1. நீல நிற மேடையிலே
கோடி மலர் கிடக்குது.
எடுப்பாரும் இல்லை
தொடுப்பாரும் இல்லை!-அது என்ன?
2. எட்டாத தூரத்திலே
எவரும் இல்லா காட்டிலே
எழிலான பெண் ஒருத்தி
இரவெல்லாம் சிரிக்கிறாள்!-அவள் யார்?
3. விதைக்காத விதை விண்ணிலே
அறுக்காத கதிர் மண்ணிலே!-அது என்ன?
4. ஊருக்கு அழகு எது என்றேன்
ஒன்றுடன் சேர்ந்த அய்ந்து என்றார்!-அது என்ன?
5. சித்திரையில் சிறு பிள்ளை
வைகாசியில் வளரும் பிள்ளை
ஆனியில் அழகுப்பிள்ளை
ஆடியில் விழும் பிள்ளை!-அது என்ன?
6. உச்சியில் பூவிருக்கும்
ஊருணிக் கரையிலிருக்கும்
வெள்ளம் புரண்டு வரும்
அவரை வீழ்த்த முடியாது!-அவர் யார்?
7. பூத்த போது மஞ்சள்
பூத்ததும் சிவப்பு
காய்த்த போது சிவப்பு
காய்த்ததும் கறுப்பு!-அது என்ன?
8. வந்ததுதான் வந்தீர்களே
வந்து ஒருதரம் போனீர்களே
போய் ஒரு தரம் வந்தீர்களே
போனால் இனிமேல் வருவீர்களா?-அவர் யார்?
9. அண்ணன் தம்பி அய்வரும்
ஆளுக்கு ஆள் வேறு உயரம்
அய்வர் வீட்டுக்கும் ஒரே முற்றம்!-அது என்ன?
10. மூன்றெழுத்து விலங்கு.
நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்
கடைசி எழுத்தோ மாதமாகும்!-அவை யாவை?
விடைகள் :
1. விண்மீன்கள்
2. நிலா
3. சூரியன், சூரிய ஒளி
4. ஆறு
5. பனம்பழம்
6. நாணல் புல்
7. பேரிச்சை
8. பல்
9. விரல்கள், உள்ளங்கை.
10. கழுதை
விடுகதைகள்
- விவரங்கள்
- தலித் முரசு செய்தியாளர்
- பிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008
More articles by தலித் முரசு செய்தியாளர்
- மீண்டெழுவோம் (06 ஜூன் 2014)
- தொழில் நுட்பப் படிப்பிற்கு அரசின் கல்வி உதவித் தொகை (19 ஜூலை 2013)
- ஜாதியைக் கொண்டாடும் சென்னை நிறுவனம் (07 டிச 2011)
- பரமக்குடி துப்பாக்கிச் சூடு - தலித் தலைவர்கள் கருத்து (31 அக் 2011)
- கிருஷ்ணவேணி தாக்கப்பட்டதற்கு காவல் துறையே காரணம் (04 அக் 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.