திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்

 

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்வெட்டு அளித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரியார் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை  மார்ச் 5 ஆம் தேதி நடத்தியது. திருச்சியில் தொடர்வண்டி சந்திப்பு முன் மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.எஸ்.முத்து தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் இளந்தாடி துரைராசன், தங்கராசு, புதியவன் (மாவட்ட இணை செயலாளர்), பொன்னுச்சாமி, ஆறுமுகம், குணா, திருவரங்கம் நகர செயலாளர் அசோக், அபிமன்னன், அன்பரசன் (பெரியார் பாசறை) உள்ளிட்ட கழகத்தினரும்,  பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் கந்தவேல் குமார் நன்றி கூறினார்.

 

பெரியார் பெருந்தொண்டர் கி.இராசமாணிக்கம் அறக்கட்டளை சார்பாக நன்கொடை

 

மயிலாடுதுறை பெரியார் பெருந்தொண்டர் கி.இராசமாணிக்கம் அறக் கட்டளை சார்பாக நாகை மாவட்டக் கழகத் தலைவர் இரசீத்கான், கழக வளர்ச்சிக்கு ரூ.5000-மும், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு ரூ.5000-மும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார்.

 

தங்கமாபுரிபட்டிணத்தில் முருகேசன்-திலகவதி இல்லத் திறப்பு

 

மேட்டூர் அணை தங்கமாபுரிபட்டிணத்தில் கழகத் தோழர்கள் முருகேசன்-திலகவதி புதிய இல்லத்தை கழகத்  தலைவர் கொளத்தூர் மணி 13.3.2011 நண்பகல் 12 மணியளவில் திறந்து வைத்தார். அனைவருக்கும் புலால் உணவு விருந்து வழங்கப் பட்டது. புதிய இல்லத் திறப்பின் மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.     நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

Pin It