திராவிடர் விடுதலைக் கழகம் - தமிழ் தேச மக்கள் முன்னணி இணைந்து நடத்திய “மத வெறியர்களால் தூண்டப்படும் ஹிஜாப் அரசியல்” கருத்தரங்கம் மேலூரில் உள்ள ரஹ்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்புரையாற்றினார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட செயலாளர் மா.பா மணி அமுதன் தலைமை தாங்கினார். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன். பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு அரசின் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சி நாதன், தமுமுக (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள்..

தமுமுக (ஹைதர் அலி ) மாவட்ட பொறுப்பாளர் பக்ருதீன் நிகழ்விற்கான பல உதவிகளை செய்து கொடுத்தார் தமுமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளிட்ட தோழர்களும் கருங்காலக்குடி , நாவினிப்பட்டி , கீழையூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றனர்.

மதுரை மேலூர் பகுதியில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் சதி திட்டங்களுக்கு எதிராக மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து செயல்படும் என மாவட்ட செயலாளர் மணிஅமுதன் உறுதியளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவில் தேர்தல் முகவராக இருந்த ஒரு பா.ஜ.க. பிரதிநிதி, ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த ஒரு பெண்ணை மிரட்டினார். அதைத் தொடர்ந்து வாக்குசாவடியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த வார்டில் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

மின்னூல் தொகுப்பு

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் அடங்கிய மின்னூல் தொகுப்பு. புத்தகத்தை பெரியார் முழக்கம் பிப் 10, 2022 இதழில் மொத்தமாக 52 புத்தக பட்டியல் வெளிவந்து கழகத் தோழர்களால் பெருவாரியாக பதிவிறக்கி படிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இணைய தளப் பிரிவின் முயற்சியால் மேலும் 45 புதிய தலைப்புகளில் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://dvkperiyar.com/?page_id=17518

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல் பட்டியல்: 1. இந்துக்களின் விரோதி யார்? நண்பன் யார்? சிற்றுரைகள் தொகுப்பு 1; 2. கசக்கும் ஒன்றிய(ம்) அரசு - விடுதலை இராசேந்திரன்; 3. கீதையின் வஞ்சகப் பின்னணி - விடுதலை இராசேந்திரன்; 4. சினிமா கண்டு வந்தவன் - விடுதலை இராசேந்திரன்; 5. மக்களைக் குழப்பும் ‘நவீனப் பார்ப்பனியம்’ 2021 ஆம் ஆண்டு தலையங்க தொகுப்பு - விடுதலை இராசேந்திரன்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூல் பட்டியல் : 6. ஆட்சியை ஆதரித்த பெரியார், போராட்டம் நடத்தாமல் இருந்ததில்லை கொளத்தூர் மணி சிற்றுரைகள்; 7. கொளத்தூர் மணி நேர்காணல் - திவிக வெளியீடு.;

திவிக வெளியீடுகள் பட்டியல் : 8. இந்துவாக சாக மாட்டேன்; 9. இரட்டை வாக்குரிமை பறிபோன வரலாறு - சிவக்குமரன்; 10. இராமர் கோயில்; 11. கல்விக் கொள்கையில் பெரியாரியல் பார்வை; 12. கீழ்வெண்மணியும் பெரியாரும்; 13. குற்றப் பரம்பரை சட்டம் - அதி அசுரன்; 14. சங்கராச்சாரிகளும் - சாய்பாபாக்களும் மக்களை மடையர்களாக்குகிறார்கள் - இயக்குனர் மணிவண்ணன்; 15. சீமானின் செருப்பு வீரம்; 16. தந்தை பெரியார் தலித் மக்களின் எதிரியா? தோழர் சந்திரபோசு; 17. தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம் - மேதகு பிரபாகரன்; 18. தில்லை நடராசர் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் ஏற்று நடத்து; 19. தேசியப் பாதுகாப்பு சட்டம் - இரத்து செய்ய வேண்டும்!; 20. நீதிக்கட்சி ஆட்சியின் - தலித் நலத்திட்டங்கள்; 21. நூற்றாண்டு விழா காணும் பச்சைத் தமிழர்; 22. பழனி கோயில் வழிபாட்டு உரிமையை பறித்த பார்ப்பனர்கள்; 23. பார்ப்பன சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று நீதிக்கட்சி வரலாற்றை நீக்கியுள்ள தமிழக அரசு; 24. பார்ப்பனியம் என்பது மிக மோசமானது - தமிழருவி மணியன்; 25. புதிய உருவெடுத்து வரும் ஆதிக்கத்திற்கு எதிராக, இணைந்து போராடுவோம் - தோழர் நல்லக்கண்ணு; 26. பெரியார் - மார்க்ஸ் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் - டி. ராஜா; 27. பெரியார் போராட்டங் களில் இணைத்துக் கொண்ட எம் ஆர் இராதா; 28. பெரியாரியம் காலத்தின் கட்டாயம் - ப.பா. மோகன்; 29. பெரியாரியல் பேரொளி’ திருவாரூர் தங்கராசு - திவிக வெளியீடு; 30. பெரியாரின் இறுதி சொற்பொழிவுகள் தொகுப்பு; 31. பொது சிவில் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்; 32. மாணவர்களே, போராட்டத்தை தொடருங்கள்! - கு. முத்துக்குமார்; 33. மானங்கெட்ட இந்திய இராணுவத்தை தாக்கிய வழக்கு; 34. யாகம் - வேள்விகளின் பின்னணி என்ன; 35. வெறுப்பைத் திணிக்கும் மதவெறி கோட்பாடு - தீஸ்டா செதல்வாட்; 36. வேத மதத்தை உயிர்ப்பிக்க வந்த கற்பனையே ராமாயணம் வழக்கறிஞர் பானுமதி; 37. ஹிந்து மத ஆபாசங்கள்

போராட்டம் மாநாடு பற்றிய சிறப்பு வெளியீடுகள் : 38. இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே - தில்லியில் காயக்கட்டு ஊர்வலம்; 39. ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாடு மதுரை ஏப்ரல் 2005; 40. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி ஜனவரி 30, 2004; 41. தமிழர் உரிமை முழக்க மாநாடு - தாராபுரம் செப் 2004; 42. தமிழர் தன்மான மீட்பு மாநாடு - புதுச்சேரி ஜுலை 2003; 43. நவம்பர் 26 சட்ட எரிப்பு நாள் ஜாதி ஒழிப்பு மாநாடு, மே 2007 தஞ்சை; 44. நூற்றாண்டு விழா குத்தூசி குருசாமி, புலவர் குழந்தை அக்டோபர் 2005, திருப்பூர்; 45. வேத மரபு மறுப்பு மாநாடு - திவிக வெளியீடு.

தோழர்கள் இந்த வெளியீடுகளை தரவிறக்கி படித்து தத்தமது குழுக்களில் பகிர வேண்டுகிறோம்.

Pin It