கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர்.

தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம்.

K.S.Duraisamy - Savings A/c No : 10235169636.
IFSC Code : SBIN0009314. State bank of india,
Veerapandi branch, Tirupur - 641605.
Contact number : +919994623020.

Pin It