உயிர் வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தமிழக அரசு வணிகமயமாக்கி உள்ளது.

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று ரூ. 10/‡ ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரை ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் தமிழக முதல்வர் செயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி யில் 2.47 ஏக்கர் பரப்பில் குடிநீர் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10.5 கோடியில் அமைக் கப்பட்டுள்ள இக்குடிநீர் உற்பத்தி மையத்திலிருந்து நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் பணிகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கவனிக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும், நெடுஞ்சாலை உணவகங்களிலும், தொலை தூரப் பேருந்துகளி லும் ‘அம்மா குடிநீர்’ விற்பனை செய்யப்படும் என்று அறிவிக் கப் பட்டுள்ளது.

304 மையங்களில் விற் பனை நடைபெறுகிறது. போக்கு வரத்துத் துறை ஊழியர்கள் இந்தப் பணிகளில் ஈடு படுத்தப்படுகின்றனர்.

தண்ணீர் என்பது மனித குலம் உயிர் வாழ் வதற்கு அடிப்படை ஆதாரமாகும். உழவுத் தொழிலுக்கும் தண்ணீர் இன்றியமை யாதது. குடிநீர் பெறு வது உயிர் வாழும் உரிமையில் ஒரு கூறு. நமது உயிர் வாழும் உரிமைகள் வணிக மயமாக்கப் படக் கூடாது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைகளைப் பாது காத்து, நமது வாழ்வாதாரத்தைக் காக்காத அரசு எஞ்சியுள்ள நிலத்தடி நீரையும் உறிஞ்சி பணமாக்கத் துடிக்கிறது.
 
ஊற்றுநீர்ச் சுரக்க காரணமாக உள்ள ஆற்று மணலை வெளிமாநிலங்களுக்கு அள்ளிச் செல்வதை இந்த அரசு தடுக்கவில்லை. ஊற்றுநீர் குறைந்து குடி நீர் பல பகுதிகளில் கடல்நீராக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல இடங்களில் தனியார் நிறுவனங்கள் பலநூறு மீட்டர் ஆழத்துக்கு ஆழ்குழாய்ப் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்கின்றனர்.

கின்லே, அக்குவாபினா போன்ற நிறுவனங்களும் தண்ணீர் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கின்றன.
 
இயற்கையாகக் கிடைக்கக் கூடிய தண்ணீரை வணிகமயமாக் கக் கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி 2003-ஆம் ஆண்டிலேயே “குடிநீரை விற்பனைப் பொருளாக்காதே” என்று போராடி உள்ளது.

தமிழகத்தில் 1970-இல் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் 550-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படு கின்றன.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி களுக்கு குடிநீர் வடிகால்வாரியம் தான் தண்ணீரை விநியோகம் செய்கிறது. தூய்மையான, பாதுகாக்கப் பட்ட தண்ணீரை வழங்குவது குடிநீர் வடிகால் வாரியம்தான்.

குடிநீர் வடிகால் வாரியம் 1லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.3/- முதல் 5/-க்கு தருகிறோம் என்று கடந்த பல ஆண்டுகளாக சொல்லி வருவதை செயல்படுத்தாத அரசு போக்குவரத்துத்துறை மூலம் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலை ரூ.10/‡க்கு விற்பனை செய்ய முன்வருவது ஏன்?

20 லிட்டர் தண்ணீர் கேன் ரூ.30/- முதல் ரூ.40/-வரை தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. 1லிட்டர் தண்ணீர் ரூ. 1.50-ரூ.2/-தான். ஆனால், 1லிட்டர் பாட்டில் தண்ணீர் விலை ரூ. 10/- என்பதோ ரூ.20/- என்பதோ பகற்கொள்ளை தானே.
 
தொடர்வண்டித்துறையில் ரயில் லிட்டர் பாட்டில் ரூ.15/-க்கும், தனியார் நிறுவனங் கள் 1லிட்டர் பாட்டில் தண்ணீர் ரூ.20/-க்கும் விற்பனை செய்கின் றன.

தொடர்வண்டியில் விற்பனை செய்யப்படும் ரயில் நீரில் எந்த வொரு தலைவர் படமும் இல்லை. எந்தக் கட்சியின் சின்ன மும் இல்லை. தனியார் விற்பனை செய்யும் பாட்டிலில் கூட இந்த நிலைமை இல்லை.
 
ஆனால், அம்மா குடிநீர் பாட்டிலில் செயலலிதாவின் பட மும்,இரட்டை இலையும் பொறிக் கப்பட்டுள்ளன. செயலலிதாவுக் குப் பிடித்த பச்சை வண்ணத்தில் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மலிவான விளம்பரத்தை செய்கி றது செயலலிதா அரசு. மிகக் கேவலமான செயல் இது. பாதுகாக்கப் பட்ட, தூய்மையான குடிநீரை இலவசமாக வழங்குவது மாநக ராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் அடிப்படைக் கடமை.

Pin It