முட்டை யோட முடியலடா சாமி - உனக்கு
முழுமரி யாதை தரணும் சாமி
கெட்டுப் போன புத்தியடா சாமி - தமிழனைக்
கிள்ளுக் கீரையா நெனைச்ச சாமி

கொத்துக் கொத்தா எங்கமக்கள் சாக - நீ
கொண்டாட்டம் போடுறடா சாமி
ஒத்த பார்ப்பான் உனக்கித்தனை கொழுப்பா - உன்
ஒடம்புமொத்தம் சாக்கடை,இது பொழப்பா?

சோ பார்ப்பான் அண்ட புளுகை விற்கிறான் - இந்து
ராம்பார்ப்பான் கொடுநஞ்சைக் கக்கறான்
கேட்பாரே இல்லாமலா போயிட்டோம் - செருப்பு
கிழியணுமா இதுக்காண்ணு பார்க்கிறோம்

அம்முஜெயா ஆட்சியிலே சாமி - வாங்கின
அடியெல்லாம் மறந்தயடா சாமி
சும்மாஒரு துக்கடாநீ சாமி - பார்ப்பான்
தூக்கி உன்னை வைக்கிறாண்டா சாமி

புகவந்தாய் அப்பஒரு நாளு - நல்லா
பூசையெல்லாம் வாங்கினடா சாமி
மகளிரணி விளக்கு மாத்தில் கொடுத்தும் - இன்னும்
மானங்கெட்டு வாழறடா சாமி!

அழுக்குப் பார்ப்பான் தில்லையிலே இருந்து - போட்ட
ஆட்டமென்ன கொஞ்சமோடா சாமி
கொழுப்பெடுத்த தீட்சத னுக்காக - நீ
கூண்டி லேற வரணுமாடா சாமி

காலமெல்லாம் சூத்திரனை ஏய்ச்சா - நாங்க
கண்ணைமூடிக் கெடக்கணுமா சாமி?
நாலெழுத்தைச் சேரி மக்கள் படிச்சா - இந்த
நாடழிஞ்சு போகுமாடா சாமி?

செத்துப் போகவில்லையடா அய்யா - எங்கள்
சிந்தை அணு ஒவ்வொன்றிலும் அய்யா
புத்தியினை இனி யேனும் மாத்திக்கோ - இல்லே
பூணூலு கும்பலைக் காப் பாத்திக்கோ.

Pin It