(தண்டனைப் பெற்ற ஓர் இன உணர்வுள்ள கைதி, திருச்சி சிறையில் எழுதிய கவிதை)

தேசிய பறவை மயிலென்று தெரியும்
தேசிய விலங்கு புலியென்று தெரியும்
தேசிய “நூல்”எதுவென்று தெரியுமா?
தெரிந்து கொண்டார்கள்
பெரியார் தி.க. தோழர்கள்.

பெரியார் தி.க. தோழர்களே!
நீங்கள் சட்டத்திற்கு தேசவிரோதிகள்
தேசத்திற்கு
உண்மையான பெரியாரின் தொண்டர்கள்.

‘தாலியை அறுத்தால்
கொலை வழக்குப் போடும்
இண்டியன் பீனல் கோடு
பூநூலை அறுத்தால்
தேசிய பாதுகாப்பு வழக்குப் போடும்
இண்டியன் பூ. நூல் கோடு.

மன்னார்குடி நெருப்பை
மடியில் மறைத்துக் கொண்டு
போயஸ் தோட்டத்து பொதிமூட்டை
போதனை செய்கிறது
பஞ்சையும், நெருப்பையும்
திருவரங்கத்தில் வைப்பதோ என்று.

யார் நெருப்பு யார் பஞ்சு
திருவரங்கத்தின் திருவாளர்களே
நீங்கள் நெருப்புதான்
தில்லையில் நந்தனை எரித்ததும்
வடலூரில் வள்ளலாரை எரித்ததும்
நீங்கள் தான்.

கோத்ரா ரெயிலை எரித்ததும்
குஜராத்தை
கொலைக்களமாக்கியதும்
திருவரங்கத்தின் திருவாளர்களே
உங்கள் நெருப்புதான்.

பெரியார் அம்பேத்கர்
சிலைகளை இடிக்கும் நீங்கள்
யாக குண்ட நெருப்புதான்
பெரியாருக்கும், அம்பேத்கருக்கும்
சிலை வைக்கும் நாங்கள்
பருத்தி பஞ்சுகள் அல்ல
பாவேந்தரின் பீரங்கிகள்.

நாடு முழுக்க நாங்கள்
தலை நிமிர்ந்தோம் உன்னால்
உன்தலை உடைக்கப்பட்டது
திருவரங்கத்தில்.

பெரியாரின் தலையில் அடிபட்டது
திருவரங்கத்தில்
பார்ப்பனத்தாலி அறுபட்டது
நாடு முழுக்க.

உழைக்கும் மக்களை ஒதுக்கி வைத்த
அக்கிரகாரத்தின் ஆணி வேரை
பிடுங்கியவர் நீ
அதனால்தான்
அக்கிரகாரத்து, மல மண்டைகள்
ஆட்டம் போடுகிறது
கடைசி வேரை காப்பாற்ற.

சூத்திரனும் பஞ்சமனும்
வேதத்தை படித்தால்
நாக்கை அறுப்பதும்
கேட்பவர் காதில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதும்
பார்ப்பன நாகரிகம்.

பெரியார் அம்பேத்கர் சிலைகள் மீது
காறி உமிழ்பவன்
நாக்கை அறுப்பதும்
கல்லால் அடிப்பவன்
கையை எடுப்பதும்
சிலையை இடிப்பவன்
சிண்டை அறுப்பதும்
நாத்திக நாகரிகம்.

திருவரங்கத்தில்
பெரியாருக்கு சிலை வைத்தால்
புனிதம் கெட்டுவிடுமா?
சமணர்களின் தலையை துண்டித்த இடம்
சமணமத கோயிலுக்கு
சமாதி கட்டிய இடம்
ரெங்கநாதன் கோயிலை கட்டியவர்களுக்கு
கூலி கொடுக்காமல்
காவு கொடுத்த இடம்
சமணத்தை சாம்பலாக்கிய சுடுகாடு
இதுதான் திருவரங்கத்தின் புனிதம்.

திருவரங்கத்தில்
பெரியார் சிலையிருப்பதால்
புனிதம் கெடாது
சிலைத் திருடன் கொலைகாரன்
திருமங்கையாழ்வாரின்
வாரிசுகளின் குலத்தொழில் கெட்டுவிடும்.
எங்கள் நெற்றியில் நாங்கள் பூசுவது
திரு நீரல்ல
நீங்கள் எரித்த
எங்கள் முன்னோர்களின் சாம்பல்.

எங்கள் நெற்றியில் நாங்கள் பூசுவது
குங்குமம் அல்ல
உங்களால்
எங்கள் முன்னோர்கள் சிந்திய ரத்தம்.

எங்கள் நெற்றியில் நாங்கள் பூசுவது
சந்தனம் அல்ல
நீங்கள் எங்களை
திண்ணியத்தில் தின்னவைத்த மலம்.

எங்கள் நெற்றியில் நாங்கள் பூசிய
திருநீரை, குங்குமத்தை, சந்தனத்தை
உங்கள் வாரிசுகளும் ஒருநாள்
அவர்கள் நெற்றியில் பூசுவார்கள்.

Pin It