மேலவளவு படுகொலையில் ஏழு தலித் மக்கள் 30.6.1997 அன்று கொல்லப்பட்டனர். விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது. மற்ற 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்டிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டது, சட்டத்திற்கு எதிரானது என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நாம் உயர் நீதிமன்றத்தில் வழக்கிட்டுள்ளோம். இந்த இரு தரப்பு வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்பதற்காக வழக்குப் பட்டியலில் தற்போது உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.ஜி. கண்ணபிரான் (ஆந்திர மாநிலம்) அவர்கள் வாதிட, அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மனு செய்திருந்தோம். இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்றப் பிரிவு, இதனைத் தள்ளுபடி செய்து அரசு வழக்கறிஞரே செய்ய முடியும், மாற்று ஏற்பாடு தேவை இல்லை எனக் குறிப்பிட்டது. தலைமை நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்து அம்மனு விசாரணைக்கு வர உள்ளது.

இந்தச் சூழலில், வழக்கறிஞர்கள் பயணச் செலவு மற்றும் வழக்கு ஆவணங்கள் நகல் எடுத்தல் போன்றவற்றிற்கு நிதி திரட்டல் பணியைச் செய்து கொண்டுள்ளோம். தளர்வின்றி வழக்கை நடத்தவே முழுக் கவனத்துடன் செயல்படுகிறோம். சிறு தொகையாக இருப்பினும், பங்களிப்பு என்ற உணர்வை செயலில் காட்டும் வாய்ப்பாகவும் இந்தப் பணி அமைய வேண்டும். இயன்றவர்கள் நிதி கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வங்கி ‘ட்ராப்ட்' மூலம் அனுப்பினால் நல்லது. P. RATHINAM என்ற பெயருக்கு ‘ட்ராப்ட்' எடுக்கவும்.

பொ. இரத்தினம்
வழக்கறிஞர் குழுவுக்காக
முகவரி : இரண்டாம் மாடி, 183 தம்பு செட்டித் தெரு, சென்னை 600 001
பேசி : 94434 58118 / 044 2524 4438
Pin It