலம் பெயர் இளையோர் தமிழீழப் போராட்டத்தை சனநாயக வடிவில் உலக அரங்கில் விரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுதியான ஆதரவுச் செயல்பாட்டில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தியா தமிழினத்தின் எதிரி என்ற புரிதல் அதிகமாகி வருகிறது. உலகம் இப்போதுதான் கண் விழித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இராசபட்சே - பொன்சேகா கும்பலைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்கவேண்டும் என்ற கருத்து உலக மனித உரிமை அரங்கில் வலுப்பெற்று வருகிறது.

சிங்களத்தோடு தமிழர்கள் ஓர் அரசின் கீழ் சேர்ந்து வாழ முடியாது தனி அரசுதான் தீர்வு என்பதை உலக சனநாயக சக்திகள் புரிந்து கொண்டு வருகிறார்கள். ஆயினும் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகின் புவி அரசியல் நிலைமை வேகமாக மாறிவருவது உண்மைதான். இந்திய - சீன முறுகல் நிலை தீவிரப்படுவதும் உண்மைதான். ஆனால் இந்த மோதலில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கும் என்று மனக் கணக்குப் போடுவது பெருந்தவறாகி விடும்.

எவ்வளவுதான் புவி அரசியல் கூட்டுகள் மாறினாலும் சிங்களம் ஒரு போதும் தானே முன்வந்து தமிழீழத்தை ஏற்காது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் இந்தியா தற்சார் பானத் தமிழீழத் தனி அரசை ஏற்காது என்பதும். ஏனெனில் சிங்கள ஆரியத்தைப் போலவே இந்திய ஆரியமும் தமிழினத்தோடு தீராப்பகை கொண்டது. ஹிμம்முறையில்தான் வேறுபாடு. ஹிμம்முறை வேறுபாட்டை அடிப்படை வேறுபாடாகப் பிறழப்புரிந்து கொள்ளக் கூடாது.

உலக அரங்கில் புவி அரசியலும், இன அரசியலும் ஊடாடிச் செயல்புரிவதைக் கவனித்து, இடைவிடாது போராடினால் தமிழீழம் விடுதலை அடைவது திண்ணம். எத்தனை ராம்களும், கூட்டணிகளும் வந்தாலும் இதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

- கி.வெங்கட்ராமன்

Pin It