சில பெற்றோர்கள் குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் இனிப்புகளை தாராளமாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். தினமும் சாக்லேட் அல்லது ஏதாவது இனிப்புப் பண்டங்களை சாப்பிடுபவர்கள் 34 வயதில் அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் கோஹார்ட் ஸ்டடி என்ற ஆய்வில் 1970 இல் 2700 குழந்தைகளின் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை குறிப்பெடுத்திருந்தனர். அவர்கள் இன்று 34 வயதை அடைந்திருந்தனர். அவர்களில் அன்று தாராளமாக இனிப்பு சாப்பிட்டவர்கள்தான் அதிகமாக வன்முறை நடத்தையில் ஈடுபடுகின்றனர் என்று தெரிகிறது.

இனிப்புக்கும் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லையாம்; காத்திருந்து பொறுத்திருந்து இனிப்புகளை பெறும் குழந்தைகள் நல்லபடிதான் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் உடனடியாக இனிப்பை பெறக்கூடிய பிள்ளைகளுக்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்துவிடுகிறது. அதுதான் அவர்களது பிற்கால வன்முறைகளுக்குக் காரணமாக அமைகிறது என்று விளக்கப்படுகிறது.

பெற்றோர்களே பிள்ளைகளுக்கு பொறுத்திருந்து பரிசைப் பெறும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள். பிற்காலத்தில் அவர்கள் பொறுமைசாலிகளாக திகழ்வார்கள்!!

-முனைவர் க.மணிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It