மேட்டூரில் ‘மால்கோ’ இரசாயன தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து, தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராடி வருகின்றன. கடந்த 13.6.2009 சனி காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கண்டன ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே! குரல் கொடு!’ சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தக் கண்டனப் பேரணியின் இறுதியில் மால்கோ வேதாந்த குழுமத்துக்கு அவமானப் பரிசு என்று அறிவித்து மரத்தால் செய்யப்பட்ட கட்டை மயில் ஒன்று நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

Pin It