பிரேவேட் லிமிடெட் தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு இயக்குனர்களும், இரண்டு ஷேர்ஹோல்டர்களும் தேவை. இதற்காக பெரிய நகரங்களில் ‘ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனி’ அலுவலகம் உள்ளது. நிறுவனம் தொடங்குவதற்கு முன் யாராவது ஒரு இயக்குனருக்கு ‘டிஜிட்டல் சிக்னேச்சர்’ வாங்க வேண்டும். நிறுவனத்தின் அத்தனை இயக்குனர்களுக்கும் அடையாள எண் அவசியம். இதைத் தொடர்ந்து ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியில் இந்தப் பெயரில் நிறுவனம் தொடங்க விரும்புகிறேன் என்று ஆறு வெவ்வேறு பெயர்களை குறிப்பிட்டு விண்ணப்பம் அளிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அந்தப் பெயர்கள் வேறு யாருக்கும் அளிக்கப்படவில்லையெனில், ஆறில் ஒன்றை வழங்குவார்கள். இதற்கு 15 முதல் 20 நாட்களாகும்.

Pin It