நானும் என் தாய்த்தமிழும்
எத்தனை உறவுகள்
வந்தாலும்
என்னுறவாய்
என்றும் இருப்பவள் நீயே..

உலகில் எனக்கு ஒரு பெயர்..
அவளின் பெயரோ எனக்கு உயிர்..

என் நாவில் அவள் ஆடுவது நடனம்..
என் இதயத்துடிப்புக்கோ அவள் இலக்கணம்..

புரியாத புதிராய் நான்
நின்றபோது
புதியதொரு பொருளாய்
எனக்கு அளித்தவள்..

அவளின்
கழகத்தமிழில் நான்
கலந்தேன்..
கன்னித்தமிழை நான்
காதலித்தேன்..
வண்ணத்தமிழில் நான்
வளர்ந்தெழுந்தேன்..
அன்னைத்தமிழே உன்னிடம்
அடைக்கலமானேன்..

அலையும் கடலும் போல
தேடித்தேடி நான் சோர்ந்தாலும்
தேடாமலேயே
என்னைத் தழுவிக் கொண்டவள்..

நான் இல்லையெனினும்
அவள் இருப்பாள்..
அவள் இல்லாமல்
நான் இல்லை..
எனக்குள் அவள்
அவளுக்குள் நான்..

- அருள் எழினி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.