பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்
விலை ரூ.60

"பார்ப்பனனை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்பது சிலப்பதிகாரம்! பார்ப்பனர்களைக் காப்பாற்றினால், அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம்! பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி; வணங்கத் தக்கவள்! பாண்டியன் ‘குற்றவாளி' - இதுதான் சிலப்பதிகாரக் கதை! இதுதான் தமிழரின் பண்பாடாம்! இவைகளைத்தான் ஒழிக்க வேண்டும்.''

ஆசிரியர் : ரா. மணியன் பக்கங்கள் : 197

வெளியீடு : புரட்சிப்பாதைப் பதிப்பகம்,
10, சவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை - 107

சிறப்புப் பொருளாதார மண்டலம்
விலை ரூ.10

"தமிழகத்திலுள்ள 2.8 விழுக்காடு பேர் அதாவது, மொத்தத் தமிழக மக்கள் தொகையில் 3 விழுக்காடுக்கும் குறைவானவர்கள் தமிழகத்திலுள்ள மொத்த நிலப்பரப்பில் 3இல் 1 பங்கை (24%) வைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த கட்ட பணக்காரர்களான 10 விழுக்காடு பேர், தமிழகத்திலுள்ள மொத்த நிலப்பரப்பில் 50 விழுக்காட்டை கொண்டுள்ளனர். தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3.09 லட்சம் சிறு தொழிற்சாலைகளில் 1.41 லட்சம் ஆலைகளுக்கு மூடுவிழõ நடத்தப்பட்டுவிட்டது. 2500 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு விட்டன.''

தொகுநர் : அ.சி. சின்னப்பத் தமிழர் பக்கங்கள் : 48 வெளியீடு : தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம், அரும்பாக்கம், சென்னை - 600 106
பேசி : 044 24753373

பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு
விலை ரூ.35

"ஒரே கடையில் அமோகமாய்/விற்பனையாகிறது/இட்லரின் விதைகளும்/தெரசாவின் விதைகளும்/தேர்ந்தெடுப்பின் அலைக்கழிப்பால்/கழிந்த விதையற்ற வாழ்க்கைகள்/இரைந்து கிடக்கிறது/எதிரிகளின் விதை தேர்வு அல்லது/கலப்பின யுக்தியை/அறியும் பொருட்டே/தற்காலிகமாய்/ஒத்தி வைத்திருக்கிறோம்/தேர்ந்தெடுப்பை''

ஆசிரியர் : அமிர்தம் சூர்யா பக்கங்கள் : 64 வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41 கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011
பேசி : 044 25582552

வன்கொடுமைகளும் சட்ட அமலாக்கமும்
விலை ரூ.250

"சட்டத்தால் மட்டுமே சாதி ஒழிப்பு சாத்தியமில்லை. சட்ட வரையறையையும் தாண்டி, அமைப்பு ரீதியாக பல்வேறு பணிகளை கிராமப்புறங்களில் ஆற்ற வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது. அமலில் இருக்கின்ற சட்டங்களின் பலன்களை, பாதிக்கப்பட்ட தலித்துகள் முழுமையாகப் பெறுவதும், வன்கொடுமை புரியும் குற்றவாளிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டனை அடைவதும் தீண்டாமை ஒழிப்புப் பயணத்தில் சில படிக்கட்டுகளாக அமையும்.''

ஆசிரியர் : எம்.ஏ. பிரிட்டோ பக்கங்கள் : 404 வெளியீடு : டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மய்யம், மண்டேலா நகர், மதுரை - 2 பேசி : 0452 - 2690722

ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி
விலை ரூ.25

"இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும்தான், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழிநடத்தி வருகின்றன. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம்தான். பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில்தான். இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் - பார்ப்பன, பனியா, பன்னாட்டு, ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.''

ஆசிரியர் : க. ராசேந்திரன் பக்கங்கள் : 112 கிடைக்குமிடம் : பெரியார் திராவிடர் கழகம், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை - 600 041 பேசி : 044 - 24512857

தமிழில் சிற்றிதழ்கள்
விலை ரூ.50

"சிற்றிதழ் இதழியல் என்றே எதிர் காலத்தில் ஊடகவியலில் புதிய உருவாக்கம் நிகழும் சிந்தனைக்குச் சுடரேற்றும் தலைப்புகளில், கீரைத் தமிழன் ஆய்வுச் சிந்தனைகளை விதைக்கின்றார். தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த் தேசியம் போன்ற கருத்தியல்களின் சோதனைப் பதிவுகளின் உருவாக்கமாகச் சிற்றிதழ்கள் எவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றிய அறிமுகங்கள் அடங்கியவையாக இந்நூல் திகழ்கிறது.''

ஆசிரியர் : கீரைத் தமிழன் பக்கங்கள் : 112 வெளியீடு : கலைநிலா பதிப்பகம், 46, ஆசாத் நகர், கருணாநிதி நகர், திருச்சி 620 021 பேசி : 98424 46044

Pin It