‘காலச்சுவடு’ ஜூலை 2006 இதழில் அதன் பதிப்பாளர் - ஆசிரியர் கண்ணன், பெரியார் திராவிடர் கழகத்தையும் அதன் தலைவர் கொளத்தூர் மணியைப் பற்றியும் அவதூறான செய்திகளை எழுதியுள்ளார்.
‘பார்ப்பனியம் என்பது கருத்தியல் வன்முறை’ என்ற உண்மைக் கருத்துக்கு வலு சேர்ப்பது போன்று அவரின் செய்திகள் அமைந்துள்ளன.
‘ஜெயலலிதா ஆட்சியில் தொட்டிலில் உறங்கும் புரட்சியாளர்கள், கலைஞர் ஆட்சி வந்ததும் துயில் எழுந்து ஆட்டம் போடத் தொடங்கி விடுவது வழக்கமானதுதான்’ என்று பெரியார் திராவிடர் கழகத்தைப் பற்றி மிக மோசடியாகக் கூறியுள்ளார் கண்ணன்.
‘நாய்க்குத் தெரியுமா நல்லவன், கெட்டவன்?’ என்பார்கள். பார்ப்பனக் கண்ணனுக்கும் அவரின் மோசடி கும்பலுக்கும் சில செய்திகளைத் தருகிறோம். பெரியார் திராவிடர் கழகம் (அன்றைய பெயர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்) என்ற அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டதே 2001-ஆம் ஆண்டில் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகுதான். 2001-06 செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெரியார் தி.க. போராட வேண்டிய தேவை இருந்த அனைத்திற்கும் போராடியது என்பது தான் உண்மை.
காஞ்சி மடப்பள்ளிகளில் பார்ப்பன- பார்ப்பனரல்லாத மாணவர்களிடையே இனப்பாகுபாடு காட்டப்பட்டதாக செய்தி வெளியானபோது பெரியார் தி.க. காஞ்சி சங்கரமட முற்றுகைப் போராட்டம் நடத்தியது.
2004, ஜனவரி 30 இல் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் கருவறையில் நுழையும் கிளர்ச்சியை நடத்தியது பெரியார் தி.க. அதில் 1000 தோழர்கள் கைதாகினர். மேற்சொன்ன இரு போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும், ஜெயேந்திர சரவதிக்கும் ஒரு சிறு நெருடல்கூட இல்லை. அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள். அது மட்டுமல்ல, இதே காலத்தில் செல்வி ஜெயலலிதாவுக்கும், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணிக்கும் கூட அரசியல் அரங்கில் நெருக்கம் அதிகமாக இருந்தது. பிச்சையைத் தவிர வேறொன்றும் அறியாத உஞ்சவிருத்திப் பார்ப்பன கும்பலுக்கு இதெல்லாம் தெரியாதா? நன்கு தெரியும். ஆனாலும், தங்களின் இச்சையைத் தணிக்க இப்படி எழுதுவதுதான் அவர்களின் வாடிக்கை.
குஜராத் முதல்வர் இந்துத்துவ வெறியன் நரேந்திர மோடியின் கோவை வருகையையொட்டி 2003, ஆகஸ்டு 1 ஆம் தேதி, பெரியார் தி.க. தோழர்கள் கருப்புக்கொடி காட்டி, ‘மோடியே திரும்பிப் போ’ என்ற முழக்கத்தை எழுப்பி 100 பேர் கைதாகினர். தொட்டிலில் உறங்குபவர்கள் செய்யும் காரியமா இது, கண்ணா? இயக்கத்தின் முன்னோடிகள் முதல் நாள் இரவே கைது செய்யப்பட்டனர். இதுவும் ஜெயலலிதா ஆட்சியில் தான். அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவும், மோடியும் இந்துத்துவ வெறியின் அடிப்படையில் நட்பு கொண்டவர்கள். மோடி பதவி ஏற்பு விழாவுக்கு சென்றவர் ஜெயலலிதா. எனவே, எந்தப் போராட்டத்தையும் தேடி அலைய வேண்டிய அவசியமும் பெரியார் தி.க.வுக்கு இல்லை. தேவைப்படுகிற எந்தப் போராட்டத்தையும் நாம் அலட்சியப்படுத்தியதும் இல்லை.
திராவிடர் கழகத்தில் கொளத்தூர் மணி இருந்தபோது, 1994 ஜனவரியில் அரசு வளாகமான மேட்டூர் அரசினர் மருத்துவமனையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை அகற்றக் கோரியது மேட்டூர் தி.க. மறுக்கப்பட்டதால், ‘விடுதலை’ பத்திரிகையில் ‘மேட்டூரில் கர சேவை’ என்று அறிவிப்புக் கொடுத்து விட்டு தோழர்கள் ஊர்வலமாக சென்று பிள்ளையார் உருவ பொம்மையை சாலையில் போட்டு உடைத்து வழக்கை எதிர் கொண்டனர். அன்றைய காலத்தில் தான் ஜெயலலிதாவின் ஆணவப் போக்கு அதிகம் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
பெரியார் தி.க. நடத்திய மற்ற போராட்டங்களை ஒப்பிடுகையில், சமண முனிவர்களை எதிர்த்து நடத்தியது மிகச் சிறிய போராட்டம் தான். மேட்டூர் என்ற சிறிய ஊரில் அந்த வட்டாரத்தைச் சார்ந்த தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து நடத்திய மிக மிகச் சிறிய ஒன்று; இயக்கத்தின் எந்த முன்னணித் தலைவர்களும் அதில் கலந்து கொள்ளவில்லை. இதை நடத்த மிகப் பெரிய புரட்சியாளர்களும் தேவையில்லை; கலைஞர் ஆட்சி வரட்டும் என்று காத்திருக்க வேண்டிய அளவுக்கான சூழலும் இல்லை. ‘நவத்துவாரங்கள்’ வழியாக அவதூறுகளை பீய்ச்சியடிக்கும் காலச்சுவடு கண்ணனுக்கு கபாலத்திற்குள் மூளை இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக இருப்பதைத் தானே இது பறை சாற்றுகிறது?
அடுத்து மற்றொன்றை அள்ளி விடுகிறார் கண்ணன். ‘வீரப்பனின் ஆதரவாளராக பரவலாக அறியப்படும் கொளத்தூர் மணி....’ அடே! என்னே, அரிய (!) கண்டுபிடிப்பு!
1970-க்கு முன்பு பெரியார் இயக்கக் கூட்டங்களுக்குச் சென்று கொள்கை விளக்கங்களைக் கேட்டறிந்த தோழர் கொளத்தூர் மணி, 1971 இல் பெரியாரை அழைத்து கொளத்தூரில் பொதுக் கூட்டம் நடத்தினார். அதன் பிறகு திராவிடர் கழகத்தில் தீவிரமாக பணியாற்றி, சேலம் மாவட்டச் செயலாளர், மாநில நகராட்சி, மாநகராட்சி இயக்கப் பணிகளுக்கான மாநில அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருந்து பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தலையாய பணியாற்றினார். இன்றும் அதே பணியாய் திகழ்பவர்.
இன்னும் சில செய்திகளை கூடுதலாகச் சொல்ல வேண்டுமெனில், விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின கீழ் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அதே காரணத்திற்காக தடா சட்டத்தின் கீழ் ஏழு மாதங்கள் தண்டனை பெற்றார். வேலூர் சிறையிலிருந்து தப்பிய விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒரு ஆண்டு சிறை தண்டனையை ஏற்றார். இவ்வளவு ஏன்? 1980 இல் கொளத்தூருக்கு அருகிலுள்ள கும்பாரப்பட்டியில் இவரது தோட்டத்தில்தான் 350 விடுதலைப்புலிகள் இந்திய அரசின் உதவியுடன் ஆயுதப் பயிற்சியைப் பெற்றனர். அந்த இடம் இப்போது புலியூர் என்றே அழைக்கப்படுகிறது. ‘தம்பி’ பிரபாகரனை ஈழத்துக்குச் சென்று சந்தித்தார். ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டார்.
இவ்வாறு பெரியாரியல்வாதியாக, விடுதலைப் புலிகளின் நியாயமான இனப் போராட்டத்தின் ஆதரவாளராக அனைவருக்கும் நன்றாக அறிமுகமான தோழர் கொளத்தூர் மணி, ‘காமாலைக் கண்ண’னின் பார்வைக்கு மட்டும் ‘வீரப்பனின் ஆதரவாளராகத்’ தெரிகிறார். இது பார்வை கோளாறன்றி வேறென்ன? 8.9.2002 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் அபர்ணா (நாயர்) கொளத்தூர் வந்து மக்களைச் சந்தித்து ‘மக்களின் தலைவர் மணி’ என்று ஒரு கட்டுரையையே எழுதினார். அதில், “வீரப்பனோடு கொளத்தூர் மணி நெருக்கமாக இருப்பார் என்பதை இப்பகுதி மக்கள் நம்பத் தயாராக இல்லை; தமிழர்களின் உரிமைக்கும், நலனுக்கும் போராடுகிறவர். தீண்டாமை, இரட்டைக்குவளை முறைகளை அப்பகுதியில் ஒழித்தவர்; பெண் சிசுக் கொலையை நிறுத்தியவர்” என்று மக்கள் கூறியதை அந்த கட்டுரையில் பதிவு செய்தார் அபர்ணா.
சொல்வதற்கு இது போன்று ஏராளமான செய்திகள் இருந்தும் அதை எதையும் மிகக் கவனமாக சொல்லாமல் ‘வீரப்பனின் ஆதரவாளர்’ என்று கண்ணன் சொல்வதன் நோக்கம் என்ன?
பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கத்தை அதுவும் குறுகிய காலத்தில் மக்களிடம் சென்றுள்ள இந்த இயக்கத்தை அதன் தலைவரை கொச்சைப்படுத்தி முடக்கி விடலாம் என்ற பச்சைப் பார்ப்பனத் தன்மையன்றி வேறு எதுவும் இல்லை.
ஆலையிலிடப்பட்ட கரும்பு நசுக்கப்பட்டதற்காக கசப்பு காட்டுவதில்லை என்பதைப் போல், மக்கள் பணியிலிருந்து பின் வாங்காமல் செயல்பட பார்ப்பனர் நம்மை எதிர்த்துச் செய்யும் விமர்சனமும் இந்த இயக்கத்திற்கு ஒரு தகுதியாகவே தான் கருதப்படுகிறது.
அவதூறான விமர்சனங்களை நம்மீது அள்ளி வீசி பெரியாரியல் வாதிகளிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் தன்னை மிகச் சரியாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் கண்ணன். எருமை இருக்கிறது என்பதற்கு மூத்திர நாத்தமே ஆதாரம். அதுபோல கண்ணன் எழுத்துக்கும் மோசடியே ஆதாரம். ஏனெனில் கண்ணனின் எழுத்து மோசடி பற்றி தமிழ் இலக்கிய உலகில் அவருக்கு ஏற்கனவே மிகப் பெரிய பெருமை (!) உண்டு. அந்தப் பெருமையை, நம்மைப் பற்றி அவதூறாக எழுதியதன் மூலம் மீண்டும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கண்ணன்.