bill_gates_with_poor

கருகிய மடியில் பாலைக் கறப்பது

போன்றது உங்கள் சிரிப்பு

இருள் கவ்விய எல்லைகளின் ஓரத்தில்

வாழத் திணித்து விட்டு

நீங்கள் இருக்குமிடத்தை மட்டும் ஊர் என்கிறீர்கள்

நிலம்பறித்து விரட்டி அடித்துவிட்டு

நிலம் வைத்திருக்கக் கூடாதென

மனுச்சட்டம் எழுதி வைத்தீர்

இறந்தவர் உடையைத்தான் நாங்கள்

அணிய வேண்டும் என்னும்

அநியாயம் சொல்லித் தந்தீர்

இழிவானப் பெயரன்றி

வேறெதுவும் கூடாதென்று

பெயரிலக்கணம் எமக்குப் புரிந்தீர்

நாயையும் பன்றியையும்

எங்களை வளர்க்க வைத்துவிட்டு

நறுநெய்யை நக்கி நாக்கு வளர்த்தீர்

பன்னாட்டு வணிகம் காக்க

தேர்தல் தாகம் தீர்க்க

அவ்வப்போது இப்போதெல்லாம்

எங்கள் குடிசையில் வந்து குந்துகின்றீர்

உங்கள் குண்டிகள் கொதிக்கும் வெப்பம்

எரிக்கப்பட்ட எம்பாட்டன்களின்

சாம்பலில் உயிர்த்தது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.