தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கோவையில் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது.

1976ஆம் ஆண்டு, காடுகளைப் பாதுகாத்து சிறந்த முறையில் நிர்வகிக்க தேசிய வேளாண் குழுவின் பரிந்துரையின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக் கழகங்களின் கீழ் இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு தொடங்கப் பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலும் 1985 - 86 ஆம் ஆண்டு நான்கு ஆண்டு  தொழில் சார்ந்த இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு  தொடங்கப்பட்டது.

கடந்த முப்பதாண்டுகளில் 26 குழுவினர் இளங்கலை வனவியல் பட்டப்படிப்பை முடித்துள் ளனர். நியாயமாக, இவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு வனத் துறையில் உள்ள வனச்சரகர் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு வரை, இவ் வனவியல் பட்டதாரிகள் இதற்காக தேர்வு செய்யப்படவில்லை.

இதனையடுத்து நடத்திய பெரும் போராட்டத்தின் விளைவாக தமிழ்நாடு அரசு, வனவியல் பட்டதாரி களை வனச்சரகர் பணிக்கு தேர்வு செய்ய ஏற்றுக் கொண்டுகடந்த 2010ஆம் ஆண்டு, ஆகத்து 20 அன்று, அரசாணை எண்-118 ஐ பிறப்பித்தது. அந்த அரசா ணையின் படி வனச்சரகர் பணிக்கு வனவியல் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வனப்பட்டதாரிகள் தேர்வாக வில்லையெனில் மற்ற பட்டதாரிகளை, இப்பணிக்குத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப் பட்டது.

 இந்நிலையில், எவ்வித காரணமுமின்றி, கடந்த 2014ஆம் ஆண்டு சூலை 10ஆம் நாள், வனவியல் படித்த பட்டதாரிகளுக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டை, 25 விழுக்காடாகக் குறைத்து தமிழக அரசு  அரசாணை எண் -76-ஐப் பிறப்பித்தது. இது, 1976ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய வேளாண் குழுவின்  பரிந் துரைக்கு புறம்பானதாகும்.

அரசாணை எண் 76 ஐ திரும்பப்பெற்று, அர சாணை எண் 118இன் படி வனச்சரகர் நேரடி நியமனத் திற்கான காலிப் பணியிடங்களை, வனவியல்பட்ட தாரிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று கோரி, கடந்த மாதம் தொடங்கி கோவை மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் விளைவாக, துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வாக்குறுதிகள் வழங் கப் பட்டதன் காரணமாக, போராட் டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வா ணையம்  மூலமாக 02.01.2015 அன்று அறிவிக்கப் பட்ட நேரடி நியமனத்திற்கான 181 வனவர் பணியில் வனவியல் பட்டதாரி களுக்கு எவ்வித முன்னுரிமையும் அளிக்கப் படாதது, மாணவர் களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்து போராடி வரும் மாணவர்கள், வனத் துறையில் உள்ள வனவர் பணியிடத்திற்காக தமிழக அரசு தற்போது வெளியிட் டுள்ள அறிவிப்பை இரத்து செய்து, அதில் வனவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், வனத் துறையில் உள்ள வனச்சரகர் பணியிடத்தில் வனவியல் பட்டதாரி களுக்கு  25 விழுக் காடுதான் இட ஒதுக் கீடு என அறிவித்த அரசாணை எண் 76 ஐ இரத்து செய்து, வனவியல் பட்ட தாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணை எண் 118 , செயல் படுத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர்.

கடந்த, 14-.02.-2015 அன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந் திரன் தலைமையில், தோழர்கள் திருவள்ளுவன், ..மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் இராசேசுக் குமார் உள்ளிட்ட தோழர்கள், போராடி வரும் கோவை மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப் புத்  தோழர்கள் முத்துக் குமார், புகழேந்தி, ஜான் பீட்டர் ஆகி யோரை நேரில் சந்தித்து  ஆதரவு தெரி வித்தனர்.

வனக்கல்லூரி மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்!

மாணவர் போராட்டம் வெல்லட்டும்!

Pin It