கிராமத்திலிருந்து கிளம்புகிறார்கள்

துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளோடு

ஐந்தாவது அல்லது நாலாவது அல்லது

as_09ஐந்தாவது மற்றும் நாலாவது மாடியில்

இருக்கின்றவர்களை நோக்கி

ஒரு படகை ஓட்டிச்செல்கிறார்கள்

அங்கேயிருந்த கப்பல் எகிறிக் குதித்து பாய்ந்தது

என் மகளின் விளையாட்டுப் பொருளும்

இதைத்தான் செய்தது

Sprinklers நீரைக் கொட்டிய சமயம்

ஏதாவதொன்றைச் சொல்லவேண்டும்

சொல்ல வேண்டும்

கப்பல்கள் விரைவாகப் பாய்ந்தன

மீன் தேடிய எல்லைக் கோடறியா

மீனவர்கள் மீது

-----------------------

என் பசி தீர்ந்துவிட்டது

ஒரு புத்தகத்தைத் தயக்கத்துடன்

திறக்கிறேன்

மிகவும் சாதாரணமானதுதான்

(பசிக்குப் பிறகு புத்தகத்தைத் திறப்பவன் மோசமானவன்)

அதனை ஒரு சிகெரெட்டுடன் தான்படிக்க முடியும்

நாளை அதைப் படிக்க முடியாமல்கூட போகலாம்

அதைப் படித்துவிட்டு வம்புக்கு இழுக்கலாம்

அதைவிட நாளை திட்டமிட்டு சமைத்து உண்ணலாம்

அந்தப் புத்தகம் நெடுந்தொலைவிலிருந்து

புலிகளைப் பற்றிய குறிப்புகளுடன் இருந்தது

சமையலறையில் கைத்துணியின் துர்நாற்றம்

இன்றிரவு என்னிடம் பேசாத தொலைபேசி

உங்களுக்கான பெண் குரல் பாடல் ஒன்றை

ஒலிபரப்பும்

நான் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்

புலி சமையலறையில் கைத்துணி கிழித்து

விளையாடிக் கொண்டிருக்கிறது

------------------

இந்த இரவில் அல்சாமாலில் இருக்கிறேன்

கிராமத்துச் சரக்கான சிக்னேச்சருடன் சல்லாபித்துக்கொண்டே

தீவிரவாதிகள் குண்டுகள் வீசித் தாக்கத் தொடங்கிவிட்டனர்

கடந்து தான் செல்கின்றனர் ஏகே 47 மூலம் சுட்டபடி

சுட்டனர் என்னையும்

வீசிய ஒரு குண்டு என் மேசையருகில் வெடித்தது

கவனிக்கவில்லையோ என வெளி வருகிறேன்

இப்பொழுது என்னைத் துளைத்தனர்

வேறெங்கோ துரத்துவதில் தீவிரம் காட்டினர்

தீவிரவாதிகள் என்பதினால்

பின் தொடர்ந்து செல்கிறேன்

அனைத்துச் சொலவாடை மதுவாடைகளுடன்

இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமோ

-----------------

பாகிஸ்தானில் நள்ளிரவு 2.40 க்கு

பூகம்பம் ஏற்பட்டது இதன் வீரியம் ரிக்டர் அளவில் 6 ஆக அமைந்தது

புதிதாக வந்திருக்கும் இளம் நடிகையின்

வாழ்க்கைப் பாதை விசித்திரமானது

என்று பிரபல இயக்குனர் கூறியிருந்தார்

இரண்டு இந்திய காதல் திரைப்படப் பாடல்கள்

இன்னும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில்

(இது ஒரு அரசு நலன் வேட்டைப் பகுதி)

துப்பாக்கியுடன் நான்குபேர் கைது

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

என்ற ஒரு பாடல்தான் இத்தனைக்கும் காரணம்

மற்றபடி அதே டிசம்பர்

அதே 2008

அதே 27

தொடர்பிற்கு அடியே கொல்லுதே

பாடலை அணுகவும்

Pin It