கீற்றில் தேட...

‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில் முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது.

திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறார்கள். ‘காலத்துக்குத் தேவையான கண்டிப்பாக நடத்த வேண்டிய பரப்புரை’ என்று பல்வேறு இயக்கத் தோழர்களும் தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பயணக் குழுவினரின் பயணத் திட்ட விவரம்:

திருப்பூர் குழு : 26.08.2019 திங்கள் - காலை 10 மணி: உடுமலை; பிற்பகல் 4 மணி : தேவனூர் புதூர்; மாலை 6 மணி : வேட்டைக்காரன் புதூர்- பொதுக் கூட்டம்.

27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி : ஆனை மலை, முக்கோணம்; பகல் 12 மணி : கா.க புதூர்; பிற்பகல் 4 மணி : பொள்ளாச்சி; மாலை 6 மணி : கிணத்துக்கடவு; மாலை 7 மணி : உக்கடம்.

28.08.2019 புதன் - காலை 9 மணி : சூலூர்; காலை 10 மணி : சோமனூர்; பகல் 12 மணி : பல்லடம்; மாலை 4 மணி : பொங்கலூர்; மாலை 5 மணி : கணபதி பாளையம்; மாலை 6 மணி : வீரபாண்டி பிரிவு.

29.08.2019 வியாழன் - காலை 10 மணி : படியூர்; காலை 11 மணி : காங்கேயம்; பிற்பகல் 4 மணி : நத்தக் காடையூர்; மாலை 6 மணி : வெள்ளகோயில்; 30.08.2019 வெள்ளி - காலை 10 மணி : முத்தூர்; பகல் 12 மணி : பூந்துறை; மாலை 4 மணி : பள்ளிபாளையம் (நிறைவு)

விழுப்புரம் குழு : 25.08.2019 ஞாயிறு காலை 10 மணி - மஞ்சகுப்பம்- கடலூர்; பகல் 12 மணி - செம் மண்டலம்; பிற்பகல் 3 மணி - தூக்கணாம்பாக்கம்; மாலை 5 மணி - பாக்கம் கூட்ரோடு(தங்கல்)

26.08.2019 திங்கள் - காலை 10 மணி - வளவனூர் - விழுப்புரம்; பகல் 12 மணி - விழுப்புரம்; பிற்பகல் 3 மணி - அரசூர்; மாலை 5 மணி - திருவெண்ணெய் நல்லூர்( தங்கல்)

27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி - திருக்கோவிலூர்; பகல் 12 மணி - மணலூர்பேட்டை; பிற்பகல் 3 மணி - மூங்கில்துறைப்பட்டு; மாலை 5 மணி - கடுவனூர் (தங்கல்)

28.08.2019 புதன் - காலை 10 மணி - பகண்டை கூட்ரோடு; பகல் 12 மணி - சங்கராபுரம்; பிற்பகல் 3 மணி - மூரான்பாளையம்; மாலை 5 மணி - கள்ளக்குறிச்சி(தங்கல்)

29.08.2019 வியாழன் - காலை 10 மணி - நயினார்பாளையம்; பகல் 12 மணி - சின்னசேலம்; பிற்பகல் 3 மணி - ஆத்தூர் - சேலம்; மாலை 5 மணி - இராசிபுரம்- நாமக்கல் (தங்கல்)

30.08.2019 வெள்ளி - காலை 10 மணி - குருசாமிபாளையம்; பகல் 12 மணி - திருச்செங்கோடு; பிற்பகல் 3 மணி - பள்ளிபாளையம் (நிறைவு)

ஈரோடு குழு : 25.08.2019 ஞாயிறு - காலை 10 மணி - கோபி; பகல் 12 மணி - கொடிவேரி; பிற்பகல் 3 மணி - கூ.சூ. பாளையம்; மாலை 6 மணி - சத்திய மங்கலம் (தங்கல்)

26.08.2019 திங்கள் - காலை 10 மணி - பவானிசாகர்; பகல் 12 மணி - புளியம்பட்டி; பிற்பகல் 3 மணி - நம்பியூர்; மாலை 6 மணி - குன்னத்தூர்

27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி - பெருந்துறை; பகல் 12 மணி - சென்னிமலை; பிற்பகல் 3 மணி - மு.ழு. வலசு; மாலை 6 மணி - அரச்சலூர்

28.08.2019 புதன் - காலை 10 மணி - விளக்கேத்தி; பகல் 12 மணி - சிவகிரி; பிற்பகல் 3 மணி - ஒத்தக்கடை; மாலை 6 மணி - கொடுமுடி

29.08.2019 வியாழன் - காலை 10 மணி - ஊஞ்சலூர்; பகல் 12 மணி - கருமாண்டம்பாளையம்; பிற்பகல் 3 மணி - எழமாத்தூர்; மாலை 6 மணி - மொடக்குறிச்சி

30.08.2019 வெள்ளி - காலை 10 மணி - சோலார்; பகல் 12 மணி - பெருமாள்மலை; பிற்பகல் 3 மணி - பள்ளிபாளையம்.

மயிலாடுதுறை குழு : 26.08.2019 திங்கள் - காலை 10 மணி - கொல்லுமாங்குடி; பகல் 12 மணி - பேரளம்; மாலை 4 மணி - செம்பனார்கோயில்; மாலை 6 மணி - மயிலாடுதுறை (தங்கல்)

27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி - குத்தாலம்; பகல் 12 மணி - ஆடுதுறை; மாலை 4 மணி - கும்ப கோணம்; மாலை 6 மணி - நாச்சியார்கோயில் (தங்கல்)

28.08.2019 புதன் - காலை 10 மணி - குடவாசல்; பகல் 12 மணி - திருவாரூர்; மாலை 4 மணி - கூத்தா நல்லூர்; மாலை 6 மணி - மன்னார்குடி (தங்கல்)

29.08.2019 வியாழன் - காலை 10 மணி - ஒரத்தநாடு; பகல் 12 மணி - பாப்பாநாடு; மாலை 4 மணி - பட்டுக் கோட்டை; மாலை 6 மணி - பேராவூரணி (தங்கல்)

30.08.2019 வெள்ளி - காலை 10 மணி - வல்லம்; பகல் 12 மணி - திருவரம்பூர்.

சென்னை குழு : 25.08.2019 ஞாயிறு - காலை 10 மணி- இராயப்பேட்டை துவக்கம்; பகல் 12 மணி - அனகாபுத்தூர்; மாலை 3 மணி- பல்லாவரம்; மாலை 5 மணி- தாம்பரம்( தங்கல்)

26.08.2019 திங்கள் - காலை 10 மணி- முடிச்சூர்; பகல் 12 மணி - படப்பை; மாலை 3 மணி- வாலாஜாபாத்; மாலை 5 மணி- காஞ்சிபுரம்(தங்கல்)

27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி - வந்தவாசி; பகல் 12 மணி- சேத்துப்பட்டு; மாலை 3 மணி- திரு வண்ணாமலை; மாலை 5 மணி- தண்டராம்பட்டு (தங்கல்)

28.08.2019 புதன் - காலை 10 மணி- செங்கம்; பகல் 12 மணி- சிங்காரப்பேட்டை; மாலை 3 மணி- ஊத்தங்கரை; மாலை 5 மணி- அரூர் (தங்கல்)

29.08.2019 வியாழன் - காலை 10 மணி- பாப்பி ரெட்டிப்பட்டி; பகல் 12 மணி- சாமியாபுரம் கூட்ரோடு; மாலை 3 மணி- அயோத்தியாபட்டினம்; மாலை 5 மணி- தாதகாப்பட்டி கேட்

30.08.2019 வெள்ளி - காலை 10 மணி- கொண்டாலம்பட்டி; பகல் 12 மணி- சங்ககிரி; மாலை 3 மணி- பள்ளிபாளையம் (நிறைவு)

 மேட்டூர் குழு : 27.08.2019 செவ்வாய் - காலை 10 மணி- பென்னாகரம்; மதியம் 12 மணி- நாகதாசம்பட்டி; மதியம் 3 மணி- பாப்பாரப்பட்டி; மாலை- 4:30 மணி- பாலக்கோடு; மாலை- 6 மணி- வெள்ளிச்சந்தை, மாரண்ட அள்ளி (தங்கல்)

28.08.2019 புதன் - காலை 10 மணி- தேன்கனிக் கோட்டை; மதியம் 12 மணி - கெலமங்கலம்; மதியம் 3 மணி - சூளகிரி; மாலை 6 மணி- இராயக்கோட்டை : பொதுக்கூட்டம் (தங்கல்)

29.08.2019 வியாழன் - காலை 10 மணி- கிருஷ்ணகிரி; மதியம் 12 மணி- பர்கூர்; மதியம் 3 மணி- காவேரிப்பட்டினம்; மாலை 6 மணி- ஓமலூர்: பொதுக்கூட்டம் (தங்கல்)

30.08.2019 வெள்ளி - காலை 10 மணி- முத்து நாயக்கன்பட்டி; மதியம் 12 மணி- ஜலகண்டாபுரம்; மதியம் 3 மணி- எடப்பாடி; மாலை 5 மணி- பள்ளிபாளையம் (நிறைவு விழா)

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.

திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

“மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் நிலைப்பாடு பற்றியும், தற்போது இந்த பயணத்தின் அவசியம் குறித்தும் தோழர்கள் எதிரிகளிடத்திலும், மக்களிடத்திலும், சமூக வலைதளங்களிலும் பொறுப்புணர்வுடன் (மக்கள் நலனுடன்) எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக கருத்துரையாற்றினார். இறுதியாக, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் நன்றியுரை கூற இரவு 9 மணிக்கு நிகழ்வு முடிவடைந்தது.