'எப்படி சார் இருக்கிறீங்க' என்று கேட்டால் 'கடவுள் புண்ணியத்தில் ரொம்ப நல்லா இருக்கேன்' என்று சொல்பவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகிறார்கள். உலகில் பாதி மனிதர்கள் மனஇறுக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நார்வீஜிய சமூகவியல் அறிஞர்கள் 50000 பேர்களை சந்தித்து அவர்கள் அவர்களது உடல் நலத்தைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அடிக்கடி பார்ட்டி, விழா, கச்சேரி, காலட்சேபம் போன்றவற்றிற்கு செல்கிறார்களா என்றும் விசாரித்ததில் வெளி உலகமே தெரியாமல் வீடே கதி என்றிருப்பவர்கள்தான் அதிக மன இறுக்கத்தில் உள்ளார்கள், பார்ட்டி அது இது என்று வெளிக் கிளம்புபவர்கள் மனம் உடல் இரண்டும் நல்லாவே வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. எனவே பார்ட்டிகளை மிஸ் பண்ணாதீர்கள்.
- முனைவர் க.மணி (