இம்பீரியல் நிதி ஆதாரங்களை மாகாண வாரியாகப் பரவலாக்குவது குறித்த ஓர் ஆய்வு 

நியூயார்க், கொலம்பியாப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் எட்வின் ஆர்..செலிக்மான் அளித்த முன்னுரையுடன்  

(1925, கிரேட் பிரிட்டன், வெஸ்ட்மினிஸ்டர், பி.எஸ்.கிங் & ஸன்ஸ் லிட்., பிரசுரித்த பதிப்பின் மறுபிரசுரம்)

**

சமர்ப்பணம்

பரோடா மஹாராஜா

மேன்மை தாங்கிய ஶ்ரீ சாயாஜிராவ் கெயிக்வாட் அவர்களுக்கு என் கல்விக்காக அளித்த பேருதவிகளுக்கு நன்றியின் காணிக்கையாக இந்நூலைச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

***

முன்னுரை         

ambedkar and his wife savitha   இந்திய நிதி அல்லது பொருளியல் சம்பந்தமான ஓர் ஆய்வை வழங்குவதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய மரபான அவமானத்திலிருந்து மாணவர்கள் வெகுகாலத்திற்குக் காக்கப்படுவார்கள். ஆனால், மறுபுறத்தில் தங்களது சம்பந்தப்பட்ட ஆய்வுகளின் குறைப்பாடுகளுக்காக, அதேபோன்று வெகுகாலம் வரை அவர்கள் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமும் ஏற்படும். ஒரு விஷயம் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியதாக இருக்கும்போதுகூட, ஒரு சிறந்த பகுப்பாய்வுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி தேவைப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இந்திய நிதித்துறை சம்பந்தமாக எந்தவித ஆரம்பப் பணிகளும் செய்யப்படவில்லை. அதன் காரணமாக அத்துறையில் முன்னோடியாக இருக்க விழைபவர் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சொல்லி மாளாது. சில விஷயங்களின் முன் வரலாறு முழுவதுமாக விளக்கிச் சொல்லப்படாத காரணத்தினால் அவ்வப்போது சிரமங்கள் ஏற்படுவதுண்டு. ஏதோ தவறு நடந்துவிட்டதோ என்ற அச்சம் அடிக்கடி ஏற்படுகிறது. அதிலிருந்து அந்த மாணவரைக் காப்பாற்ற யாருமில்லாதபோது எரிச்சலூட்டும் துன்ப உணர்வில் அவர் உழலுவதைத் தவிர வேறு வழியில்லை. தான் ஆய்வு செய்யும் விஷயம் சம்பந்தப்பட்ட தகவலைக் கண்டெடுக்கும்போது ஒரு முன்னோடி மாணவர், அவ்வப்போது ஆனந்தப் பரவசமடைவது உண்டு. ஆனாலும், அது நெடிய அலுப்பூட்டும் தேடலுக்குப் பின்னர்தான், அதுவும் உமியிலிருந்து தானியத்தைக் கண்டெடுப்பது போலத்தான் கிடைக்கிறது மறுபடியும் கிடைக்கக்கூடிய அத்தகவல் ஆதாரங்கள் சில சமயங்களில் தவறான வழிகாட்டிகளாக இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்வது, கணிசமான காலமும் ஆற்றலும் விரயமாவதில்தான் முடிகிறது.

            இப்போதைய கடமையைப் பீடித்துள்ள சிரமங்கள் இவைதான். எந்த மாணவரையும் அவரது பணிக்குத் தயாரிக்கும் நூல்கள் எதுவும் இல்லை. அல்லது அவரது உழைப்பை எளிதாக்கும் அறிஞர்கள் எவரும் இல்லை. அல்லது அவரைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்லவும் யாரும் கிடையாது. இத்தகைய சிரமங்கள் ஒரு புறமிருக்க, அதிக விவரங்களின்றி இந்த ஆய்வை முழுமையானதாக்கும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இப்பணியை மிகவும் கடினமாக்கியுள்ளது. ஆனால் இதில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்பைப் பற்றி நான் பேச விரும்பவில்லை அல்லது இத்தனி நூலைத் தயாரிப்பதில் உதவியாக இருந்த நூல்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் நீண்ட பட்டியலை வெளியிட்டு வாசகரை அதிர்ச்சியூட்டவும் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் அதன் குறைபாடுகளைப் பற்றித்தான். உண்மையில் குறைபாடுகள் ஏராளமானவையாக இருப்பதைக் கற்றறிந்த மதிப்புரையாளர் கண்டறியலாம்.

 ஆனாலும் அவை இத்தனிநூல் பெற்றிருப்பதாகக் கண்டறியப்படும் மதிப்பைப் பாதிக்குமளவுக்கு மோசமானவையல்ல என்பது எனது கருத்தாகும். எனது வருத்தமெல்லாம், ஒரு சில குறைபாடுகளைப் பற்றித்தான். இந்தியாவில் உள்ளாட்சி நிதித்துறை பரவலாக்கப்பட்ட ஒரு தேதியை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்த தேதி முற்பட்டதாக இருக்காது என்றும், நான் குறிப்பிட்டுள்ள தேதியை விட முந்திய தேதியாக அது இருக்கக்கூடும் என்றும் நான் கருதுகிறேன். இறுதியில் இந்த விஷயத்தைப் புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அது வைக்கோல் போரிலிருந்து ஊசியைத் தேடுவதற்கு ஒப்பான கடமையாக இருந்திருக்கும். அந்தப் பயனின் மதிப்பு, அதைப் பெறுவதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பிற்கு ஈடாக இருக்குமா என்பது ஐயத்திற்குரியதாகும். மேலும், என்னுடைய தேதியைப்பற்றி நான் நம்பிக்கையுடன் இல்லாவிட்டாலும் கூடப், பிற்கால ஆராய்ச்சியாளர்கள் என்னுடைய கூற்றை உறுதிப்படுத்தக்கூடும் என்பது எனது கருத்து. நான் எடுத்துக்கொள்ளாத மற்றொரு விஷயம், ஆனால் எடுத்துக்கொள்ள மிகவும் விரும்பியிருக்கக்கூடிய விஷயம், மாநில மற்றும் உள்ளாட்சி நிதிகளுக்கிடையிலான உறவு சம்பந்தப்பட்டதாகும். இதை நான் செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதைத் தொடருவதை விட்டு விட்டேன்.

ஏனெனில், நான் ஆய்வுக்குத் தேர்வு செய்துள்ள பிரதான விஷயமான ஏகாதிபத்திய நிதியமைப்பை, மாநில அளவில் பரவலாக்குதல் என்பது அந்தத் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத உண்மைகளையும் வாதங்களையும் கொண்டு நிரப்பப்பட்டிருந்தது. இக்குறைப்பாடுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ளாட்சி நிதியமைப்பு குறித்த ஓர் அனுபந்தத் தனி நூலினால் அகற்றப்படும். அது தயாரிக்கப்பட்டு வருகிறது விரைவிலேயே அது பிரசுரிக்கப்படும் என்று கருதுகிறேன். இத்தனிநூலின் ஒரு குறையாக ஆங்காங்கே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டக்கூடும். அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுவது கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பொருளாதாரத்தை விளக்கும் வார்த்தைகள் தெளிவற்றவையாக இருக்கும்பட்சத்தில் ஒரே விஷயம் திரும்பத் திரும்பக் கூறப்படுவது தவிர்க்க முடியாதது என்பதை நியாயப்படுத்த வேண்டும். ஏனெனில் விளக்கமளிப்பதன் நலன்கள் எப்போதும் அவற்றில் உள்ள மனச்சோர்வை மிஞ்சுவதாக இருக்க வேண்டும்.

            மதிப்பிடற்கரிய பல யோசனைகள் வழங்கியதற்காகவும், இத்தலைப்பு சம்பந்தமான பல முக்கிய ஆவணங்களைக் கொடுத்துதவியதற்காகவும் இந்தியா அலுவலத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த திரு.ராபின்சன் அவர்களுக்கு நன்றி கூறாமல் இந்த முன்னுரையை என்னால் முடிக்கமுடியாது. கையெழுத்துப் பிரதியின் ஒரு சிறிய பகுதியின் நகலை வாசித்துப் பார்த்த லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேனனுக்கும் கூட நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் எனது ஆசிரியராக இருந்த பேராசிரியர் செலிக்மானுக்கு நான் பட்டிருக்கும் கடன் அளப்பரியது. ஏனெனில், அவரிடம் இருந்துதான் பொதுநிதி இயல் கோட்பாடுகளின் முதலாவது பாடங்களை நான் கற்றேன். அச்சுப் பிழை திருத்தும் மிகக் கடுமையான பணியில் எனக்கு ஒத்துழைப்பளித்த எனது நண்பர் திரு.சி.எஸ்.தியோலுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- அம்பேத்கர்       

***

அணிந்துரை

            தமது அற்புதமான ஆய்வுக்கட்டுரையில் திரு.அம்பேத்கர் விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுள்ளது. ஆரம்பம் முதல், மைய மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் திணிக்கும் நிதிச்சுமைகளை நாம் கண்டுவருகிறோம். ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே ஒரு புறத்தில் யுத்தங்களை நடத்துவதற்கும் மறுபுறத்தில் உள்ளாட்சிப் பாதுகாப்புக்கும் வசதிகளுக்கும் வகை செய்வதற்கும் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகளுக்குச் செலவினங்களுக்குப் பணம் தேவைப்பட்டது. பிற்காலத்தில்தான் உள்ளாட்சி மற்றும் மத்திய அரசியல் அமைப்புகளுக்கிடையில் இடைச்செருகலாகத் திரு.அம்பேத்கர் கூறுவது போல் பிரதேச அரசாங்கம் உருவாக்கப்பட்டது. பல்வேறு வகையான செலவினங்களுக்குப் பிரயோகிக்கப்பட்ட பெயர்கள், அதிகாரிகள் கூறுவதிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. இந்தியாவில் நாம் உள்ளாட்சி, பிரதேச மற்றும் ஏகாதிபத்தியச் செலவினங்கள் என்று கூறுகிறோம். ஜெர்மனியில் உள்ளாட்சி, அரசு மற்றும் ஏகாதிபத்தியச் செலவினங்கள் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவிலும் ஸ்விட்சர்லாந்திலும் உள்ளாட்சி அரசு மற்றும் (பெடரல்) மத்திய அரசுச் செலவினங்கள் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ளாட்சி, அரசு மற்றும் காமன்வெல்த் செலவினம் என்று அழைக்கிறார்கள். தென் ஆப்ரிக்காவிலும் கனடாவிலும் உள்ளாட்சி, பிரதேச, பெடரல் செலவினங்கள் என்கிறார்கள். பிரான்சில் உள்ளாட்சி, துறைசார்ந்த மற்றும் பொதுச் செலவினங்கள் என்று கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் உள்ளதைப் போல இன்னும் சில நாடுகளில் ஒட்டுமொத்தமாக சாம்ராஜ்யமே ஏற்றுக்கொள்ளும் ஒரு சர்வாம்ச செலவினங்கள் வகை உருவாக்கப்பட்டு வருகிறது.

            அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, இச்செலவினங்களின் பல்வேறு வகைகளின் தன்மைகளும் முக்கியத்துவமும், அவற்றுற்கிடையிலான உறவுகளும் தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன. பெருமளவிற்கு இது பொதுவான பொருளாதாரச் சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றமாகும். இது, அரசியல் கட்டமைப்பு அல்லது நிர்வாக நடவடிக்கையைப் படிப்படியாக மாற்றியமைப்பதில் முடிந்தது. சில நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ளதைப்போல பெடரல் அரசாங்கத்தை முன்னர் அரசுரிமை பெற்றிருந்த நாடுகள் தான் உருவாக்கின. இன்னும் சில நாடுகளில் இடைப்பட்ட (மாகாண அல்லது மாநில) அரசாங்கம் உள்ளாட்சி அல்லது மத்திய அரசாங்கங்களுடன் ஒப்பிடும் பொழுது முக்கியத்துவம் இழந்து நிற்கிறது. வேறு நாடுகளில் இதற்கு நேர் மாறாக இருக்கிறது.

            வரிவிதிப்பின் நெருக்குதல் அதிகரித்ததுடன் நவீன ஜனநாயகங்களின் கீழ் அதிகரிக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளின் வளர்ச்சியும் சேர்ந்து, அரசாங்கத்தின் இந்தப் பல்வேறு வடிவங்களிடையே பளுவை நேர்மையாகப் பங்கிடும் பிரச்சினை ஏறக்குறைய கடுமையாகியுள்ளது. திரு அம்பேத்கர் கூறுவது போன்ற ஒதுக்கீடுகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய், பங்கு வருவாய் போன்றவை எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் வழிமுறைகளைப் போன்றவைதான். மூன்று அடிப்படைத் திட்டங்களில் ஒன்று பின்பற்றப்பட வேண்டும். மத்திய அல்லது மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட பயத்தின் அளவுக்கேற்ப, ஒன்று மற்றொன்றைக் கட்டுப்படுத்தவேண்டும். முன்பு அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் ஒட்டுமொத்தமாக அல்லது பெருமளவில் மாநிலங்கள்தான் மத்திய அரசாங்கத்தை ஆதரித்து வந்தன. நவீன காலத்தில் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இதற்கு நேர்மாறாக இருந்தது உண்மை. அல்லது இரண்டாவதாகத் தெளிவான வருவாய்களைத் தனித்தனி அரசாங்கங்களுக்கு ஒதுக்கலாம். அண்மைக்காலம் வரை அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் முக்கியமாக மறைமுக வரிகள் மூலமாகத்தான் நடத்தப்பட்டன. மாநில அரசாங்கங்கள் நேரடி வரிகளினால் நடத்தப்பட்டன. அல்லது மூன்றாவதாக, வருவாய்களை ஒரு அரசாங்கம் வசூலித்து அதன் ஒரு பகுதியை மற்றொரு அரசாங்கத்திற்கு ஒதுக்கலாம். ஒரு மாநில அரசு வரிகளைத் தன் பெடரல் அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளும் பல உதாரணங்களும் உள்ளன. அமெரிக்காவில் தற்போது மாநில மற்றும் பெடரல் அரசாங்கத்திற்கிடையில் வழி வழி வந்த வரியை முறையாகச் செலவிடுவது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஜெர்மனியில் மாநில மற்றும் பெடரல் அரசாங்கத்தின் நிதி உறவுகள், அரசியல் விவாதத்தின் முன்னணியில் உள்ளன.

            இந்த விவாதத்திற்குத் திரு. அம்பேத்கரின் பங்களிப்பினுடைய மதிப்பு, உண்மைகளைப் புறவயமாக வரிசைப்படுத்திக் கூறியிருப்பதிலும் தமது சொந்த நாட்டில் நிகழ்ந்துள்ள ஆர்வமூட்டும் வளர்ச்சி போக்குகளை நடுநிலையாக ஆய்வு செய்திருப்பதிலும் அடங்கியுள்ளது. இதர நாடுகளுக்கும் இப்படிப்பினைகள் பொருந்தும். எனக்குத் தெரிந்தவரை, அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி இவ்வளவு விரிவான ஆய்வு வேறு எங்கும் நடைபெற்றதில்லை.

            பாதிச் சித்திரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஏனெனில், இத்துறையில் உள்ளாட்சி அதிகாரிகள் நுழைந்ததனாலும், மாநில (மாகாண) மற்றும் பொது (பெடரல்) தேவைகளுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுடைய நிதித் தேவைகளுக்கான கோரிக்கைகளினாலும் நிலைமை எங்கும் சிக்கலடைந்திருந்தது. உதாரணமாக, அமெரிக்காவில் இப்போது பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சினை பள்ளிகளுக்கு நிதியுதவியளிப்பது பற்றியதாகும். இது நிதிசார்ந்த இடையுறவு சம்பந்தமான கேள்விகளுக்கு அளிக்கப்படவிருக்கும் சரியான பதிலையே அதன் தீர்வு பெருமளவுக்குச் சார்ந்துள்ளது. இப்பிரச்சினைக்காகத் திரு.அம்பேத்கர் பின்னர் ஓர் ஆய்வில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஆரம்பப் பிரச்சினையை இங்கு அவர் வெற்றிகரமாகக் கையாளுவதைப் போலவே அந்த நிலைமையை விளக்குவதிலும் அவர் வெற்றி காண்பாரேயானால், நாமனைவரும் அவருக்கு இன்னமும் அதிகமாகக் கடமைப்பட்டவர்களாவோம்.

- எட்வின் ஆர்.ஏ.செலிக்மான், கொலம்பியாப் பல்கலைக் கழகம், நியூயார்க், அக்டோபர், 1924.

       ***

முன்னுரை

பொருளின் விளக்கமும் சுருக்கமும்

            இந்திய நிதி விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு மாணவருக்கு இரண்டு முக்கிய தகவல் மூலகங்கள் வழிகாட்டியாக இருக்கின்றன. ஒன்று ஆண்டு பட்ஜெட் விபரம். மற்றது ஆண்டு நிதி மற்றும் வருவாய் கணக்கு விபரங்கள். இவை இரண்டும் தனித்தனியாக வெளியிடப்பட்டாலும் நிதி பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்குப் பெரும் துணையாக அவை இருக்கின்றன. ஏனென்றால் இது ஒரு விரிவான விளக்கமான ஆண்டு நிதி நடவடிக்கைகளைப் பற்றியதாகும். மேலும், இதில் அடங்கிய விபரங்கள் நிதி மற்றும் வருவாய் கணக்குகளில் குறிக்கப்பட்டுள்ளன.

            இந்த மூல ஆதாரங்கள் உதவியாக இருந்தாலும் கூட அவற்றில் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. அண்மையில் வெளியிடப்பட்ட நிதி மற்றும் வருவாய்க் கணக்குகளைப் பார்க்கின்ற போது நிதிக் கணக்கு விபரங்கள் நான்கு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அவையாவன. 1.இம்பீரியல் 2.மாகாணம் 3.இணைக்கப்பட்ட உள்ளூர் 4.இணைக்கப்படாத உள்ளூர். ஆனாலும் இவை ஒரே சீராக இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, 1870 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒரே கணக்கு விபரத் தொடர்ச்சிகள் “மாகாணக் கணக்கு” விபரங்களில் காணப்படவில்லை. மேலும் 1863 ஆம் ஆண்டுக்கு முன் ‘உள்ளூர்’ என்ற தலைப்பில் எந்தக் கணக்கு விபரங்களும் காணப்படவில்லை. அதே மாதிரி, 1870 ஆம் ஆண்டுக்கு முன் உள்ள நிதி விபரங்கள் இம்பீரியல் மற்றும் உள்ளூர் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1905 ஆம் ஆண்டுக்குப் பின்வரும் கணக்கு விபரத் தொடர்ச்சிகள் இம்பீரியல் மற்றும் உள்ளூர் என்ற வகையில் பிரிக்கப்படவில்லை. மாறாக 1.இம்பீரியல் 2.மாகாணம், என்ற அடிப்படையில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 1921ஆம் ஆண்டுக்குபின் வருகின்ற நிதி விபரங்கள் இம்பீரியல் நடவடிக்கைகளை மட்டுமே விளக்குகிறது. இவ்வகையான நிதிக் கணக்கு விபரங்கள் [“உள்ளூர் சேராதவைஎன்ற கணக்கு விபரங்கள் நிதி மற்றும் வருவாய் கணக்கு விபரங்களில் காணப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது, சேர்க்கப்படாத காரணத்தை மிக நுட்பமான காரணங்கள் இருப்பதாகமதராஸ் மேனுவல்” (பகுதி 1, பாகம் V பக்கங்கள் 467-9) சுட்டிக்காட்டுகிறது.சேர்க்கப்படாத நிதிகள் மத்திய அரசாங்கத்தின் சாதாரணமான நிதிவசூலிக்கும் ஏஜென்சி மூலம் வசூலிக்கப்படவில்லை என்பதால் அதில் தலையிடவில்லை. இன்னொரு நுட்பமான காரணமும் உள்ளது. அதாவதுசிவில் கணக்கு மரபு” (பக்கம் 137), மூன்றாவது பதிப்பில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கூறப்படுகிறது. அதன்படி அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற தேவை இல்லை. ஆகவே அவை நிதிவிவரங்களில் சேர்க்கப்படாதது என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஏழாவது மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட பதிப்பில் (பக்கம் 122) அந்தத் தீர்ப்பிற்கு இவ்வாறு அர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பொதுநிதியும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு மேலாக ஒப்புக்கொள்ளக்கூடிய விளக்கம்அறநெறி மற்றும் பருப்பொருள் வளர்ச்சி’ (moral and material progress report) பற்றிய 1882-83 ஆண்டுகளுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த வகையான நிதி, பொதுநிதியில் சேர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனென்றால் இவை பெரும்பாலும் தனி அறக்கட்டளை மற்றும் நன்கொடைகளில் அடங்கி உள்ளது ] முதலில் படிப்பவருக்கு அதிகக் குழப்பத்தை ஏற்படும். இதனால், அவருக்கு இயற்கையாக மனதில் எழும்புகிற கேள்வி என்னவென்றால் இந்த வேறுபட்ட பகுதிகளின் வகைப்பாடு எவ்வாறு பரிணாம வளர்ச்சிபெற்றது. மற்றும் இவைகளில் ஒன்று, மற்றவைகளோடு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதாகும்.

            இந்த ஆய்வில், அவற்றில் ஒன்றான “மாகாண” என்பதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்குவதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவாதத்தைத் தொடருவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த விவாதப் பொருளை விளக்குவதைக் கோடிட்டுக்காட்டவும், பிரிக்கப்பட்டுள்ள பாகங்களுக்கிடையிலான தொடர்புகளைச் சுட்டிக்காட்டவும் இந்த ஆய்வுக்கு ஒரு முன்னுரை உசிதமானது என்று கருதப்பட்டது. இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதை ஏதுவாக்குவதற்காக, இந்த ஆய்வு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மாநில நிதியின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு ஆகியவற்றை விளக்குகிறது. இறுதி வடிவம் 1979 ஆம் ஆண்டின் அரசியல் சட்ட மாற்றங்களினால் வடிக்கப்பட்டது. பாகம் ஒன்றில் சிக்கல் நிறைந்த இதுவரை கடக்கப்படாத, ஆயினும் தேவையான பாதை, மாநில நிதியின் தோற்றுவாயைப் பற்றிய ஒரு முழுமையான கருத்தை வழங்குவதற்காகக் கடக்கப்பட்டுள்ளது. இப்போதைய மாணவர்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறும் முதுமொழிக்கு உரிய மதிப்பளிக்கும் அதே சமயம், தற்காலத்தில் கடந்த காலத்தைத் தவிர வேறு எதையும் இங்கு ஆராயவில்லை இயல்1, பாகம்1 இல் மாகாண நிதித்துறை தொடங்கப்படுவதற்கு முன்னர் நடப்பில் இருந்த நிதி அமைப்பைப் பற்றிய சித்திரத்தை வழங்கவும், அதன் அமைப்பில் ஒரு மாற்றம் தேவைப்படுவதற்கான காரணங்களை விளக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயல் இரண்டில், மறுசீரமைப்புக் காலத்தின்போது பிரேரணை செய்யப்பட்ட மாற்று நிதியமைப்பு விளக்கப்பட்டிருப்பதுடன், அது ஏன் பொதுவாக ஏற்கப்படாமல் தோல்வியடைந்தது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அமைப்புக்கும் அதன் மாற்று அமைப்புக்கும் இடையில் ஒரு சமரசமாக அமைந்த திட்டத்தைப் பற்றிய விவாதத்திற்கும் அதை வரவேற்கும் கட்டாயத்தை ஏற்படுத்திய சூழ்நிலைகளுக்கும் இயல் மூன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

            பகுதி ஒன்றில் அதன் தோற்றுவாயை விளக்கியபின், பகுதி இரண்டில் மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியே விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளது. பகுதி ஒன்றில் பின்பற்றப்பட்ட ஏற்பாடு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது, அதனுடன் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் வாசகருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டும். ஆயினும், பகுதி இரண்டைப் பொறுத்தவரை மறைந்த நீதிபதி ரானடே 1887 இல் மாகாண நிதியமைப்பு குறித்துப் பிரசுரித்த துண்டுதுண்டாகக் கோடிட்டுக்காட்டிய ஒரே விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து இந்த ஏற்பாடு மாறுபட்டது என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். மாகாண நிதியமைப்பின் சிறப்பம்சங்களில், ஒவ்வொரு ஐந்தாவது ஆண்டிலும் மாகாண பட்ஜெட்டுகளில் சேர்க்கப்பட்ட வருவாய்களும் செலவினங்களும் மாற்றியமைக்கப்பட்டன என்பதை இரண்டாம் பாகத்தைப் படிப்பதலிருந்து தெரிந்து கொள்ளமுடியும். இரண்டாம் பாகத்தில் காணப்படும் விஷயங்களை மட்டும், அதுவும் 1882 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே தமது துண்டுப்பிரசுரத்தில் ஆய்வுசெய்துள்ள நீதிபதி ரானடே, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியில் உள்ள வெவ்வேறு கட்டங்களைக் குறிப்பதற்கு ஒரு நெறிமுறையாக இச்சிறப்பம்சத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

அதன் விளைவாக அவருக்கு ஒவ்வொரு ஐந்தாண்டுக் காலமும் ஒரு கட்டமாக ஆகிறது, அவருடைய கரங்களில் மாகாண நிதியமைப்பின் வரலாறு அதை எத்தனை ஐந்தாண்டுகளாகப் பிரிக்கலாமோ அத்தனைக் கட்டங்களாக அமைகிறது. ஒவ்வொரு திருத்தமும் மாகாண நிதியமைப்பின் அடிப்படைகளை மாற்றியிருக்குமேயானால், அத்தகைய ஒரு ஏற்பாடு தர்க்கரீதியானதாக இருந்திருக்கும் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் மாகாண நிதியமைப்பு ஒவ்வொரு முறை திருத்தியமைக்கப்பட்டபோதும், அது தனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்கள் சிரைக்கப்பட்ட ஆடுகளின்மீது வேகமாகக் காற்றடிப்பது போல இருந்தன. அடிப்படை ஆதாரங்களில் மாற்றங்களுக்கு ஏற்ப மாகாண நிதியமைப்பினுடைய வளர்ச்சியின் வரலாறு கட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டுமானால், முற்றிலும் மாறுபட்ட தன்மையுடைய சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

பொதுநிதியமைப்புத் தத்துவத்தை எழுதுபவர்கள், அது முக்கியமாக வரிவிதிப்பதில் சமத்துவத்தன்மை, செலவினங்களில் சிக்கனம் ஆகியவற்றைக் குறிக்கும் விஷயம் என்று இதைக் கருதுவதுபோல் தெரிகிறது. ஆனால், ஒரு நிதியமைச்சருக்கு நிதி என்பது முக்கியமாக நடைமுறையில் பட்ஜெட்டில் சமநிலையை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற பிரச்சினையைத் தீர்ப்பதாகவே இருக்கும். மாகாண பட்ஜெட்டுகளில் சமநிலையை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற பிரச்சினையைத் தீர்ப்பதாகவே இருக்கும். மாகாண பட்ஜெட்டுகளில் சமநிலையை எட்டும் பிரச்சினையைச் சமாளிக்கும் வழிமுறைகளையும் அவ்வப்போது அதில் அறிமுகப்படுத்தும் மாற்றங்களையும் கண்டறியும் நோக்கத்துடன், பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியமைப்பின் வரலாற்றை நாம் ஆராய்ந்தோமானால், மாகாண நிதியமைப்பு மூன்று தெளிவான வெவ்வேறு சட்டங்கள் மூலமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதையும் ஒவ்வொன்றும் அதனுடைய சொந்த அளிப்புமுறையான ஒதுக்கீடுகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட வருவாய்கள் என்ற முறையில் வளர்ச்சியடைந்துள்ளதையும் நாம் காணமுடியும். அதன் விளைவாக, நீதிபதி ரானடேயின் இயந்திர கதியிலான திட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இந்திய அரசாங்கம் பின்பற்றும் அரசாங்கங்களுக்கு அளிப்புமுறைக்கு ஏற்ப மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியை வெவ்வேறு கட்டங்களாகப் பிரிப்பது கூடுதல் தர்க்கரீதியானதாகவும் பயன்படுவதாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதன்விளைவாக, மாகாண நிதியமைப்பின் வளர்ச்சி சம்பந்தமான விஷயங்கள் அடங்கியுள்ள இரண்டாம் பகுதி, மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1.ஒதுக்கீட்டின் மூலம் பட்ஜெட் 2.ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய்களின் மூலம் பட்ஜெட் 3.பகிர்ந்து கொள்ளப்பட்ட வருவாய்களின் மூலம் பட்ஜெட் ஆகியவையே ஆகும்.

            மாகாண நிதியமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இந்த விவாதம், அதனுடைய அமைப்பு முறையை ஆய்வு செய்வதன் மூலம் அதன் அமைப்பிலிருந்து சுதந்திரமாகச் செயல்படவில்லை என்ற மூன்றாம் பாகத்திலும் தொடரப்படுகிறது. மாகாண நிதியமைப்பு அதன் அமைப்பிலிருந்து சுதந்திரமாகச் செயல்படவில்லை என்ற உண்மையை வெளிக் கொணருவதற்காக, மாகாண அரசாங்கங்களின் நிதி அதிகாரங்கள் மீது இருந்த, இதுவரை அசட்டை செய்யப்பட்ட வரையறுக்கும் விதிகளை ஆய்வு செய்வதற்காக மூன்றாம் பாகத்திலுள்ள இயல் ஏழு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாகாண நிதியமைப்பின் உண்மையான நிலைமையைப் பற்றிய ஆய்வு எட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இத்தன்மைகள் பற்றிய மேற்கொள் ஒன்றினால் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாகாண நிதியமைப்பு என்ற பெயர் ஒருபுறமிருக்க. அங்கு மாகாண வருவாய்களோ அல்லது மாகாண சேவைகளோ ஏகாதிபத்திய வருவாய்கள் மற்றும் ஏகாதிபத்திய சேவைகள் போன்று தனியாக இருக்கவில்லை. ஆகவே, அது அமைப்பில் சமஷ்டித் தன்மையுடன் இருப்பதற்குப் பதிலாக அது ஏகாதிபத்திய அமைப்பாகவே இருந்தது. பழைய சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் அரசியல் சட்ட ரீதியான பொறுப்புகளுக்கு பாதகம் விளைவிக்காமல் மாகாண நிதியமைப்பின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை இயல் ஒன்பது விவாதிக்கிறது.

            1919 ஆம் ஆண்டில் சீர்திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண நிதியமைப்பின் நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பற்றிப் பகுதி நான்கு விவாதிக்கிறது. இப்பாகத்தின் இயல் 10, இந்த மாற்றங்களுக்கு இட்டுச் சென்ற காரணங்களை ஆய்வு செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இயல் பதினொன்றில், புதிய சட்டத்தினால் செயல்படுத்தப்பட்ட மாற்றங்களின் முழுவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இயல் பன்னிரண்டு புதிய முறைமையைப் பற்றிய விமர்சனத்தை வழங்குகிறது.

            மாகாண நிதியமைப்பைச் சுட்டிக் காட்டுவதற்கு “நிதியமைப்பை பரவலாக்குதல்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதில் இந்திய நிதித்துறையின் மாணவர்கள் சாதாரணமாகவே திருப்தியடைந்து கொள்கிறார்கள் என்ற உண்மை காரணமாக, இந்த ஆய்வின் மிகச் சிக்கலான தலைப்பு என்று அழைக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்காக இந்த விளக்கம் தரப்படுகிறது. பல்வேறு திசைகளில் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவியிருப்பதுடன் போதுமான அளவுக்குப் பரிச்சயம் கொண்டுள்ள இந்திய நிதித்துறையின் எந்த மாணவரும், நிதியமைப்பைப் பரவலாக்குதல் என்ற சொற்றொடர், மாகாண நிதியமைப்பை விளக்கும் அளவிற்கு அர்த்தத்தை வழங்கவில்லை என்பதைக் காணத் தவறமாட்டார். இந்திய அமைப்பில் மாகாண பரவலாக்குதல் என்பது மட்டுமே இருந்திருக்குமானால் ஒரு புதிய தலைப்புக்காக நாம் அலைய வேண்டியிருந்திருக்காது. உண்மையில், பரவலாக்குதலின் ஆரம்ப நிலைகள் ஒரே மாதிரியானவை அல்ல. அதன் மூலம் உருவான அமைப்புகள் தன்மையில் முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக மத்திய பரவலாக்கும் மையமும், 1885 இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட மத்திய பரவலாக்கும் கொள்கையினால் உருவான அமைப்புகளும், 1870 இல் தொடங்கிவைக்கப்பட்ட மத்தியப் பரவலாக்குதல் கொள்கையிலிருந்து உருவான அமைப்புகள் மற்றும் மையத்திலிருந்து வேறுபட்டவையாகும். திரும்பவும் 1892 முதல் மத்தியப் பரவலாக்குதலைப் படிப்படியாகச் செயல்படுத்தும், 1885 அல்லது 1870 ஆம் ஆண்டுகளின் மத்திய பரவலாக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டதிலிருந்து மாறுபட்டதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், 1855 ஆம் ஆண்டின் மத்தியக் கட்டுப்பாட்டைப் பரவலாக்கியது என்பது இந்திய நிதியமைப்பையே பரவலாக்குதல் என்பதாகும். அதன் பயனாக:

 1. i) ஏகாதிபத்திய நிதியமைப்பிலிருந்து உள்ளாட்சி நிதியமைப்பைப் பிரித்தல் நிகழ்ந்தது. 1870 ஆம் ஆண்டின் மத்தியப் பரவலாக்குதல்தான் ஏகாதிபத்திய நிதியமைப்பை மத்திய பரவலாக்குதலாக மாற்றியது.

(அதனால் விளைந்த பயன்தான்:)

 1. ii) ஏகாதிபத்திய நிதி அமைப்பிலிருந்து மாகாண நிதியமைப்பு பிரிக்கப்பட்டது. 1882 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய மத்திய பரவலாக்குதல்தான் மாகாண நிதியமைப்பின் மத்திய பரவலாக்குதல் ஆகும்.

            அதன் பயன்:

            iii) மாகாண நிதியமைப்பிலிருந்து உள்ளாட்சி நிதியமைப்பைப் பிரித்தல்.

            ஆகவே, “நிதியமைப்பைப் பரவலாக்குதல்” என்பது மாகாண நிதியமைப்பைக் குறிப்பதற்குப் பதிலாக மேலே விவரிக்கப்பட்ட இந்த பலவகைப்பட்ட பரவலாக்கும் நிகழ்வுப்போக்குகளைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும். பரவலாக்குதல் என்ற ஒரே வரியை ஆய்வுசெய்வதற்கு ஒரு தலைப்பாக இதைப் பயன்படுத்துவது குழப்பத்தையே ஏற்படுத்தும். இச் சொற்றொடரை, மேலே தனித்தனியாகக் குறிப்பிட்ட பரவலாக்குதலின் மூன்று வழிமுறைகளுக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம். ஆகவே, ஆய்வு செய்யப்படுவதைப் பொருள்படுத்துவதைத் தவிர பரவலாக்கப்படும் ஒரு வழி முறையை இந்த ஆய்வு குறிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அதை “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி அமைப்பின் பரிணாம வளர்ச்சி” என்றும் “ஏகாதிபத்திய நிதி அமைப்பை மாகாணவாரியாகப் பரவலாக்குதல் சம்பந்தமான ஓர் ஆய்வு” என்ற உபதலைப்பிடுவதும் பொருத்தமானது என்று கருதப்பட்டது. இதில் ‘மாகாணவாரியாக’ , ‘ஏகாதிபத்திய’ என்ற சொற்கள் அவற்றிற்கே உரிய முக்கியத்துவத்துடன் வாசிக்கப்பட வேண்டும். அடிக்கடி சொல்லலங்காரம் எவ்வளவு கவனக்குறைவாகச் செய்யப்படுகிறது என்பதற்கு மேலே குறிப்பிடப்பட்ட நீதிபதி ரானடேயின் துண்டுப் பிரசுரம் “மாகாண நிதியைப் பரவலாக்குதல்” என்று தலைப்பிடப்பட்டிருப்பதை உதாரணமாகக் கூறலாம். அது மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியைப்பற்றிக் கூறுவதாக இருந்தபோதிலும், அதை மாணவர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடும். ஏனெனில், அதனுடைய தலைப்பு உள்ளாட்சி நிதியமைப்பின் வளர்ச்சியைக் குறிக்கும் விஷயமாக இருக்கவேண்டும் என்று பொருள்படுகிறது. பரவலாக்கப்படுவதில் பலவிதங்கள் உள்ளன என்பதை நீதிபதி ரானடே உணர்ந்திருப்பாரேயானால், தமது துண்டுப்பிரசுரத்தின் தலைப்புக்கும் உள்ளடக்கதிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.

- அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It

இந்தியாவும் 1858 ஆம் ஆண்டின் சட்டமும்

                இங்கிலாந்தின் வளவாழ்வுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி பெரும் செல்வாதாரமாக இருந்தது என்ற உண்மையையும் மீறி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் மக்களின் அவமதிப்புக்கு உள்ளாயிற்று.

                இந்திய வர்த்தகத்தில் தனது ஏகபோகத்தைப் பற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனி பெருமை கொண்டிருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்தச் சலுகையை வழங்குவதற்காக முடிந்த அளவுக்கு அதிகமான லாபத்தைப் பெறுவதில் பிரிட்டிஷார் உறுதியாக இருந்தனர். நிர்வாகத்தில் ஏற்படும் ஒவ்வொரு பலவீனமும் பணம் பறிக்கவும் தலையிடவும் ஒரு காரணமாகப் பயன்படுத்தப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது என்பது அதனிடமிருந்து இந்திய வர்த்தகத்தின் ஏகபோகத்தின் மூலம் குவிந்துள்ள செல்வத்தைப் பறிக்கும் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டது.

ambedkar in bombay                கம்பெனியின் வரலாற்றினுடைய ஆரம்ப காலத்தில் வர்த்தகத்தின் இந்த ஏகபோகம் சம்பந்தமாக ஒரு கருத்து வேறுபாடு தோன்றியது. அதன் சாதக பாதகங்களைப் பற்றிக் காரசாரமாக விவாதிக்கப்பட்டது 1833 ஆம் ஆண்டுவரை முறையாகவோ, முறையற்ற விதத்திலோ கம்பெனி தனது ஏகபோகத்தைத் தொடருவதற்குப் பெருத்த எதிர்ப்பு கிளம்பியதால், கம்பெனியும் அமைச்சர்களும் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. கிழக்கிந்திய வர்த்தகம் இங்கிலாந்தின் பொது மக்களனைவருக்கும் திறந்து விடப்பட்டது.

                1834 ஆம் ஆண்டின் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் ஒரு வர்த்தகக் கார்ப்பரேஷனாகக் கம்பெனி செயல்படுவது முடிவுற்றது. கம்பெனியின் கடப்பாடுகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டன என்பதைப் பின்வரும் விவரங்களிலிருந்து காண்போம்.

                “உருப்படியான வர்த்தகரீதியான சொத்துக்கள் 1834 ஆம் ஆண்டின் சட்டப்படி விற்பனை செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட தொகையான 15,223,480 பவுண்டுகள் இவ்வாறு வினியோகிக்கப்பட்டது. இந்தியக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 2,218,831 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுப் பத்திரக் கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்கு 1,788,525 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 1874 இல் கம்பெனியின் மூலதனப் பங்குகளை (6,000,000) இறுதியில் மீட்டுப் பெறுவதற்காகக் கூட்டு வட்டி விகிதத்தில் ஒரு “பாதுகாப்பு நிதியை” ஏற்படுத்துவதற்காக பாங்க ஆஃப் இங்கிலாந்தில் 2,000,000 பவுண்டுகள் வைப்பு நிதியாகச் செலுத்தப்பட்டது. கப்பல் சொந்தக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இழப்பீடு கொடுப்பதற்காக 561,000 பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மீதமுள்ள 463,135 பவுண்டுகள் இந்தியாவில் உள்ள அரசாங்கத்தின் செலவுக் காரணங்களுக்காக இங்கிலாந்தில் ரொக்கமாக வைக்கப்பட்டன. லீடன்ஹால் தெருவில் உள்ள இந்தியா இல்லம், இராணுவ நுகர்பொருள்துறையின் உபயோகத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு சேமக்கிடங்கு, இந்தியாவில் சில வீட்டு ஆஸ்தி போன்ற, 635,445 பவுண்டு மதிப்புள்ள வர்த்தக ரீதியான சொத்துக்கள் என்று கம்பெனி கூறிய சில சொத்துக்கள் கம்பெனியின் வசமே இருந்தன. ஆனால், அவை இந்திய அரசாங்கத்தின் உபயோகத்திற்குப் பயன்படுத்தத்தக்கவையாகும்.”

                ஒரு வர்த்தக அமைப்பு என்ற முறையில் கம்பெனி மறைந்து விட்ட போதிலும்கூட, அது இந்தியாவிலுள்ள தனது பிரதேசங்களில் ஓர் அரசியல் தன்னுரிமையாட்சி அமைப்பாகத் தொடர்ந்து இருந்து வந்தது. இதன்மூலம் துரதிருஷ்டவசமாகக் கம்பெனியின் நாட்கள் அதிவேகமாக எண்ணப்பட்டு வந்தன.

                1857 இல் நடைபெற்ற கலகத்தில் தெளிவாகப் புலப்பட்டது போல, அதன் திறமையின்மை காரணமாகக் கிழக்கிந்தியக் கம்பெனி ஒழிக்கப்பட்டது என்று கருதுவது தவறாகும். மாறாக, உண்மையில் கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே, இந்திய அரசாங்கத்தை, அரசியாரின் முடியாட்சியே நேரடியாக மேற்கொள்வது பற்றிய விவாதம் நடைபெற்றது. கலகம் நடைபெற்றதோ இல்லையோ, ஆனால், தங்களுக்கு நேரடியாக மாட்டிறைச்சிக் கொழுப்பை வழங்கிய ஒரு கார்ப்பொரேஷனைக் கசக்கிப் பிழியும் நிகழ்வுப் போக்கின் வாயிலாக இந்தியாவில் தங்களது ஆட்சியின் மூலம் மறைமுகமாக வந்த “இலைகளையும் மீன்களையும்” நேரடியாகக் கட்டுபடுத்துவதற்கு பிரிட்டிஷ் ராஜியவாதிகள் அவசரப்பட்டனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

                பொறுமையற்ற மனங்களுக்கு இந்தச் சுற்றி வளைக்கும் நிகழ்வுப் போக்கு அலுப்பூட்டுவதாகவும் மனதளவில் சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது. கிரிமியன் யுத்தத்தில் பெற்ற வெற்றியினால் 1857 இல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியினால் 1857இல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பால்மெர்ஸ்டன் பிரபு, கம்பெனியை மூடிவிட்டு இந்திய அரசாங்கத்தை முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தத் தாம் உத்தேசித்திருப்பதாகக் கம்பெனியின் இயக்குநர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஒரு தாக்கீது அனுப்பினார்.

                துரதிருஷ்டவசமாக 1857 இல் கலகம் நடைபெற்றது. அது ஏற்கெனவே முழு வீச்சில் இருந்த கம்பெனியை ஒழித்துக்கட்டும் இயக்கத்திற்கு ஒரு வலுவான உந்துவிசையளித்தது.

                1857 டிசம்பர் 31 அன்று கம்பெனியின் தலைவரும் துணைத் தலைவரும் பால்மெர்ஸ்ட்டன்னின் தாக்கீதுக்குப் பதிலளித்தனர், இந்தியாவை நிர்வகிப்பதற்குக் கம்பெனியைப் போன்ற “ஓர் இடைக்கால, அரசியல் கலப்பற்ற, முற்றிலும் சுதந்திரமான அமைப்பு” அவசியம் என்று அதில் அவர்கள் வலியுறுத்தினர்.

                இதைத் தவிரக் கம்பெனி, நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும், ஒரு முறையான விண்ணப்பத்தை அனுப்பிற்று. அந்த விண்ணப்பத்தை வரைந்த ஜான் ஸ்டுவர்ட் மில், கம்பெனியை ஒழித்துக்கட்டும் மசோதாவைக் கொண்டுவந்தவரின் வாதங்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினார். “ஆரம்பம் முதல் கட்டுப்பாடு வாரியத்திற்குத் தலைமை ஏற்கும் மந்திரியின் மூலமாக இந்தியா அரசாங்கத்தின் மீது முடியரசு தனது கட்டுபாட்டைச் செலுத்தி வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசாங்கத்திற்கும் முடியரசின் மந்திரிக்கும் இடையில் இருந்த இயக்குநர்கள் மன்றத்தைத் தான், அப்புதிய மசோதா ஒழிக்கவேண்டுமென்று விரும்பியது. அனுபவத்தின் சின்னமாகத் திகழும் இந்த இயக்குநர்கள் மன்றம் (கிழக்கிந்தியக் கம்பெனியின் ஓர் அங்கம்), இந்தியாவின் நிர்வாகம் முழுவதையும் உண்மையிலேயே கட்டுப்படுத்தி வந்த முடியரசின் அமைச்சருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தது என்று மில் வாதிட்டார். நிர்வாக முறைமையில் ஏதேனும் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக வைத்துக் கொண்டாலும், அதற்குப் பரிகாரமாக இயக்குநர் மன்றத்தை ஒழித்துவிட்டு, முடியரசின் அமைச்சரை எதேச்சதிகாரியாக்குவது என்பது, நோயைவிடப் பரிகாரம் மோசமானது என்பது போன்றது. இயக்குநர்கள் மன்றத்தின் உதவியின்றி முடியரசின் மந்திரி இந்தியாவின் நிர்வாகத்தைக் கவனித்திருப்பாரேயானால், தவறுகள் ஏதும் நடைபெற்றிருக்காது என்று கருதுவது, பொறுப்பைப் பெற்றிருந்த அவர் மிக மோசமாக நிர்வாகம் செய்திருக்கிறார், ஏனெனில், அவர் அனுபவம் வாய்ந்த பொறுப்புள்ள ஆலோசகர்களின் ஒத்துழைப்பை அவர் பெற்றிருந்தார்.”

                இங்கிலாந்துடனான இந்தியாவின் தொடர்பின் வருங்காலத்தைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவின. இங்கிலாந்தின் ஒரு முக்கியச்செய்தி ஏடான “ஸ்டான்லி ரெவ்யூ”, இங்கிலாந்தின் அரசியலிலிருந்து இந்தியாவை ஒதுக்கிவைப்பதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனி தொடர்ந்து செயல்படவேண்டுமென்று வாதிட்டது. இந்தியாவுக்குச் சென்ற ஆங்கிலேயர்கள் எதேச்சதிகாரிகளாக மாறினர். அதனால், ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை அது தெளிவுப்படுத்தியது. “இந்தியா ஒரு மிகப்பெரிய நீர்மூழ்கிக் குண்டைப் போன்றது, அது இங்கிலாந்தின் அனுகூலமான நடவடிக்கைகளை முடக்கிவிடும், இங்கிலாந்தின் சுதந்திர, தார்மிக வாழ்வைச் செயலிழக்கச் செய்துவிடும்” என்று துணிந்து பிரகடனம் செய்தது. “இந்தியாவை இங்கிலாந்திற்கு நெருக்கமாகக் கொணர்ந்தால், அது ஒரு மகத்தான பள்ளியாகத் திகழும். அதில் நேப்பிள்ஸ் மன்னரின் கோட்பாடுகளையும், திருமதி.ஸ்டோயியின் வெக்ரி நடைமுறைகளையும் கற்றுக் கொள்ளலாம்.”

                மற்றவர்கள், குறிப்பாகக் கோண்டியின் சீடரான ரிச்சர்டு கான்கிரீவ் என்பவர், தனது வருங்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை இந்தியாவிடமே விட்டுவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஒரு நாட்டுமக்கள் வேறொரு நாட்டு மக்களை ஆளுவது என்பது ஒழுக்கக்கேடானது, மானுட இனத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்காது என்று அவர் கூறினார். ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின் இந்தியாவிற்குள் வேறு எந்தநாடும் நுழைந்துவிடுவதைத் தடுப்பதற்காக, நிர்வாகத்தை ஒழுங்கமைப்பதற்கு, ஒரு சர்வதேச அமைப்பு நிறுவப்படவேண்டுமென்று அவர் யோசனை கூறினார். இறுதியில் அது, தன்னாட்சி அரசாங்கத்தை நடத்த வல்லவர்களாக இந்தியர்கள் மாறும்போது அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கும்.

                இக்கருத்துக்கள் எவையும், வேறுவிதமாகச் சிந்தித்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்புடையவையாக இல்லை. கிழக்கிந்தியக் கம்பெனியை ஒழித்துவிடுவதிலும் இந்திய அரசாங்கத்தை முடியரசின் கீழ் உடனடியாகக் கொணருவதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர். இரட்டை அரசாங்கங்களுக்குப் பதிலாக நேரடி அரசாங்கத்தை நடத்த அவர்கள் விரும்பினர். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் விண்ணப்பமோ அல்லது சுதந்திரமான பொதுக்கருத்தோ எந்தப் பயனையும் அளிக்கவில்லை. கம்பெனியை ஒழிக்கும் மசோதாவையும் இந்தியா அரசாங்கத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தமது மசோதாவையும் பால்மெர்ட்ஸ்டன் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன்னமே தேசத்துரோக மசோதாவினால் பால்மெர்ஸ்டன் அரசாங்கம் பதவி இழந்தது. டெர்சி பிரபுவின் தலைமையில் கன்சர்வேடிவ் அரசாங்கம் பதவி ஏற்றது. பார்மெர்ட்ஸ்டன் பிரபுவின் ஆட்சி பதவியிழந்த பின்னர் அவருடைய மசோதாவையும் நிறைவேறவில்லை, லார்டு டெர்பியின் கீழ் கான்சலராக இருந்த பென்ஜமின் டிஸ்ரேலி தமது இந்திய மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த இரு மசோதாக்களின் சாதக பாதகங்களைப் பற்றி ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஒப்பீடு மிகவும் ஆர்வமூட்டுவதாகும், பின்னாளில் நடைபெற்ற சம்பவங்கள் அவரது கூற்றுக்களை நியாயப்படுத்தின. அவர் கூறுவதாவது:

                “இச்சிரமங்களைச் (ஒரு நாட்டை மற்றொரு நாடு அரசாள்வது) சமாளிப்பதற்காக இந்த மசோதாக்கள் வழங்கிய வழிவகைகளில் ஒரு அமைச்சரின் தங்குதடையற்ற அதிகாரங்கள் அடங்கியுள்ளன. இந்த வகையில், இந்த இரு மசோதாக்களுக்கும் இடையில் அதிக வேறுபாடுகள் இல்லை. அந்த அமைச்சருக்கு உதவ ஒரு கவுன்சிலும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், மிகமோசமான கொடுங்கோலர்களும்கூடக் கவுன்சில்களைக் கொண்டிருக்கின்றனர். ஒரு கொடுங்கோலரின் கவுன்சிலுக்கும், ஓர் ஆட்சியாளரைக் கொடுங்கோலராக மாறுவதிலிருந்து தடுக்கும் கவுன்சிலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவெனில், முதலாவது கொடுங்கோலரைச் சார்ந்திருக்கிறது. மற்றது சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஒரு கவுன்சிலருக்கு என்று சொந்தமாகச் சில அதிகாரங்கள் உள்ளன. மற்றொன்றிற்கு இல்லை. முதலாவது மசோதாவின்படி (லார்டு பால்மெர்ஸ்டனின் மசோதா) கவுன்சில் முழுவதும் அமைச்சரால் நியமனம் செய்யப்படுகிறது. இரண்டாவது மசோதாவின்படி (டிஸ்ரேலியின் மசோதா) கவுன்சிலின் பாதி உறுப்பினர்களை அமைச்சர் நியமனம் செய்கிறார். அந்தக் கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புகளை, இரு மசோதாக்களும் சற்றே மாறுபட்டு, சொந்த விருப்பத்தினடிப்படையில் அமைச்சரே தீர்மானிக்கிறார்.”

                லார்டு பால்மெர்ஸ்டனின் மசோதாவை விட டிஸ்ரேலியின் மசோதா மிகமோசமான முடிவைச் சந்தித்தது. அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. ஆகவே 1858 ஆகஸ்டில் ஒரு புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு “இந்தியாவின் சிறந்த அரசாங்கத்திற்கான சட்டம்” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது.

                இச்சட்டத்தின் ஷரத்து (பிரிவு 75இன்) இந்தியாவின் நிர்வாகத்தை இன்னமும் பெருமளவுக்கு ஒழுங்குபடுத்துகிறது. அவற்றின் தன்மையைக் கொண்டு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கிறது.

 1. கடந்தகால விவகாரங்கள் சம்பந்தப்பட்டது.
 2. வருங்கால விவகாரங்கள் சம்பந்தப்பட்டது.

கடந்தகால விவகாரங்கள் சம்பந்தப்பட்டவற்றை முதலில் பரிசீலிப்போம் – முக்கியமாகக் கம்பெனியின் நிதிசார்ந்த மற்றும் வர்த்தகரீதியான கட்டுப்பாடுகளுக்குத் தீர்வு காண்பது. இச்சட்டத்தின் பிரிவு 42 “கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலதனப் பங்குகளின் மீதான லாபப்பங்கீட்டுத் தொகையை இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து மட்டுமே செலுத்தமுடியும், செலுத்த வேண்டும்” என்று கூறுகிறது.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உள்ள நேர்மையான முறையில் தீர்க்கப்படவேண்டிய எல்லாப் பிரச்சினைகளிலும், இந்தியக் கடன் பிரச்சினையைவிட அதிக முக்கியமான பிரச்சினை வேறு எதுவும் இல்லை. இந்தியக் கடன்சுமையை யார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அக்காலத்தின் அனல் பறக்கும் கேள்வியாக இருந்தது. அதற்கு யார் பொறுப்பு, அதன் நோக்கம் என்ன என்பதுதான் பிரச்சினையின் மையக் கருவாக இருந்தது.

இப்பிரச்சினை குறித்து மிகவும் அறிவார்ந்த முறையில் விமர்சனம் செய்தவர் மேஜர் வின்கேட் என்பவராவார். கலகம் நடந்து முடிந்த உடனேயே அவர் பின்வரும் வாதத்தை முன் வைத்தார்.

“தங்களது விவகாரங்களை நிர்வகிப்பதில் இந்திய மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனரா அல்லது இந்த நாட்டின் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தலையீடோ அல்லது குறுக்கீடோ இன்றி இந்தியாவின் வளவாழ்வை மட்டுமே கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கத்தின் வரிவிதிப்பு மற்றும் செலவினங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனவா? நிச்சயமாக இல்லை, இந்திய அரசாங்கத்தை அதன் வடிவங்கள் அல்லது அதிகாரங்கள் சம்பந்தமான கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆரம்பம் முதல் இன்றுவரை அது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உருவாக்கமாகவே இருந்து வந்துள்ளது. கடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக இந்திய அரசாங்கத்திற்கு வழக்கப்பட்ட அதிகாரம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வழங்கிய அதிகாரமேயாகும். அது இந்த நிமிடம்வரை, கடைசி ஈட்டுப்பத்திரக் கடன் விஷயத்தில் நிகழ்ந்ததைப் போல, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள உரிமையை வலியுறுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியை பிரிட்டிஷ் நாட்டின் வெறும் டிரஸ்டிகளாகச் செயல்படுமாறுதான் நாடாளுமன்றம் பிரகடனம் செய்தது. அது, இக்கண்ணோட்டத்திற்கேற்ப அவ்வப்போது தங்களது டிரஸ்டின் நிபந்தனைகளை மாற்றியமைத்தது. இறுதியில் டிரஸ்டிகளைப் பணியிலிருந்தே விடுவித்தது. இந்த விஷயத்தை மிகக் கவனமாகப் பரிசீலிக்கும்போது, இந்திய அரசாங்கமானது இதுவரை ஒரு வேற்றுநாட்டு அரசாங்கமாக இருந்ததிலிருந்து, ஆரம்பம் முதல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு துறையாகத் தான் இருந்து வந்துள்ளது என்பதைக் காணலாம்.

கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மூலம் செயல்பட்டு வந்த பிரிட்டிஷ் அமைச்சகம், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த இந்திய நிர்வாகங்களின் கொள்கைகளைத் தீர்மானித்த மெய்யான உந்துசக்தியாக அமைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு வெறும் வசதியான மூடு திரையாகத்தான் இருந்தது. உண்மைகள் இவ்வாறு இருக்க அவற்றை மறுத்துப் பேச முடியாது, ஆரம்பத்திலிருந்து கடைசிவரை இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நாட்டின் நடவடிக்கைகளாகவே இருந்து வந்துள்ளன என்ற உண்மையை நாம் காண மறுப்பதுபோல் தோன்றுகிறது. இந்தியாவின் மீது ஒரு அரசியல் சட்டத்தின் நிழல் படிந்ததில்லை. அல்லது ஒரு தேசிய அரசாங்கத்தின் நிழல்கூட விழுந்ததில்லை. ஆனால், போரில் கைப்பற்றப்பட்ட நாடு என்ற முறையில்தான் இந்தியா தொடர்ந்து வரும் பிரிட்டிஷ் நாடாளுமன்றங்களின் பிரிட்டிஷ் நிர்வாகிகளின் கண்ணோட்டங்களுக்கேற்ப ஆளப்பட்டு வந்துள்ளது. இந்தியக் கடன் உண்மையில் இந்த நாட்டின் அரசாங்கத்தினால்தான் ஏற்பட்டது. அப்படியிருக்க இந்தியக் கடனுக்காக பொறுப்பிலிருந்து நாம் ஒதுங்கிக் கொள்வது சாத்தியமாகுமா?”

இங்கிலாந்துக்கான அனுகூலங்களையும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களையும் விளக்கி, பிரிட்டிஷ் மக்களின் மனித நேயத்திற்கு திரு.வின்கேட் அறைகூவல் விடுத்தார்:

“இந்த அனுகூலங்களைப் பரிசீலனை செய்வதற்கு முன்னர் மற்றுமொரு முக்கியமான உண்மை உள்ளது என்பதை வாசகர் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். அந்த அனுகூலங்கள் பெரியவையாக இருந்தாலும் அல்லது சிறியவையாக இருந்தாலும் அவற்றினால் நாட்டுக்கு எந்தச் செலவும் ஏற்பட்டதில்லை. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு இது ஒரு பிரமிப்பூட்டும் விஷயமாகத் தெரியக்கூடும். ஏனெனில் இவர்கள் கனடாவில் கலகங்களுக்காகவும், காஃபரே போர்களுக்காகவும், சிலோன் கிளர்ச்சிகளுக்காவும் மற்றும் மேற்கத்திய அடிமைகளின் பல பெரும் நடவடிக்கைகளுக்காகவும், செலுத்த வேண்டியிருந்த பெரும் தொகைகளை இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கைகளின் மூலம் நமது காலனிகளையும் சார்பு அரசுகளையும் ஆளுவதற்கு அல்லது பாதுகாப்பதற்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனாலும், இந்தக் கூற்று கண்டிப்பாகவும் தாராளமாகவும் சரியானதேயாகும்.

‘நமது காலனியாதிக்க உடைமைகளின் மீது எவ்வளவோ செலவழித்திருக்கும் நாம், நன்றியில்லாத வெளிநாட்டவருக்காகப் பெரும்செலவில் பல போர்களை நடத்தியிருக்கிறோம். அப்படியிருக்க நமது மாபெரும் இந்திய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவதில் அல்லது மேம்படுத்துவதில் பணத்தைச் செலவழித்திருக்கக்கூடாது என்பது விந்தையே’ என்று நாம் வியக்கக் கூடும். “இது அவ்வாறு இருக்கக் கூடாது. இது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது”. உண்மையில் இது அதிர்ச்சியூட்டக்கூடியதுதான். இதற்குப் பின்னால் இன்னும் அதிக ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம் இருக்கிறது. நம் நாட்டிற்கு ஒரு ஷில்லிங் செலவின்றி இந்தியா கைப்பற்றப்பட்டது என்பது உண்மை. நமது நாட்டின் செலவினங்களைப் பொறுத்தவரை இந்தியா, கிரேட் பிரிட்டனுக்குப் பெருந்தொகையைச் செலுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் மட்டும் இந்தியா, நமக்கு நம்பற்கரிய தொகையான 10கோடி ஸ்டெர்லிங்கிற்குக் குறையாமல் கப்பம் கட்டியுள்ளது என்று நம்புவதற்கான காரணங்கள் உள்ளன” இந்த இந்தியக் கப்பத்தை நீதியின் துலாக்கோலால் எடை போட்டாலும் அல்லது நமது சொந்த உண்மையான நலன்களின் வெளிச்சத்தில் பார்த்தாலும், அது மானுட இனத்திற்குப் பொது அறிவுக்குப் பொருளாதார அறிவியலின் மூதுரைகளுக்குப் புறம்மானதாக இருப்பதைக் காணமுடியும்.”

இந்தியாவின் குறைகளைத் தொட்டுக்காட்டிய திரு.வின்கேட் இங்கிலாந்து மக்களைப் பின்வருமாறு வினவுகிறார்.

“இந்தியாவில் நமது கொள்கை, அந்த நாட்டின் மக்களுடைய அப்பட்டமான, சுயநலமற்ற, தர்மசிந்தனையுள்ள எண்ணத்தினால், அது நமது சொந்த நலன்களைப் பாதிக்கக்கூடும் என்ற விதத்தில் மிகச் சிறிய அளவு மதிப்பு கூட இல்லாமல் தீர்மானிக்கப் பட்டுள்ளதா? இந்திய உற்பத்தியாளர்களின் பண்டங்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதன் மீது அபரிதமான சுங்கத் தீர்வை விதிப்பதிலும் இக்கோட்பாடுதான் வழிகாட்டியதா? இந்தியாவிலிருந்து கிரேட் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திக்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டது. அதேசமயம் இங்கிலாந்தைத் தவிர உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் போது அதற்கு வரி விதிக்கப்பட்டது. இது இந்தியாவின் பாலுள்ள மதிப்பினால் செய்யப்பட்டதா? பிரிட்டிஷ் கப்பல்களில் இந்தியாவுக்குக் கொண்டுவரும் சரக்குகளில் மீதான இறக்குமதி வரிகள், வேறு எந்த நாட்டுக்கும் கப்பல்களில் கொண்டு வரப்படும் இதேபோன்ற சரக்குகளின் மீது விதிக்கப்படும் வரியில் சரிபாதியாக நிர்ணயிக்கப்பட்டதும்கூட இந்திய நலனில் கொண்ட அக்கறையினால் தானோ? சாதாரணக் குற்றவியல் நீதிமன்றங்களின் வரையறைகளிலிருந்து இந்தியாவிலுள்ள ஐரோப்பியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதன் மூலம் பிரிட்டிஷார் புரியும் குற்றங்களுக்குப் பரிகாரம் காணுவது என்பது நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது வழக்குகளில் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியிருப்பதும் இந்திய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுதானோ?

வரிசெலுத்தும் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் கல்விக்கு அல்லது அவர்களுக்கு அறிவொளியூட்டுவதற்காக எதையும் செய்வதற்கு முன்னர் இந்தியாவிலுள்ள அதிகாரப்பூர்வ ஐரோப்பியர்களுக்கு மிகுந்த செலவில் மத நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதும் கூட இந்தியமக்களின்பால் கொண்ட பரிவினால்தானோ? பிரிட்டிஷ் கருவூலத்திலிருந்து தங்களது இராணுவ பந்தோபஸ்துக்கான செலவினங்களை வழங்குவதற்காக, எல்லா பிரிட்டிஷ் சார்பு நாடுகளிலும் நிலவும் சட்டத்திற்கு எதிரான முறையில், இந்தியாவில் வசூலிக்கப்பட்ட வரிகளின் மூலமாகக் கிழக்கில் பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளைக் கைப்பற்றி, நிலைநாட்டி, விஸ்தரிக்கும் கொள்கையும் கூட அந்தந்த நாட்டுமக்களின்பால் கொண்ட சுயநலமற்ற மதிப்பினால்தானோ? கடைசியாக, இந்த நூற்றாண்டில் இந்தியாவில் வரியாக வசூலிக்கப்பட்ட கிட்டத்தட்ட 10 கோடி ஸ்டெர்லிங் பணத்தை கிரேட் பிரிட்டனுக்கு எடுத்துச் சென்றதும், இந்திய வருவாயிலிருந்து “உள்நாட்டுச் செலவினங்கள்” என்ற பெயரில் செலவழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததும்கூட இந்திய மக்கள் மட்டும் பயன்பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதானோ? நேர்மையான வாசகர்கள் இக்கேள்விகளுக்கான பதிலைச் சிந்தித்து மனச் சாட்சிப்படி தாங்களாகவே சொல்லிக் கொள்ளட்டும், பின்னர் பிரிட்டிஷ் நலன்களும் அதேபோன்று இந்திய நலன்களும் நமது இந்தியக் கொள்கையைத் தீர்மானிப்பதில் பங்காற்றியுள்ளனவா இல்லையா என்பதைக் கூறட்டும்.”

சட்டரீதியான மானுடநேயங்கொண்ட வாதங்கள் அனைத்தைம் செவிடன்காதில் ஊதிய சங்காகவே இருந்தன. சாம்ராஜ்யத்தின் அடிமை நாடுகளை உருவாக்கிய இந்தியக் கடனைப் பகிர்ந்து கொள்ள ஆங்கிலேய நாடாளுமன்றம் அப்பட்டமாக மறுத்து விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கடன் சுமையான 69,473,484 பவுண்டுகள் முழுவதும் – பெரும்பாலும் இது பயனற்ற செலவினங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. கம்பெனியின் செயல்பாடுகளில் எந்தவிதமான பங்கும்பெறாத ஏழ்மையில் வாடிய துணை நாட்டு மக்களின் மீதே சுமத்தப்பட்டது. இதுமட்டுமல்ல. துரதிருஷ்டவசமான கலகத்தினால் 40,000,000 பவுண்டுகள் செலவாயின. நியாயமாகப் பார்த்தால் சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதற்கான நியாயமான செலவினம் என்ற முறையில் இங்கிலாந்துதான் நியாயப்படி கலகத்திற்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்திய வரி செலுத்துவோரை அடிக்கடி ஆதரித்துப் பேசிய ஜான்பிரைட் நாடாளுமன்றத்திற்குப் பின்வரும் வேண்டுகோளை விடுத்தார், “புரட்சியினால் செலவான நான்கு கோடி பவுண்டுகளின் பளுவை இந்திய மக்களின் மீது சுமத்துவது நியாயமற்றது. அது நாடாளுமன்றத்தின் முறையற்ற நிர்வாகத்தினாலும் இங்கிலாந்து நாட்டு மக்களினாலும்தான் நிகழ்ந்தது. ஒவ்வொரு நபரும் நேர்மையுடன் சிந்தித்தால் அந்த 4 கோடி பவுண்டுகளையும் இந்த நாட்டு மக்கள் (இங்கிலாந்து) மீது விதிக்கப்பட்ட வரிகளிலிருந்துதான் செலுத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை.”

இந்த நேர்மையற்ற ஏற்பாடுகளின் நடைமுறை விளைவினால் இந்தியமக்கள் பலகோடி பவுண்டுகள் கொடுத்து சாம்ராஜ்யத்தை விலைக்கு வாங்கினார், ஏனெனில், இக்கடன் அதற்கான செலவில் ஒரு பகுதியேயாகும். அதேப் பிரிட்டிஷ் முடியரசுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். வேறுவிதமாகச் சொன்னால், அந்த சாம்ராஜ்யம் ஒரு வெகுமதியாகவோ அல்லது அறக்கட்டளையாகவோதான் இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குகள் சம்பந்தமான ஏற்பாடுகள் இதே நேர்மையற்ற முறையில்தான் இருந்தன. ஒரு கடன் மூலமாகத்தான் கம்பெனியின் பங்குகள் மீட்கப்பட்டன, அக்கடனும்கூட இந்திய அரசாங்கக் கடன் என்று அழைக்கப்பட்ட ஏற்கெனவே இருந்த ஏராளமான கடனுடன் சேர்க்கப்பட்டது.

உண்மையில் அச்சட்டம் செய்தது கட்டுப்பாட்டு வாரியத்தை ஒழித்ததுதான். சட்டரீதியாகக் கம்பெனி மறைந்துவிட்டபோதிலும் கூட, நடைமுறையில் இது இன்னமும் இருந்துவருவதுடன், இந்திய வருவாய்களிலிருந்து செலுத்தப்படும் வட்டியின் வடிவில் இன்றளவும் லாபப்பங்கீட்டைப் பெற்று வருகிறது. இக்கொள்கையின் வியத்தகு முடிவு என்னவெனில் இங்கிலாந்துக்கு ஆதாயங்கள், இந்தியாவுக்குச் செலவினங்கள் என்பதேயாகும். இந்தியாவுக்கு நியாயம் வழங்கும் எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனபோது, இந்தியாவின் இந்த ஏராளமான கடனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும், அதனடிப்படையில் வரி விகிதம் குறைக்கப்பட்டு இந்திய வரி செலுத்துவோரின் பளு குறைக்கப்படும் என்றும் ஒரு மசோதாவை டெர்பிபிரபு முன்வைத்தார். அவர் கூறியதாவது,

“இந்த நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஒரே சீரான கொள்கை, இந்தியக் கருவூலமே பொறுப்பு என்று கூறப்படும் இந்தியாவின் கடன் சம்பந்தமான எல்லாப் பொறுப்புகளையும் மறுப்பதுதான் என்பதை நானறிவேன். இப்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, அக்கொள்கையில் எந்தவித மாற்றத்தையும் நான் பரிந்துரைக்கப்போவதில்லை என்று உடனடியாக என்னால் கூறமுடியும். இத்தகைய எந்த ஒரு ஏற்பாடும் எத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை நானறிவேன். அதேபோல, அத்தகைய ஏற்பாடு எத்தகைய மறுதலிப்பைத் தவிர்க்க முடியாதவாறு பெறும் என்பதும் எனக்குத் தெரியும். திரும்பத் திரும்பத் தோன்றும் இப்பிரச்சினையை வருங்காலத்திலும் நிகழ்காலத்திலும் பரிசீலனை செய்ய வேண்டியதிருக்கும்.

இந்த வகையில் ஏற்கெனவே நடப்பிலிருக்கும் கொள்கையில் மாற்றம் ஏற்படுமானால், அக்கடன் பொறுப்புகளுக்கு ஒரு தேசிய உத்தரவாதம் வழங்கப்படும்போது, அந்த உத்தரவாதம் இந்தியக் கடன் மீதான வட்டியை 750,000 பவுண்டுகள் அல்லது 1,000,000 பவுண்டுகளாகக் குறைப்பதற்குப் பாடுபடும். அவ்வாறு செய்யும்போது அது கடனடைப்பு நிதியாக உருவாக்கப்பட்டு மொத்தக் கடனையும் தீர்ப்பதற்குச் செலுத்தப்படும் விதத்தில் செயல்படும்.”

குறுகிய கண்ணோட்டத்துடன் இதை எதிர்த்த ஜான் பிரைட் கூறினார்.

“இந்த அடிப்படையில் ஓர் ஏகாதிபத்திய உத்தரவாதத்தை நான் ஆட்சேபிக்கிறேன். இந்தியாவின் செல்வாதாரங்களை வற்றடித்தபின், இந்தியாவின் சேவைகளிலிருந்து நாம் விலகி விட்டோமானால், ஆங்கிலேய மக்களின் பாக்கெட்டுகளில் அவர்கள் கைவைக்க வேண்டியிருக்கும். இந்தியச் செலவினங்களின் மீது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாதிருக்கும் இங்கிலாந்து மக்கள், எந்த அளவுக்குக் கற்பனைக்கும் எட்டாத ஊதாரித்தனத்திற்குச் செல்வார்கள் என்று கூறுவது கடினம். இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் இங்கிலாந்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லாதிருப்போமாக!”

இந்த அபாயத்தைத் திரு.பிரைட் இந்த அளவுக்குப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமல்ல, “இந்தியாவின் விவகாரங்களை இங்கிலாந்து மக்கள் அசட்டை செய்வதை விரைவிலேயே நிறுத்திக்கொண்டிருப்பார்கள் என்பதைக் காணவும், இந்தியக் கடன் மீதான பொறுப்புகளின் ஒரு பகுதியைத் தங்கள் மீது சுமத்தினாலும் கூட, இந்தியச் செலவினங்களின் மீது அவர்கள் ஒரு மெய்யான கட்டுப்பாட்டைப் பெற்றிருப்பார்கள் என்பதைக் காணவும்” அவர் தவறிவிட்டார்.

விவாதங்களனைத்தும் பயனற்றவையாக இருந்தன, பேசிப் பேசிக் காலவிரயம்தான் ஏற்பட்டது. இந்த வகையிலும் இந்திய மக்களுக்கு “எண்ணற்ற துன்பங்களிலிருந்து” எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

அந்தக் கூட்டம் எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசித்திருந்தது என்பதை இப்போது பார்ப்போம். பிரிவு 55 கூறியதாவது,

“மேதகு மகாராணியின் இந்திய ஆஸ்திகளின் மீது உண்மையிலேயே போர்தொடுக்கப்படும்போது அதை எதிர்க்கவும் அல்லது தடுக்கவும். அல்லது இதர அவசரத் திடீர்த் தேவை ஏற்படும்போதும் தவிர, நாடாளுமன்றத்தின் இரு சபைகளுடைய ஒப்புதல் இன்றி இந்தியாவின் வருவாய்கள் இத்தகைய ஆஸ்திகளின் எல்லைகளுக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் எந்தவித இராணுவ நடவடிக்கைக்காகவும் செலவழிக்கப் பயன்படுத்தக்கூடாது.”

திரு.ஆர்.சி.தத்தின் அறிவாற்றலுக்கு ஆழ்ந்த மதிப்பளிக்கும் ஒருவரால், இப்பிரிவைப் “பாராட்டத்தக்கதொரு நிதி சார்ந்த ஷரத்து” என்று எந்த அடிப்படையில் அவர் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிர்வாகத்தைவிட மேம்பட்டது என்பதில் யாரும ஐயுறமுடியாது. ஆனால் இதைப் பாராட்டத்தக்கது என்று எந்தவகையிலும் கூறமுடியாது. ஏனெனில், இச்சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் கூட இந்தியாவின் வருவாய்கள் இந்தியக் காரணங்கள் அல்லாதவற்றிற்காக இந்தியாவுக்கு வெளியேயும் செலவழிக்கப்பட்டுவந்தன. மிக மோசமான தவறு இதில்தான் உள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்திய வருவாயைச் செலவழிக்க அனுமதிக்கும் மேற்கூறிய பிரிவில் உள்ள விதிவிலக்கு அளிக்கும், உட்பிரிவு ஜீவாதாரச் சொல்லான முந்தைய என்பதைத் தவிர்க்கிறது. அந்த உட்பிரிவு பாராட்டுக்குரியதாக இருக்க வேண்டுமெனில் அது பின்வருமாறு அமைந்திருக்க வேண்டும். “நாடாளுமன்றத்தின் இரு சபைகளுடைய முன் அனுமதியின்றி இந்தியாவின் வருவாய்கள் பயன்படுத்தப்படமாட்டாது போன்ற…..” மேற்கூறப்பட்டது போல் அல்ல. ஒரு அடையாளம் தெரியாத எழுத்தாளர் கூறுகிறார், “மூலநகலில் அந்த அத்தியாவசிய ஷரத்து இடம்பெற்றிருந்திருக்கக் கூடும், ஆனால் பின்னர், வெளியுறவுத் துணை அமைச்சரின் விலக்கையும், பொறுப்பின்மையையும், தனிப்பட்ட ஏதேச்சதிகாரத்தையும் பெறுவதற்காக பிரிவுகள் 26,27,28 ஆகியவற்றை உருவாக்கிய அதே குறும்புத்தனமான கரம்தான் அதை நீக்கியிருக்கக் கூடும்.”

நீக்கப்பட்ட ஷரத்தைச் சேர்ப்பதில் ஒன்றுபட்டு நின்ற லார்டு ஸ்டான்லியும், டெர்பியின் ஏர்லும் தான் அச்சட்டத்தை வடிவமைப்பதற்கு அரும்பாடுபட்டனர் என்பதை எடுத்துக் கூறிய அந்த எழுத்தாளர், பிரிவு 55 தொடர்பாகத் திரு.கிளாட்ஸ்டோனின் கருத்தையும் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்.

“மிகக் கவனமாக விளக்கப்பட்ட சில குறிப்பிட்ட விசேட சந்தர்ப்பங்களைத் தவிர, இந்திய எல்லைக்கப்பால் இந்தியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக இந்தியப் பணத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஆரம்ப சம்மதம் தேவை என்பதைக் கூறுவதுதான் இந்த உட்பிரிவின் நோக்கம் என்பது எனது கருத்தாகும். உண்மையில் அது இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியப் பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கேயாகும். இது என் நினைவுக்கு வருகிறது. இந்த உட்பிரிவை வகுத்துக் கொடுத்தது நான்தான். இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இப்போதைய லார்டு டெர்பி, அதன் குறிக்கோள்கள் சம்பந்தமாக என்னுடன் ஒருமித்த கருத்துக் கொண்டிருந்தார்.”

அதே எழுத்தாளர் தொடர்ந்து கூறுகிறார்;

“சட்டத்தின் இந்த வெறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஷரத்துக்களின் கீழ் மிகப்பகட்டாகச் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை சற்றும் மதியாமல் நடந்துகொண்டதைவிட “மகாராணியின் இந்தியா”வுக்குப் பேரழிவையும் நிதி சார்ந்த சேதத்தையும் விளைவித்த சில காரணங்களும் உண்டு. அப்பிரிவில் “முந்தைய” என்ற சொல் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட, அரைவேக்காட்டு ஏகாதிபத்திய நலன்களின் சார்பாக எழுந்த கூச்சல் அல்லது கட்சித் திட்டங்களின் உடனடித் தேவைகள் போன்றவை, இந்திய மக்களின் உரிமை கோரல்களையும் உரிமைகளையும் புறக்கணிப்பதற்குப் போதுமானவையாக இருந்திருக்கக் கூடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், அச்சொல் குறைந்தபட்சம் மதிப்பிடற்கரிய ஒரு தாமத்தைப் பெற்றுத்தந்திருக்கும், அப்போது நியாயத்தின் குரல் செவிமடுக்கப்பட்டிருக்கும்.”

இச்சட்டத்தின் நிதி சாராத பிரிவுகள் வருமாறு:

1) கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதேசங்கள் மேதகு ராணியாரின் கட்டுப்பாட்டில் இருந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியும் கட்டுப்பாட்டு வாரியமும் பிரயோகித்துவந்த அதிகாரங்கள் இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலை நியமித்தார். அந்த உறுப்பினர்கள் நன்னடத்தையுடன் பதவி வகித்தனர். ஒவ்வொரு உறுப்பினரும் இந்தியாவின் வருவாய்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 1200 பவுண்டுகள் ஊதியமாகப் பெற்றனர். வெளியுறவுத்துறை அமைச்சரின் ஊதியம் மற்றும் அவரது அமைச்சகத்திற்கான செலவினங்கள் முழுவதும் இந்திய வருவாயிலிருந்து செலுத்தப்பட்டன.

2) ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிரக் கவுன்சிலின் பெரும்பான்மை முடிவுக்கு எதிராகச் செயல்படுவதற்கு வெளியுறவுத் துறைச் செயலர் அதிகாரம் பெற்றிருந்தார். சமாதானம் மற்றும் போர் சம்பந்தமான பிரச்சினைகளிலும் கூட (இதுவரை இப்பிரச்சினைகளை இயக்குநர்கள் மன்றத்தின் ரகசியக் கமிட்டியின் மூலமாக கட்டுபாட்டு வாரியம் கையாண்டு வந்தது) தனது கவுன்சிலைக் கலந்தாலோசிக்காமல் உத்தரவுகளை அனுப்பவும் அல்லது உறுப்பினர்களுக்கு அந்த உத்தரவுகளைத் தெரிவிக்கவும் வெளியுறவுத்துறைச் செயலர் அதிகாரம் பெற்றிருந்தார்.

3) இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மதராஸ் மற்றும் பம்பாயின் கவர்னர்களை இனி மேதகு ராணியார் நியமிப்பார். மேதகு ராணியாரின் சம்மதத்துடன் லெப்டினன்ட் கவர்னர்களை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். போட்டியின் மூலம் இந்தியாவின் சிவில் சர்வீசுக்கு அனுமதிப்பதற்கான விதிகளை வெளிவிவகாரத்துறைச் செயலர் உருவாக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட நிர்வாகப் பிரிவின் தீயபோக்குகள் 1.எதேச்சதிகாரம், 2.ரகசியம் மற்றும் 3.பொறுப்பின்மை ஆகியவற்றுக்குச் சான்று பகருகின்றன. இவையனைத்தும் நாட்டின் நல்ல நிர்வாகத்திற்கு எதிரானவையாகும். தங்களது சொந்த நாட்டின் நிர்வாகத்தில் சொந்த நாட்டு மக்களின் குரலுக்குச் செவிமடுக்கும் ஷரத்து எதுவும் அச்சட்டத்தில் இல்லை என்பது வருத்தற்குரியது. இந்த முக்கிய விஷயத்தில் கம்பெனியின் நிர்வாகம் முடியரசின் நிர்வாகத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது என்று எவரேனும் கூற முடியுமா?

இச்சட்டத்தின் ஷரத்துக்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்காக விக்டோரியா ராணி, லார்டு டெர்பியை (அதன் முதலாவது நகலில் திருப்தியடையவில்லை என்பது தெளிவாகிறது) ஒரு பிரகடனம் வெளியிடுமாறு பணித்தார். அது “பெருந்தன்மை, இரக்க குணம் மதசகிப்புத்தன்மை போன்ற உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும், பிரிட்டிஷ் முடியரசின் பிரஜைகளுக்குச் சமமாக இந்தியர்கள் பெறவிருக்கும் சலுகைகளையும், நாகரிகத்தின் வழியில் கிடைக்கவிருக்கும் வளவாழ்வையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

இந்தியாவில் இப்பிரகடனம் வாசித்தளிக்கப்பட்டது. இந்தியாவின் அரசியல் உரிமை ஆவணமாகவும் அது கருதப்பட்டது. அந்த அரசியல் உரிமை ஆவணத்தில் மக்கள் உரிமைகள் அடங்கியிருக்கவில்லை. ஆனாலும் அது ஒரு மகத்தான ஆவணமாக இருந்தது.

இந்தியாவுக்கு இங்கிலாந்தின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இங்கிலாந்திற்கு இந்தியாவினுடைய பங்களிப்பின் அளப்பரிய தன்மையைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு இங்கிலாந்தின் பங்களிப்பு கெட்டி இல்லை என்பது திகைப்படையச் செய்வதாக உள்ளது. பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இந்த இரு கூற்றுகளுமே உண்மைதான். மற்றொரு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, இந்தியாவின் பங்களிப்பை நீதி மற்றும் மானுடநேயம் என்ற துலாக்கோலில் நிறுக்கமுடியாது எனில், இங்கிலாந்தின் பங்களிப்பைத் தங்கம் வெள்ளி என்ற தராசில் எடை போடமுடியாது. கடைசியில் கூறப்பட்ட கூற்று உயர்வு நவிற்சியின்றியும் உருவகமாகவும் உண்மையானதாகும். இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளிச் சேமிப்பைப் பெருக்குவதற்கு இங்கிலாந்து எதுவும் செய்யவில்லை. மாறாக “உலகின் சாக்கடைக்குழி”யான இந்தியாவை அது வற்றடித்து விட்டது.

அதன் பங்களிப்பு பொருளாதாரமில்லாத துறையில்தான் இருக்கிறது. ஆனாலும் கூட அது நாணயத்தினால் அளவிட முடியாத அளவுக்கு மகத்தானது.

“இந்தியாவில் தாங்கள் ஆற்றிய பணிகளை ஆங்கிலேயர்கள் கலப்படமற்ற திருப்தியுடன் இல்லாவிடினும் நியாயமான பெருமிதத்துடன் திரும்பிப் பார்க்க முடியும். இந்திய மக்களுக்கு அவர்கள் மகத்தான மானுடக் கொடையாம் அமைதியை வழங்கியுள்ளனர் மேற்கத்தியக் கல்விமுறையை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர், தொன்மையான நாகரிகத்தைக் கொண்ட நாட்டை நவீன அமைப்புகளுடன், நவீன வாழ்வுடன் தொடர்புபடுத்தினர். அவர்கள் உருவாக்கியுள்ள நிர்வாக அமைப்பில் காலப்போக்கில் சீர்திருத்தம் தேவைப்பட்டபோதும் கூட, அது வலுவானதாகவும் திறமையுடன் செயல்படக்கூடியதாகவும் உள்ளது. அவர்கள் அறிவார்ந்த சட்டங்களை இயற்றியுள்ளனர். நீதிமன்றங்களைத் தோற்றுவித்தனர், இந்த நீதிமன்றங்களின் தூய்மையை உலகின் எந்த நாட்டு நீதிமன்றங்களுடனும் ஒப்பிடமுடியும். இந்தியாவில் பிரிட்டிஷார் ஆற்றியுள்ள பணிகளின் இப்பலன்களை விமர்சிப்பவர் எவரும் உயர்வாகப் பாராட்டாதிருக்க முடியாது”

ஆனால், வெறும் மிருகத்தனமான அமைதிக்குப் பதிலாகப் பொருளாதார ஏழ்மையை விரும்பமுடியுமா என்பதை ஒவ்வொரு வரும் முடிவு செய்து கொள்ளட்டும்.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It

ambedkar 583பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட வருவாய் முழுவதையும் மொத்த வருவாய்க்கு ஒவ்வென்றும் அளித்த பங்கின் விகிதாசாரத்தையும் அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

முதலாவது நிலவரி: மொத்த நிலவரி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் விகிதமும்.

காலம்

நிலவரி சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாயில் நிலவரியின் பங்கு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

4,068,000

50.33

1797-98 முதல் 1801-02

4,126,000

42.02

1802-03 முதல் 1806-07

4,582,000

31.99

1807-08 முதல் 1811-12

5,078,000

31.68

1812-13 முதல் 1816-17

9,018,000

52.33

1817-18 முதல் 1821-22

13,263,000

66.17

1822-23 முதல் 1826-27

13,567,000

61.83

1827-28 முதல் 1831-32

13,112,000

60.90

1832-33 முதல் 1836-37

11,942,000

57.00

1837-38 முதல் 1841-42

12,380,000

59.05

1842-43 முதல் 1846-47

13,432,000

55.85

1847-48 முதல் 1851-52

14,947,000

56.06

1852-53 முதல் 1855-56

16,183,000

55.40

1792-93 முதல் 1855-56

10,349,000

54.07

அபினி வருவாய்:

                அபினி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாய்க்கு அதன் பங்களிப்பு விகிதமும்.

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாய்க்கு பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

264,000

3.27

1797-98 முதல் 1801-02

312,000

3.18

1802-03 முதல் 1806-07

579,000

4.04

1807-08 முதல் 1811-12

767,000

4.79

1812-13 முதல் 1816-17

958,000

5.56

1817-18 முதல் 1821-22

1,090,000

5.44

1822-23 முதல் 1826-27

1,641,000

7.47

1827-28 முதல் 1831-32

1,747,000

8.12

1832-33 முதல் 1836-37

1,677,000

8.00

1837-38 முதல் 1841-42

1,547,000

7.38

1842-43 முதல் 1846-47

2,965,000

12.33

1847-48 முதல் 1851-52

3,840,000

14.50

1852-53 முதல் 1855-56

4,943,000

16.91

1792-93 முதல் 1855-56

1,667,000

8.71

உப்புவரி:

                மொத்த உப்புவரி வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் பங்களிப்பு விகிதமும்.

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாய்க்கு பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

1,207,000

14.93

1797-98 முதல் 1801-02

1,188,000

12.10

1802-03 முதல் 1806-07

1,589,000

11.09

1807-08 முதல் 1811-12

1,785,000

11.14

1812-13 முதல் 1816-17

1,882,000

10.92

1817-18 முதல் 1821-22

2,256,000

11.25

1822-23 முதல் 1826-27

2,603,000

11.87

1827-28 முதல் 1831-32

2,590,000

12.03

1832-33 முதல் 1836-37

2,036,000

9.72

1837-38 முதல் 1841-42

2,593,000

12.37

1842-43 முதல் 1846-47

2,798,000

11.65

1847-48 முதல் 1851-52

2,438,000

9.47

1852-53 முதல் 1855-56

2,677,000

9.17

1792-93 முதல் 1855-56

2,118,000

11.07

சுங்க வருவாய்:

                மொத்த சுங்க வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த வருவாயில் அதன் பங்களிப்பு விகிதமும்

காலம்

சராசரி

மொத்த வருவாய்

மொத்த வருவாயில் பங்களிப்பு விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

192,000

2.38

1797-98 முதல் 1801-02

304,000

3.10

1802-03 முதல் 1806-07

596,000

4.16

1807-08 முதல் 1811-12

807,000

5.04

1812-13 முதல் 1816-17

1,159,000

6.68

1817-18 முதல் 1821-22

1,667,000

8.32

1822-23 முதல் 1826-27

1,663,000

7.58

1827-28 முதல் 1831-32

1,747,000

8.12

1832-33 முதல் 1836-37

1,506,000

7.19

1837-38 முதல் 1841-42

1,418,000

6.76

1842-43 முதல் 1846-47

1,449,000

6.02

1847-48 முதல் 1851-52

1,439,000

5.40

1852-53 முதல் 1855-56

1,611,000

5.52

1792-93 முதல் 1855-56

1,190,000

6.22

இதரவகை வருவாய்கள்:

                இந்த இனத்தின் மொத்த வருவாயும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் இதன் விகிதமும்

காலம்

சராசரி

வருடாந்திர வருவாய்

மொத்த வருவாயில் இதன் விகிதம்

(சதவிகிதம்)

1792-93 முதல் 1796-97

2,315,000

28.64

1797-98 முதல் 1801-02

3,809,000

38.79

1802-03 முதல் 1806-07

6,857,000

47.87

1807-08 முதல் 1811-12

7,452,000

46.49

1812-13 முதல் 1816-17

3,990,000

23.16

1817-18 முதல் 1821-22

1,392,000

6.94

1822-23 முதல் 1826-27

1,986,000

9.05

1827-28 முதல் 1831-32

1,789,000

8.31

1832-33 முதல் 1836-37

3,059,000

14.00

1837-38 முதல் 1841-42

1,434,000

6.84

1842-43 முதல் 1846-47

1,636,000

6.80

1847-48 முதல் 1851-52

1,977,000

7.40

1852-53 முதல் 1855-56

1,575,000

5.39

1792-93 முதல் 1855-56

3,043,000

15.90

வருவாய் ஆதாரங்களையும் ஒவ்வொரு ஆதாரத்தின் வாயிலாகவும் பெறப்பட்ட தொகைகளையும், ஒட்டுமொத்த வருவாயில் அவற்றின் வீகிதாசாரங்களையும் பற்றிய இந்த விவரங்கள் போதுமானவை.

                செலவுகளைப் பொறுத்தவரை நாம் பின்வரும் இனங்களைக் காண்கிறோம்.

1)            வருவாய் வசூலிப்பதற்கு ஆகும் செலவுகள்

2)            இராணுவம் மற்றும் கடற்படைச் செலவுகள்

3)            சிவில், நீதித்துறை மற்றும் காவல்துறை

4)            பொதுப்பணி

5)            இந்தியாவில் பத்திரக்கடன் மீதான வட்டி

6)            ஒப்பந்தங்கள் மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதன் கீழ் துணை மாநில அரசர்களுக்கு அலவன்சுகளும் பொறுப்புகளுக்குமான செலவினங்கள்

7)            உள்நாட்டுச் செலவினங்களில் பின்வருவன அடங்கியிருந்தன:

அ. உள்நாட்டுப் பத்திரக் கடன் மீதான வட்டி

ஆ. கிழக்கிந்தியக் கம்பெனிப் பங்குகளின் உரிமையாளர்களுக்கு இலாபப் பங்கீட்டுத் தொகை.

இ. மேதகு ராணியாரின் படைகளுக்கும் இதர நிர்வாக அலுவலர்களுக்கும் ஊதியங்கள்.

ஈ. கிழக்கிந்திய கம்பெனி மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்திற்கான செலவினங்கள்.

                இனவாரியாகச் செலவினங்களைப் பட்டியலிட்டுக் காட்டுவது உபயோகமானதாக இருக்கும்.

                1800 முதல் 1857 வரையிலான காலகட்டத்தைத் தேர்வு செய்து ஒவ்வொரு பத்தாண்டுகளையும் ஒரு பிரதிநிதித்துவ ஆண்டாக கொண்டு அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் வருவாய் மீதான செலவினங்களின் சதவீதத்தைக் காண்போம்.

பொதுப்பணிகள்:

                பேராசிரியர் ஆடம்ஸின் கூற்றுப்படி வளர்ச்சிக்கான செலவினங்களின் கண்ணோட்டத்திலிருந்துதான் ஒரு நாட்டின் நிநி வளத்தைக் கணக்கிட முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான செலவினங்களில் பொதுப்பணித்துறை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

                இதே அளவுகோலைப் பயன்படுத்திக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி அமைப்பு முறையை முற்றிலும் கண்டனம் செய்யும் கட்டாயத்திற்க்குள்ளாகிறோம்.

                1885 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்வாகம் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆகவே பொதுப்பணிகளில் எந்த ஒரு புதிய திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேசமயம் பழைய திட்டங்களையும் கிடப்பில் போட அனுமதித்தது.

                தமது “நவீன இந்தியா” (1837) என்ற நூலில் டாக்டர்.ஸ்பிரே, “சுதந்திரமான துணை மாநிலத் தலைவர்கள் மற்றும் மன்னர்களின் பிரதேசங்களில் மட்டும்தான் மகத்தான, பயனுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. நமது பிரதேசங்களில் கால்வாய்கள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், கிணறுகள், தோப்புகள் போன்றவற்றிற்கென்று, வருவாய்களிலிருந்து நமது முன்னோர்கள் ஒதுக்கிய பணிகள் வேகமாகச் சீரழிந்து வருகின்றன” என்று கூறுகிறார்.

                இந்தியாவில் பொதுப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, “இந்திய மக்களின் சார்பாக நான் பேசவேண்டுமெனில், பொதுப்பணிகளைப் பொறுத்தவரை நான் இந்த உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா முழுவதிலும் இருப்பதைவிட ஒரே ஒரு ஆங்கிலேய கிராமப்புறப் பகுதியில் அதிக சாலைகள் உள்ளன” என்று திரு. ஜான் பிரைட் கூறினார்; தொடர்ந்து “1834லிருந்து 1848 வரையிலான 14 ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ஆட்சிப்பகுதிகள் முழுவதிலும் சகலவிதமான பொதுப்பணிகளில் செலவிட்டதைவிட மான்செஸ்டர் நகரம் அங்கு வசிப்பவர்களுக்குத் தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளது என்றும் கூறுவேன். இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த உண்மையான நடவடிக்கை போர்தொடுப்பதும் நாடு பிடிப்பதுமாகத்தான் இருந்தது என்றும் கூறுவேன்” என்றார்.

                இந்தியாவின் எல்லா மாகாணங்களுக்கும் “பொதுப்பணித்துறை” ஒரே மாதிரியாக ஆக்கப்படுவதற்கு முன்னர், நிர்வாகத்தின் இந்த முக்கியத்துறை பல்வேறு வழிகளில் நடத்திச் செல்லப்பட்டது.

                பம்பாயில் இத்துறை இராணுவ போர்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாலைகள் மற்றும் குளங்களுக்கான கண்காணிப்பாளர் இராணுவ போர்டின் துணை அமைப்பாக இருந்தபோதிலும் அதன் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்து செயல்பட்டது.

                வங்காளத்தில் அத்துறை முற்றிலுமாக இராணுவ போர்டின் கட்டுப்பாட்டில் இருந்தது.

                மதராசில் இத்துறையின் நிர்வாகம் மூன்று பிரிவாக இயங்கியது:

அவையாவன:

1)            வருவாய் வாரியத்தின் பொதுப்பணித்துறை

2)            சாலைகளின் கண்காணிப்பாளர்

3)            இராணுவ போர்டு

இந்த அமைப்பின் பல்வகைத் தன்மை டல்ஹவுசி பிரபுவினால் ஒரே சீரான அமைப்பாக மாற்றப்பட்டது. பொதுப்பணிகள் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக அரசின் சார்பாக தனியாக ஒரு துறையை உருவாக்கினார்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட பொதுப்பணிகள் பற்றிய விபரத்தைச் சுருக்கமாக இங்குப் பார்ப்போம்.

1) கால்வாய்கள்

                கங்கைக் கால்வாய் 4491/2 மைல்கள்

                கிழக்கு மற்றும் 445 மைல் நீள மேற்கு யமுனைக் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.

                பஞ்சாப் கால்வாய்கள் பஞ்சாபில் 425 மைல் நீளமுள்ள போரீ – தோவாப் கால்வாய் 1856 ஆண்டு மே மாதம் செயல்படுத்தப்பட்டது.

                மதராஸ் நீர்ப்பாசனப் பணிகள் – குளங்கள், நீர்த்தேக்கங்கள், “அணைக்கட்டுகள்” அல்லது அணைகள் முதலியவை காவிரி, கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் குறுக்கிலும் படுகைகளிலும் கட்டப்பட்டன.

2) பெருவழி வண்டிச் சாலைகள்:              

 

 

மைல்கள்

செலவு

கல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை

1,423

1,423,000

கல்கத்தாவிலிருந்து பம்பாய்வரை

1,002

500,00

மதராசிலிருந்து பெங்களூர்வரை

200

37,121

பம்பாயிலிருந்து ஆக்ராவரை

734

234,676

ரங்கூனிருந்து புரோமே வரை

200

1,60,000

 3) இரயில் இருப்புப் பாதைகள்

கல்கத்தாவிலிருந்து பர்த்வான் வரை -              120

பம்பாயிலிருந்து வாசின்ட் வரை                            -              50

பம்பாயிலிருந்து கொம்ப்பூயி வரை                    -              10

மதராசிலிருந்து வேலூர் வரை                  -              81

4) மின்சாரத் தந்திக் கம்பிப் பாதை

கல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை

ஆக்ராவிலிருந்து பம்பாய் வரை                             மொத்தத்தில் கிட்டத்தட்ட 4000 மைல்கள்

பம்பாயிலிருந்து மதராஸ் வரை               

                “நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பணிகளின் விஸ்தரிப்பு பெருமளவில் நடைபெறவுமில்லை; விரும்பியதுபோல் தொடர்ச்சியாகவும் நடைபெறவில்லை. முற்றிலும் இராணுவத் தன்மை கொண்ட பணிகளைத் தவிர்த்து விட்டுத் தகவல்தொடர்பு மற்றும் நீர்ப்பாசனப் பணிகள் சம்பந்தமான நிலம் மற்றும் நீர்வழிப்பாதைகளின் கீழ் வகைப்படுத்தபடும் பணிகளை, வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் வருவாய் – உற்பத்தி சார்ந்த பொதுப்பணிகளைப் பார்த்தோமானால், அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற பெரும்பாலான நடவடிக்கைகளுக்காக ஓராண்டிற்கு அதிகபட்சத் திட்டமதிப்பீடாகக் கிட்டத்தட்ட 15 இலட்சம் ஸ்டெர்லிங் ஒதுக்கப்பட்டது. கால்வாய் வெட்டுதல், நீர்பாசனம் போன்ற உடனடி உற்பத்தி சார்ந்த பணிகளைப் பார்த்தோமானால் 1853-54 ஆம் ஆண்டில் 543,333 ஸ்டெர்லிங்கும் செலவிடப்பட்டது.”

                “பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப்பரப்பு 837,000 சதுர மைல்களாகவும் அதன் மக்கள் தொகை 1,32,000,000 ஆகவும் இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது வருவாய் நிலைமை மிகத் துரிதமான, பரந்த திட்டமதிப்பீட்டைத் தடுத்து வந்தது. திட்ட ஒதுக்கீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறுபவர்களுக்கும் கூட இது பதிலளிப்பதாக இருந்தது. இந்தப் பதில் இதிலுள்ள சிரமத்தைச் சுட்டிக் காட்டுகிறது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில் இச்செலவினங்கள் உற்பத்தியான பலன்களைக் கொடுத்துள்ளது என்ற உண்மையிலிருந்து மட்டுமன்றி, இந்த நாட்டின் காலனி சாம்ராஜ்யத்தின் இதர துறைகளின் வரலாறு மற்றும் கொள்கையிலிருந்தும் கூட இச்சிரமங்கள் தெளிவாக நமக்குத் தெரிவதுடன் இவற்றிற்குப் பரிகாரம் காணமுடியும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட திட்ட இலக்குகள் எதிர்பார்க்கும் பலன்களைத் தராதபோது, அவை அடிக்கடி ஊதாரித்தனமானதாகவும் குறிக்கோளற்றதாகவும் தோன்றக்கூடும் என்ற பொதுவான விதிக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி அல்லது இதர நாடுகளின் வர்த்தகக் கம்பெனிகளின் வரலாறு விலக்கல்ல என்பதைக் காட்டியுள்ளன….

வருவாயின் நெருக்குதல்

                நமது ஆய்வின் இந்தத் துறை முற்றிலும் சாத்தியமற்றதாகும். இது நமது குறிக்கோளுக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. ஆனால், நமது பாதையில் எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளன என்பதேயாகும். முதலும் முக்கியமுமாக மக்கள் தொகை சம்பந்தமாக நம்மிடம் முற்றிலும் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. அந்த காலகட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இல்லாதிருந்தது. மக்கள் தொகையைப் பற்றிய மதிப்பீடு சுருக்கதில் எந்தவித விஞ்ஞானரீதியான முடிவுக்கும் ஆதாரமாகக் கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு பொதுவான, அர்த்தமற்ற யூகமாக இருந்தது.

                இத்தகைய ஆய்வு மேற்கொள்ளும்போது ஏற்படும் மற்றொரு முக்கியக் குறைபாடு யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் கிழக்கிந்தியக் கம்பெனி தனது பிரதேசத்தைப் பல சதுர மைல் பரப்புக்கு விஸ்தரித்துக் கொண்டே போயிற்று. ஆகவே, வருவாய் பெருகியது, உயர்வரி விகிதத்தினாலா அல்லது பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டதனாலா என்பது நம்மைக் குழப்பமடையச் செய்கிறது என்ற உண்மையாகும்.

                மூன்றாவதாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்க் கணக்குகள் தெளிவாக இல்லை. முன்னர் கண்டதுபோல, 1813 வரை அவை வர்த்தகக் கணக்கு வழக்குகளுடன் கலந்திருந்தது. அதற்குப் பின்னர் நாடாளுமன்றச் சட்டத்தின்படி தனியாகப் பிரிக்கப்பட்ட போது அவற்றைப் புரிந்து கொள்வது இயலாததாக இருந்தது.

                இந்த மோசமான குறைபாடுகளின் விளைவாக, நமது ஆய்வின் இந்த முக்கியமான கட்டத்தை ஒதுக்கிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடக்கும் சில அறிக்கைகளை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது, அது வருவாயின் நெருக்குதல் சம்பந்தமாக நமக்கு சில கருத்துகளைச் சொல்லக்கூடும் வேறு எவரையும் விட, இத்துறையில் நிபுணரான திரு.ஆர்.சி.தத் நிலவரியைப் பற்றி மட்டுமே பேசும்போது, “பிரிட்டிஷ் அரசாங்கம் வசூலித்த நிலவரி மிக அதிகமானது மட்டுமின்றி, அவ்வப்போது ஏறி இறங்கக் கூடியதும் பல மாகாணங்களில் நிச்சயமற்றதாகவும் இருந்தது. இங்கிலாந்தில் நிலவரி ஒரு பவுண்டிற்கு ஒரு ஷில்லிங் மற்றும் நான்கு ஷில்லிங்காக இருந்தது. அதாவது 1798க்கு முன்னர் நூறாண்டுகளாகக் குத்தகையில் ஐந்து முதல் 20 சதவிகிதத்திற்கு இடையில் இருந்தது. அப்போதுதான் அது வில்லியம் பிட்டினால் நிரந்தரமானதாகவும் திரும்பப் பெறக்கூடியதாகவும் ஆக்கப்பட்டது. 1793க்கும் 1822க்கும் இடையில் வங்காளத்தில் நிலவரியானது குத்தகைத் தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. வட இந்தியாவில் குத்தகைத் தொகையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. பெருமளவில் நிலவரி வசூலித்து வந்த முகமதிய ஆட்சியாளர்களின் முன்னுதாரணத்தையே பிரிட்டிஷ் அரசாங்கம் பின்பற்றியது என்பதுதான் உண்மை. ஆனால், இதில் வித்தியாசம் என்னவெனில் முகமதிய ஆட்சியாளர்கள் விதித்த வரியை முழுமையாக வசூலிக்க முடியவில்லை; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த வரியை முழு வீச்சில் வசூலித்தனர்.

வங்காளத்தின் கடைசி முகமதிய ஆட்சியாளர் தமது நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் (1764) 8,17,553 பவுண்ட் வரியாக வசூலித்தார்; அதே மாகாணத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முப்பது ஆண்டில் ஔத்தின் நவாப் வட இந்தியாவில் அலகாபாத் மற்றும் சில இதர வளமான மாவட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இழந்தார். அதிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 16,82,306 பவுண்டுகளை நிலவரியாக வசூலித்தனர். மதராசில், கிழக்கிந்தியக் கம்பெனி முதலில் விதித்த நிலவரி, நிலத்தின் மொத்த உற்பத்தியில் பாதியாக இருந்தது. பமபாயில் 1817 இல் மராட்டாக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் நிலவரி வருவாய் அந்த ஆண்டு 8,00,000 பவுண்டாக இருந்தது பிரிட்டிஷ் ஆட்சி அமல்செய்யப்பட்ட சில நாட்களிலேயே அது 15,00,000 பவுண்டாக உயர்த்தப்பட்டது. அதுமுதல் நிலவரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது” என்று கூறுகிறார். 1826இல் இந்தியா முழுவதிலும் பயணம் செய்து, பிரிட்டிஷ் ஆட்சிபுரியும் மாகாணங்களிலும் மன்னர்கள் ஆண்ட மாகாணங்களுக்கும் சென்று வந்த பிஷப் ஹெபர் என்பார், “மன்னர்கள் ஆளும் எந்த ஒரு மாநிலத்திலும் நம்மைப் போல நிலக்குத்தகை வசூலிக்கப்பட வில்லை” என்று எழுதினார். “இந்தியாவில் இப்போது நடப்பில் இருக்கும் நிலவரி முறை நிலக்கிழாரின் குத்தகைத் தொகை முழுவதையும் அபகரித்துக் கொள்வதாக இருக்கிறது. ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ எந்த அரசாங்கத்தின் கீழும் இத்தகைய முறை இருப்பதாகத் தெரியவில்லை” என்று 1930 இல் கர்னல் பிரிக்ஸ் என்பார் எழுதினார்.

                “பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் செய்யப்பட்டிருந்த மிக அதிகமான நிலவரி மதிப்பீட்டிலிருந்து வங்காளத்தையும் வட இந்தியாவையும் சேர்ந்த மக்கள் படிப்படியாகச் சில சலுகைகளைப் பெற்றனர். வங்காளத்தில் இந்த மதிப்பீடு நிரந்தரமாக்கப்பட்டது. சாகுபடி நிலங்கள் விஸ்தரிக்கப்பட்டபோது கூட இது உயர்த்தப்படவில்லை, இப்போது (அது முதல் விதிக்கப்பட்ட குத்தகை மீதான வரியில் சாலை மற்றும் பொதுப்பணிகள் மதிப்பீடு அடங்கும்) குத்தகையில் இந்த மதிப்பீடு நிரந்தரமாக்கப்படவில்லை. ஆனால் 1885 இல் எல்லா மதிப்பீடுகளையும் உள்ளிட்டு 50 சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் புதிய மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டன. நடப்புக் குத்தகைத் தொகையில் அல்லாமல், ஆனால், வருங்காலக் குத்தகையின் மீது வரியானது கிட்டத்தட்ட 60 சதவிகிதமாக உயரும் விதத்தில் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.”

                பம்பாயிலும் மதராசிலும் நிலைமை பழைய மாதிரியாகவே இருந்தது. இந்த இரு மாகாணங்களிலும் இரயத்துவாரி த் தீர்வை நடப்பிலுள்ளது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின்போது நில உரிமைக் காலத்தில் இந்த இரயத்துவாரி அமைப்பு செயல்படும் விதத்தை திரு.ஃபுல்லர்டன் (மதராஸ் அரசாங்கத்தின் உறுப்பினர்) மிக அழகாக விவரிக்கிறார். அவர் கூறுகிறார், ஒட்டுமொத்தமாக நில உடைமை அனைத்தும் – அதாவது கிரேட் பிரிட்டனில் நிலக்கிழார்கள் அனைவரும் மூலதன விவசாயிகளும் கூட ஒரே நேரத்தில் இந்த உலகப் பரப்பிலிருந்து துடைத்தெறியப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முடியரசின் ஒவ்வொரு வயலின்மீதும் நிர்ணயிக்கப்படும் குத்தகை, அதைச் செலுத்தும் வழிவகைக்கு ஒரு போதும் குறையாமல், பொதுவாக அதிகமாக, இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் கிராம மக்களுக்கு அவர்களின் வசமுள்ள கால்நடைகள் மற்றும் ஏர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதாவது ஒவ்வொருவருக்கும் 40 அல்லது 50 ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்று கொள்வோம். ஒரு இலட்சம் வருவாய் அலுவலர்களைக் கொண்ட அமைப்பின் மூலமாக விதிக்கப்படக்கூடிய மேற்கண்ட விகிதத்திலான வருவாய், உழுபவரின் நிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சலிலிருந்தோ அல்லது அவருடைய சொந்த ஆஸ்தியிலிருந்தோ அந்த அலுவலர்களின் விருப்பப்படி, நிலத்தை உழுபவரின் வரி செலுத்தும் ஆற்றலைப் பற்றிய அவர்களது கருத்துக்கேற்ப வசூலிக்கப்பட்டுச் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நபரையும் அவரது அண்டை வீட்டாரை வேவுபார்க்கும் உளவாளியாகச் செயல்படுமாறு ஊக்குவிப்பதற்காகவும், அவரது வரி செலுத்தும் வழிவகைகளைப் பற்றி தெரிவிக்கவும், அதன்மூலம் அவர் தன்மீது விதிக்கப்படும் கூடுதல் வரியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்று வைத்துக் கொள்வோம். கிராமத்தின் ஒன்று அல்லது கூடுதல் நபர்கள் செலுத்தத் தவறும் வரியை ஈடுகட்டுவதற்காகக் கிராமத்தின் எல்லாக் குடியானவர்களும் எல்லாக் காலங்களிலும் தனியான ஒரு கோரிக்கைக்குக் கட்டுப்பட்டவர்களாகிறார்கள் என்று கொள்வோம். ஒரு வாரியத்தின் உத்தரவின்படி செயல்படும் கலெக்டர்கள், உழைப்புக்கான ஆர்வமனைத்தையும் அழித்துவிட, நெஞ்சிற்கினிய கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு மதிப்பீட்டை ஒரு பொதுவான சமநிலைப்படுத்துவதன் மூலம், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஓடிவிடும் விவசாயிகளைத் திரும்பவும் அவர்களுடைய இடத்திற்கே திருப்பி அனுப்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இறுதியாகக் கலெக்டர், மாஜிஸ்ட்ரேட்டுகள் அல்லது நாட்டின் அமைதிக்கான நீதிபதிகள் ஆகியவர்களின் மூலமாகத்தான் ஒரு பிரஜை அனுபவிக்கும் தனிப்பட்ட குறைபாடுக்கான எந்த ஒரு குற்றவியல் புகாரும் உயர் நீதிமன்றங்களுக்குச் சென்றடைய முடியும் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் நிலவரி வருவாயை வசூலிப்பதில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஒவ்வொரு கீழ்நிலை அலுவலரும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தையோ அல்லது அந்த வழக்கில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களோ இல்லாமல் அபராதம் விதிக்கவும் சிறையிலடைக்கவும், ஜப்தி செய்யவும், தனது பகுதியிலுள்ள எந்த ஒரு பிரஜைக்கும் கசையடி கொடுக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.”

                மார்ட்டின் மேலும் கூறுவதாவது;

                                “மதராசில் உள்ள இரயத்துவாரி முறையை நியாயப்படுத்துபவர்களின் கண்களை ஏதேனும் திறக்கமுடியும் என்றால், இந்த சித்தரவதை வெளிப்பாடுகள் அதைச் செய்யும். மதராசில் உள்ள கவுன்சிலின் உறுப்பினரான காலஞ்சென்ற திரு.சல்லிவன், தம்முடைய கச்சேரியிலிருந்து (கருவூலம்) வண்டிவண்டியாக வெள்ளி ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்ட போது, யாரிடமிருந்து அது வசூலிக்கப்பட்டதோ அந்த மக்களின் ஏழ்மையை எண்ணிப்பார்த்த அவர், வரவிருக்கும் ஆண்டில் அவர்களுடைய நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தார், ஏனெனில் அரசாங்கத்தின் தேவை அளவற்றதாக இருந்தது, ஒரு குறிப்பிட்ட தொகை வரவேண்டும் என்று கூறினார்.”

                கம்பெனியின் ஆட்சியின்போது இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளும்போது உள்நாட்டுப் போக்குவரத்து கடந்து செல்லும் வரிகள் நெருக்குதலைப் பின்னர் பரிசீலனை செய்வோம்.

                வரிவிதிப்பின் இந்த நெருக்குதலைப் போலன்றி மக்களின் வருவாய் சம்பந்தமாக மிகக் குறைவான தகவலே நமக்குக் கிடைத்துள்ளது.

                வருவாயுடன் வரியை ஒப்பிட்டு செய்வதைவிட வரியின் நெருக்குதலைப் பற்றிய ஒரு சிறந்த தகவலை நமக்கு வேறு எதுவும் தருவதில்லை. ஆனால், மக்களின் வருவாயைப் பற்றிய போதிய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. மன்ரோவின் கூற்றுப்படி ஒருவிவசாயத் தொழிலாளியின் மாதாந்திர ஊதியம் நான்கு ஷில்லிங்குக்கும் ஆறு ஷில்லிங்குக்கும் இடையில் இருந்தது. வாழ்க்கைச் செலவினம் ஆண்டொன்றுக்கு 18 ஷில்லிங்குக்கும் 27 ஷில்லிங்குக்கும் இடையில் இருந்தது.

                வரியின் நெருக்குதல் எந்த அளவுக்கு இருந்தது என்பது நமக்குத் தெரியாது. அது மிகப் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டுமென்பதை நமக்குக் கிடைக்கும் சூழ்நிலைச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

தொடரும்...

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It

            நிதித்துறையின் வரலாறு முழுவதையும் மார்ட்டின் மிகத் தெளிவாகப் பின்வருமாறு விளக்குகிறார்.      

ambedkar in meeting      “கம்பெனி பிரதேசங்களைக் கைப்பற்றுவதைத் தொடர்ந்து வளம்பெருகும் என்று கிளைவ் கருதிய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறவில்லை வங்காளம் மற்றும் பீகார் திவானிகள் கம்பெனிக்கு வழங்கப்பட்டபோதும், அதைத் தொடர்ந்து வந்த சந்தர்ப்பங்களிலும் வருவாயில் ஏற்பட்ட அதிகரிப்பு அநேகமாக, செலவினங்களின் அதிகரிப்பை ஈடுசெய்வதாக இல்லை; ஐரோப்பியர்கள் நடத்தி வந்த அரசாங்கத்தின் செலவினங்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் நிரந்தர இராணுவத்தின் வளர்ச்சி, இதர நியாயமான மற்றும் நியாயமற்ற செலவினங்களுக்கான ஆதாரங்கள் ஆகியவை எதிர்பார்க்கப்பட்ட உபரி வருவாயனைத்தையும் கபளீகரம் செய்தன. நாட்டின் செல்வாதாரங்களை மேம்படுத்தும் பணிக்கும் அல்லது துணை மாநில மன்னர்கள் கட்டிய சாலைகள், கால்வாய்கள் மற்றும் இதர பொதுப்பணிகளைப் பராமரிப்பதற்கும் எந்தவிதமான நிதி வசதியும் இருக்கவில்லை.”

            கம்பெனியின் நிதி விவகாரங்கள் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டன. “பிரிட்டிஷ் படைவீரர்களை அதிகாரிகளாகக் கொண்ட இராணுவம் நம்மிடம் இருக்கிறது. ஐரோப்பிய நடைமுறைப்படி அது வழி நடத்திச் செல்லப்படுகிறது. நமது நீதித்துறையை ஆங்கிலேயச் சட்டம் முழுமையாக வியாபித்திருக்கிறது. வருவாய்க்கான நமது மதிப்பீடுகள் ஆடம் ஸ்மித்தும் அவரது சீடர்களும் (?) வரைந்த சித்தாந்தங்களை ஆதாரமாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. நமது நிதி மட்டுமே இந்தியாவைச் சார்ந்தது. நமது இராணுவத்தினர் ஜோமினியின் யுக்திகளையே படிக்கின்றனர். பிளாக்ஸ்டோன், பென்த்தாம், மில்ஸ், ரிகார்டோ ஆகியவர்களின் நூல்கள் தாம் சிவிலியன்களுக்குப் பாடநூலாக இருக்கிறது. ஆனால் நமது நிதித்துறையினர் பின்பற்றும் வழிமுறைகள் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அக்பரின் மந்திரியாக இருந்த அபுல்ஃஜாவின் வழிமுறைகளேயாகும்.”

ஆண்டு

மொத்த வருவாய்

(பவுண்டு)

மொத்தச் செலவினங்கள் (பவுண்டு)

1792-93

5,512,761

3,873,859

1793-94

8,276,770

6,593,129

1794-95

8,026,193

1,567,808

1795-96

7,866,094

6,888,997

1796-97

8,018,171

7,508,038

1797-98

8,059,880

8,015,327

1798-99

8,652,033

9,139,363

1799-1800

9,736,672

9,955,390

1800-01

10,485,059

11,468,185

1801-02

12,163,589

12,410,045

1802-03

13,464,537

12,326,850

1803-04

13,271,385

14,395,405

1804-05

14,949,395

16,115,183

1805-06

15,403,409

17,421,418

1806-07

14,535,739

17,508,864

1807-08

15,669,905

15,850,290

1808-09

15,525,055

15,392,889

1909-10

15,655,985

15,534,711

1810-11

16,679,197

13,909,981

1811-12

16,605,615

13,220,966

1812-13

16,336,290

13,515,828

1813-14

17,228,711

13,617,725

1814-15

17,297,280

15,955,006

1815-16

17,237,819

17,059,968

1816-17

18,077,578

17,304,162

1817-18

18,375,820

18,046,194

1818-19

19,459,017

20,396,587

1819-20

19,230,462

19,689,107

1820-21

21,352,241

20,057,252

1821-22

21,803,108

19,856,489

1822-23

21,171,701

20,083,741

1823-24

21,280,384

20,853,997

1824-25

20,750,183

22,504,156

1825-26

21,128,388

24,168,013

1826-27

22,383,497

23,312,295

1827-28

22,863,263

24,053,837

1828-29

22,740,691

21,718,560

1829-30

21,695,208

20,568,358

1830-31

22,019,310

20,233,890

1831-32

18,317,237

17,048,173

1832-33

18,477,924

17,514,720

1833-34

18,268,,368

16,924,332

1834-35

28,856,647

16,684,496

1835-36

20,148,125

15,994,804

1836-37

20,999,130

17,363,368

1837-38

20,858,220

17,553,525

1838-39

21,158,099

21,306,232

1839-40

20,124,038

22,228,011

1840-41

20,851,073

22,546,430

1841-42

21,837,823

23,534,446

1842-43

22,616,487

23,888,526

1843-44

23,,586,573

24,925,371

1844-45

23,666,246

24,293,647

1845-46

24,270,608

25,662,738

1846-47

26,084,681

26,916,188

1847-48

24,908,302

26,747,474

1848-49

25,396,386

26,766,848

1849-50

27,522,344

26,960,988

1850-51

27,625,360

27,000,624

1851-52

27,832,237

27,098,462

1852-53

28,609,109

27,976,735

1853-54

28,277,530

30,240,435

1854-55

29,133,050

30,753,456

1855-56

30,817,528

31,637,530

1856-57

31,691,015

31,608,875

1857-58

31,706,776

41,240,571

            1792க்கும் 1857க்கும் இடையிலான காலகட்டத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது திரு.ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்: “14 ஆண்டுகள் பற்றாக்குறை இருந்தது என்றால், 32 ஆண்டுகள் உபரிவருவாய் இருந்தது என்பதைக் காணமுடியும். பற்றாக்குறை ஒட்டுமொத்தமாகக் கிட்டத்தட்ட 17 மில்லியனாக இருந்தது என்றால் உபரியாகக் கிடைத்த வருவாய் கிட்டத்தட்ட 46 மில்லியனாக இருந்தது. ஆகவே 46 ஆண்டுகளில் இந்திய நிர்வாகத்தின் நிதித்துறை நிகரமுடிவுகள் 32மில்லியன், உபரி வருவாயைக்காட்டின. ஆனால், இப்பணம் இந்தியாவில் சேமித்து வைக்கப்படவில்லை அல்லது நீர்ப்பாசனம் மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகளுக்காகச் செலவிடப்படவில்லை. கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாப ஈட்டுத்தொகை செலுத்துவதற்காகத் தொடர்ந்து அப்பணம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. வரிப் பங்கீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் பணம் போதவில்லையாதலால் இந்தியாவின் பொதுக்கடன் என்ற பெயரில் அதிகரித்த கடன் தொகை பெறப்பட்டது.” (1.ஆர்.சி தத்.”பரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்தில் இந்தியா.” பக்கம். 408)

            இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இரு வெவ்வேறு வழிகளில் கடன்கள் பெறப்பட்டன.

            இந்தியாவில் அரசாங்கத்திற்குப் பணம் தேவைப்பட்ட போதெல்லாம் அது விளம்பரம் செய்தது. விளம்பரத்தில் குறிப்பிட்ட விகிதங்களில், அதில் உள்ள நிபந்தனைகளின் பேரில் கடனாகப் பணம் பெறுவதற்குக் கருவூலம் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இக்கடன்கள் பகிரங்கமானவையாக இருக்கும் வரை, தங்களுக்கு விருப்பமான தொகைகளைச் செலுத்த மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக கடன் பத்திரங்கள் என்ற பத்திரங்களைப் பெற்றனர். இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு வரையறை கிடையாது. கடனாகப் பெறப்பட்ட பணம் முழுவதும் இந்தியாவிலேயே பெறப்பட்டது.

            இங்கிலாந்தில் ஒரு மாறுபட்ட முறை செயல்பட்டது. பார்லிமெண்ட் வகுத்தளித்த ஒரே வழிமுறையின் மூலம் கிழக்கிந்தியக் கம்பெனி இதர பெரும் நிறுவனங்களுக்கு இணையாகக் கடன்பத்திரங்களின் (பாண்டு) மூலம் கடன் பெற முடிந்தது. இங்கிலாந்தில் உள்நாட்டுக்கடன் முழுவதும் இத்தகைய பாண்டுகளின் மூலம் தான் பெறப்பட்டது.

            கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் பொதுக்கடன் முழுவதும் போரினால் ஏற்பட்டதாகும்.

            இந்த இரு கடன்களின் வளர்ச்சியைத் தனித்தனியாகப் பார்ப்போம்.

இந்தியக் கடன்

          1792இல் இந்தியக் கடன் 70 இலட்சம் பவுண்டுகளுக்கும் சற்றே அதிகமாக இருந்தது. ஏழு ஆண்டுகளுக்குள் அது ஒருகோடி பவுண்டுகளாக உயர்ந்தது. 1800ஆம் ஆண்டில் அது 14,625,384 பவுண்டாக இருந்தது. அதற்கு வட்டித்தொகை மட்டுமே 1,342,854 பவுண்டு என்று கணக்கிடப்பட்டது. இப்போது மராட்டாக்களுடன் வெல்வெஸ்ஸி மேற்கொண்ட போர்கள் வந்தன. 1807-08 இல் இந்தியக் கடன் ஒரேயடியாக உயர்ந்து 30,098,857 பவுண்டாகியது. அதற்கு மொத்த வருடாந்திர வட்டி 2,339,087 பவுண்டு எனக் கணக்கிடப்பட்டது. அமைதி ஏற்பட்டபின்பு மீட்புப்பணிகள் மூலம் கடன்களைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கொள்கையின் பயனாக 1810-11 ஆம் ஆண்டில் இந்தியக்கடன் 22,545,843 பவுண்டுகளாகக் குறைந்தது. வட்டி 1,503,434 பவுண்டாகக் குறைந்தது. ஆனால் போர்கள் அன்றாட நிகழ்ச்சியாகவும் அமைதி விதிவிலக்கானதாகவும் இருந்தது 1819-20 இல் நேபாளப் போர் மற்றும் முதலாவது மராத்தா யுத்தத்தின் மூலமாகவும் இந்தியக் கடன் 31,338,855 பவுண்டாக உயர்ந்தது. 1823-24 வாக்கில் இடைக்கால அமைதி நிலவியதன்மூலம் கடன் குறைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டான 1824-25 இல் நடைபெற்ற முதலாவது பர்மியப் போர், கடனை 38,316,486 பவுண்டாக உயர்த்தியது. 1835-36 இல் கடன் தொகை 31,821,118 பவுண்டாகக் குறைந்தது. ஆனால், இந்தியாவுக்குத் தொடர் இராணுவ நடவடிக்கைகள் காத்திருந்தன. ஆப்கன் போர், சிந்து யுத்தம் கடனை அதிகரித்தன. 1852-53 இல் அது 52,313,094 பவுண்டாகவும், வட்டி 2,479,133 பவுண்டாகவும் உயர்ந்தது. ஆயினும் 1853-54 இல் இந்தியக் கடன் 49,762,876 பவுண்டாகக் குறைக்கப்பட்டது. 1853-54இல் பொதுப்பணிகள் கொள்கை துவங்கப்பட்டது. அதன் விளைவாக 1855-56 இந்தியக் கடன் 55,546,650 பவுண்டாக அதிகரித்தது. 1857-58 ஆம் ஆண்டு இந்தியக் கலகம் அல்லது சுதந்திரப் போரைக் கண்டது. இந்தியக் கடனும் 60,704,084 பவுண்டாக உயர்ந்தது.

உள்நாட்டுப் பத்திரக்கடன் (இங்கிலாந்தில்)

            1800 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பத்திரக்கடன் 1,487,112 பவுண்டாகவும், அதன் மீதான வட்டி 5 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், வெல்லெஸ்லியின் போர்களும் கூட உள்நாட்டுக் கடனைப் பாதித்து 1807-08இல் 4,205,275 பவுண்டாக அதிகரித்தது. 1811-12 இல் உள்நாட்டுப் பத்திரக் கடன் அதிகபட்சத் தொகையான 6,565,900 பவுண்டை அடைந்தது. அதற்கான வட்டி 5 சதவிகிதமாக இருந்தது. 1816-17 இல் வட்டிவிகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பின்னர் அது ஒருபோதும் உயர்த்தப்படவில்லை. 1814-15 இல் உள்நாட்டுப் பத்திரக் கடன் 4,376,976 பவுண்டாகக் குறைக்கப்பட்டது. அவ்வப்போது குறைக்கப்பட்டு அது 1840-41இல், 1,734,300 பவுண்டாகக் குறைக்கப்பட்டு ஆப்கன் போரின் காரணமாகவும் கலகத்தின் விளைவாகவும் உள்நாட்டுப் பத்திரக்கடன் 3,894,400 பவுண்டாக உயர்ந்தது, அதைத் தவிர கலகத்தின் விலை 40,000,000 பவுண்டாயிற்று.

            இந்தியக் கடனுடன் ஒப்பிடும்பொழுது இந்திய உள்நாட்டுப் பத்திரங்களின் அளவு மிகச் சிறியதாக இருந்ததைப் பார்க்கும் போது அது ஆச்சரியப்படக்கூடிய விஷயமாக இருக்கக்கூடும். கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிலாந்தில் கடன் வாங்கும் அளவு நாடாளுமன்றக் கட்டுப்பாடுகளினால் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டது என்பதை நாம் அறியும்போது அந்த ஆச்சரியம் மறைந்து போகிறது. தனக்குப் பாதகமில்லாமல் கம்பெனியினுடைய ஆட்சியின் சாதகங்களைப் பெறுவதில் நாடாளுமன்றம் எப்போதும் ஆவலாக இருந்தது. இந்திய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் அது ஆர்வமாக இருந்தது. ஆனால் இறுதி இலக்கு எய்தப்படும் வரை, இந்தியாவை, அது பிரச்சினைக்குரியதாகவே கருதியதுடன், வெற்றி பெறுவது போல் தோன்றிய போதிலும் கூட அனுகூலமான பலன்கள் நிச்சயமில்லை என்று கருதியதால் இந்தியா சம்பந்தப்பட்ட திட்டத்திற்காகத் தனது நாட்டின் நலன்களை ஆபத்திற்குள்ளாக்க அது விரும்பவில்லை. ஆகவே ஓரளவுக்கு மேல் கடன்களைப் பெறுவதிலிருந்து கம்பெனியின் மீது கண்டிப்பாக தடையை நாடாளுமன்றம் விதித்திருந்தது. இல்லையெனில், ஒரு வேளை இந்தியாவின் மீதான பிடிப்பைக் கம்பெனி இழக்க நேரிட்டால், அது ஆங்கிலேய மூலதனத்திற்குக் கேடு விளைவித்து இங்கிலாந்தின் அழிவுக்கு வழிவகுக்கும்.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

தொடரும்...

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It

இந்தப் பிரிவில் நாம், வர்த்தக நிறுவனமாக இருந்து ஓர் அரசியல் முடியாட்சியாக வளர்ந்ததை விவரிக்காமல், ஓர் அரசியல் முடியாட்சி மற்றும் நிதி அமைப்பு என்ற முறையில் கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றிக் குறிப்பாகத் தெரிந்து கொள்வோம்.

Ambedkar 305நமது கடந்த விவாதத்தில் கண்டதுபோல கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் மீது தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்துவதில் வெற்றி பெற்றது என்ற உண்மையில் விந்தையேதும் இல்லை. பல்வேறு மாகாணங்களில் காலடிபதித்த அது, தனது ஆட்சி அதிகாரத்தை உபகண்டம் முழுவதிலும் விஸ்தரித்ததுடன், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சட்டப்படி நிறுவியது. வேறுவிதமாகச் சொல்வதெனில், அது அரசை நிறுவியதுடன் அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொண்டது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் கம்பெனியின் நிதி நிர்வாகம் ஒரு சிக்கலான காட்சியுண்மையாக இருந்தது. வர்த்தகம் மற்றும் வருவாய்க் கணக்குகளைத் தனித்தனியாக வைக்காமல் அவை ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆகவே நிதி இயல்துறையின் எந்த மாணவரும் 1814 ஆம் ஆண்டுடன் முடியும் காலகட்டம் முழுவதையும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். அந்த ஆண்டில்தான் பார்லிமெண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி கம்பெனி நிதி மற்றும் வர்த்தகம் சம்பந்தமாகத் தனித்தனிக் கணக்குகளை வைத்திருக்கும் கட்டாயத்திற்குள்ளானது.

இந்த எச்சரிக்கையுடன் வருவாய்கள் எந்தெந்த இனத்தில் கிடைத்தன என்பதைப் பார்ப்போம்.

 1. நிலவருவாய்

                இந்தியாவின் சிலபகுதிகள் ஆரம்பகாலத்திலிருந்தே தொழில் மயமானவையாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்தியாவையே ஒரு விவசாயநாடு என்று வகைப்படுத்தலாம். முன்னர் இருந்ததைப் போலவே இன்றைக்கும் நிலம்தான் அரசின் வருவாயில் பெரும்பகுதியை ஈட்டித் தருகிறது.

                பிரிட்டிஷ் அரசாங்கம் சரியாகவோ அல்லது தவறாகவோ அரசு நிலவுடைமைக் கோட்பாட்டுக்கு எதிராகத் தனியுடைமைக் கோட்பாட்டை நிறுவியதுடன், அக்கொள்கைக்கிசைய நிலவருவாய் அமைப்பை ஒழுங்குபடுத்தியது.

                இந்தியாவில் வெவ்வேறு வகையான நிலவருவாய் முறைகள் உள்ளன. நாடாளுமன்ற நீலப் புத்தகங்களின் சொற்களில் அவற்றை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

1.கார்ன்வாலிசின் ஜமீன்தார் நிலவுடைமை உரிமைத் தீர்வுமுறை

இந்த முறையில் உள்ள அனுகூலத்தின் மிகத்தெளிவான அம்சம் நிதிவசூலில் உள்ள வசதிதான். அரசாங்க அதிகாரிகள் தனித்தனி நபர்களிடம் இருந்து வசூல் செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜமீன்தார்கள் அல்லது பங்களிப்பார்களிடமிருந்து ஒரு பெரிய மாவட்டத்தின் வருவாயைப் பெறும் மிக எளிதான முறையாகும் இது. மற்றுமொறு அனுகூலம் என்னவெனில் 1831 C. 3339இன்படி பலனின் பெருமளவிற்கு வருவாய் நிச்சயத்தன்மை இருந்தது என்பதில் ஐயமேதும் இல்லை.

இந்த நிலவுடைமை முறை இவ்வாறுதான் இருந்தது. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய திவான்களின் வருவாய்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்வசம் எடுத்துக்கொண்ட போது, முகமதியர் அரசாங்கத்தின் கீழ் அதிகாரிகளின் (சுபேதார்கள்) இடையீட்டாளர்கள் மூலமாக நிலவருவாய் வசூலிக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் மாவட்டங்களில் சிலசமயங்களில் அதிக இடங்களையும் சிலசமயங்களில் குறைவான இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஜமீன்தார்கள், தாலுக்தார்கள் என்ற பட்டங்களையும் சூட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் வருவாயைக் கருவூலத்தில் ஒரே தொகையாகச் செலுத்தினர். அதற்காக அவர்கள் கணிசமான அளவில் மாவட்டங்களை நிர்வகித்து வந்தனர். அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவது அவர்களது கடமையாக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் தங்களது மாவட்டங்கள் அல்லது எஸ்டேட்டுகளைப் பரம்பரையாகப் பின்வரும் நிபந்தனையின் கீழ்ப் பராமரித்து வந்தனர் (2.சி.எஃப் 1831 சி. 3114, 3115, 3215.) வங்காளப் பிரதேசத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்வசம் எடுத்துக்கொண்டது. வருவாயை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட பலதரப்பட்டவர்கள் பின்பற்றிய நடைமுறைகளினால் அதிகாரங்கள் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த விஷயத்தில் நிலவிய பெருங்குழப்பங்கள் லார்டு கார்ன்வாலிசையும் அன்றைக்கு இருந்த அரசாங்கத்தையும் அச்சுறுத்தியது.

குடியானவர்கள் அல்லது சிறுவிவசாயிகளைப் பாதுகாப்பதற்கு ஒரு புதுவகையான நிலப்பிரபுக்களை உருவாக்குவதைத் தவிர வேறு சிறந்த முறை எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை உணர்ந்தனர். அத்தகைய நிலப்பிரபுக்களிடமிருந்து அவர்கள் சிறந்த பயன்கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர்: இதில் அவர்கள் முக்கிய ஆதாரமாகக் கொண்டிருந்த கருத்து இதுதான்; தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளின் மீது நிரந்தர அக்கறை கொள்ளும் அந்த ஜமீன்தார்கள், இங்கிலாந்தில் உள்ள ஒரு நிலப்பிரபு தனது குடியானவர்களின் வளவாழ்வில் அக்கறை கொண்டிருப்பது போன்று, இங்கும் விவசாயிகளின் வளவாழ்வில் அக்கறை கொண்டிருப்பர் என்று கருதப்பட்டது. இந்த ஏற்பாட்டின் மூலம் இரு நல்ல விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டில் நிலப்பிரபுக்களைக் கொண்ட உயர்குடியை உருவாக்குவது: ஜமீன்தார்களிடையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஒருவகையான தந்தைப் பாசத்தின் மூலமாகக் குடியானவர்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பதே அவை. (1.சி.எஃப், 1831 சி.3136) ஒட்டு மொத்தமாக விவசாயப்பெருமக்களைப் பாதுகாக்கும் கண்ணோட்டத்துடனும், மிகச் சிறந்த நோக்கங்களுடனும் 1793இல் ஜமீன்தார்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்டங்களில் உண்மையான பொறுப்பாளர்களாக இருக்கும் குடியானவர்கள் அல்லது அதிகாரிகளாக இருந்தாலும், பரம்பரையாக அல்லது சிறப்பு நியமனத்தின் மூலமோ ஆனாலும் சரி, ஜமீன்தார்கள் நாட்டின் நிலவுடைமையாளர்களாக ஆக்கப்பட்டனர். அதன்மூலம் நிலங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இங்கிலாந்தில் இருப்பதைப் போன்ற முறையாகும். ஒரு சில முந்தைய ஆண்டுகளில் ஒரு ஜமீன்தார் எவ்வளவு தொகையைச் செலுத்தி வந்தார் என்பது கண்டறியப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வரிநிர்ணயம் நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் செலுத்த வேண்டிய நிலவரி எப்போதும் உயத்தப்பட மாட்டாது என்ற உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. “ஜமின்தாரி அல்லது நிரந்திர செட்டில்மெண்ட்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட செட்டில்மெண்ட்டின் தன்மை இவ்வாறுதான் இருந்தது.” (2.சி.எஃப், 1831.சி.3115, 3116, 3136, 3215, 1832, ஆர்.சி.பக்.21.)

 1. கிராமப்புர நிலவருவாய் முறை

                கிராமப்புர சமுதாய அமைப்பை முக்கியமாக வடஇந்தியாவில் காணமுடியும். கிராமத்தில் வசிக்கும் சமுதாயம் முழுவதன் பொறுப்பில் நிலத்தின் உரிமை ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிராம நிர்வாகம் கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறையின் கீழ் நிலங்கள் சில சமயங்களில் அதே கிராமத்து மக்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. சிலசமயங்கள் அண்டையிலுள்ள கிராமத்து மக்களுக்குக் குத்தகைவிடப்பட்டது. பள்ளி ஆசிரியர், சலவைத் தொழிலாளி, முடிதிருத்துபவர், தச்சர், கருமார், காவலாளி, கிராமக் கணக்கர் போன்ற கிராமத்தின் பல்வேறு கைவினைஞர்களுக்குக் குறிப்பிட்ட நிலங்களும் சில உரிமங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. கிராமத்தின் சில அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறும் உரிமை அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தது. அதேபோது வெளியிலிருந்து வருபவர்களுக்கு விருந்தோம்புவதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது. (1.சி.எஃப் 1830, எல் 398, 399, 405, 406, 529) இந்தக் கிராம சமுதாயங்கள் சிறிய குடியரசுகளைப் போன்றவை, அநேகமாக அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் அவர்கள் வசம் இருந்தது. எந்தவிதமான அந்நிய உறவுகளிலிருந்தும் சுதந்திரமாக இருந்தனர். வம்சங்களைத் தொடர்ந்து வம்சங்கள் உருண்டோடின; புரட்சியைத் தொடர்ந்து புரட்சிகள் வந்தன. இந்து, பத்தான், மொகல், மராத்தா, சீக்கியர்கள், ஆங்கிலேயர்கள் என்று எஜமானர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்தனர். ஆனால், கிராம சமுதாயங்கள் அப்படியே இருந்தன. தொல்லைகள் ஏற்பட்டபோது அவர்கள் ஆயுதமேந்தித் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்; (2 சி.எஃப், 1832 காமன்ஸ் பரிசீலனைக் கமிட்டி, பக்கம் 29)

கிராமத்தின் உற்பத்தியில் அரசாங்கத்துக்குச் செலுத்திய விகிதாசாரம் என்ன என்பதைக் கூறுவது கடினம்: நில உடைமையாளர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதைப் பற்றி அதிகாரிகள் அவ்வளவாக அறிந்துகொள்ளவில்லை; தங்களுக்கு என்னென்ன ஆஸ்திகள் உள்ளன என்பதை அரசாங்கம் ஆய்வு செய்வது கிராமத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல அல்லது கிராமத்தின் விருப்பமும் அல்ல. ஆகவே கிராமத்திலுள்ள ஒருவர் தனது பங்கைச் செலுத்தத்தவறினால், அப்பிரச்சினையை கிராமங்கள் ஒன்று கூடித் தீர்த்து வைத்தன, அவருக்காகக் கிராமங்கள் அத்தொகையைச் செலுத்த முன்வந்தன. ஆனால், இவையெல்லாம் கிராமங்களுக்கே உரித்தான தனிப்பட்ட ஏற்பாடுகளாக இருந்தன. இந்த மதிப்பீட்டை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை; கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு செலுத்தவேண்டும் என்பது கிராம மக்களே முடிவு செய்து கொள்ளவேண்டிய உள்விவகாரமாகும். அதில் அரசாங்கம் தலையிடுவது விரும்பத்தகாததாக இருந்தது. கிராமத்தின் செழிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப்பற்றிய விசாரணைக்குப் பின்னர் மொத்தமதிப்பீடும் கணிக்கப்பட்டது; இதுவரை அந்தக் கிராமம் எவ்வளவு செலுத்திவந்தது; எவ்வளவு தொகை செலுத்தவல்லது; கிராமநிலங்களின் நிலைமை என்ன, உற்பத்தியைப் பொறுத்தவரை எத்தகைய மதிப்பீட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அது. (3.சி.எப்.1830, எல்.401, 402, 404, 528, 583, 584) நில அளவுப் பணிகள் மேற்கொள்ள அரசாங்கம் கணிசமான தொகையைச் செலவு செய்தது.

                ஒவ்வொரு கிராமத்திலும் நிலத்தின் தன்மையைப் பற்றிய நுணுக்கமான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. முடிந்த அளவுக்கு எல்லாவிதமான உதவிகளையும் பெற்றுத் தங்களது பணியாளர்களிடமிருந்து மட்டுமின்றிக் கிராம சமுதாயங்களிடமிருந்தும், ஆர்வமுள்ள கிராம மக்களிடமிருந்தும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்ட அண்டையிலுள்ள கிராமங்கள் மற்றும் குடியானவர்களிடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்று நில அளவை அதிகாரிகளின் முன்னிலையில் வயல்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. கிராமத்தின் எல்லைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டன. கிராமத்தில் உள்ள நிலத்தின் விவரங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள்கள், வீடுகள், பலனளிக்கும் மரங்கள் போன்ற விவரங்களும் அளிக்கப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. (1.சிஎஃப், 1831, சி.3492)

III.இரயத்துவாரி முறை

                இரயத்துவாரி முறை என்று அழைக்கப்பட்ட நிலமதிப்பீட்டின் இந்த மூன்றாவது வகையான விநோதமான கோட்பாடு நாட்டின் எல்லா நிலங்களின் மீதும் அதிகபட்சமான வரி நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடாகும். (2.சி.எஃப், 1831சி.45, 65) தன்வசமுள்ள வயல்களுக்காக ஒவ்வொரு குடியானவருக்கும் நிர்ணயிக்கப்படும் குத்தகைத் தொகை கூடுமானவரை நிரந்தரத் தன்மையுடன் வரையறுக்கப்படுகிறது. இத்தகைய குத்தகையின் மொத்தத் தொகையே மொத்த மதிப்பீட்டுத் தொகையாக அமைகிறது. சாகுபடி அதிகரிப்பதை அல்லது குறைவதைப் பொறுத்து அது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிறது. எல்லாக் கிராமங்களிலும் இப்போது உள்ளது போன்றே விவசாயிகள் அல்லது குடியானவர்களின் உரிமைகளை அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதும் அந்த உரிமைகளை மீறும் எல்லாச் செயல்களையும் தடுப்பதும் இரயத்துவாரி முறையின் மற்றுமொரு முக்கியக் கோட்பாடாகும். (3சி.எஃப் 1831. சி.5156:) இவ்வாறு இரயத்துவாரி முறையில் சம்பந்தப்பட்ட குடியானவர்களின் நலன்கள் குறித்த விளக்கங்கள் முழுமையாகத் தெரியவந்திருக்கின்றன. ஆனால், ஜமீன்தாரி அமைப்பில் அவ்வாறு இல்லை; பிந்தைய அமைப்பு என்ன செய்ய நினைக்கிறதோ அதை முந்தைய அமைப்பு மிகத் திறமையாகச் செய்கிறது. பிந்தைய அமைப்பு செய்ய நினைத்ததை ஒருபோதும் செய்ததில்லை, செய்யவும் முடியாது.

நாட்டிலுள்ள எல்லா நிலங்களுக்கும் வரி மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதே அது. இரயத்துவாரி முறையின்படி வரிமதிப்பீடு நிலத்திலிருந்து ஒட்டுமொத்த வருவாய்க்குச் செல்கிறது: அது மிகப்பெரிய நிலக்கிழாரிலிருந்து மிகச்சிறிய குடியானவர்கள் வரை அனைத்து வர்க்கங்களின் சொத்துடைமையையும் மதிக்கிறது; அது ஒரு சொத்தின் ஒவ்வொரு பகுதியையும் அளவிட்டு மதிப்பீடு செய்கிறது. இவ்வாறு அது நிலஉரிமையை மாற்றித் தர வகை செய்கிறது. ஏனெனில் ஒரு நிலத்தை விற்பனை செய்ய முற்படும் போது எழும் முதல் கேள்வி, நிலத்திற்குப் பொது மக்களிடமிருந்து எந்த அளவுக்குத் தேவை ஏற்படும் என்பதுதான் (4 சி.எப், 1831 சி, 4565, 4567,4568). உரிமையாளர்கள் இருக்குமிடத்தில் விவசாயிகள் மற்றும் குடியானவர்களுடனும்: மிகப்பெரிய நிலப்பரப்பு அல்லது மிகச்சிறிய அளவிலான நிலத்திற்கும்; கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் அல்லது மிகக்குறைந்த அளவிலான ஏக்கர் நிலப்பரப்பிற்கும் – இரயத்துவாரி செட்டில்மென்ட் பொருந்தும்.

ஒரே ஒரு வயலுக்கு உரிமையாளராக இருந்தாலும்கூட அரசாங்கத்துடன் அவர் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டு, சாகுபடியில் ஈடுபடலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரி செலுத்துமாறு தன்னைக் கோரமுடியாது என்பது அவருக்குத் தெரியும்; நிலத்தின் மதிப்பு, மாறுபட்ட மண்வளம், மக்கள்தொகை, நிலவளம் மற்றும் இதர ஸ்தலப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த முறையின் கீழ் வரிநிர்ணய மதிப்பீடு மாறுபட்டபோதிலும்கூடக் குறைந்த வரி செலுத்தும், தரம் குறைந்த நிலம் மேம்பாடடைந்து அதிக வரி செலுத்த வேண்டிய அவசியமேற்பட்டபோதிலும் கூட, மிகச்சிறந்த நிலத்திற்கு அதிகபட்சவரி நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு மேல் கிடைக்கும் வருவாய் நிலஉரிமையாளரையே சாரும். பாதிப்புகள் ஏற்படும்போது வரிவிலக்குகளும் உண்டு. (1. சி.எப் 1832 சி.ஆர்.பி. எண் 20.) பெயரளவில் மட்டும் உரிமையாளர்களாக ஒருசிலர் இருப்பதற்குப் பதிலாக, சுதந்திரமான உரிமையாளர்களைக் கொண்ட ஒரு பெரும் அமைப்பை உருவாக்கியதில் ஜமீன்தார் முறையைவிட இரயத்துவாரி அமைப்பிற்கு மற்றுமொரு அனுகூலம் உள்ளது: இதில் பெருமளவில் பொதுமக்களுக்கும் ஓர் அனுகூலம் உள்ளது. ஆனால், ஜமீன்தார் முறையில் ஒரு சிலருடைய நன்மைக்காக மட்டுமே இந்த அனுகூலங்கள் பயன்படுகின்றன, அதே சமயம் இரயத்துவாரி முறையில் மூலதனம், கணிசமான அளவுக்கு ஒரே இடத்தில் குவிந்துவிடும் போக்கும் உள்ளது. (2.சி.எப், 1831 சி. 4577, 4578, 4579.)

                கிழகிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் நிலவருவாய் அமைப்பு இவ்வாறுதான் இருந்தது. இந்த அமைப்பைப் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீட்டைப் பின்னர் பார்ப்போம்.

                அடுத்த முக்கியமான வருவாய் இனம் அபினி வருவாய் ஆகும். நிலவருவாய்க்கு அடுத்தபடியாக அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்தது அபின் வருவாய் ஆகும். அபின் வரி இரு வேறான வழிகளில் விதிக்கப்பட்டது:

1)            “வங்காளத்தில் அரசாங்கமே சாகுபடியையும் விற்பனையையும் மேற்கொள்ளும் ஒரு தனிப்பட்ட முறையின் மூலம்.”

2)            “மால்வாவின் சுதேச மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு பம்பாயிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அபினின் மீது பம்பாயில் விதிக்கப்படும் உயர் ஏற்றுமதி வரியின் மூலம்.”

“1799 ஆம் ஆண்டின் விதி VI பிரிவு 3 இன் படி வங்காளத்தில் அபின் தரும் கசகசாச் செடிகளைப் பயிரிடுவதும் 1803-ஆம் ஆண்டின் விதி XLI பிரிவு 2 இன்படி வடமேற்கு மாகாணங்களில் அச்செடிகளை பயிரிடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. முன்பணம் கொடுத்து அபின் தரும் வெள்ளைக் கசகசாச் செடிகளை ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடுவதற்குச் சில தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுடன் அரசாங்கம் வருடாந்திர உடன்படிக்கைகள் செய்துகொண்டது. விவசாயிகள் தங்களது உற்பத்திப் பண்டங்களை அபின் வடிவில் அரசாங்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் தரவேண்டும். 1856 இல் வங்காளத்தில் அபினி ஏகபோகத்திலிருந்து கிடைத்த நிகர வருவாய் ரூபாய் 2,767,126 ஆக இருந்தது.”

அபினியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதிலிருந்து கிடைத்த வருவாய் சம்பந்தமாக, ஒரு சிறிய வரலாறு இருக்கிறது. 1831க்கு முன்னர் பிரிட்டிஷார் அபினியைத் தங்களது அரசாங்கப் பிரதிநிதி மூலமாகச் சுதேச மாநிலங்களிலிருந்து (அப்பொருளின் மீது கண்டிப்பான ஏகபோகத்தைக் கொண்டிருப்பதற்காக) வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோ விற்பனை செய்தனர். ஆனால், போர்த்துக்கீசியர் குடியேற்றங்களுக்குள் பெருமளவில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஏகபோகக் கொள்கை கைவிடப்பட்டு, பம்பாய்க்கு எடுத்துச் செல்லும் செலவினத்தை ஈடுசெய்வதற்காக ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் “நுழைவு சீட்டுகளின் “ வடிவில் போக்குவரத்து வரி வசூலிக்கப்பட்டது. ரூ.175/- போக்குவரத்து வரியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிகழ்வுப்போக்கு வருவாய் குறைவதைக் காட்டியது. ஆகவே பெட்டி ஒன்றுக்கு ரூ.125/- வரியாக நிர்ணயிக்கப்பட்டது.

சிந்து பகுதியை வெற்றி கொண்ட பின்னர் போர்த்துக்கீசியப் பிரதேசங்களுக்குள் அபின் கடத்தப்படும் கூடுதல் வழி மூடப்பட்டது. வேறு வழியில் இந்த வர்த்தகம் சாத்தியமில்லை என்பதனால் கூடுதல் போக்குவரத்து வரி அதிக வருவாயைக் கொடுக்கும் என்று மிகச் சரியாக நம்பப்பட்டது. ஆகவே 1843 அக்டோபரில் பெட்டி ஒன்றுக்கு ரூ.200 ஆக வரி அதிகரிக்கப்பட்டது. 1847 இல் பெட்டி ஒன்றுக்கு ரூ.400 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

III. உப்பு வரி

                இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உப்பு பல்வேறு விதங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு வழிகளில் வரி விதிக்கப்படுகிறது.

                வங்காளத்தில் கடல் நீரைக் கொதிக்கவைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பம்பாயிலும் மதராசிலும் கடல் நீரைச் சூரிய ஒளியில் ஆவியாக்கியும், பஞ்சாபில் உப்புச் சுரங்கம் போன்ற இயற்கைச் செல்வாதாரங்களிலிருந்தும், ராஜபுதினத்தில் உப்பு ஏரிகளிலிருந்தும் உப்புப் பெறப்படுகிறது.

                வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி உப்பு உற்பத்தியில் ஏகபோகத்தைக் கொண்டிருந்தது. உப்பை உற்பத்தி செய்த உள்ளூர் மக்கள் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு அனைத்தையும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் அரசாங்கத்திற்குத் தர ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பின்னர் இந்த உப்பை அரசாங்கம் ஆறு வெவ்வேறு ஏஜென்சிகளான ஹிட்கெலீ, தும்லூக், சிட்டகாங், ஹரிகான, கட்டாக், பலாசூர், கொரெடா ஆகியவற்றின் மூலம் அடக்க விலையுடன் இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மீது விதிக்கப்படும் வரிக்குச் சமமான தொகையுடன் கூட்டிவரும் விலைக்கு விற்பனை செய்தது. இதன் விளைவாக “நுகர்வோருக்கான சராசரி சில்லறைவிலை” கிட்டத்தட்ட ஒரு பவுண்டுக்கு ஒரு பென்னியாக இருந்தது.

                இறக்குமதி வரிக்குச் சமமான தொகைக்கு ஈடான கலால் வரி மட்டும் செலுத்தும் ஒரு முறையின் கீழ், கல்கத்தாவில் தனியார் உப்பு உற்பத்திக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

                ஆனால் 1836இல் காமன்ஸ் சபையின் தேர்வுக்கமிட்டியின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்பட்ட விலை, பகிரங்கக் கிடங்குகள் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு முன்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விற்பனை நடந்ததற்குப் பதிலாக “விற்பனை தொடர்ந்து எப்போதும் நடைபெற்று வந்தது.”

                மதராசில் அரசாங்கத்தின் சார்பாக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு மாநில நுகர்வுக்காக விற்பனை செய்யப்பட்டது.உப்பின் அடக்கவிலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்திற்குச் சமமாக இறக்குமதி செய்யப்பட்ட அன்னிய உப்பின் மீதான வரி பவுண்டு ஒன்றுக்கு ரூபாய் மூன்றிலிருந்து குறைக்கப்பட்டது.

                உப்பின் மீதான இறக்குமதி வரிக்குச் சமமான கலால்வரி செலுத்தும் முறையின் கீழ், பம்பாயில் உப்பு உற்பத்தி தனியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாபின் உப்புச் சுரங்கங்களில் அரசாங்கம் உப்பை வெட்டி எடுத்து அங்கேயே விற்பனையும் செய்து வந்தது.

                தங்களது உப்பு சப்ளைக்காக வடமேற்கு மாகாணங்கள், வங்காளத்தின் தாழ்வான பகுதிகளையும் ராஜபுதினத்தில் உள்ள சாம்பூர் உப்பு ஏரியையும், இந்தியாவின் மேற்கத்திய பகுதிகளையும் நம்பியிருந்தது. எல்லாப் பகுதிகளிலிருந்தும் உப்பு வடமேற்கு மாகாணங்களை வந்தடையும் போது ஒரே மாதிரியான விலையுடன் இருக்கும் விதத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.

 1. சுங்கவரி

                நுழைவுவரி என்ற பெயரில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு சாலையிலும் எண்ணற்ற போக்குவரத்து அல்லது உள்நாட்டு வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் அவை வங்காளத்து 1836 ஆம் ஆண்டின் சட்டம் 1இன் படியும் மதராசில் 1844 ஆம் ஆண்டின் சட்டம் 6 இன் படியும் நீக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியா முழுவதிலும் ஒரேமாதிரியான சுங்கவரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உள்நாட்டைக் கடந்து செல்லும் வரிகளின் தீய பலன்களைப் பற்றிப் பின்னர் விவாதிப்போம்.

                சுங்க வரி வருவாய்க்கு இரு ஆதாரங்கள் இருந்தன. அவை:

1)            ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் மீது கடல்வழிச் சுங்கவரி, உப்பு மற்றும் அவரைச் செடியின் மீது ஏற்றுமதி வரி மட்டும்.

2)            பிரிட்டிஷ் பிரதேசங்களுக்கும் துணைப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லைகளைக் கடந்து செல்லும் பொருள்களின் மீது விதிக்கப்படும் தரைவழிச் சுங்கவரி.

 1. உப்பு மற்றும் அபினியின் மீதான ஏகபோகத்தைத் தவிர கிழக்கிந்தியக் கம்பெனி மற்றுமொரு வருவாய் ஆதாரமாகப் புகையிலை ஏகபோகத்தை கொண்டிருந்தது.
 2. அப்காரி அல்லது சாராயம் மற்றும் மதுபானங்களின் ஏகபோக விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய். மிக அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு (லைசென்ஸ்) விற்பனை செய்யப்பட்டன. தமது சொந்த விலையில் விற்பனை செய்வதற்கு அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். வியாபாரம் செய்யும் நேரம், எந்த இடத்தில் கடை அமைத்திருக்க வேண்டும் போன்ற விஷயங்களை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

VII.         வாடகை வண்டிகள், மாட்டு வண்டிகள், ஒற்றைக் குதிரை வண்டிகள் ஆகியவற்றின் மீது சக்கரவரி விதிக்கப்பட்டது.

VIII.        வகைப்படுத்தப்படாத வரிகளுக்குச் “சேயர்வரிகள்” என்ற கூட்டுப் பெயரிடப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வரிகளை அது உள்ளடக்கியிருந்தது. உள்ளூர் வருவாய் அதிகாரிகள் செய்த ஒழுங்கற்ற வசூல்களை ஒருசமயத்தில் அது உள்ளடக்கியிருந்தது. மதராசில் அது கடந்து செல்லும் வரிகளை உள்ளடக்கியிருந்தது. வங்காளத்தில் இந்த இனத்தின் கீழ் யாத்திரிகர் வரி சேர்க்கப்பட்டது. தக்காணத்தில் “இந்த வருவாய் ஆதாரம்’ இரு முக்கிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது முதலாவது மொஹந்துர்ஃபாஎன்ற பெயரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றின் மீதான வரிகளாக இருந்தன. இரண்டாவதாக பல்லூடா (கையெழுத்துப் பிரதியில் இச்சொல் “பல்லுபே” என்று தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. –ஆசிரியர் ) என்ற பெயரில் அழைக்கப்பட்ட வரிகள், கிராமக் கைவினைஞர்கள் குடியானவர்களிடமிருந்து பெறும் பொருள்களின்மீதும், தங்களது இனாம் (குத்தகையற்ற) நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் மீதும் விதிக்கப்பட்ட வரிகளாகும். ஒரு சந்தர்ப்பத்தில் மோசமான நாணயங்கள் மீதான ஒரு வீதாசாரம் சேயர் என்ற இந்த இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

 1. சட்டரீதியான கட்டணங்களைச் செலுத்துவதற்காக, வழக்குகளுக்கேற்பப் பல்வேறு தொகைகளுக்குத் தேவையான முத்திரைத் தாள்களின் வடிவில் நீதிமன்றக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன; வழக்குத் தொகைகளுக்கு ஏற்ப முத்திரைத் தாள்களின் மதிப்பு மாறுபட்டது.

வழக்குகளுக்குத் தேவையான முத்திரைத்தாள் மதிப்பு

ரூ.16வரையிலான

ரூ.1

ரூ.16லிருந்து ரூ.32வரை 

ரூ.2

ரூ.32லிருந்து ரூ.64வரை 

ரூ.4

ரூ.64லிருந்து ரூ.150வரை

ரூ.8

ரூ.150லிருந்து ரூ.300வரை

ரூ.16

ரூ.300லிருந்து ரூ.800வரை

ரூ.32

ரூ.800லிருந்து ரூ.1600வரை

ரூ.50

ரூ.1600லிருந்து ரூ.5000வரை     

ரூ.100

ரூ.5000லிருந்து ரூ.10,00வரை

ரூ.250

ரூ.10,000லிருந்து ரூ.25,000வரை

ரூ.500

ரூ.25,0000லிருந்து ரூ.50,000வரை

ரூ.750

ரூ.50,000லிருந்து ரூ.1,00,000வரை

ரூ.1,000

ரூ.1,00,000 அதற்க்கு மேலும்      

ரூ.2,000

                இதைத் தவிர, தாக்கல் செய்யப்படும் காட்சிப்பொருள்கள், சம்மன்கள், பதில்கள், மறுமுறையீடுகள், மறுபதில்கள், துணை வழக்குரைகள், வழக்குரைஞருக்கு வாதாட அங்கீகாரமளித்தல் (சன்னத்) ஆகியவற்றிற்கும் முத்திரை வரியுண்டு. நீதிமன்றத்தில் அந்தஸ்த்துக்கேற்ப முத்திரைத்தாள் மதிப்பு வேறுபடும்.

 1. 1797 இல் வங்காளத்தில் முதல்முறையாக ஏற்படுத்தப்பட்ட முத்திரைத்தாள் தீர்வைகள், ஒப்பந்தங்கள், கிரையப்பத்திரங்கள், உரிமைமாற்றுப்பத்திரங்கள், பவர் ஆப் அட்டர்னி, இன்சூரன்ஸ் பாலிசிகள், பிராமிசரி நோட்டுகள், ரசீதுகள், ஜாமீன் பத்திரங்கள் மற்றும் பொதுவில் சட்டரீதியான நடவடிக்கைகள் போன்ற எல்லா ஆவணங்களுக்கும் பொருந்தும். (ரூ.25க்கும் குறைவான பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், ரூ.50க்கும் குறைவான ரசீதுகள் ஆகியவற்றிற்கு விலக்களிக்கப்பட்டிருந்தன).

                மதராசில் முத்திரைத்தாள் முதலில் 1808 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமாகச் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கே அது பயன்படுத்தப்பட்டது: 1816இல் இந்த வரி பாண்டுகள்,ஒப்பந்தங்கள், குத்தகைகள், அடமானங்கள், பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரசீதுகளுக்கும் முத்திரைத்தாள் வரி விஸ்தரிக்கப்பட்டது.

                பம்பாயில் 1815இல் இந்தவரி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

                இந்தியாவில் முத்திரைத்தாள் வினியோகத்தில் ஆங்கிலேய முறை பின்பற்றப்பட்டது.

                “முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்களுக்குத் தேவையான சப்ளையைக் கலெக்டரிடமிருந்து பெறுகின்றனர்: முத்திரைத்தாளுக்கான பிணையத்தொகையை விற்பனையாளர்கள் செலுத்தி தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் வினியோகிக்கின்றனர். அந்த விற்பனையில் ஒரு சதவிகிதத்தை அவர்கள் கமிஷனாகப் பெற்றனர்...

 1. அக்கசாலை வருவாய்:

உற்பத்திப் பொருளின் மீது இரு சதவிகிதம் மேலாண்மைப் பங்காக வசூலிக்கப்படுகிறது. தரத்திலுள்ள வேறுப்பாட்டை ஏற்றுக்கொண்டும் சுத்திகரிப்புக்கான கட்டணங்களைக் கழித்துக் கொண்டும் அத்தகைய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

XII. கப்பல்துறை வருவாய்:

கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய இடங்களிலுள்ள துறைமுக நிறுவனங்களை நடத்துவதற்காகத் துறைமுகம் மற்றும் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும் நாட்களுக்கான கட்டணம் ஆகியவற்றின் வாயிலாக வசூலிக்கப்பட்டது.

XIII.        ஒப்பந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் செலுத்தப்படவேண்டிய தொகையான கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பவுண்டுகள் திணை மாநிலங்களிலிருந்து மானியத் தொகையாகக் கிடைத்தது.

                கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் வருவாய்களுக்கான பதின்மூன்று ஆதாரங்கள் இவையேயாகும். இவற்றில் பல இன்றளவுக்கும் தொடருகின்றன.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

தொடரும்...

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It