தூங்கும் குழந்தை
அனிச்சையாய் அசையும் விரல்கள்
எழுதாத வீட்டுப்பாடம்.
=
விடுமுறை நாட்களில் பட்டினி
மதிய உணவு வேளையில்
பள்ளிக்கு வரும் காக்கை.
=
விவசாய நிலமெங்கும்
நல்ல விளைச்சல்
பிளாஸ்டிக் குப்பைகள்.
=
சாவு ஊர்வலம்
அதிரும் பறைகளில்
புதுப்புது உயிர்ப்பு.

  - மு.முருகேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.