19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் 20ஆம் நூற்றாண்டில் இராணுவப் பயன்பாடுகளுக்கும் பட்டம் உதவியிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பட்டங்கள் இராணுவ ஒற்றர்களை ஏற்றிக்கொண்டு உயரப் பறந்திருக்கின்றன. முதல் உலகப்போரின் போது பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய இராணுவங்கள் பட்டங்களைக் கொண்டு எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகள் பரிமாறிக் கொள்ளவும் செய்தன. ஜெர்மானிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இராணுவ வீரனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் பட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.  

kite_2இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படையில் பட்டங்களின் பல்வேறு பயன்கள் நடைமுறையில் இருந்தன. ஹாரி சாவ்ல்லின் பேரேஜ் பட்டம், இலக்கிற்கு மிக அருகில் விமானங்கள் பறக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்தன. விமானி கடலில் காணாமல் போனால் கிப்ஸன்-கேர்ள் எனும் பெட்டிப் பட்டத்தைப் பறக்க விட்டு உதவியை நாடினர். பால் கர்பர் பட்டத்தில் இயக்கும் தன்மையுடனான வைரம் இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது (1939-1945) பட்டங்கள் துப்பாக்கி இலக்குகளாக இருந்து பயிற்சிக்கு உதவியிருக்கின்றன. பிரெஞ்சு இராணுவப்பட்டங்கள் பட்ட ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். அதன் தூக்குதிறன் மற்றும் நிலைத்தன்மை மிக உயரப் பறப்பதற்கு ஏற்றவை. 1903 நவம்பரில் சாமுவேல் ஃப்ராங்க்லின் கோடி என்பவர் பட்டங்களால் செலுத்தப்பட்ட கப்பலில் இங்க்லிஷ் கால்வாயைக் கடந்திருக்கிறார்.  

விமானத்தின் அறிமுகம் இந்தப் பட்டங்களின் பயன்பாட்டைப் பழைமையாக்கி விட்டன. அதன் பிறகு தான், பட்டம் விடுதல் வெறும் பொழுதுபோக்காயிற்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பொழுதுபோக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நைலான், ஃபைபர் கிளாஸ், கார்பன் கிராஃபைட் போன்றவற்றைக் கொண்டு மிக உறுதியான பட்டங்களைச் செய்தனர். இவை குறைந்த எடையுடன் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை. நவீன பட்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பீட்டர் லின் என்பவர் 1980களில், நியூஸிலந்தில் ஒரு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பட்டத்தை உருவாக்கினார். இது இயந்திரத்துடன் கூடியது. 1999ல், ஒரு குழுவினர் பட்டத்தைக் கொண்டு வடதுருவத்தில் ‘ஸ்லெட்ஜு’களை இழுத்திருக்கிறார்கள்.

1991ல், பீட்டர் பவெல் என்பவர் பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல் தீவிர விளையாட்டாகவும் பட்டத்தை விடலாம் என்று கருதினார். அப்போதிலிருந்து பட்டங்களில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டன. நுட்பமான வித்தைகள் செய்து காட்டினர். வேகமாகப் பறக்க விட்டனர். பல போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டனவாம். என்ன நண்பர்களே இதுநாள் வரை பொழுது போக்கும் ஒரு விளையாட்டாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பட்டத்திற்குப் பின்னால் புதைந்து கிடக்கும் இது போன்ற அறிய தகவல்களை அறிந்த உங்களின் இதயங்களும் நூல் இன்றி மகிழ்ச்சியில் விண்ணில் உயரத்தில் பறந்திருக்கும் என்று நம்புகின்றேன். மறக்காம‌ல் உங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள்.--

- பனித்துளி சங்கர் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It