நாளது அக்டோபர் µ 19 - தேதியின் சுதேசமித்திரனில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ஒரு மறுப்புஎன்னும் தலையங்கத்தின் கீழ் ஈரோடு சேர்மென் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களுடைய கடிதம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஸ்ரீமான் நாயக்கர், ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களைப் பற்றி எழுதியிருந்ததற்குப் பதில் அனுப்பி பிரசுரம் செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஸ்ரீமான் நாயக்கர் அப்படிச் செய்ய வில்லையென்றும் ஸ்ரீமான் முதலியார் எழுதியிருக்கிறார். அது உண்மைக்கு விரோதமானது. ஸ்ரீமான் முதலியார் குடி அரசுக்கு எழுதிய மறுப்பில் ஸ்ரீமான் நாயக்கருக்கும் தனக்கும் பழைய விரோதமிருப்பதாகக் குறிப்பிட்டு சில விஷயங்கள் எழுதியிருந்தார்.                 

periyar 364அவ்விரோதத் தன்மையைப் பொறுத்தவரை விவகரிக்காமல் நிறுத்தி விட்டு அவர் மறுத்த விஷயத்திற்கு மாத்திரம் அவருடைய மறுப்பையும் அவற்றிற்குச் சமாதானத்தையும் முறையே வெளியிடத் தீர்மானித்தே ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று மறுத்த மூன்று முக்கிய விஷயங்களை அப்படியே எடுத்தெழுதி அவற்றிற்கு சமாதானம் தக்க ஆதாரத்துடனும் தேதி கையெழுத்து முதலியதுகளுடனும் எழுதிவிட்டு இவற்றையும் ஸ்ரீமான் முதலியார் மறுக்கிறாராவென்று குறிப்பும் எழுதி அதன் பதில் வந்த உடன் மற்றும் முதலியாரின் மறுப்பை வெளியிடுவதாகவும் எழுதியிருந் தோம், அதற்கு உண்டு, இல்லை என்ற இரண்டிலொரு விஷயத்தை எழுதா மல் ஸ்ரீமான் நாயக்கர் பேரில் குற்றஞ் சொல்லிக்கொண்டு மித்திரனைஅபயங் கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. ஆனபோதிலும் மித்திரன்அதைப் பிரசுரித்திருப்பதைப் பற்றி நாம் மிகவும் திருப்தியடை கிறோம். ஏனெனில் இதன் மூலம் குடிஅரசுபத்திரிகையோ அல்லது நாயக்கரோ உண்மை பேசுகிறார்களா? அல்லது ஸ்ரீமான் முதலியாரைப் பற்றி வேண்டுமென்றே பழி கூறுகிறார்களா? என்பது வெளியாக மற்று மொரு சந்தர்ப்பம் கிடைத்த தல்லவா என்கிற சந்தோஷம்தான். மித்தி ரனில்பிரசுரித்த ஸ்ரீமான் முதலியா ரவர்கள் மறுப்பில் முன்பாகம் மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது. அவையாவன:- 

1.            முனிசிபல் பணத்தை ஸ்ரீமான் முதலியார் சொந்த உபயோகப்படுத்தியதாய் குடி அரசுசொல்வது முற்றிலும் பொய்.

 2.           இது விஷயமாய் ஒரு கவுன்சிலர் தன்னை கேள்வி கேட்டதாய் சொல்லுவதும் பொய்.

3.            மற்றொரு கவுன்சிலர் கணக்குப் பார்க்க வேண்டிக் கொண்டார்      என்று சொல்லுவதும் பொய்.

என்று எழுதிவிட்டு மற்றும் சில விஷயங்களுக்கு நீண்ட சமாதா னங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமான் முதலியார் பொய்யென்று சொல்லும் மூன்று விஷயங்களுக்கும் குடி அரசுதனது 10.10.26 தேதி இதழில் பதில் எழுதியிருக்கிறது. அதாவது,

முனிசிபல் பணத்தை சொந்த உபயோகப்படுத்தவில்லை என்ப தற்குப் பதில் 1925 - வருஷம் ஜுன் µ 19 தேதி எவ்வித ஆதாரமும் இல்லாமல் 700 ரூபாய்க்கு தன் பேருக்கே செக் எழுதி ரூபா பெற்று ஜுன் µ 26 தேதி ஈரோடு அர்பன் பாங்கியில் 750 ரூபா தனது சொந்தக் கடனின் பாக்கிக்காக கட்டப்பட்டிருக்கிறது. 50 ரூபா கிடைக்காதலால் 5, 6 நாள் பணம் கையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த 50 ரூபா ஒரு வழியில் கிடைத்தபிறகு அதையும் சேர்த்து அர்பன் பாங்கியில் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முனி சிபல் செக் புஸ்தகத்தில் அர்பன் பாங்கு கணக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

 

2.            இதைப்பற்றி கவுன்சிலரும் கேள்வி கேட்கவில்லை என்பதற்குச் சமாதானம் அப்போது கவுன்சிலராயிருந்த ஸ்ரீமான் நு.ளு.கணபதி ஐயர் அவர்கள் சேர்மன் அவர்கள் தன் பேருக்கே செக் எழுதி 700 ரூபா அட் வான்ஸ் என்று எடுத்துக் கொண்டது உண்மையா? அப்படியானால் அதை ஏதாவது ஒரு கவுன்சில் தீர்மானத்தை முன்னிட்டு எடுத்துக் கொண்டதா? அல்லது கவுன்சில் தீர்மானத்தை எதிர்பார்த்து என்றெடுத்து பின்னால் சரிசெய்து விடலாமென்றா? என இம்மாதிரி பல கேள்விகள் (இன்டர் புலே ஷன்கள்) எழுதி சேர்மனுக்கனுப்பி இதற்கு வரவு தேதி போட்ட ரசீதும் வாங்கியிருக்கிறார். அதன் நகலும் பிரசுரிக்க நமக்கனுப்பி இருக்கிறார். இதற்கு நாளது வரை சேர்மனால் யாதொரு பதிலும் அளிக்கப்படவே யில்லை.

3.            மற்றொரு கவுன்சிலர் கணக்குக் கேட்டது பொய்யென்பது, அப்போது கவுன்சிலராயிருந்த ஸ்ரீமான் ஆ.ளு. முத்துக்கருப்பன் செட்டியார் அவர்கள் 5. 12. 25 தேதியில் சேர்மன் அவர்களுக்கு முனிசிபல் ஆபிஸ் குறிப்புப் புஸ்தகமும் சிட்டாவும் செக் புஸ்தகமும் பார்க்க உத்தரவு கோரி ஒரு கடிதம் எழுதி சேர்மனுக்குச் சேர்ப்பித்து அதற்கும் வரவு தேதி போட்ட ரசீது வாங்கி வைத்திருக்கிறார். இதற்குப் பதில் சேர்மன் ஸ்ரீநிவாச முதலியார் அவர்களால் கவுன்சிலர் கணக்கைப் பார்க்க வேண்டுமென்று எழுதிய வேண்டுகோள் படிக்கப்பட்டது. முனிசிபல் ஆக்ட் 20, 21, 34 பிரிவுப்படி அது போன்ற கணக்குப் பார்க்க கவுன்சிலர்களுக்கு உரிமையில்லாததால் அனுமதிக்க முடியாது என்று பதிலெழுதியிருக்கிறார். இதற்கு மேல் மறுபடி யும் எவ்வளவோ தகராறுகள் நடந்திருக்கின்றன. இதற்கு ஆதாரங்களும் நமக்கு ஸ்ரீமான் செட்டியார் அவர்களால் பிரசுரிக்கஅனுப்பப்பட்டிருக்கிறது.

இவற்றை ஸ்ரீமான் முதலியார் அவர்கள் உண்மை யென்றோ அல்லது கற்பனை என்றோ சொல்லாமல் நாயக்கர் மீதும் குடி அரசுமீதும் குற்றம் சொல்லி வீண்பழி சுமத்துவது தர்மமாகுமா?

தவிர, சேர்மனின் இம்மாதிரியான நடவடிக்கையின் பலனாகவும் அரசாங்கத்தார் இவற்றை அனுமதித்து வருவதன் பலனாகவும் பொறுப்புள்ள அதாவது வருஷம் 1000, 2000 ரூ. இன்கம்டாக்ஸ் செலுத்துகிற கவுன் சிலர்களும் வருஷம் 2000, 3000 ரூபாய் சர்க்கார் கந்தாயம் செலுத்துகிற கவுன் சிலர்களும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட பென்ஷன் தாசீல்தார் போன்ற கவுன் சிலர்களும் ஆக 12 பேர் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா கொடுத்து விட்டு வெளியிலும் வந்து விட்டார்கள். இதோடு மாத்திர மல்லாமல் ஈரோடு வக்கீல் சங்கத்தார் ஒன்று கூடி தங்கள் சங்கத்தின் மூலம் ³ 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கொடுத்ததைப்பற்றிக் கவலை எடுத்துக் கொண்டு முனிசிபல் நிர்வாகத்தைத் திருத்தவும், இப்பேர்ப்பட்ட குற்றங் களுக்கு இடமில்லாமல் சரிவர நடத்தவும், வக்கீல் சங்கத்தார் முயற்சியெடுத் துக்கொள்ள வேண்டு மென்று ஒரு தீர்மானமும் கொண்டு வந்தார்கள். அந்த வக்கீல் சங்கத்துக்கும் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களே பார்ப்பன ரல்லாதார் என்கிற சலுகையின் பேரில் தலைவராயிருக்க நேர்ந்தமையால் இத்தீர்மானத்தை தலைவர் முறையில் நிராகரித்தும், அவரில்லாமலே உப தலைவரைக் கொண்டு வக்கீல் சங்கக் கூட்டம் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ராஜினாமா செய்யப்பட்ட கவுன்சிலர் ஸ்தானத்துக்கு சங்கத்தின் சார்பாய் ஒரு வக்கீலை யும் நிறுத்தி சேர்மெனின் இவ்வித நடவடிக்கைகளை பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்கள் கொஞ்சமாவது சுயமரியாதையுடை வராயிருந்திருந்தால் தன்னுடைய தலைமை ஸ்தானம் மற்ற அங்கத்தினர் களால் அலக்ஷியம் செய்யப்பட்டதற்கு உடனே ராஜினாமா செய்திருப்பார். அப்படியில்லாமல் அவர்களாகத் தன்னை வெளியிலனுப்புகிற வரையில் அதில் அட்டைப் போல் ஒட்டிக்கொண்டேயிருக்கிறார். தவிர எடுத்ததற் கெல்லாம் நாயக்கருக் கும் தனக்கும் விரோதம் என்கிற ஒரு பல்லவி பாடிக்கொண்டே தன்னுடைய சகல அக்கிரமங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் . நாயக்கருக் கும் முதலியாருக்கும் என்ன விரோதம் என்பதைப் பொது ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டியது. இது சமயம் மிகவும் அவசியம் தான். ஏனெனில் ஜனங்கள் உண்மை அறிவதற்கு அது ஒரு அநுகூலமாயிருக்கு மென்பதே சுமார் 17, 18 வருஷங்களுக்கு முன்பாக ஈரோட்டுக்கு ஒரு பார்ப்பனரல்லாதார் வக்கீல் வேண்டுமென்கிற எண்ணத் தின் பேரில் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச முதலியாரவர்களை நாயக்கர் முன்பின் அறியாதவராயிருந்தாலும் கோயமுத்தூர் ஸ்ரீமான் வேணு கோபால் பிள்ளை அவர்களின் வேண்டு கோளின்படி ஸ்ரீமான் முதலியாரைத் வருவித்து அவருக்கு வேண்டிய சவுகரியமும் செய்து கொடுத்து வெகு நேசமாயிருந்து வந்ததில், அதுசமயம் ஏற்பட்ட முனிசிபல் சேர்மென் தேர்தலில் ஸ்ரீமான் முதலியாருக்கும் மற்றொரு கனவானுக்கும் நேர்ந்த போட்டியில் நாயக்கருக்கும் ஸ்ரீமான் முதலியாருக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தால் ஸ்ரீமான் முதலியார் சேர்மென் ஆனதும் தனது அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்து நாயக்கர் தனது வீட்டில் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கொண்டு ஒரு பாட்டுக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்த சமயத்தில் லைசென்சில் லாமல் நடத்தக் கூடாது என்று தடுத்து போலீசாரையும் போய் தடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். நாயக்கர் சேர்மென் உத்திரவையும் போலீசார் தடங்கலையும் மீறி சட்ட மறுப்பு செய்து பாட்டுக் கச்சேரியை நடத்தி விட்டதால் நாயக்கரை யும் அவர் தமயனாரையும் பிராசிகூஷன் செய்தார். இந்த பிராசிகூஷன் சட்ட சபையில் கேள்வி கேட்கப்பட்டு கவர்மெண்டராலேயே பின்வாங்கிக் (வித்திட்ரா) கொள்ளப்பட்டது. இதைத்தான் ஸ்ரீமான் முதலியார், “நான் சேர்மெனாயிருக்கும் போது நாயக்கர் பேரில் நடவடிக்கை எடுத்துக் கொண் டேன். அதனால் எங்கள் இருவருக்கும் விரோதம் விரோதம்என்று தொட்ட தற்கெல்லாம் பல்லவி பாடுவது, அதற்கப்புறம் இருவரும் நேசபாவமாகவே இருந்திருப்பதைக் காட்டாமல் தனது குற்றங்களுக்கெல்லாம் இந்த ஒரு சமாதானமே போதுமென்று நினைத்தால் அதன் தன்மையைப் பொது ஜனங்களே அறிந்து கொள்ளட்டும்.

(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)

Pin It