periyar in meetingசென்ற 27-3-35ந்தேதி மாலையில் சென்னையில் நடந்த காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் தோழர் டி. பிரகாசம்:

ஜஸ்டிஸ் கட்சியினரைக் காட்டிலும் ஆங்கிலேயர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள், வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் பெற அது (ஜஸ்டிஸ் கட்சி) பாடுபட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரசின் நோக்கம் இதை ஒழிக்க வேண்டுமென்பதே என்று பேசியிருக்கின்றார்.

இதைக் கொண்டாவது காங்கிரஸ் பார்ப்பனர்களின் உண்மை எண்ணம் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா?

"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முக்கிய கொள்கையாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்தில் இருந்ததனால் பார்ப்பனரல்லாத வகுப்பினர்கள் உத்தியோகத்திற்கு வந்து விட்டார்கள். இக்கட்சியில்லா விட்டால் எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றி ஏகபோகமாக ஆளலாம். ஆதலால் பார்ப்பனரல்லாதார் கட்சியை அடியோடு ஒழித்து விட்டால் எந்த வழியிலாவது ஆங்கிலேயர்களை மயக்கி எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே வாங்கிக் கொள்ளலாம்."

இதுவே காங்கிரஸ் பார்ப்பனர்களுடைய அந்தரங்க நோக்கம் என்பதையும், இதற்காகவே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க மான ஈனமின்றிப் பொய்யும் புரட்டும் கூறிப் பொதுஜனங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் இனியாவது தெரிந்து கொள்ளுவீர்களா? மாட்டீர்களா?

(குடி அரசு கட்டுரை 31.03.1935)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.