தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா?
பொள்ளாச்சியில் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் 136 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் நகர ஒன்றியக் கழகம் சார்பில் நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் கா.சு.நாகராசன், “சொந்த நாட்டு மக்களை அந்நிய நாட்டு இராணுவம் சுட்டுக் கொல்வதை வேடிக்கைப் பார்க்கிற ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும். 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள படையால் படுகொலை செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கானவர்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டும்கூட இந்திய அரசு இதுபற்றி வாயே திறக்கவில்லை என்றால் தமிழர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்றுதானே பொருள்? இந்தியாவும் தமிழர்களுக்கு ஒரு அந்நிய நாடுதான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர். கிளைக் கழகங்களையும், புதிய தோழர்களையும் அதிகரிக்க வேண்டும்: கோவை மாவட்ட கழகம் தீர்மானம்
தலைமைச் செயற்குழு கூட்ட நடவடிக்கைகளுக்கு வசதியாக கருத்துகளை நகர ஒன்றிய கிளை கழக தோழர்கள், பொறுப்பாளர்களிடமிருந்து பெறுவதற்காக கோவை தெற்கு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 20.11.2011 ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக துணைத் தலைவர் சூலூர் இரா. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
கழகத்திற்கு புதிய தோழர்களையும், கிளை கழகங்களையும் அதிகரிக்க வேண்டும். பெரியார் பிறந்த நாள் விழாவை கழகத் தோழர்களின் இல்லங்கள் தோறும் ஒரு திருவிழாவைப்போல் கொண்டாட வேண்டும். கழகத் தோழர்கள் குறிப்பாக பொறுப்பாளர்கள் தங்கள் சொந்த வாழ்வில் கட்டாயமாக சாதி மத சடங்குகளை பின்பற்றக் கூடாது. தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் இடையே கொள்கை வழிபட்ட விவாதங்கள் எழ வேண்டுமே தவிர, அதிகார மோதல்கள் எழக் கூடாது. பொறுப்பாளர்களுக்கு இடையே ஏற்படும் சங்கடங்களில் தலைமைக்கழகம் துணிந்து தவறுகளை கண்டிக்கவும், நியாயங்களை பாதுகாக்கவும் முன்வரவேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகள் உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கா.சு. நாகராசன், மாவட்ட பொருளாளர் அகில்குமாரவேல், சூலூர் வீரமணி, பொள்ளாச்சி வே. வெள்ளிங்கிரி, இரா. மோகன், சி. விசயராகவன், வே. அரிதாசு, மணிமொழி, உதயகிரி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.
குளத்துப்பாளயத்தில் கழகப் பிரச்சாரம்
13.2.2011 ஞாயிறன்று பெரியார் சிந்தனைகள் பற்றிய பரப்புரை பொதுக் கூட்டம், பல்லடம் சாலை குளத்துப் பாளை யம் பகுதியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் இராமசாமி தலைமை தாங்கினார். கோபி வேலுச்சாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் அ. துரைசாமி சிறப்புரை யாற்றினர். மடத்துகுளம் மோகன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சியில் சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியதை ஏராளமான பொது மக்கள் பார்த்து விழிப்படைந்தனர். கழக நகர செயலாளர் முகில் இராசு, அகிலன், ஜீவா நகர் குமார், பாடகர் தியாகு, பொள் ளாச்சி வெள்ளிங்கிரி, விசயராகவன், பெரியார் பிஞ்சு கனல் மதி, இரவி, மு. மணி, சண். பாண்டியநாதன், பெரியார் முத்து, தமிழ்ச் செல்வன், குமார், பரிமளம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர் மீதான தாக்குதல் : கிருட்டிணகிரியில் ஆர்ப்பாட்டம்
இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவதைக் கண்டித்து கிருட்டிணகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டிணகிரி ரவுண்டானா அருகில் பழைய பேட்டை சாலையில் கழக மாவட்டத் தவைலர் தி. குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 19.2.2011 பகல் 12 மணி யளவில் நடைபெற்றது.
ருத்திரன் (ம.தி.மு.க.), சந்திரன் (ம.தி.மு.க.), தமிழக மக்கள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. தமிழரசன், பிரேம்குமார் (பெ.தி.க.), முருகேசன் (தமிழர் தேசிய இயக்கம்), சிவா (த.தே. இயக்கம்), ராஜ லிங்கம் (தமிழக புரட்சிகர இளைஞர் முன்னணி) ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
தூத்துக்குடியில் கழகப் பொதுக் கூட்டம்
19.2.11 அன்று மாலை 6.30 மணியள வில் தூத்துக்குடியிலுள்ள தாளமுத்து நகர் முதன்மை சாலை அருகில், பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் சா.த. பிரபாகரன் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றிய தலைவர் பா. முருகேசனார் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் ச. கா.பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, மாவட்ட செய லாளர் கோ.அ.குமார், மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, தலைமை செயற் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் ஆகி யோர் பெரியாரியலின் அவசியத்தைப் பற்றி பேசினார். இறுதியில் மாநகர செய லாளர் பால். அறிவழகன் ‘மந்திரமல்ல, தந்திரமே’ என்ற நிகழ்ச்சியை செய்து காட்டி மக்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
நிகழ்வில் மாவட்ட இணைச் செய லாளர் க. மதன், மாவட்ட பொருளாளர் செ. செல்லத்துரை, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் வ. அகரன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் உதயகுமார், நெல்லை மாவட்ட செயலாளர் காசிராசன், தோழர்கள் அமிர்தராசு, குமாரசிங், பெரியார் பிஞ்சு ம. திலீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு உணவு மாநகரத் தலைவர் சா.த. பிரபாகரன் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.
நன்கொடை
முடிவெய்திய பெரியார் பெருந் தொண்டர் காட்டுசாகை குப்புசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வின் நினைவாக அவரது மகன் பெல். இராசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் ரூ.5000 நன்கொடை வழங்கினார்.
சவுதி நாட்டில் பணியாற்றும் ஈரோடு மெஹத் தாஜ் பர்வீன், தனது முதல் மாத ஊதியத்தில் ரூ.1500 நன்கொடையாக கரூரில் கழகத் தலைவரிடம் வழங்கினார்.
நாமக்கல், குமாரபாளையம் தோழர் மாதுராஜ் தனது 43 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.100 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.