பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை (முசுக்கொட்டை இலை) விரும்பி சாப்பிடுகின்றன. மற்ற இலைகளை இவை தொடுவதில்லை. இதனால் பட்டு நூலுக்காக பட்டுப்புழுக்களை வளர்ப்பவர்கள் மல்பெரி புதர்களை வளர்க்க வேண்டிவருகிறது. பட்டுப்புழுக்களை செயற்கையான உணவுப் பதார்த்தங்களில் வளர்ப்பதற்கும் வேறு வகை தாவர இலைகளில் வளர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவை ஓரளவுக்கு வெற்றிகளைத் தந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பட்டுநூலானது மட்ட ரகமாக இருக்கின்றன.

பட்டுப் புழுக்கள் ஏன் மல்பெரி இலைகளை மட்டும் விரும்புகின்றன என்பதற்கான காரணத்தை டோக்யோ பல்கலைக்கழகம் கண்டுபிடித்திருக்கிறது. பட்டுப் புழுக்கள் மல்பெரி இலையிலிருந்து வரும் "சிஸ்ஜேஸ்மோன்'' எனப்படும் வாசனைப் பொருளை மோப்பம் பிடித்து வருகின்றன. அவை பிற உணவுப் பண்டங்களை சட்டை செய்யாதிருப்பதன் காரணம் இந்த வாசனைப் பொருள் அவற்றில் இல்லாததே. ஜெனட்டிக் தொழில் நூட்பம் மூலம் சிஸ் ஜேஸ்மோன் வாசனைப் பொருளை வேறு செடிகளுக்குப் பொருத்தி அவற்றையும் பட்டுப்புழுக்களுக்கு உகந்த ஆகாரமாக மாற்றலாம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It