இந்தியப் பெருமுதலாளி வர்க்கம்
விலை ரூ.125

“மேற்கு அய்ரோப்பிய நாடுகளில் தோன்றிய முதலாளி வர்க்கம், அந்தந்த நாடுகளில் நிலக்கிழமையின் பழைமைவாதத்தை எதிர்த்துப் போராடி, அச்சமூகங்களை நவீனப்படுத்தியதுபோல இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தால் ஏன் செய்ய முடியவில்லை என்பதை வரலாற்று ஆதாரங்களோடு இந்நூல் அலசுகிறது; மக்களின் வறுமைக்கும், சொல்லொண்ணா வேதனைகளுக்கும் காரணமாகவுள்ள இச்சமூக அமைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, வெகுமக்களுக்கான புதிய இந்தியாவை நிர்மாணிப்பதற்கான பாதையையும் இது சுட்டிக்காட்டுகிறது.’

ஆசிரியர் : சுனிதி குமார் கோஷ்
பக்கங்கள் : 328
வெளியீடு : அலைகள்
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
சென்னை - 600 024
பேசி : 044 - 24815474



பஞ்சமனா பஞ்சயனா
விலை ரூ.60

“பண்பாட்டு அடையாளம் என்பது உயர்வின் அறிகுறியாகவும் அமையலாம்; இழிவின் வெளிப்பாடாகவும் அமையலாம். இதைக் கணக்கில் எடுக்காமல் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. கடந்தகால இந்தியச் சமுதாயத்தின் வரலாற்றை ஆராய்ந்தால், இழிவை ஏற்படுத்தும் வண்ணம் சில பண்பாட்டு அடையாளங்கள் ஒடுக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருப்பதையும் அறிய முடியும். சில பண்பாட்டு அடையாளங்களைப் பெறவும் சில பண்பாட்டு அடையாளங்களைத் துறக்கவும் நிகழ்ந்த போராட்டங்களை இந்திய வரலாறு நெடுகிலும் காண முடியும்.’

ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்
பக்கங்கள் : 128
வெளியீடு : பரிசல்,
எண்.1, வள்ளலார் தெரு,
சூளைமேடு,
சென்னை - 94
பேசி : 9382853646


ஆரியக் கூத்து
விலை ரூ.60

“இந்துத்துவம் எப்பாடுபட்டாவது நுழைய முயன்று தோல்வியுறும் மற்றுமொரு தருணம் இது. வரலாற்று ஆய்வு என்கிற பெயரில் போலி ஆய்வாளர்களின் கூச்சலைப் புறம்தள்ளுவது மட்டுமன்றி, அதை ஆதாரப்பூர்வமாக முறியடிப்பதும் நம்முன் உள்ள தேவையாகும். ஆரியர்கள் பூர்வகுடி மக்கள் என்பதை நிலைநாட்ட இந்துத்துவம் செய்யும் மோசடிகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிலைநிறுத்த உதவும் என்பது அவர்களின் எண்ணம். இதற்காகவே கழுதையை குதிரையாக்குதல் போன்ற எல்லாவித புனைவுகளிலும் சிறிதும் வெட்கமின்றி இறங்கியுள்ளனர்.’

ஆசிரியர் : அ. மார்க்ஸ்
எதிர் வெளியீடு,
305, காவல் நிலையம் சாலை,
பொள்ளாச்சி - 1
பக்கங்கள் : 116
பேசி : 04259 - 226012


மயில் ராவணன் சிறுகதைகள்
விலை ரூ.50

“இங்கப்பாராயா, காலங்காத்தால வூட்டண்ட வந்து மயித்தறுக்கரன் கியித்தறக்கரன்னு அனாவசியமா பேசற வேல வெச்சிக்காத! உம்மவ வயசென்னா எம்பிருசன் வயசென்னா? ஒரு கேள்வி மொற மனசருங்கற மட்டு மரியாதி இல்ல. வந்து என்னம்மோ ‘நாசூத்தி நாசூத்தி நாசுவன் எங்க'ன்னு கேட்கறா? எங்களக் கண்டா அத்தன எளக்காரமா’ன்னு அவளுந் திலுப்பிப் பேச புடுச்சது பிளுபிளுன்னு அடமழயாட்டம் நாசுவ மூட்டாண்டச் சண்ட.’

ஆசிரியர் : மு. அரிகிருஷ்ணன்
பக்கங்கள் : 96
இறக்கை வெளியீடு,
வாய்ப்பாடி அஞ்சல்,
விஜயமங்கலம் வழி,
ஈரோடு மாவட்டம் - 6
பேசி : 04294 259538



தமிழ்ச் சீரிதழ்கள் நோக்கும் போக்கும்
விலை ரூ.40

“18,19,20,21 ஆகிய நான்கு நூற்றாண்டுகளைக் கண்டுள்ளது தமிழ் இதழியல் உலகம். தமிழின் முதல் இதழ் தமிழகத்திலிருந்து 1812இல் வெளிவந்தது ‘மாசத்தினச் சரிதை' என்ற பெயரில். இந்நூல், தமிழ் இதழியலில் சிற்றிதழ்கள் என்ற சீரிதழ்களின் வரலாற்றை விவரிக்கிறது. தற்போதைய சிற்றிதழ்களின் முகவரிகள் தரப்பட்டுள்ளன. சிற்றிதழ்களின் பணிகளை ஆவணப்படுத்தும் நல்ல நூல்.’

ஆசிரியர் : தி.மா. சரவணன்
வெளியீடு: கலைநிலா பதிப்பகம்,
46, ஆசாத் நகர்,
கருணாநிதி நகர், திருச்சி - 1
பக்கங்கள் : 96
பேசி : 98424 46044



பறையொலியால் பரவும் இழிவு
விலை ரூ.15

“பறைமேளம் தலித் மக்களுக்கான அடையாளம் என்னும் கருத்தினை தொடர்ந்து பரப்புவதால், சாதியமுறைக்கு நியாயமும் தொன்மைப்பண்பும் உருவாகிவிடுகிறது. கண்ணுக்குப் புலப்படாவிதத்தில் பரப்பப்பட்டுள்ள இக்கருத்தியலை பொய்யாக்கி, வரலாற்று மறதிக்கு மாற்றாக தலித்துகளின் கடந்தகால சுயமரியாதைக்கான போராட்ட வரலாற்றின் மூலம் பறை தலித்துகளின் அடையாளமல்ல என்கிறது இந்நூல்.’

ஆசிரியர்கள் : ரவிக்குமார், எக்ஸ்ரே மாணிக்கம், பூவிழியன், ஸ்டாலின் ராஜாங்கம்
பக்கங்கள் : 47
வெளியீடு : கொதிப்பு,
1அ, மணத்திடல் தெரு,
சீர்காழி - 609 110
பேசி : 93452 - 21855
Pin It