காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கக்ஷிக்காரர்கள் முன் ஒரு காலத்தில் இந்திய சட்டசபையில் செல்வாக்காய் இருந்தபோது அங்கு நடந்து கொண்ட மாதிரியும், அவர்கள் சட்டசபை அங்கத்தினர் பதவியை உபயோகித்து பணம் சம்பாதித்த மாதிரியும், தலைவர்கள் என்பவர்கள் சிலர் அந்தப் பணத்தில் பெரும்பாகம் தங்கள் சொந்தத்திற்கு ஸ்வஹா செய்து கொண்ட கதைகளும் பகுத்தறிவில் வரும் நாளை எதிர்பாருங்கள்.periyar nathigan chinnatambiமற்றும் இன்றைய காங்கிரஸ் அபேக்ஷகர்களில் சிலரின் யோக்கியதையையும் அவர்களின் வாழ்க்கையையும் யாருடைய செலவில் அவர்கள் அபேக்ஷகராய் இருக்கிறார்கள் என்பதும் வெளியாகலாம்.

ஏனெனில் காங்கிரஸ் கக்ஷி தவிர மற்றக் கக்ஷி கழுதைக்கு சமானம் என்றும் காங்கிரசின் பேரால் கழுதை நின்றாலும் அதற்குத்தான் ஓட்டுச் செய்ய வேண்டுமென்றும், சுயமரியாதைக் கக்ஷி சர்க்கார் அடிமைக் கக்ஷி என்றும், தேசத் துரோகக் கக்ஷி என்றும் சொல்லுவதற்குப் பதில் சொல்லுமுகத்தான் அவை வெளியாகும்.

(பகுத்தறிவு அறிவிப்பு 26.08.1934)

Pin It