இறுகிய பாறையின் ஊடே
Violence in Templeஇறங்கி பிளக்கும் வேரென
பரவுகிறது கோபம்

அறிவின் நீள்சமவெளியெங்கும்
அடைக்கப்பட்ட ஊற்றுக் கண்களில்
கசிகின்றது இருள்

மடமை சுமைகளை ஏற்றியேற்றி
நீள்கிறது மூடநம்பிக்கையின் கம்பி

மதத்தின் போதை
கண்களை மறைக்க
அரங்கேறுகின்றன பிரார்த்தனை
பயங்கரங்கள்

ஒளியை உறிஞ்சிக் கருத்த
இரவு மரங்களாய் கிடக்கின்றன
மூட மனிதங்கள்

பகுத்தறிவின் பாதைகளைத் தூர்க்கும்
பக்தி மாயைகளை
விரட்டித் துரத்த தேவை
அம்பேத்கரின் ஒரு துளி மையோ
பெரியாரின் கைத்தடி நுனியோ

காரைக்குடியில் உள்ள சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் 22.3.2006 அன்று நடைபெற்ற திருவிழாவில், பத்தடி நீள இரும்புக் கம்பியை பக்தரின் பாவத்தைப் போக்க, ஒரு கன்னத்தில் குத்தி மறு கன்னத்தில் வெளியே எடுக்கிறார்கள். படம் : "டெக்கான் கிரானிக்கல்'
.

-யாழன் ஆதி
Pin It