ஜூன் 14, 15 தேதிகளில் கடலூரில் திராவிட முன்னேற்றக் கழகம் மகளிர் மாநாட்டை வெற்றியோடு நடத்தி, பல லட்சம் பெண்களைத் திரட்டி, சிறப்பான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். இந்த மாநாட்டைப் பற்றிய அரசியல் விமர்சனங்களைவிட, லட்சக்கணக்கில் பெண்கள், வீட்டுக்கு வெளியே வந்து குடும்பத்தைத் தாண்டி, சமூகத்திலும், தங்களுக்கு கவலை இருக்கிறது என்பதை உணர்த்தத் தொடங்கியிருப்பதையே முதன்மையாகக் கருதி பாராட்ட வேண்டும். இதுவே சரியான பெரியாரியல் பார்வையாக இருக்க முடியும்.

மாநாட்டில் உரையாற்றிய பேராசிரியர் அன்பழகன், கவிஞர் கனிமொழி போன்றோரின் கருத்தாழமிக்க, சுயமரியாதைக் கருத்துகளும் மாநாட்டின் சிறப்புகளாகும். கவிஞர் கனிமொழி தனது உரையில், கீதையின் தத்துவம் பெண்ணடிமையை வலியுறுத்தி, வர்ணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் என்று பேசியுள்ளதை ‘தினமணி’ போன்ற பார்ப்பன நாளேடுகள் கண்டித்த நிலையில் - பகவத் கீதையின் சுலோகங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி, கனிமொழி மறுத்திருக்கிறார்.

“குடும்பத்தில் அறமின்மை தலையெடுக்கும் போது, குடும்பப் பெண்கள் களங்கப்படுகின்றனர். பெண் சீரழிந்து கெட்டுப் போவதால்தான், வர்ணாசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றனர்” (“அதர்மாபிபவாத் கிருஷ்ண ப்ரதுஷ்யந்தி குல°திரியா ஸ்திரி ஷி துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கரா” - கீதை முதல் அத்தியாயம் - பாடல் 40) என்று ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி கனிமொழி மறுத்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், திராவிடர் கழகத் தலைவரால் ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் சூட்டப்பட்டவருமான பார்ப்பன ஜெயலலிதா, கீதையை சிலாகித்துப் போற்றுபவர் என்பதோடு, ஒரு முறை காவலர்களிடம் பேசிய போது, காவல்துறையினர் கீதையில் கிருஷ்ண பகவான் கூறியதுபோல், ‘பயனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யக் கூடியவர்கள்’ என்று கீதையின் சுலோகத்தைக் கூறியே பாராட்டியவர்; திராவிடக் கட்சியின் பெயருக்குள் பார்ப்பனியம் நடத்தியுள்ள ஊடுருவலுக்கு, சாட்சியாக, ஜெயலலிதாவின் அந்த உரை இருந்தது.

அப்போது, இதை எல்லாம் சுட்டிக்காட்டிக் கண்டிக்காமல், இப்போது தி.மு.க.வின் ‘புகழ் பாடும்’ தொழில் போலவே அன்றும் - ‘அ.தி.மு.க. புகழ் பரப்பும்’ பணியை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி செய்து கொண்டிருந்தார். ஆனால், தி.மு.க.வின் மீது பெரியார் கொள்கைப் பார்வையில் கூர்மையான விமர்சனங்களை வைத்து வரும் பெரியார் திராவிடர் கழகம் ஆதரித்து நிற்க வேண்டிய தருணங்களில் ஆதரிக்கத் தயங்காமல் கருத்துகளை முன் வைத்து வருகிறது.

அரசியல் மாநாடு - சமுதாய சீர்திருத்த மாநாடுகளில் ஏராளமான பெண்கள் பல்வேறு ஆழமான தலைப்புகளில் கருத்துகளை முன் வைத்திருப்பதும், மாநாட்டுத் தீர்மானங்கள் சரியான திசையில் சிறப்பாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுக்கும் மதவாத சக்திகளுக்கு கண்டனம்; தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வர வலியுறுத்தல்; மகளிருக்கான உரிமைகளை விளக்கும் பாடத் திட்டம்; பெண்களுக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை; சுயமரியாதைத் திருமணத்தை இந்தியா முழுமைக்கும் சட்டமாக்குதல்; மத்திய அரசுப் பணிகளில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு; அரவாணிகள் நல வாரியத்துக்கு ஆதரவு - என்று முற்போக்குக்கான சமூகப் பார்வையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மாநாடு நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் நடைமுறைக் கண்ணோட்டமுள்ள அணுகுமுறையாகும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை முடக்கத் துடிக்கும் ஆணாதிக்க சக்திகள் அதை நேரடியாகக் கூறாமல், பிற்படுத்தப்பட்டோர் உள் இடஒதுக்கீட்டோடு வரவேண்டும் என்ற வாதத்தை முன் வைத்து பெண்களின் உரிமைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இத்தகைய உள் ஒதுக்கீடுகளோடு சட்டம் வரும்போது நீதிமன்றங்களே அதைக் குலைத்து விடும் என்பதே இவர்களின் நோக்கம். இதைப் புரிந்த காரணத்தினால்தான், ‘உள்ஒதுக்கீடு தேவைதான். அதை பிறகு முடிவெடுக்கலாம்; முதலில் பெண்களுக்கான சட்டம் வரட்டும்’ என்ற நிலையை பெரியார் திராவிடர் கழகம் எடுத்தது. (7.10.2006 சென்னை மாநாட்டில், அதை வலியுறுத்தி கழகம் தீர்மானம் நிறைவேற்றியது) இதே கண்ணோட்டத்தில், ‘முதலில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு உள்ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கலாம்’ என்று தி.மு.க. மகளிர் மாநாடு இப்போது தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவிடம் கருத்து கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் வீரமணியோ பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுடன் தான் மகளிர் உரிமைச் சட்டம் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டையே முடக்கத் துடிக்கும் ஆணாதிக்க சக்திகளின் அணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

மண்டல் பரிந்துரையை அமுல்படுத்த முயற்சித்த வி.பி.சிங், அதை கல்விக்கு விரிவுபடுத்தாமல், ராணுவம், விஞ்ஞானம் போன்ற உயர் துறைகளுக்கு விலக்கு அளித்து தான் அமுல்படுத்தினார். அந்தக் கட்டத்தில் அதை ஆதரிப்பதே சரியானது என்ற முடிவுக்கே சமூக நீதி ஆதரவு அமைப்புகள் வந்தன. ஏன், திராவிடர் கழகம் கூட அதே நிலைதான் எடுத்தது. அத்தகைய அணுகுமுறையை இப்போது திராவிடர் கழகம் ஏன் கை கழுவுகிறது என்பதுதான் கேள்வி.

முதலில் ‘இடஒதுக்கீடு வரட்டும்’ என்று மண்டல் பரிந்துரையில் மேற்கொண்ட அணுகுமுறையிலிருந்து இப்பிரச்னையில் திராவிடர் கழகம் விலகி நிற்பது, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் ஏற்கவியலாத ஒன்றாகும். திராவிடர் கழகத்தின் குழப்பம் தி.மு.கவுக்கு இல்லை என்பதை கடலூர் மாநாட்டுத் தீர்மானம்

Pin It