கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

திரு. காந்தி 1919இல் இந்திய அரசியலில் நுழைந்தார். அதற்குப் பின்னர் வெகுவிரைவிலேயே அவர் காங்கிரசைக் கைப்பற்றினார். அவர் காங்கிரசைக் கைப்பற்றியதுடன் நில்லாது அதை முற்றிலுமாக சுத்தப்படுத்தி அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றியும் விட்டார். மூன்று முக்கிய மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்தினார். பழைய காங்கிரசுக்கு அதிகாரங்கள் ஏதும் இருக்கவில்லை. அது தீர்மானங்களை நிறைவேற்றுவதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டது, அவற்றின் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.

ambedkar 600பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில், காங்கிரஸ் அடுத்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் அது திரும்புவும் அதே தீர்மானத்தை மீண்டும் இயற்றியது. பழைய காங்கிரஸ் முற்றிலும் அறிவு ஜீவிகளின் ஒரு கும்பலாகத் தான் இருந்தது. அது வெகுஜன செயல்பாட்டில் நம் பிக்கை கொண்டிராததால் அரசியல் இயக்கத்தில் அவர்களுடைய செயலூக்கமான பங்கெடுப்பைப் பெறுவதற்கு பொதுமக்களிடம் செல்லவில்லை. பொதுமக்களை ஈடுபடுத்திக் கிளர்ச்சிகளை நடத்துவதற்குப் பழைய காங்கிரசிடம் அமைப்போ நிதி வசதியோ இருக்க வில்லை.

தனது பலத்தின் அளவைப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் புரிய வைப்பதற்காக வியத்தகு அரசியல் பேரணிகளை நடத்து வதிலோ அல்லது பொதுமக்களின் ஆர்வத்தைக் கவருதிலோ அது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இவையனைத்தையும் புதிய காங் கிரஸ் மாற்றியமைத்தது. தனது கட்சியில் அனைவரும் உறுப்பின ராகலாம் என்று கூறி அது காங்கிரசை ஒரு வெகுஜன அமைப்பாக ஆக்கியது. ஆண்டொன்றுக்கு நான்கு அணாக்கள் செலுத்தக்கூடிய எவரும் காங்கிரசின் உறுப்பினராக ஆக முடியும். தனது தீர்மானங் களுக்குப் பின்னால் உறுதியான ஆதரவையும் அது திரட்டிக் கொண்டது.

ஒத்துழையாமை மற்றும் சிவில் கீழ்ப்படியாமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதன் மூலம் அது மக்களின் ஆதரவைப் பெற்றது. ஒத்துழையாமை மற்றும் சிவில் கீழ்ப்படியாமைப் பேரணிகளை நடத்துவதையும் கைதாகி சிறை நிரப்புவதையும் அது கொள்கை யாகக் கொண்டது. நாடு தழுவிய அமைப்பைத் தொடங்கி காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரத்தையும் துவக்கியது. சமூக மேம்பாட்டிற் கான ஓர் ஆக்கபூர்வமான திட்டம் என்றழைக்கப்பட்ட ஒரு திட் டத்தை அது முன்வைத்து. இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி திரட்டுவதற்காக அது கோடி ரூபாய் நிதியத்தைத் தொடங்கியது. அது திலகர் சுயராஜ்ய நிதி என்றழைக்கப்பட்டது. இவ்வாறு 1922 வாக்கில் காங்கிரஸ்ட் திரு. காந்தியினால் முற்றிலுமாக மாற்றி யமைக்கப்பட்டது. புதிய காங்கிரஸ். பெயரைத் தவிர பழைய காங்கிரசிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.

சமூக மேம்பாட்டிற்கான ஆக்கபூர்வமான திட்டம் காங் கிரசின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. 1922 பிப்ரவரியில் பர்டோலியில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காங்கிரசின் காரியக் கமிட்டியினால் அது வரையப்பட்டது. அது பர்டோலி திட்டம் என்றும் அறியப்பட்டது. திட்ட விவரங்களைக் கோடிட்டுக் காட்டிய தீர்மான வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“எல்லாக் காங்கிரஸ் அமைப்புகளும் பின்வரும் நடவடிக் கைகளில் ஈடுபட வேண்டுமென்று காரியக்கமிட்டி அறிவுறுத்தகிறது:

(1) காங்கிரசில் குறைந்தபட்சம் ஒருகோடி உறுப்பினர்களையேனும் சேர்த்தல்.

(2) ராட்டையைப் பிரபலப்படுத்துதல் மற்றும் கைத்தறி மற்றும் கையால் பின்னப்பட்ட கதர் துணிகளின் உற்பத்தியை ஒழுங்கமைத்தல்.

(3) தேசியப் பள்ளிகளை அமைத்தல்.

(4) தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒரு சிறந்த வாழ்க்கை வாழ ஒருங்கமைத்தல், அவர்களுடைய சமூக, மன மற்றும் தார்மிக சூழ்நிலைகளை மேம்படுத்தல், தங்களுடைய குழந்தைகளை தேசியப் பள்ளிகளுக்கு அனுப்ப அவர்களைத் தூண்டுதல், இதர பிரஜைகள் அனுபவிக்கும் சாதாரண வசதிகளை அவர்களுக்கு வழங்குதல்.

(5) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களிடையே குடி ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்து, மறியல் செய்வதற்குப் பதிலாக அவரது வீட்டிலேயே குடிப்பழக்கமுடையவருக்கு அதைக் கைவிட வேண்டுகோள் விடுப்பதில் அதிக நம்பிக்கை வைத்து வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்தல்.

(6) எல்லா சச்சரவுகளையும் தனிப்பட்ட முறையில் தீர்த்து வைப்பதற்காக கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துக்களை அமைத்தல், பொதுக் கருத்தின் சக்தியின் மீதும் பஞ்சாயத்தின் முடிவுகள் அவற் றிற்குக் கீழ்ப்படிவதை உறுதிசெய்வதற்குரிய விதத்தில் அதன் உண்மை நிலையின் மீதும் நம்பிக்கை வைத்தல்.

(7) எல்லா வர்க்கங்கள் மற்றும் இனங்களிடையே ஒற் றுமையையும் பரஸ்பர நல்லெண்ணத்தையும் வளர்த்து வலியுறுத்து வதற்காக – அதை ஏற்படுத்துவதே ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கமாகும் – கருத்து வேறுபாடுகளையும் மீறி நோய்வாய்ப்பட்ட அல்லது விபத்து நேர்ந்த காலத்தில் அனைவருக்கும் உதவி வழங்கக் கூடிய ஒரு சமூக சேவைத் துறையை அமைத்தல்.

(8) திலகர் நினைவு சுயராஜ்ய நிதியின் வசூல்களைத் தொடருதல், 1921 ஆண்டுக்கான தமது வருடாந்திர வருவாயில் குறைந்தபட்சம் நூறில் ஒருபங்குத் தொகையைச் செலுத்துமாறு ஒவ் வொரு காங்கிரஸ்காரரையும் அல்லது காங்கிரஸ் அனுதாபியையும் கேட்டுக்கொள்ளுதல். திலகர் நினைவு சுயராஜ்ய நிதியிலிருந்து ஒவ் வொரு மாகாணமும் ஒவ்வொரு மாதமும் தனது வருவாயிலிருந்து 25 சதவிகிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.”

1922 பிப்ரவரி 20 அன்று டில்லியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் உறுதிசெய்யப் படுவதற்காக இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது. கூட்டமும் அவ்வாரே செய்தது. ஆக்கப்பூர்வமான இத்திட்டத்தில் உள்ள பல்வேறு இனங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரிப்பதில் எனக்கு அக்கறையில்லை. தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினர் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு இனத்தில் தான் நான் அக்கறை கொண்டிருக்கிறேன், அந்தப் பகுதியைப் பற்றித் தான் நான் ஆய்வு செய்ய உத்தேசித்திருக்கிறேன்.

தீண்டப்படாதவர்கள் சம்பந்தப்பட்ட பர்டோலி தீர்மானத் தின் இந்தப் பகுதியையும் மீறி நடைபெற்ற விதியின் கதையை கட்டம் கட்டமாக நான் விவரிக்கிறேன். இக்கதையின் தொடக்கமாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியினால் பர்டோலி தீர்மானம் உறுதி செய்யப்பட்ட பின்னர், இந்த விஷயம் மேல் நடவடிக்கைக்காக காரியக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. 1922 ஜுனில் லக்னோ வில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி இந்த விஷயத் தைப் பரி சீலனைக்கு எடுத்துக் கொண்டது. தீண்டப்படாதவர்களின் மேம்பாடு சம்பந்தப்பட்ட பர்டோலி பிரச்சினையின் அப்பகுதி குறித்து காரியக் கமிட்டி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது:

“இக்கமிட்டி இதன் வாயிலாக, சுவாமி சிரதானந்தஜி, திருமதி. சரோஜினி நாயுடு, திருவாளர்கள் ஐ.கே. யாஜ்னிக், ஜி.பி. தேஷ்பாண்டே ஆகியோரடங்கிய ஒரு கமிட்டியை, நாடெங்கிலும் உள்ள தீண்டப்படாதவர்கள் என்றழைக்கப்படுகிறவர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்படவிருக்கும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை உருவாக்கவும் இக்கமிட்டியின் அடுத்த கூட்டத்தில் பரிசீலனை செய் வதற்காக முன்வைக்கவும் நியமிக்கிறது. இப்போதைக்கு அத் திட்டத்திற்காகத் திரட்டப்படவிருக்கும் தொகை ரூ. இரண்டு லட்சமாக இருக்கும்.”

1922 ஜுனில் லக்னோவில் நடைபெற்ற தனது கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்பு காரியக் கமிட்டி யினால் இத்தீர்மானம் முன்வைக்கப்பட்டது. காரியக் கமிட்டியின் தீர்மானத்தின் கூறப்பட்டிருந்தபடி ரூபாய் இரண்டு லட்சத்திற்குப் பதிலாக “தற்போதைக்கு இத்திட்டத்திற்காகத் திரட்டப்படவிருக்கும் தொகை ரூபாய் ஐந்து லட்சமாக வேண்டும்” என்று கூறும் ஒரு திருத்தத்தைச் செய்த பின்னர் காரியக் கமிட்டி அத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

இக்கமிட்டியை நியமிக்கும் தீர்மானத்தை காரியக்கமிட்டி ஏற்றுக்கொள்ளும் முன்னர் அதன் உறுப்பினர்களில் ஒருவரான சுவாமி சிரத்தானந்தர், அக்கமிட்டியின் உறுப்பினர் பதவியிலிருந்து தமது ராஜினாமாவை சமர்ப்பித்தார் என்று தெரிகிறது. ஒரு கமிட்டியை நியமிக்கும் தீர்மானத்தைக் காரியக் கமிட்டி நிறைவேற்றிய அதே கூட்டத்தில் அதே விஷயம் குறித்த பின்வரும் மற்றோரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:

“தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பணிக்கான ஒரு திட்டத்தை வரைவதற்கான ஒரு முன்பணத்திற்காக 1922 ஜுன் 8 அன்று சுவாமி சிரத்தானந்தஜியிடமிருந்து வந்த கடிதம் வாசிக்கப்பட்டது. அக்காரணத்திற்காக நியமிக்கப் பட்ட உபகமிட்டியின் கன்வீனராக திரு. காங்காதர் ராவ் பி. தேஷ்பாண்டேயை நியமிக்கத் தீர்மானக்கப்பட்டது, கூடிய விரைவில் ஒரு கூட்டத்தை நடத்துமாறு அவர் கேட்டுக்கொள்ளப்படவும் சுவாமி சிரத்தானந்தாவின் கடிதத்தை உபகமிட்டிக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.”

இந்த ஆர்வமூட்டும் தீர்மானத்தின் வரலாற்றில் ஒரு கமிட் டியை உருவாக்குவது இரண்டாவது கட்டத்தைக் குறிக்கிறது.

இக்கமிட்டியை நியமிக்கும் தீர்மானம் குறித்த அடுத்த குறிப்பு, 1922 ஜுலையில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி யின் நடவடிக்கைக் குறிப்புகளில் காணப்படுகிறது. அக்கூட்டத்தில் கமிட்டி பின்வரும் தீர்மானத்தை இயற்றியது:

“தமது ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுமாறும் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும் சுவாமி சிரத்தானந் தாவை வேண்டிக் கொள்ளுமாறும், தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் உபகமிட்டியின் அவசரச் செலவுகளுக் காக திரு. ஜி.பி. தேஷ்பாண்டேக்கு ரூ. 500/- செலுத்து மாறும் பொதுச் செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.”

1922 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இத்துடன் அந்த விஷயம் முடிந்துவிட்டது. அதற்குமேல் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. 1923 ஆம் ஆண்டும் வந்தது. தீண்டப்படாதவர் களை மேம்பாடடையச் செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப் படுவதற்கு எதுவும் செய்யப்படவில்லை என்பதைக் கண்ட காரியக் கமிட்டி 1923 ஜனவரியில் கயாவில் கூடிய கூட்டத்தில் இந்த விஷ யத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது:

“சுவாமி சிரத்தானந்தாவின் ராஜினாமா சம்பந்தமாக, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உபகமிட்டியின் மீதமுள்ள உறுப்பினர்களே கமிட்டியாக செயல்படுவார்கள் என்றும் திரு. யாஜ்னிக் கன்வீனராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

அதற்குப் பின்னர் 1923 மேயில் பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பின்வரும் தீர்மானத்தை இயற்றியது:

“தீண்டப்படாதவர்களின் நிலைமை சம்பந்தமான பிரச்சினை தேவையான நடவடிக்கைகளுக்காக காரியக் கமிட்டிக்கு அனுப்பப்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.”

தீண்டப்படாதவர்களின் பிரச்சினையை ஒரு விசேடக் கமிட் டியின் வசம் ஒப்படைக்கும் தீர்மானத்தின் வரலாற்றில் இரண் டாவது கட்டம் இங்கு நிறைவுபெறுகிறது. 1923 மேயில் பம்பாயில் நடைபெற்ற தனது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதன் வரலாற்றின் மூன்றாவது கட்டத்தைக் குறிக்கிறது. அத்தீர்மான வாசகம் பின்வருமாறு:

“காங்கிரஸின் கொள்கைக்கு ஆதரவாக தீண்டப்படாத வர்கள் என்றழைக்கப்படுபவர்களை நடத்தும் முறையில் சிறிது அபிவிருத்தி காணப்பட்டுள்ள அதேசமயம், இந்த வகையில் இன்னும் செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன என்றும், தீண்டப்படாதவர்களின் பிரச்சினை குறிப்பாக இந்து சமுதாயம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், இந்து சமுதாயத்தினிடையே இருந்து இத் தீமையை அகற்றும் கடும் முயற்சிகளை மேற்கொள் ளவும், இந்த விஷயத்தை தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்ளவும் அகில இந்திய இந்து மகாசபையை அது கேட்டுக்கொள்கிறது என்றும் தீர்மானிக்கப்பட்டது.”

அத்தீர்மானம் எவ்வாறு ஆரம்பித்து எவ்வாறு முடிவுற்றது என்ற சோகமான கதை இதுதான். திடீரெனத் தோன்றிய மின்னல் போன்ற இத்தீர்மானத்திற்கு எத்தகைய அவமானகரமான முடிவு இது!

தீண்டப்படாதவர்களின் பிரச்சினையை காங்கிரஸ் எவ்வாறு கைகழுவிவிட்டது என்பதை இப்போது பார்ப்போம். இப்பிரச்சினையை இந்து மகாசபையிடம் ஒப்படைத்ததன் மூலம் அது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்க வேண்டியதில்லை. தீண்டப்படாதவர்களின் மேம்பாடு குறித்த பணியை மேற்கொள் வதற்கு இந்து மகாசபையை விட சற்றும் பொருத்தமற்ற ஓர் அமைப்பு வேறெதுவும் இருக்கமுடியாது. தீண்டப்படாதவர்களின் பிரச் சினையை சிரமேற்கொண்டு தீர்க்க சற்றும் தகுதியற்ற ஓர் அமைப்பு இருக்கிறதென்றால் அது இந்துமகாசபைதான். அது ஒரு தீவிரவாத இந்து அமைப்பாகும்.

மதரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இந்து மதத்தின் எல்லா அம்சங்களையும் எல்லா வழிகளிலும் பேணிக்காப்பதே அதன் நோக்கமும் குறிக்கோளுமாகும். அது சமூக சீர்திருத்த சங்கமல்ல. அது ஓர் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு, அதன் பிரதானக் குறிக்கோளும் நோக்கமும் இந்திய அரசியலில் முஸ்லிம் களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதேயாகும். தனது அர சியல் வலிமையைப் பேணிக் காப்பதற்காக அது தனது சமூக ஒருமைப் பாட்டைப் பராமரிக்க விரும்புகிறது. சமூக ஒருமைப்பாட்டைப் பராமரிக்கும் அதன் வழிமுறை ஜாதி அல்லது தீண்டப்படாமையைப் பற்றிப் பேசாதிருப்பதேயாம்.

தீண்டப்படாதவர்களின் பணியை மேற்கொள்வதற்காக இத்தகைய ஓர் அமைப்பைக் காங்கிரஸ் எவ்வாறு தேர்வு செய்தது என்பது எனது புலன்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது. ஒரு சங்கடமான பிரச்சினையிலிருந்து எப்படியேனும் தப்பித்து அதைக் கைகழுவிவிட காங்கிரஸ் விரும்பியது என்பதையே இது காட்டுகிறது. இப்பணியை சிரமேற்கொள்ள இந்துமகா சபை முன்வரவில்லை என்பது உண்மைதான். ஏனெனில், அதற்கான ஆர்வம் அதனிடம் இல்லை, மேலும் நிதி ஒதுக்கீட்டிற்கான எந்த ஒரு உறுதிமொழியும் தராமல் இப்பணியை மேற்கொள்ளுமாறு ஒரு தீர்மானத்தை மட்டும் காங்கிரஸ் நிறைவேற்றியது. ஆகவே அத் திட்டம் ஓர் இழிவான, அவமானகரமான முடிவைச் சந்தித்தது.

மிகவும் படாடோபமாகத் தொடங்கிய தீண்டப்படாதவர் களை மேம்படுத்தும் திட்டத்தை காங்கிரஸ் ஏன் கைவிட்டது என்று இந்த அத்தியாயத்தை முடிக்குமுன்னர் அறுதியிட்டுக் கூறுவது பய னுள்ளதாக இருக்கும். அத்திட்டம் இரண்டு முதல் ஐந்து லட்ச ரூபாய்க்கு மிகைப்படாமல் சிக்கனமானதாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விழைந்தது. ஆனால் அக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது காங்கிரசால் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிரா கரிக்கவோ முடியாத அளவுக்கு ஒரு பெரிய திட்டத்தைக் காங்கிரஸ் முன்கொண்டு வந்து நிறுத்த சுவாமியை அனுமதிப்பதை விட கமிட்டியில் சுவாமி சிரத்தானந்தாவை சேர்த்ததில் ஒரு தவறு செய்து விட்டதாக அவர்கள் உணர்ந்தனர். முதலிலேயே அவரைக் கன்வீனராக (திரு. தேஷ்பாண்டேயைக் கன்வினராக நியமிப்பதில் காங்கிரஸ் குறியாக இருந்தது என்பதே சுவாமி சிரத்தானந்தாவின் கரங்களில் விஷயங்களை விட்டு வைக்க அவர்கள் விரும்பவில்லை என்ற உண்மையைக் காட்டுகிறது. எந்தப் பணியும் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை திரு. தேஷ்பாண்டே யின் தேர்வு சுட்டிக்காட்டுகிறது. அதற்குக் காரணம் திரு. தேஷ்பாண்டே ஓர் ஆசாரமான பிராமணர், தீண்டப்படாதவர்களின் நலனில் அவர் எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதேயாகும்).

ஆக்க மறுத்து பின்னர் கமிட்டியைக் கலைத்து அப்பணியை இந்துமகாசபையிடம் ஒப்படைப்பது சிறந்தது என்று காங்கிரஸ் எண்ணியது. இத்தகைய ஒரு முடிவுக்கு சூழ் நிலைகளும் எதிராக இருக்கவில்லை. சுவாமி, தீண்டப்படாதவர்களின் மகத்தான, மிகவும் உண்மையான ஆதரவாளராக இருந்தார். கமிட்டியில் அவர் அங்கம் வகித்துப் பணியாற்றி யிருப்பாரேயானால் அவர் மிகப் பெரியதொரு திட்டத்தை உருவாக்கியிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் கமிட்டியில் இடம்பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையும், தீண்டப்படாதவர்களின் லட்சியத்திற்காக காங்கிரஸ் நிதிகளிலிருந்து அவர் பெருந்தொகையைக் கோரியிருப்பார் என்று பயந்ததையும், காங்கிரசின் அப்போதைய பொதுச் செயலாளரான பண்டிட் மோதிலால் நேருவுக்கும் அவருக்கும் இடையில் நடை பெற்ற கடிதப் போக்குவரத்திலிருந்து தெளிவாகிறது, அக்கடிதப் போக்குவரத்து பின்னிணைப்பில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த முடிவு சரியானது என்றால், அத்தீர்மானத்தை இயற்றிய காங்கிரசின் சொற் களில் உண்மை எந்த அளவுக்கு வெறுமையாக இருந்தது என்பதையே அது காட்டுகிறது.

அத்திட்டம் புரட்சிகரமானது என்ற காரணத்தினால்தான் காங்கிரஸ் அதைக் கைவிட்டதா? அத்தீர்மானம் எந்த வகையிலும் புரட்சிகரமான தீர்மானமல்ல. அத்தீர்மானத்திற்கு ஓர் இணைப்பாகக் காரியக்கமிட்டி சேர்த்த குறிப்பிலிருந்தும், அதை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கீகரித்ததிலிருந்தும் இது தெளிவாகும். அக் குறிப்பு கூறியதாவது:

“தீண்டப்படாதவர்களுக்கு எதிரான தவறான எண் ணம் இன்னமும் வலுவாக உள்ள இடங்களில் காங் கிரசின் நிதிகளிலிருந்து தனிப்பட்ட பள்ளிகளும் தனிப்பட்ட கிணறுகளும் பராமரிக்கப்பட வேண்டும். இத்தகைய குழந்தைகளை தேசியப் பள்ளிகளில் சேர்க்கவும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த தீண்டப்படாதவர்களை அனுமதிக்கவும் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் பட வேண்டும்.”

ஆகவே, தீண்டாமையை ஒழிப்பதில் காங்கிரஸ் முனைப்பாக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. தனிப்பட்ட பள்ளிகள் தனிப் பட்ட கிணறுகள் என்ற கொள்கையை அது ஏற்றுக் கொண்டது. தீண்டப்படாதவர்களின் நிலைமையை மேம்படுத்தும் முயற்சியைத் தவிர அத்தீர்மானம் வேறெதையும் செய்யவில்லை. இத்தகைய தொரு உரமற்ற, மென்மையான திட்டத்தையும் கூட காங்கிரஸ் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. அதை ஈவிரக்கமோ அல்லது அவமானமோ இன்றி கைவிட்டது.

 II

தன்னிடம் நிதி வசதி இல்லாத காரணத்தினால்தான் காங்கிரஸ் இத்திட்டத்தைக் கைவிட்டதா? இல்லை. 1921இல் காங்கிரஸ் திலகர் சுயராஜ்ய நிதியைத் தொடங்கியிருந்தது. எவ்வளவு தொகையைக் காங்கிரஸ் வசூலித்தது? பின்வரும் அட்டவணை அது குறித்த சில கருத்துக்களை வழங்குகிறது. அந்த நிதிக்குப் பொதுமக்கள் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் வழங்கியிருந்தனர். பர்டோலியில் காரியக்கமிட்டி வரைந்த காங்கிரசின் ஆக்கப்பூர்வமான திட்டத்திற்கு நிதியுதவி செய்யவும் காங்கிரசின் பிரசாரத்தை மேற்கொள்ளவும் அந்த நிதி வசூலிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை காங் கிரஸ் எவ்வாறு செலவிட்டது? 1921, 1922 மற்றும் 1923 ஆம் ஆண்டு களின்போது காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியத் தொகைகளின் பட்டியலிலிருந்து, இந்த நிதி என்னென்ன காரியங்களுக்குப் பயன் படுத்தப்பட்டது என்பதைக் தெரிந்து கொள்ளலாம்.

அட்டவணை -1

திலகர் சுயராஜ்ய நிதி வரவு  (இந்திய வருடாந்திரப் பதிவேடு – 1923 பக். 112.)

  1921 1922 1923 மொத்தம்
 

ரூ.அ.பை

ரூ.அ.பை ரூ.அ.பை ரூ.அ.பை

பொது வசூல் பிற்சேர்க்கை எண்.1

64,31,779 15 10

3,92,4302 61/2

2,64,288 91

70,88,498 11 51/2

குறிப்பிட்ட (ஒதுக்கிடு செய்யப்பட்ட) நன்கொடைகள் அல்லது மானியங்கள் பிற்சேர்க்கை எண். II 37,32,230, 2 101/2 9,45,552 1 41/2 7,10,801, 10 3 53,88,583 14 6

சேர்க்கவும்: இதர வருவாய்கள், இதர நிதிகள், பஞ்சம், வெள்ளம், மாகாண உறுப்பினர் கட்டணம், இணைப்பு போன்றவை 1921-23ஆம் ஆண்டுகளுக்கு

1,01,64,010 2 81/2 13,37,982,3 11 9,75,090 3 4 1,24,77,08291 11/2
--- ---- ---- 5,42,332 5 71/2

 

I.1921 இல் ஒப்புதலளிக்கப்பட்ட மானியங்கள் (ஒவ்வொரு மானியத்திற்கும் பின்னால் உள்ள அடைப்புக் குறிகளுக்குள் உள்ள ரோமன் எண்கள், மானியங்கள் வழங்குவதற்காகக் காரியக் கமிட்டி இயற்றிய தீர்மானங்களைக் குறிக்கிறது.)

I. 1921 ஜனவரி 31. பிப்ரவரி 1,2,3, ஆகிய தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டியினால் ஒப்புதலளிக்கப்பட்ட மானியங்கள்:

1. தங்களது தொழிலைக் கைவிடும், ஆதரவு தேவைப்படும் வழக்கறிஞர்களின் உதவிக்காக மகாத்மா காந்தியின் வசம் ஒப்படைக் கப்படும் ரூ. 1,00,000 (IV).

2. உயர்திரு சி. ராஜகோபாலாசாரியாரிடமிருந்து 1921 ஜனவரி 31ஆம் தேதியிட்ட பின்வரும் தந்தி வாசிக்கப்பட்டது:

“கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருந்து கிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்னாடகாவின் ஒரு பகுதிக் கான முழுநேர பொதுத் தொண்டர்கள் கிட்டத்தட்ட நூறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அவர்களி கிட்டத் தட்ட நாற்பது வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை உதறிவிட்டு வந்துள்ளனர். வசூலிக்கப்படவிருக்கும் திலகர் நிதியிலிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 5600/- பெற அனுமதிக் கவும். மாணவர்களின் இயக்கம் அதிவேகமாக முன் னேறிக் கொண்டிருக்கிறது. ஆயினும் செய்தி ஏடுகள் அதுகுறித்த செய்திகள் எதையும் பிரசுரிப்பதில்லை. குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கேனும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இயக்கத்தைத் தொடரவேண்டும். இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூபாய் மூவாயிரம் அவசியம் தேவைப்படும். கிலாபத் ரசீதுகளைப் போன்று வசதியான தொகைகளுக்காக காங்கிரசின் பெயரில் சுயராஜ்ய நிதிக்கு ரசீது வழஙகும் அதிகாரத்தைக் கமிட்டி தந்தி மூலம் வழங்க வேண்டும். எல்லாக் கடன்களையும் மூன்று மாதங்களில் அடைத்துவிட முடியும் என்று உறுதிபட நம்புகிறேன் பெரிய தொகைகள் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை. சென்னை”.

இப்போதைக்கு சென்னை மாகாணத்தின் தமிழ், கேரளா மற்றும் கர்னாடகப் பகுதிகளுக்கு ஒருமாதத்திற்குத் தேவையான தொகை ரூ. 8600/- வழங்குவதெனவும், வருங்காலத்திற்கான நிதி யைப் பொறுத்தவரை இந்த விஷயத்தை காரியக் கமிட்டியின் அடுத்த கூட்டத்தில் முன்வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது. (XX)

II. 1921. மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் பெஜவாடாவில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு

3. பிரசாரத்தை மேற்கொள்ளவும் நிதி வசூலிக்கவும் உ.பி. காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பண்டிட் மோகன் லால் நேருவுக்கு மொத்தத் தொகையாக ரூ. 6000/- வழங்குதல் (V).

4. தலைவர், செயலாளர்கள், காசாளர் ஆகியோரின் அலுவலகச் செலவினங்களுக்காக நடப்பு ஆண்டின் மீதமுள்ள காலத்திற்கு ரூ. 1700த்தை அனுமதிக்கலாம், மேற்கூறப்பட்ட தொகையிலிருந்து மாதமொன்றுக்கு ரூ. 300-ஐ திரு. சி. ராஜகோபாலாச்சாரியருக்கு அவரது செயலாளரின் செலவுக்காவும் தலைவரின் ஸ்டெனோ- டைபிஸ்டின் செலவுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படு கிறது. (VII)

5. 1,400, பிராட்வே, நியூயார்க்கிலுள்ள அமெரிக்கா வின் இந்தியா ஹோம்ரூல் லீகைச் சேர்ந்த திரு. டி.வி.எஸ் ராவுக்குத் தந்தி மூலம் 1,000 டாலர் தொகை அனுப்பப் பட்டது (VIII).

III. மானியங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலை செய்வதற்காக ஒரு மானியங்கள் உபகமிட்டியை 1921 ஜுலை 31 ஆம் தேதியிட்ட தனது தீர்மானம் எண். 18 வாயிலாக காரியக் கமிட்டி நியமித்தது. அந்த உபகமிட்டியில் திரு. காந்தி, பண்டிட் மோதிலால் நேரு, சேத் ஜம்னாலால் பஜாஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பல கூட்டங்களின்போது மானியங்கள் உபகமிட்டி பின்வரும் மானியங்களுக்கு ஒப்புதல் அளித்தது:

“6. பீகாரில் சுதேசிப் பணிகளுக்கு மானியமாக ரூ. ஒரு லட்சம் வழங்கவும் அதே காரணத்திற்காக ரூ. 4 லட்சத்தைக் கடனாக வழங்கப் பரிந்துரை செய்யவும் ஒப்புதலளிக்கப் பட்டது.

7. சுதேசிப் பணிகளுக்காக மத்திய மாகாணங்களின் (இந்துஸ்தானி) மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குக் கடனாக ரூ. 35,000 வழங்குதல்

8. உ.பி. யில் பஞ்ச நிவாரணத்திற்காக ரூ. 25,000

9. பஞ்ச நிவாரணத்திற்காகவும் ஜக்ராவோன் பள்ளிக்காக வும் பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 25,000 (iv)

10. மலபாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தந்திவழி விண்ணப்பத்திற்கு ரூ. 50, 000 (V)

11. பனாரஸ் நகரில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு ரூ. 15,000 (Vi)

12. பள்ளிப்பாடு ஆசிரமத்திற்கு ரூ. 10,000 (Vii)

13. மசூலிப்பட்டணத்திலுள்ள ஆந்திர ஜாதீய கலா சாலைக்கு ரூ. 15,000 (Viii)

14. கர்ஜாத் (மகாராஷ்டிரா) தாலுகா காங்கிரஸ் கமிட் டியின் செயலாளருக்கு ரூ. 10,000 (XX)

15. சிஞ்ச்வாட் (மகாராஷ்டிரா) அனாதை வித்தியார்தி கிரிகாவுக்கு ரூ. 10,000 (X)

16. (1) திரு. கே.ஜி. பட்டாடே, துணைப் பொதுச் செயலாளர், இந்திய தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் மிஷன் சொசைட்டி, (2) கல்லிடைக்குறிச்சி தேசியப் பள்ளி, வித்தியா சங்கம், (3) ராஜமுந்திரி தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் மிஷன் ஆகியோரது விண்ணப்பங்கள், உபகமிட்டி வெளியிட்ட அறிவுரைகளுக்கேற்ப இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டன.(Xiii)

17. சுதேசிப் பணிகளுக்காகவும் ராட்டை நூற்பு மற்றும் கைத்தறிவைப் பிரபலப்படுத்துவதற்காகவும் செலவிடுவதற் காக கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 10,000(XX)

18. மதராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 60,000

19. உ.பி. மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 1,50,000 ஒதுக்கப்பட்டது.(XXiii)

20. சிந்து மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 63,000.(XXiv)

21. ஆந்திராவில் ஒப்படைக்கப்பட்ட மாவட்டங்கள் பஞ்ச நிவாரணத்திற்காக ரூ. 25,000(XXV)

22. மகாராஷ்டிர மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 20,000 (XXVi)

23. சுதேசிப் பணிகளுக்காகவும் ராட்டை நூற்பு மற்றும் கைத்தறியைப் பிரபலப்படுத்தவதற்காகவும் கஞ்சம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 20,000 வழங்கப்படலாம் (XXVii)

1921 நவம்பர் 6 ஆம் தேதியிட்ட தீர்மானம் எண். 8 மூலம் காரியக் கமிட்டி உபகமிட்டியைக் கலைத்து மானியங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பிரச்சினையைத் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

”24. கையால் நூல் நூற்பதற்கும் கதர்த் துணி உற்பத்தி செய்வதற்கும் பஞ்சு வாங்குவதற்காக அஸ்ஸாமைச் சேர்ந்த திரு. புகானுக்கு ரூ. 25,000(iX)

25. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள கிருஷ் ணாபுரத்திற்கு ரூ. 5000.

26. ஆந்திரா ஜாதீய கலாசாலைக்குக் கூடுதல் மானியமாக ரூ. 10,000

27. ராஜமுந்திரி தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் மிஷனுக்கு ரூ. 1000.

28. அங்கலூர் ஜாதிய பரிஸ்ரமாலயத்திற்கு ரூ. 5000 (Xiii)

29. ஆந்திராவிலுள்ள கவுதாரத்திற்கு ரூ. 3000(XiV)

30. பொதுவான சுதேசிப் பணிகளுக்காக ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 15,000

31. மசூலிப்பட்டணம் மாவட்ட காங்கிரஸ் கமிட் டிக்கு ரூ. 3000

32. கைநூற்பு நூல் மற்றும் கதர் உற்பத்திக்காக உத்கல் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 30,000

33. தங்களது தொழிலைக் கைவிட விரும்பிய தானா மாவட்டகள் இறக்குவோருக்கு உதவ ரூ. 3000

34. நாக்பூர் திலகர் வித்யாலயாவுக்கு ரூ. 5000

35. நாக்பூர் அசகியோகாஸ்ரமத்துக்கு ரூ. 5000

36. கதர் மற்றும் சர்க்கா நூல் உற்பத்தியை அதிகரிப் பதற்காக ஆஜ்மீர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 25,000

37. குஜராத்திற்கு சாத்தியாமானால் ரூ. 18,00,000 அல்லது எந்த வகையிலேனும் ரூ. 10,00,000

38. மலபாரில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத் திற்காக திரு.சி. ராஜகோபாலாச்சாரியாருக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டிய தொகை ரூ. 40,000

V. 1921 நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக்கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

 ”39. பஞ்சாபின் ரோஷ்டாக்கில் உள்ள ஜாட் ஆங் கிலோ-சமஸ்கிருத உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 10,000

 40. பஞ்ச நிவாரணத்திற்காகவும் சுதேசிப் பணி களுக்காகவும் பீஜப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 25,000

41. மதராசில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆலைத் தொழிலாளர்களுக்கு சுதேசிப் பணிகள் வழங்குவதில் உதவ ரூ. 30,000

II. 1922இல் ஒப்புதலளிக்கப்பட்ட மானியங்கள்

1. 1922 ஜனவரி 17 அன்று பம்பாயில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

”42. உ.பி. மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 50,000த் திற்காக விண்ணப்பம் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப் பட்டது. சுதேசிப் பணிகளுக்காகக் கூடுதல் மானியமாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான விண்ணப்பத்தை இறுதி முடிவுக்காக மகாத்மா காந்திக்கு அனுப்பப்ட்டது.

43. ஒப்புதலளிக்கப்பட்ட மானியமான ரூ. 50,000த்தில் மீதமுள்ள ரூ. 25,000த்திற்கான அஸ்ஸாம் மாகாண காங் கிரஸ் கமிட்டியின் விண்ணப்பத்தை இறுதி முடிவுக்காக மகாத்மா காந்திக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது

2. 1922 பிப்ரவரி 26 அன்று டில்லியில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

“44. மகாத்மா காந்தி தயாரித்துள்ள வெளிநாட்டுத் திட்டத்திற்கான ஆரம்பச் செலவினங்களுக்காக ரூ. 10,000

45. நடப்பு ஆண்டிற்கான அலுவலகச் செலவினங் களுக்காக ரூ. 14,000

3. 1922 மார்ச் 17 மற்றும் 18 தேதிகளில் அகமதாபாதில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள்:

”46. கதரைப் பெருமளவில் உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவுமான நடவடிக்கைகளை ஒழுங் கமைக்க ரூ. 3,00,000

47. உ.பி. மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட ரூ. 50,000த்திலிருந்து ரூ. 10,000 வழங்குதல்

48. பொதுவான காங்கிரஸ் பணிகளுக்காகக் கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 5000; மலபாரில் நிவா ரணப் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 84,000த் திலிருந்து இத்தொகை கழித்துக் கொள்ளப் படும். மேற்கூறப்பட்ட தொகையான ரூ. 84,000த்திலிருந்து ரூ. 20,000த்தை நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டது

49. ரோஹ்டாக்கிலுள்ள ஆங்கிலோ-வெர்னாகுலர் பள்ளிக்கு ரூ. 10,000

50. ஆந்திராவில் ஒப்படைக்கப்பட்ட மாவட்டங்களில் பஞ்ச நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான ரூ. 25,000த்திலிருந்து ரூ. 15,000த்தை ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. டி. பிரகாசத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது

4. 1922 ஏப்ரல் 20,21,22 ஆகிய தேதிகளில் கல்கத்தா வில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

51. குஜராத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரிடையே கல்வியை ஒழுங்கமைப்பதற்காக அந்த்யஜா காரியாலயாவிற்கு ரூ. 5000

52. கதர் பணிகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப் பட்ட காரியங்களுக்காக தக்காண ஹைதராபாத்தைச் சேர்ந்த மவுல்வி பத்ருல் ஹசனுக்குக் கடனாக ரூ. 40,000

53. இண்டிபென்டன்ட் ஏட்டை மீண்டும் தொடங்கி அதை காங்கிரசின் கொள்கை வழியில் நடத்த, நேஷன லிஸ்டு ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 25,000 வழங்கவும் கடந்தொகைகாக கம்பெனியின் சொத்துக்கள் மீது பற்றுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது

5. 1922 மே 12,13,14,15 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

”54. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 5000த்திற்கும் கூடுத லாக அகமதாபாதிலுள்ள அந்த்யஜா காரியலயாவிற்கு ரூ. 17,381

55. அத்திட்டத்தைத் தொடங்குவதற்கு உள்ளுரி லேயே போதுமான நிதிகள் வசூலிக்கப்பட்டு, அவ்வாறு தொடங்கப்பட்ட திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று காரியக்கமிட்டி திருப்தியடையாதவரை, ஷகதாரா தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் குடியேற்றத்திற்காக பஞ்சாப் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் ரூ. 1,25,000த் திற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது

56. அகமத்நகர் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினரின் முதியோர் இல்லத்திற்காக ரூ. 5000 ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஸ்தல முயற்சிகளைக் கொண்டு அந்த இல்லம் தொடங்கப்பட்டு திருப்தி கரமாகச் செயல்பட்டு வருகிறது என்று காரியக்கமிட்டி திருப்தியடையும்போது அத்தொகை வழங்கப்படும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

57. திரு. எஸ். னிவாச ஐயங்கார் விண்ணப் பித்திருப்பது போன்று மதராசில் தாழ்த்தப்பட்ட வர்க்கத் தினருக்கான பணிகளுக்கென ரூ. 10,000 ஒதுக்கீடு செய் யவும், அத்தொகையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டி மூலமாக இக்கமிட்டிக்கு விண்ணப்பம் அனுப்பப்படும் போதும், ஸ்தல முயற்சிகளின் வாயிலாக குறைந்தபட்சம் சம அளவிலான தொகை வசூலிக்கப்படும் என்று இக் கமிட்டி திருப்தியடையும்போதும் வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

58. ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக் கான பணிகளுக்காக திரு. டி. பிரகாசத்திற்கு ரூ. 7000 59. சிந்து மாகாணத்தில் கதர் பணிக்காக.

6. 1922 ஜுன் 6,7 மற்றும் 10 தேதிகளில் லக்னோ வில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்த மானியங்கள் வருமாறு:

”60. அவசர செலவுகளுக்காக மான் ராஜ கோபாலாச்சாரியருக்கு ரூ. 1,000 முன்பணம் வழங் குதல்.

61. வங்காளத்திலிருந்து அஸ்ஸாமுக்கு சேவை புரியச் செல்லும் ஆறு பணியாளர்களின் செலவுக்காக மாதம் ஓன்றுக்கு ரூ. 180 வீதம் அடுத்த மூன்று மாதங் களுக்கு வழங்க அனுமதிக்கப்படுகிறது

7. 1922 ஜுலை 18 மற்றும் 19 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

“62. அஸ்ஸாமுக்கு ரூ. 5000

63. கதர் பணிக்காக ஆந்திராவுக்கும் உத்கலுக்கும் தலா ரூ. 1,50,000 கடனாக வழங்குதல்.”

8. 1922 நவம்பர் 18,18,25 தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

”64. குஜராத்திற்கு மானியமாக ரூ. 3,00,000

65. சிவில் கீழ்ப்படியாமை விசாரணைக் கமிட்டி யின் செலவுகளுக்காக ரூ. 16,000

III. 1923 இல் ஒப்புதலளிக்கபட்ட மானியங்கள்

1. 1923 ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் காயவில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

”66. தீண்டப்படாமையைப் போக்குவதற்காகவும் பொறுமையையும் சமுதாயங்களுக்கிடையிலான ஒற்று மையை வளர்க்கவும் இந்திய தேசிய சமூக மாநாட்டின் பொதுச் செயலாளருக்கு ரூ. 3000

67. கயாவில் நடைபெற்ற காங்கிரசின் தீர்மானங் களைத் தொடர்ந்து பிரசாரத்தை மேற்கொள்ளும் என்ற நிபந் தனையின் பேரில் அலகாபாதியின் ஒரு இந்தி நாளே டான நவயுகாவுக்கு உதவிக் தொகையாக ரூ. 1200

68. காங்கிரஸ் விளம்பர பீரோவுக்கு ரூ.10,000"

2. 1923 பிப்ரவரி 23 மற்றும் 26 தேதிகளில் அலகாபாதில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானி யங்கள் வருமாறு:

"69. தமிழ் தேச மாகாணக் கமிட்டியின் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கான பணிகளுக்காக ரூ. 10,000

70. பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் விண்ணப்பத்தின் பேரில் உ.பி. மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குக் கடனாக ரூ. 15,000 வழங்கப்படலாம்.

72. பெனாரசிலுள்ள காந்தி ஆசிரமத்துக்காக உ.பி. மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு வழங்கப்பட்டது ரூ. 5000"

3. 1923 மே 23,24,25,26,27 மற்றும் 28 தேதிகளில் பம்பாயில் நடைபெற்றது தனது கூட்டத்தில் காரியக் கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள்:

“73. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மிகுதியாக உள்ள கதர் துணிகளை விற்பனை செய்வதற்காக குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குக் கடனாக ரூ. 5 லட்சம்

74. கதர்ப் பணிகளுக்காக வங்காள மாகாண காங் கிரஸ் கமிட்டிக்குக் கடன் வழங்கப்படவிருக்கும் தொகை ரூ. 50,000

75. பீகார் ராஷ்டிரீய வித்யாலயாவுக்கு ரூ. 15,000

76. சத்தியவதி வித்தியாலயாவுக்கு ரூ. 10,000

77. ஸ்வவல்பன் ராஷ்டிரீய பாடசாலைக்கு ரூ. 5000

78. காங்கிரஸ் தொழிலாளர் கமிட்டி தீர்மானிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக டாக்டர் சதாயேக்கு ரூ. 5000"

4. 1923 ஜுலை 7,8.11,12 ஆகிய தேதிகளில் நாக்பூரில் நடைபெற்ற தனது கூட்டத்தில் காரியக்கமிட்டி ஒப்புதலளித்த மானியங்கள் வருமாறு:

”79. மதராஸ் மாகாணத்தில் இந்துஸ்தானியைக் கற்றுத் தரும் பணிக்காக இந்தி சாகித்ய சம்மேளனச் செயலாளர் திரு. பிரஜராஜுவுக்கு ரூ. 20,000

80. நாக்பூரில் சத்தியாக்கிரக இயக்கத்துக்கு உதவி வழங்கும் முக்கிய நோக்குடன் பொதுவான காங்கிரஸ் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக மத்திய மாகா ணங்கள் இந்துஸ்தானி மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ரூ. 2000"

செலவினங்களின் இந்த இனவாரியான கணக்கிலிருந்து பொதுநிதிகளை காங்கிரஸ் நல்ல முறையில் நிர்வாகம் செய்ததா அல்லது தவறாக நிர்வகித்ததா என்பது பற்றிய சரியான கருத்தை வாசகர் பெறமுடியாத நிலையில் இருக்கக்கூடும். எந்த ஒரு கோட் பாட்டினடிப்படையிலேனும் இச்செலவினங்கள் முறைப்படுத்தப் பட்டிருந்தவையா? மாகாணங்களின் தேவைகளுக்கேற்ப அது வினி யோகிக்கப்பட்டதா?  பின்வரும் அட்டவணையைப் பரிசீலிக்கவும்:

அட்டவனை 2

மாகாணங்கள் வழங்கப்பட்டதொகை மக்கள் தொகை (சைமன் கமிஷன் அறிக்கையிலிருந்து இப்புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டன தொகுதி- 1, 1921 ஆம் ஆண்டில் காணவும்) மொத்த மக்கள் தொகையின் விகிதத்துக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தொகையின் விகிதா சாரம் ஆண்டுதோறும் செலுத்தப்பட்ட மானியங்களின் விகிதா சாரம்
பொது-அகில இந்தியா (பர்மா மற்றும் சுதேச சமஸ்தானங்கள்

4,94,000

227,238,000

---  10
பம்பாய்            

26,90,381

16,012,623

8 54.3
மதராஸ்

5,05,000

42,319,000

18

 10.1

பீகார் மற்றும் ஒரிசா

5,65,000

33,820,000

15

6.26

உ.பி

3,11,200

45,376,000

20

11.3

சிந்து 1,13,000 3,279,377

---

2.2

அஸ்ஸாம்

 51,080

6,735,000

3

1.1

வங்காளம்

50,000

46,241,000

20

1.0

மத்திய மாகாணம்

 47,000

12,780,000

5

.95

பஞ்சாப்

45,000

20,675,000

9

.9

ஹைதராபாத்

40,000

-- --

.81

 ஆஜ்மீர்

25,000

-- --

.5

 வெளிநாடு

20,000

-- -- .28
மொத்தம்  49,50,661      

மானியங்கள் கலாசார அலகுகளின் அடிப்படையிலும் அவற்றின் சம்பந்தப்பட்ட அளவின் அடிப்படையிலும் வினியோ கிக்கப்பட்டதா? பின்வரும் புள்ளி விபரங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்:

அட்டவணை – 3

மொழிவாரியான பகுதிகள் மொத்த மானியத்தொகை ரூ. மானியத்தொகை ரூ. மாகாணத்திற்கான மானியத்தின் வீதாச் சாரம் மாகாணங்களின் மக்கள் தொகையை ஒப்பிடும் பொழுது அப்பகுதியின் மக்கள் தொகையின் வீதாசாரம்

பம்பாய் மாகாணம்

- குஜராத்,

- மகாராஷ்டிரம்

- கர்னாடகம்

.26,90,381

-

-

-

-

26,22,381

43,000

25,000

-

97.4

1.6

0.93

100

18

69

13

மத்திய மாகாணங்கள்,

மராத்தி மாவட்டங்கள்,

இந்துஸ்தானி மாவட்

டங்கள்,

47,000

-

-

-

10,000

37,000

-

21.2

78.7

100

45

55

மதராஸ் மாகாணம்

தமிழ்நாடு,

ஆந்திரா,

கேரளா

5,05,000

-

-

1,03,000

3,02,000

1,00,000

-

20.4

60.0

19.6

100

38

52

10

பீகார் மற்றும் ஒரிசா

பீகார்

ஒரிசா

5,65,000

-

-

-

5,15,000

50,000

-

91.0

0.9

100

73

27

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 எந்தவிதமான அறிவுப்பூர்வமான கோட்பாட்டின் அடிப் படையிலும் இத்தொகைகள் வினியோகம் செய்யப்பட்ட வில்லை என்பது இப்புள்ளி விபரங்களிலிருந்து தெளிவாகிறது. இந்த மானி யங்களுக்கும் மக்கள் தொகைக்கும் இடையிலும், மானியங்களுக்கும் கலாசார அலகுகளின் கோரிக்கைளுக்கிடையிலும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஒன்றரைக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட பம்பாயைப் போன்ற ஒரு மாகாணம் 27 லடசம் ரூபாயைப் பெறுகிறது. அதேசமயம் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட நான்கு கோடி மக்கள் தொகையைக் கொண்ட உ.பி. மற்றும் மதராஸ் மாகாணங் கள் தனித்தனியாக 5 லட்சம் ரூபாயைப் பெறுகின்றன. பம்பாய் மாகாணத்தை எடுத்துக் கொள்வோம். அது மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் கர்னாடகம் ஆகிய மூன்று கலாசார அலகுகளைக் கொண் டிருக்கிறது.

பம்பாய் மாகாணத்துக்குக் கொடுக்கப்பட்ட ரூபாய் 26 லட்சத்து 90 ஆயிரத்திலிருந்து, மாகாணத்தி 18 சதவிகித மக்கள் தொகையை மட்டுமே கொண்ட குஜராத் ரூபாய் 26 லட்சத்து 22 ஆயிரத்தை பெற்றது. அதாவது மொத்தத் தொகையில் 97.4 சத விகிதம். 69 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருந்த மகாராஷ் டிரம் ரூபாய் 43,000 த்தையே பெற்றது அல்லது மொத்தத் தொகையில் 1.6 சதவிகிதம். 13 சதவித மக்கள் தொகையைக் கொண்டிருந்த கர்நாடகம் ரூ. 25,000த்தையே பெற்றது; அல்லது மொத்த மானியத்தில் 9 சத விகிதம். மத்திய மாகாணங்களின் மொத்த மானியமான ரூ.47,000த் திலிருந்து, 55 சதவிகித மக்கள் தொகையைக் கொண்டிருந்த இந்துஸ் தானி மாவட்டங்கள் ரூ. 37,000த்தைப் பெற்றன அல்லது மொத்தத் தொகையில் 78.7 சதவிகிதத்தைப் பெற்றன.

அதே சமயம் 45 சத விகிதம் மக்கள் தொகையைக் கொண்ட மராத்தி பேசும் மாவட் டங்கள் ரூ. 10,000த்தை மட்டுமே பெற்றன, அதாவது 21.2 சத விகிதம். பீகாரிலும் ஒரிசாவிலும் மொத்த மானியத் தொகையான ரூபாய் ஐந்து லட்சத்து 65 லட்சத்து 65 ஆயிரத்தில், 78 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட பீகார் மட்டுமே ரூ. ஐந்து லட்சத்து 15 ஆயிரத்தை அல்லது மொத்தத்தொகையில் 91 சதவிகிதத்தைப் பெற்றது. அதேசமயம் 27 சதவிகித மக்கள் தொகையைக் கொண் டிருந்த ஒரிசா ரூபாய் 50 ஆயிரத்தை அல்லது மொத்த மானியத் தொகையில் 9 சதவிகிதத்தையே பெற்றது.

மதராஸ் மாகாணத்தின் மூன்று பகுதிகளிலும் மானியங்களின் வினியோகத்தில் இதே போன்ற சமத்துவமின்மையைக் காணமுடியும். இதில் கோட்பாடு எதுவும் இல்லை என்பது மட்டுமன்றி நிதியை விநியோகிப்பதில் அவமானகரமான விதத்தில் சிறப்புச் சலுகை காட்டும் போக்கு நிலவியது. திரு. காந்தியின் மாகாணமான குஜராத், மூன்றாண்டுகளில் வினியோகிக்கப்பட்ட மொத்தத் தொகை யான ரூபாய் 49 1/2 லட்சத்தில் 26 1/4 லட்ச ரூபாயைப் பெற்றது. அதே சமயம் இந்தியாவின் மீதமுள்ள பகுதிகள் ரூபாய் 23 லட்சங்களை மட்டுமே பெற்றன. 29 1/2 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட குஜராத் 26 1/4 லட்சத்தைப் பெற்றது. அதேசமயம் 23 கோடி மக்கள் தொகை யைக் கொண்ட இந்தியாவின் மீதமுள்ள பகுதிகள் ரூ. 28 லட்சத்தை மட்டுமே பெற்றன என்பதுதானே இதற்கு அர்த்தம்!!

தடைகள் இல்லை. கட்டுப்பாடு இல்லை. என்ன காரணத் திற்காகப் பணம் வழங்கப்பட்டது, யாருக்காக வழங்கப் பட்டது என்பதை அறிந்தார் இல்லை. பின்வரும் புள்ளிவிவரங்களைக் காண்க.

அட்டவனை – 4

பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தனி நபர்கள் வசம் வைக்கப்பட்டிருந்ததுடன் அவை எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவும் பயன்படுத்தப்படாதிருந்தது எந்த காரணத்திற்காக ஒதுக்கப்பட்டது என்றும் உத்தரவாதத்தைக் குறிப்பிடா மலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள்
ரூபாய் ரூபாய்
மௌல்வி பத்ரூல்ஹசன் 40,000 குஜராத்திற்கு 3,00,000
டி. பிரகாசம் 7,000 குஜராத்திற்கு 18,00,000
சி. ராஜகோபாலசாரியார் 1,000 குஜராத்திற்கு 3,00,000
பரஜாஜ் 20,000    
திரு. காந்தி 1,00,000    

பணம் பெற்றுக் கொண்டவர்கள் வசம் வைக்கப் பட்டிருந்த இப்பெருந் தொகைகள் கணக்கில் காட்டப்பட்டனவா அல்லது இவ்வளவு பெரிய தொகையைக் பெற்றுக் கொண்டவர்கள் பெய ரில்லாத பணம் பெறுபவர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந் தனரா என்பது தெரியவில்லை. இக்கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் இருந்தாலும்கூட இந்த ஊதாரித்தனமான விரயமான அவசரகால நிதிகளைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது கடினம் என்பதில் ஐயமேதும் இல்லை. மனசாட்சியின் எந்தவிதமான உறுத் தலும் இன்றி தங்களுடைய சொந்தத் தொகுதிகளை ஊட்டி வளர்ப் பதற்காகப் பொதுப் பணத்தைக் காங்கிரசின் கொள்கைக்காகத் தலைவர்கள் புரிந்த பொறுப்பற்ற கொள்கையையே இந்த சோகமான சம்பவம் குறிக்கிறது.

 பிந்தைய ஆண்டுகளில் செலவழிக்கப்பட்ட மீதமுள்ள 1 கோடியே 30 லட்சத்தை காங்கிரஸ்கார்ர்கள் திட்ட்மிட்டு முறையாகக் கொள்ளையாடித்த கதையைத் தொடருவது தேவையற்றது. பொதுப் பணத்தை இந்த அளவுக்குத் திட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்பதைக் கூறுவது போதுமானது. சுயராஜ்யநிதியிலிருந்து இப் பணத்தை வழங்குதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்த தீண்டப்படாதவர்களின் மேம்பாட்டிற்குப் பெருந்தொகை எதுவும் செலவழிக்கப்பட்டதாக மானியங்களின் இப்பட்டியல் காட்டவில்லை என்பதைக் காண்பதே உடனடி ஆர்வத்திற்கான விஷயமாகும். சுயராஜ்ய நிதியிலிருந்து தீண்டப்படாதவர்களின் மேம்பாட்டுக்கு அதிகமாகச் செலவு செய்வதே காங்கிரசின் கடமையாக இருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கக் கூடும்.

நாட்டின் நலன்கருதி தங்களது தொழிலைத் துறந்து விட்டதாகக் கூறும் எண்ணற்ற வழக்கறிஞர்களுக்கு அவர்களது கூற்று உண்மை தானா என்றுகூட விசாரணை செய்யாமல் அவர்களைப் பராமரிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டபோது, பொது நிதியிலிருந்துயாசகம் பெற்று வாழ்வதற்காக தங்களது தொழிலைக் கைவிட்டுவிட்டகள் இறக்குவோருக்கு உணவளிக்க பல்லாயிரக்கணக் கான ரூயாய்கள் செலவழிக்கப்பட்டபோது, நேர்மையின்மை என்ற அடையாளங்களைத் தங்களது முகங்களில் தேக்கிவத்திருந்த இன்னும் பல திடீர் திட்டங்களுக்காகப் பணம் செலவழிக்கப்பட்ட போது, குறிப்பாக முக்கியச் செலவினமாக இல்லாவிடினும் குறைந்த பட்சம் தீண்டப்படாதவர்களுக்கென ஒரு செலவினத்தை இப்பட்டி யலில் அவர்கள் சேர்த்திருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய எதை யும் காங்கிரஸ் செய்யவில்லை. மாறாக, தீண்டப்பாடாதவர்களின் மேம்பாட்டுக்காகத் தனியாக ஒரு நிதியைத் தொடங்கவேண்டு மென்று காங்கிரஸ் பிரேரணை செய்தது. இத்தனிப்பட்ட தீண்டப் படாதவர்கள் நிதியின் பரிமாணம் எத்தகையதாக இருக்க வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டது? அது ஐந்து லட்சமாக இருக்கும் என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி நிர்ணயித்தது. தீண்டப் படாதவர்களின் மேம்பாடு போன்ற ஒரு முக்கியமற்ற, லாபமில் லாத பணிக்கு இது மிகப் பெரிய தொகையாகும் என்று காரியக் கமிட்டி உணர்ந்ததுடன் அத்தொகையை ரூ. இரண்டு லட்சமாகக் குறைந்தது. ஆறு கோடி தீண்டப்படாதவர்களுக்கு வெறும் இரண்டு லட்சம்!!

தீண்டப்படாதவர்களைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் நிர்ணயித்த மிகப்பெரிய தொகை இதுதான். உண்மையில் இதிலிருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டது? புள்ளி விபரங்கள் இதோ:

அட்டவணை 5

நோக்கம்

அனுமதிக்கபட்ட

தொகை

ராஜமுந்திரி தாழ்த்தப்பட்ட வர்க்க மிஷன்

 ரூ.

1,000

அந்த்யஜா காரியாலயா, அகமதாபாத் 5,000
அந்தயஜா காரியாலயா, அகமதாபாத் 17,381

ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கான

 பணிகள்

7,000

தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கான பணி

 களுக்கான தேசிய சமூக மாநாடு

3,000

தாழ்த்தப்பட்ட வர்க்கத்தினருக்கான பணி

 களுக்கான தமிழ் மாவட்ட பி.சி.சி. கமிட்டிக்கு

10,000
 மொத்தம் 43,381

தீண்டப்படாதவர்களை முன்னேறச் செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்ட ஆக்கப்பூர்வமான, பர்டோலி திட்ட மென்று அறியப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்காக செலவிடப் பட்ட ரூ. 49 1/2லட்சத்தில் காங்கிரஸ் ரூ. 43,381 மட்டுமே பெற முடிந்தது. நேர்மையின்மைக்கு இதைவிட ஓர் அப்பட்டமான உதா ரணம் வேறு இருக்க முடியுமா? காங்கிரஸ் வாய் கிழியக் கூறிவந்த தீண்டப்படாதவர்களின் பாலான பாசம் எங்கே போயிற்று? தீண்டப் படாதவர்களை முன்னேறச் செய்யப் பாடுபடும் காங்கிரசின் விருப்பம் எங்கே போயிற்று? தீண்டப்படாதவர்களைப் பொறுத்த வரை பர்டோலி தீர்மானம் ஓர் ஏமாற்று வேலை என்று கூறுவது தவறாக இருக்குமா?

இங்கு ஒரு கேள்வியைக் கேட்க எவரும் கடமைப் பட்டுள்ளார். காங்கிரஸ் முகாமில் தீண்டப்படாதவர்களின் லட்சியத்தில் இவ்வள வும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திரு. காந்தி எங்கே போனார்? இக்கேள்வி மிகவும் பொருத்தமானது, ஏனெனில் சுய ராஜ்யத்தை அடைவதற்கும் தீண்டப்படாமையை ஒழிப்பதற்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவைப் பற்றி காங்கிரசில் சேர்ந்தது முதல் திரு. காந்தி வலியுறுத்தி வந்திருக்கிறார். திரு. காந்தியின் ஏடானயங் இந்தியாவின் 1921 நவம்பர் 8 ஆம் தேதியிட்ட இதழில் திரு. காந்தி பின்வருமாறு எழுதினார்:

“நமது திட்டத்தில் தீண்டப்படாமைக்கு இரண்டாமிடத்தை வழங்க முடியாது. இக்கறையை அகற்றவில்லையெனில் சுயராஜ்யம் என்பது ஓர் அர்த்தமற்ற் சொல்லாகவே இருக்கும். தங்களது பணியைத் தொடருவதில் சமூக பகிஷ்கரிப்பையும், பொது வெறுப்பையும் கூட? தொழிலாளர்கள் வரவேற்க வேண்டும். சுயராஜ்யத்தை எய்தும் நிகழ்வுப் போக்கில் தீண்டப்படாமையைப் போக்குவதுதான் மிகச் சக்திவாய்ந்த ஓர் அம்சம் என்று கருதுகிறேன்.”

அதற்கேற்ப அவர், சுயராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷா ருடன் கூட்டு வைத்துக் கொள்ளவேண்டாம் என்றும் மாறாக, ஒரு பொதுவான லட்சியத்துக்காக இந்துக்களுடன் சேர்ந்து சுயராஜ் யத்தைப் பெற உதவவேண்டும் என்றும் தீண்டப்படாதவர்களை வற்புறுத்திவந்தார். 1920 அக்டோபர் 20 ஆம் தேதியிட்ட யங் இந்தியா வில் எழுதிய ஒரு கட்டுரையில் திரு. காந்தி தீண்டப்படாதவர்களுக்குப் பின்வரும் விதமாக வேண்டுகோள் விடுத்தார்.

“நாட்டின் இத்தாழ்த்தப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னால் மூன்று வழிகள் உள்ளன. தங்களது பொறுமையின்மையில் அவர்கள் அடிமைப்படுத்தும் அரசாங்கத்தின் உதவியைக் கோரக்கூடும். அவர் களுக்கு உதவியும் கிட்டும். ஆனால் அவர்களது நிலைமை எரியும் நெருப்பிலிருந்து கொதிக்கும் எண்ணெயில் விழுந்தது போலாகிவிடும். இன்று அவர்கள் அடிமைகளுக்கு அடிமைகளாக உள்ளனர். அர சாஙக் உதவியைக் கோருவதன் மூலம் அவர்கள் தங்களது சொந்த உற்றார் உறவினர்களை அடக்கி ஒடுக்கப் பயன்படுத்தப்படுவார்கள். தங்களுக்கு எதிராகப் பாவம் செய்யப்படுவதற்குப் பதிலாக அவர் களே பாவிகளாக மாறிவிடுவார்கள். இந்த வழியை முஸ்லிம்கள் முயன்று தோற்றுவிட்டனர். முன்பைவிட இப்போது தங்களது நிலைமை மோசமடைந்திருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

சீக்கியர்களும்கூட இந்த வழி முறையை முயன்று தோல்விகண்ட னர். இன்றைக்கு இந்தியாவில் சீக்கியர்களைப் போன்று அதிக அளவில் அதிருப்தியடைந்துள்ள சமுதாயம் வேறெதுவும் இல்லை. ஆகவே அரசாங்க உதவி என்பது ஒரு தீர்வாகிவிட்டது.

இரண்டாவது வழி, இந்து மதத்தை விட்டு ஒட்டு மொத்த மாக இஸ்லாமுக்கோ கிறிஸ்தவ மதத்திற்கோ செல்வது. உலகாயத நன்மைக்காக மதம் மாறுவதை நியாயப்படுத்த முடியுமானால் அதை ஏற்குமாறு எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவுரைகூறுவேன். ஆனால் மதம் என்பது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம், உடல்ரீதி யான எந்த ஒரு வசதிக்குறைவும் ஒருவருடைய மதத்தைத் துறப்ப தற்குக் காரணமாக இருக்க முடியாது. பஞ்சமர்களை மனிதாபிமான மற்ற முறையில் நடத்துவது இந்து மதத்தின் ஓர் அங்கம் என்றால் அதை நிராகரிப்பதுத்தான் அவர்களுக்கும், மதத்தின் பேரால் மூட நம்பிக்கை கொள்ளாத அதனுடைய புனிதத்தின்பேரால் எல்லாத் தீமைகளையும் மன்னிக்காத என்னைப் போன்றவர்களுக்கு ஒரு தலையாய கடமையாகும். ஆனால் தீண்டப்படாமை என்பது இந்து மதத்தின் ஓரு அங்கமல்ல என்று கருதுகிறேன். அதனுடைய மிகையான அம்சங்களை சகல முயற்சிகளையும் பயன்படுத்தி அகற்ற வேண்டும். இந்து மதத்திலிருந்து இக்கறையை அகற்றுவதையே தங்களது குறிக் கோளாகக் கொண்டிருக்கிற இந்து சீர்திருத்தவாதிகளின் ஒரு படையே இப்போது தோன்றியிருக்கிறது. ஆகவே மத மாற்றம் என்பது எந்த வகையிலும் ஒரு மாற்றாகிவிட முடியாது.

பின்னர், இறுதியாக, ஒரு கடமை சார்ந்த விஷயமாக அல் லாமல் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பஞ்சமர்கள் அல்லாத இந்துக்கள் வழங்குவது போன்ற இத்தகைய உதவியுடன் சுய-உதவி மற்றும் சுய-தற்சார்பு என்னும் அம்சம் வருகிறது. இங்குதான் ஒத்துழையாமையைப் பயன்படுத்துவது வருகிறது. இந்து மதத் திற்கெதிரான கண்டனம் என்ற முறையில் பஞ்சமர்கள், தங்களது விசேடக் குறைகள் தீர்க்கப்படாதவரையிலும் இதர இந்துக்களுட னான எல்லாத் தொடர்புகளையும் சம்பந்தங்களையும் நிச்சய மாக நிறுத்திக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த வரை ஒத்துழை யாமையின் மூலம் பஞ்சமர்களுக்குத் தலைமையேற்று வெற்றி கரமாக வழிநடத்திக் செல்லக் கூடிய தலைவர்கள் எவரும் அவர் களிடையே இல்லை.

ஆகவே, இப்போதைய அரசாங்கத்தின் அடிமைத்தனத்தைத் தகர்த்தெறிவதற்காக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகத்தான தேசிய இயக்கத்தில் மனமுவந்து கலந்து கொள்வதுதான் பஞ்சமர்களுக்கு மிகச் சிறந்த வழியாக இருக்கும். இத்தீங்கிழைக்கும் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழையாமையில் ஈடுபடுவது இந்திய தேசமாக அமைந்துள்ள பல்வேறு பிரிவினரிடையே ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்பதைக் காண்பது பஞ்சம நண்பர்களுக்கு எளிதானதாகும்.”

அதே கட்டுரையில் திரு. காந்தி இந்துக்களுக்குப் பின்வருமாறு கூறினார்:

“அரசாங்கத்திற்கு எதிராக ஒத்துழையாமையில் இந்துக் கள் வெற்றிகரமாக ஈடுபட விரும்பினால் அவர்கள் முசல்மான்களுடன் சேர்ந்து பொதுவான லட்சியத்தை உருவாக்கிக் கொண்டதைப் போல பஞ்சமர்களுடனும் பொதுவான லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.”

1920 டிசம்பர் 29 ஆம் தேதியிட்டயங் இந்தியாவில் அவர் இந்த எச்சரிக்கையைத் திரும்பவும் விடுத்தார். அதில் அவர் கூறியதாவது:

“அரசாங்கத்திற்கு எதிராக ஒத்துழையாமை என்றால் ஆளப்படுபவர்களிடையே ஒத்துழைப்பு என்று அர்த்த மாகும். தீண்டப்படாமை என்ற பாவத்தை இந்துக்கள் போக்கவில்லை எனில் இன்னும் ஓராண்டிலோ அல்லது நூறு ஆண்டுகளிலோ சுயராஜ்யம் கிட்டாது.... இந்து- முஸ்லிம் ஒற்றுமையின்றி எவ்வாறு சுயராஜ்யத்தை எய்த முடியாதோ அதேபோன்று தீண்டப்படாமையின் பாவங் களைப் போக்காமலும் சுயராஜ்யத்தை எய்த முடியாது.”

பர்டோலி தீர்மானத்தில் நிர்ணயிக்கப்பட்டது போன்று தீண்டப்படாதவர்களின் நிலைமையை மேம்படுத்தும் காங்கிரசின் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை திரு. காந்தி உறுதி செய் வார் என்றே ஒருவர் எதிர்பார்க்கக்கூடும். உண்மை என்னவெனில் திரு. காந்தி வாய்ச்சொல்லில் வீரம் காட்டியதைத் தவிர இந்த மேம்படுத்தும் திட்டத்தில் கிஞ்சித்தும் ஆர்வம் காட்டவே இல்லை. அவர் உண்மையிலேயே மனது வைத்திருந்தால் அவர் வேறொரு கமிட்டியை நியமித்திருக்கக் கூடும். உண்மையி மனம் வைத்திருந் தால் அவர் காங்கிரஸ்காரர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளையிலிருந்து திலக்ர் சுயராஜ்ய நிதியின் பெரும்பகுதியை அவர் காப்பாற்றி தீண்டப்படாதவர்களின் நலனுக்கு அதை ஒதுக்கி யிருக்கக் கூடும். விநோதமான முறையில் அவர் வாய்மூடி மௌனி யாக, அக்கறையேதுமின்றி இருந்தார். எந்தவிதமான மன உறுத் தலும் இன்றி இருந்த திரு. காந்தி எவரும் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் வினோதமான வாதங்களின் மூலம் தீண்டப்படாதவர் களின் லட்சியத்தின்பால் தமது அக்கறையின்மையை நியாயப் படுத்தி வந்தார். 1920 அக்டோபர் 20 ஆம் தேதியிட்ட யங் இந்தியாவில் அவற்றைக் காணலாம்:

”ரத்தக் கறைபடிந்த தங்களது கரங்களைக் கழுவுமாறு ஆங்கிலேயர்களை நாம் கேட்டுக் கொள்வதற்கு முன்னால் இந்துக்களாகிய நாம் நமது ரத்தக்கறை படிந்த கரங்களைக் கழுவிக் கொள்ள வேண்டாமா? இது ஒரு சரியான, நியாய மான கேள்வியாகும். எனது சொந்த அடிமைத்தனத்தி லிருந்து என்னையே விடுவித்துக் கொள்ளாமல் ஓர் அடிமை நாட்டின் உறுப்பினர் ஒருவரினால் ஒடுக்கப் பட்ட வர்க்கத்தினரை அவர்களுடைய அடிமைத்தனத்தி லிருந்து விடுவிக்க முடியுமானால் இன்றைக்கு நான் அதையே செய்வேன். ஆனால் அது சாத்தியமில்லாத பணியாகும். ஒரு நியாயமான விஷயத்தை செய்வதற்குக் கூட சுதந்திரம் இல்லாதவன்தான் ஓர் அடிமை”.

திரு. காந்தி பின்வருமாறு கூறி கட்டுரையை நிறைவு செய்தார்:

”அந்த நிகழ்வுப் போக்கு தொடங்கிவிட்டது, பஞ்ச மர்கள் வேண்டுமென்றே அதில் பங்கு கொண்டாலும், பங்கு கொள்ளவில்லை என்றாலும் மீதமுள்ள இந்துக்களால், தங்களுடைய சொந்த முன்னேற்றத்தைப் பாதிக் காமல் அவர்களை அசட்டை செய்ய முடியாது. ஆகவே பஞ்சமர் பிரச்சினை எனக்கு உயிருக்குயிரானதாக இருந்த போதிலும் கூட நான் தேசிய ஒத்துழைப்பின்பால் பிரத்தி யேக கவனம் செலுத்துவதில் திருப்தியடைகிறேன். மகத் தானதொரு விஷயத்தில் குறையானதும் அடங்கியுள்ளது என்று நியாயமாகக் கருதுகிறேன்.”

தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பது பற்றிய இரண்டாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகிறது. பற்றிய இரண்டாவது அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகிறது. கற்பனையில் பரிவு காண்பதற்கு திரு. காந்தி எவ்வாறு கற்றுக் கொண்டார் என்ற உண்மையை உணருவதுதான் இச்சோக சம்பவத்தின் வருத் தத்திற்குரிய பகுதியாகும். மாயைகளின் உலகில் வாழ திரு. காந்தி விரும்புகிறாரா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகும்.

தம்முடைய நெஞ்சிற்கினிய கருத்தை ஆதரிக்கும் வாதங்கள் என்ற முறையில் அவற்றைப் பயன்படுத்துவதற்காக மாயைகளை உருவாக்க அவர் விரும்புகிறார் என்பதில் ஐயமேதும் இல்லை. தீண்டப்படாதவர் களின் மேம்பாட்டிற்காகத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக் கொள்ளாததற்காக அவர் கூறும் காரணமே திரு. காந்தியின் இப் பழக்கத்திற்கு மிகச் சிறந்த சான்றை வழங்குகிறது. இந்துக்களுக்கு எதிராகச் செயல்படக்கூடாதென்றும் ஏனெனில் அவ்வாறு செய்தால் அவர்கள் தங்களது உற்றார் உறவினருக்கு எதிராகச் செயல் படுவதாகும் என்றும் தீண்டப்படாதவர்களுக்குக் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்துக்கள் தீண்டப்படாதவர்க்ளைத் தங்களது உற்றார் உறவினர்களாகக் கருதுகிறார்கள் என்று ஊகம் செய்வது ஒரு மாயையைத் தோற்றுவிப்பதாகும்.

தீண்டப்படாமை யைப் போக்கும் கடமையை மேற்கொள்ளுமாறு இந்துக்களைக் கேட்டுக்கொள்வது ஒரு சிறந்த அறிவுரையாகும். ஆனால், தீண்டப் படாதவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி வந்தமைக் காக இந்துக்களிடம் அவமான உணர்வு மேலோங்கியுள்ளது என்றும், அவர்கள் தீண்டாமையை ஒழித்துக்கட்டாதிருக்க மாட்டார்கள் என்றும், தீண்டாமையை அகற்றுவதைத் தவிர வேறு எதையும் செய் வதில்லை என்று இந்து சீர்திருத்த வாதிகளின் குழுவொன்று சூளுரை மேற்கொண்டிருக்கிறது என்றும் உறுதியளிக்குமளவுக்குச் செல்வது, தீண்டப்படாதவர்க்ளையும், உலகத்தையும் முட்டாளாக்கும் ஒரு மாயையின் செப்பிடு வித்தையேயாகும்.

ஒட்டுமொத்தமாக உள்ள ஒன்றுக்குக் கிடைக்கும் அனுகூலம் அதன் ஒரு பகுதிக்கும் கிடைக்கும் என்றும் அந்த ஒரு பகுதியை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பதற்கு மட்டுமே ஒருவர் தமது நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும் வாதிடுவது தர்க்க ரீதியானதாக இருக்கக் கூடும். ஆனால் ஒரு பகுதி, தீண்டப் படாதவர்களைப் போன்ற ஒரு தனிப்பட்ட பகுதி ஒட்டு மொத்தமான இந்து மதத்தின் ஒரு பகுதி என்று யூகிப்பது என்பது தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதாகும். திரு. காந்தியின் மாயைகளின் காரணமாக தீண்டப்படாதவர்களும் இந்த நாடும் எத்தகைய சோகசம்பவங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 2)