periyar sleepingஐயா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலி கட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவறையில் வைத்து தாலி கட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதிரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போகலாம்.

('சித்திரபுத்திரன்' என்ற பெயரில் பெரியார் எழுதியது. குடி அரசு - சிறு குறிப்பு - 20.09.1931)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.